கிறிஸ்து தேவனுடைய பரமரகசியத்தின் வெளிப்படுதலாயிருக்கிறார் Jeffersonville, Indiana, USA 63-0728 1சகோதரன் நெவில், உமக்கு நன்றி. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை தாழ்த்துகையில் நாம் ஒரு க்ஷணம் நின்று கொண்டிருப்போம். 2கிருபையுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் இன்று காலை ஒன்றாகக் கூடி உம்முடைய வார்த்தையை போதித்து, அதினால் நாங்கள் இன்றைய நாளில் நாங்கள் எவ்வாறு ஜீவிக்க வேண்டு மென்றும், நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற நாளின் சமயம் என்னவென்பதையும் அறிந்து கொள்வதற்காகவே, இன்று காலை எங்களுக்குத் தோன்றின விதமாகவே, பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலுக்காகவும், இரக்கத்திற்காகவும் மறுபடியுமாக இக் காலையில் உம்மை அணுகுகின்றோம். நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியமாயிருக்கின்ற ஒவ்வொரு வார்த் தைக்கும் எங்களை திசை காட்டி ; எங்களுடைய வாய்களையும், எங்கள் இருதயங்களையும்கூட நீர் விரிவாய்த் திறந்து, நீர் எங்களுக்கு பேசவிருப்பதை ஏற்றுக் கொண்டு, அதே சமயத்தில், சரியில்லாத காரியங்களுக்கு எங்கள் வாய்களை மூடி, தேவனுடைய வார்த்தையை நீர் ஒருவர் மாத்திரமே வெளிப்படுத்த முடியும் என்று அறிந்தவர்களாய், எங்கள் சிந்தனைகளுக்கும், எங்கள் இருதயங்களுக்கும் உம்முடைய பரிசுத்த வழிநடத்துதலை நாங்கள் கேட்கின்றோம். இச்சிறு சபையை விட்டுப் பிரிந்து, உலகின் மற்ற பாகங் களுக்கு நான் செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். என் இருதயத் தில் சிறப்பான இடம் பெற்றுள்ள இவர்களை உம்மிடம் சமர்ப்பிக் கிறேன். இவர்கள் சத்திய வசனத்தினால் - ஆவியினால் - உமக் கென்று ஜெநிப்பிக்கப்பட்டவர்கள். ஆண்டவரே, இவர்களை ஆசீர் வதித்து, கிறிஸ்துவின் அன்பு என்னும் கயிற்றினால் இவர்களை ஒன்றாக பிணைக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். 3எங்கள் அன்புள்ள அருமை போதகரை - மேய்ப்பனை - ஆசீர்வதியும். உம்முடைய வார்த்தையின் பரிசுத்த ஆவியினால் அவரை அபிஷேகித்து, அவர்களுக்கு வெளிப்படுத்தி மந்தையை போஷிக்கச் செய்ய வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். இங்குள்ள, இச்சிறு கூடாரத்தில் ஆகாரத்தைச் சேகரித்து வைக்க வேண்டுமெனும் தரிசனத்தை சில நாட்களுக்கு முன்பு எனக்குத் தந்தீர். இந்த ஆகாரம் மாத்திரம் தேவைப்படும் நாட்கள் வருமென்று எனக்கு அப்பொழுது காண்பித்தீர். சகோதரன் சாத்மனும், சகோதரன் உட்ஸும், வேறொரு தேசத்திற்கு கடந்து செல்ல ஆயத்தமாயிருந்ததை நாங்கள் கண்டபோது... ''வருங் காலத்திற்கென ஆகாரத்தை சேமித்து வை' என்று எனக்குக் கட்டளையிட்டீர். கர்த்தாவே, பயபக்தியுடன் அவ்வாறு செய்ய நான் முயன்று வருகிறேன். இன்று காலை இவர்களுக்கு நான் கற்பிக்க எத்தனித்துள்ள இந்த பாடத்தில், கர்த்தாவே நீர்தாமே அதைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அதன் மூலம் நீரே தேவ னென்றும், இது உம்முடைய வார்த்தை - உம்முடைய சத்தியம் - என்பதை நிரூபித்தருளும். ஜனங்கள் இதைப் புசித்து, தேவ கிருபையினால் கொழுத்தவர்களாகி, இது இக்காலத்தில் நமக்களிக் கப்பட்டுள்ள தேவனுடைய மகாகிருபை என்பதை அறிந்து கொள்வார்களாக. பிதாவே, இங்கு வந்துள்ளயாவரையும், வர விருப்பங்கொண்டுள்ள அனைவரையும் ஆசீர்வதியும். மகிமையை நீரே எடுத்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. 4நாம் தொடங்குவதற்கு முன்பு, காலீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறு குழந்தையை பிரதிஷ்டைக்காக இங்கு கொண்டு வந்துள்ளனர். நான் அதன் தகப்பனாரை சற்று முன்னர் சந்தித்தேன். இக்குழந்தையைப் பிரதிஷ்டை செய்ய விரும்புவதாக என்னிடம் கூறினார். இப்பொழுது அவனை பிரதிஷ்டை செய்வோம். சகோதரன் அல்லது சகோதரி காலீன்ஸ் யாராகிலும் ஒருவர் குழந்தையை முன்னால் கொண்டு வாருங்கள். இவனுக்காக நாம் பிரதிஷ்டை ஆராதனையை நடத்துவோம். 5இவர்களெல்லாரும் கிறிஸ்துவின் சரீரத்தின் விசுவாசமுள்ள (loyal) அங்கத்தினர்கள்களாய் இருப்பதால், நீங்கள் கவனிக்கவும், 'கூடாரத்தின்'' என்று நான் கூறவில்லை. ''கிறிஸ்துவின் சரீரங் களின், அந்த.... இங்குள்ள இந்த சரீரம், அவருடைய சரீரத்தின் ஒரு பாகமாகும். ஒரு சிறுபையனை பிரதிஷ்டை செய்ய அவர்கள் கொண்டு வந்திருக்கின்றனர். ஆகவே - ஆகவே நான் நினைப்ப தென்னவெனில் இந்த பணியானது என் - என் மனைவி பொறாமை கொள்ளும் பணியாக எப்பொழுதுமே இருந்து வருகின்றது என்று நான் நினைக்கிறேன். ஹூம் - ஹூம். சகோதரன் நெவில், தயவு செய்து முன்னால் வரவும். (சகோதரன் பிரன்ஹாம் பிரதிஷ்டை ஆராதனை நடத்துகிறார் - ஆசி). 6உம்முடைய முதற் பெயரென்ன, சகோதரனே? (தகப்பன் “கிளைட்'' என்கிறார் - ஆசி) இங்கேயுள்ள நம்முடைய விலையேறப்பெற்ற சகோதரன், சங்கை. காலின்ஸ், அவர்களுடைய சகோதரன், இவர்தான், சகோதரன் மற்றும் சகோதரி கிளைட் காலின்ஸ். இங்கே அநேக காலின்ஸ்கள் இவர்களுக்கு உண்டு, ஒரு மிக அழகான சிறிய பையனாக இவனைக் காண்கிறேன். இவனுக்கு வயதென்ன, சகோதரி காலின்ஸ்? (தாய், ''ஏறக்குறைய நான்கு மாதங்கள்'' என்கிறார் - ஆசி). இவன் பெயர் என்ன? ('மார்க் டேவிட் காலின்ஸ்') மார்க் டேவிட். இது மிக அருமையான பெயர். இவன் ஒரு அருமையான பையனாக காணப்படுகிறான். இவன் சற்று பெரிய பையனாகவும் கூட இருக்கின்றான். இங்கே இந்த சிறு பையனை தாய்மார்கள் பாராட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும். இது ஒரு பொம்மை போன்றுள்ள தல்லவா? (சகோதரன் பிரான்ஹாம் மார்க் டேவிடை சபையாருக்கு உயர்த்தி காண்பிக்கின்றார்-ஆசி) சரி. இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோம். 7பரலோகப் பிதாவே, இந்த இளம் தந்தையும் தாயும் தங்கள் இணைப்பிற்கு அளிக்கப்பட்ட, (இந்த சிறிய, விலையேறப்பெற்ற மானிட மாம்சத்தை) கர்த்தராகிய தேவனுக்கென்று வைத்து கொள்வதற்காக தங்கள் கரங்களில் வைக்கப்பட்டிருக் கின்ற, இந்த விலையேறப்பெற்ற, நல்ல ஆரோக்கியம் வாய்ந்த அருமையான பையனை இந்த சிறிய மார்க் டேவிடை தங்கள் பொறுப்பில் விட்டிருக்கும் சர்வல்லவரிடம் பிரதிஷ்டிக்கத்தக்கதாக இவர்கள் பயபக்தியுடன் கொண்டு வருகின்றனர். கர்த்தாவே, தந்தையையும், தாயையும் ஆசீர்வதியும். இவர்கள் வீட்டிலே பானை வெறுமையாக இல்லாதிருப்பதாக, அல்லது கலசம் காய்ந்து போகமால் இருப்பதாக. தகப்பன் தாமே நன்றாக இருந்து, கர்த்தாவே, வேலை செய்து இந்த சிறு பையனிற்கு ஆகாரத்தை கொணர பெலமாயிருக்கட்டும். தாய் தாமே சுகத் தோடும் பெலத்தோடும் இதை பராமரித்து, கர்த்தாவே, இந்த சிறு பையனை போதித்து, தேவனுடைய சிட்சையில் இவனை வளர்க்க இவர்கள் இருதயங்கள் ஆயத்தமாயிருப்பதாக. கர்த்தாவே இதை அருளும். 8இப்பொழுது இந்த அருமையான குழந்தை, சிறிய மார்க் டேவிட், இவர்களுடைய கரங்களிலிருந்து என்னுடையதற்கு வந்திருக்கின்றது. இங்கே இந்த சபையின் மூப்பருடன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஒரு ஊழிய ஜீவியத்திற்கென்று இவனை நான் அளிக்கின்றேன். இதை அருளும், கர்த்தாவே. இவனுடைய வாழ்க்கையிலிருந்து மகிமையை எடுத்துக்கொள்ளும். உமக்கு பிரியமாயிருந்தால், கர்த்தராகிய இயேசுவின் வருகை மட்டும் இவன் தாமே ஒரு நீண்ட ஜீவியத்தை செய்வானாக. அப்படி யானால், வரவிருக்கின்ற காலத்தில், கர்த்தராகிய தேவனின் செய்தியை இவன் தாமே கொண்டிருக்கிறவனாக இருக்கட்டும். இதை அருளும், இவனை சுகத்தோடும், சந்தோஷத்தோடும் வைத்திரும், இவனுடைய இருதயமானது, தேவனுக்கு முன்பாக சரியான காரியங்களை எப்பொழுதுமே செய்யத்தக்கதாக அமைந் திருக்கட்டும். இந்த குழந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் அளிக்கிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரி காலின்ஸ், இந்த அருமையான பையன், மற்றும் சகோதரன் காலின்ஸ், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களோடிருப் பாராக.எல்லாருமாக சேர்ந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்'' என்ற பாடலைப் பாடுவோமாக. அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், உள்ளே கொண்டு வாருங்கள் பாவத்தின் இடங்களிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், உள்ளே கொண்டு வாருங்கள் சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். இது எனக்குப் பிரியம். பாருங்கள், பிசாசுக்குத் தருணம் கிடைக்கும் முன்பே சிறு பிள்ளைகளை கிறிஸ்துவினிடம் கொண்டு வாருங்கள். ஒரு ஊழியத்தின் ஜீவியத்திற்கென்று இவர்கள் ஏற்கெனவே அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளனர். 9டௌ (Dauch) குடும்பத்திலிருந்து யாராகிலும் வந்துள்ள னரா இல்லையா என்று யாருக்காவது தெரியுமா? -சகோதரி டௌ? சகோ.ப்ரௌன் (Brown) இங்கு இருக்கிறாரா? ஆம், மகிழ்ச்சி. சகோ. டௌ இன்னும் உயிருடன் இருக்கிறாரா? அற்புதம். (சகோதரன் டாம் பிரௌன் சகோதரன் வில்லியம் டௌவின் நிலையைக் குறித்து கூறுகிறார் - ஆசி ) அவர் நம்மை விட்டு ஏறக் குறைய பிரிந்து சென்று விட்டார். பாருங்கள், நாம் இன்னும் அதிகம் கூற முடியாது அல்லது நாம் இன்னும் அதிகம் கேட்க முடியாது. அவர் வாழ தேவன் குறித்திருந்த காலத்தைக் காட்டிலும் இருபத்தொன்று ஆண்டுகள் அதிகமாக இதுவரை வாழ்ந்து விட்டார். 10அன்றொரு நாள் காலை அவர் மரணத்தருவாயிலிருப்பதாக எங்களுக்குச் செய்தி வந்தது. நாங்கள் உடனே அங்கு விரைந் தோம். தேவனாகிய கர்த்தர் அவருக்கு நல்லவராயிருந்து, அவரை மரணத்தினின்று விடுவித்தார். அவர் ஆயத்தமாயிருக்கிறார், கர்த்த ருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நாமனைவரும் ஒருவரையொருவர் சார்ந்திருக் கிறோம். நாம் சற்று . . . இந்த வயோதிபர் எனக்கு தகப்பனைப் போன்றவர். நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தபோது தேவனுடைய ஒளி தோன்றி னதே! அவ்வமயம் இதற்கு முன்பிருந்த கூடாரத்தில் அவர் அமர்ந்து கொண்டிருந்தது என் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது எண்பத்தேழு அல்லது எண்பத்தெட்டு வயது நிரம்பியிருந்த அவர், உடனே ஒரு தடியை ஊன்றி என்னிடம் வந்து, “நான் உடனே ஞானஸ்நானம் பெற வேண்டும்'' என்றார். யாரோ ஒருவர் ஞானஸ் நான உடைகளை அவருக்குக் கொண்டு வந்து கொடுத்தார். அடுத்த ஞானஸ்நான ஆராதனைவரை அவரால் காத்திருக்க முடியவில்லை. அவர் அப்பொழுதே புறப்பட்டு வந்தார், அப்பொழுதே புறப்பட்டு வந்தார். ஆகவே அது .... எனக்கு... எனக்கு பிடிக்கும். அன்றொரு நாள் நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர், ''சகோ. பிரான்ஹாமே, என் உடல்நிலை சரியாயுள்ளதென்று எண்ணுகின்றீர்களா?'' என்று கேட்டார். 'நீங்கள் மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்து கொண் டீர்களா?'' என்று கேட்டேன். அவர், “ஆம், ஐயா'' என்று விடையளித்தார். நான், 'மருத்துவர் மருத்துவக் குழாயை (Stereoscopes) காதில் அணிந்து உங்கள் இருதயத் துடிப்பு சரியாயுள்ளதா என்று கண்டு பிடிப்பார். இருதயத் துடிப்பு வரைபட இயந்திரத்தை (Electro Cardio Gram) உபயோகித்தும், இரத்த அழுத்தத்தை கண்டு பிடித்தும், சிறு நீரைப் பரிசோதித்தும், இவைகளைக் குறித்து மருத்துவ மேதைகள் எழுதியுள்ள புத்தகங்களைப் பார்த்தும், என்ன தவறுள்ளது என்பதை அவர்கள் நிர்ணயிக்கின்றனர்“ என்றேன். 11“ஆனால் என்னிடம் ஒரே ஒரு மருத்துவக் குழாய் மட்டுமே உள்ளது. அதுதான் வேதாகமம். பாருங்கள், அது மனிதனின் ஆத்துமாவில் காணப்படும் கோளாறுகளை நிர்ணயிக்கிறது. இப்பொழுது நான் ஒரு பரிசோதனை நடத்தப் போகிறேன். யோவான் 5:24, என் வசனத்தைக் கேட்டு .... என்றுரைக்கிறது. 'அது, உட்கார்ந்து கொண்டு கேட்பது மாத்திரமல்ல. பாருங்கள், அதை இருதயத்தில் ஏற்றுக் கொள்வதையும் குறிக்கிறது. நீங்கள் வசனத்தைக் கேட்கும் போது அதை விசுவாசிக்கிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று, அது சரியென்று உரைக் கிறது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், அது உங்களுடையதாகிவிடுகிறது. 'என் வசனத்தைக் கேட்டு (அது ஏற்கெனவே உங்களுடையது) என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு...' ''நீங்கள் விசுவாசிக் கிறீர்களா?” என்று கேட்டேன்.அவர், “ஆம்” என்று பதிலளித்தார். 'அப்படியானால் தலைமை மருத்துவர் கூறுவதை நான் உங்க ளுக்கு அறிவிக்கிறேன். அப்படிப்பட்டவன் 'ஆக்கினைத்தீர்ப்புக் குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக் கிறான். நான் அறிந்துள்ளபடியும், இந்த புஸ்தகங்களின்படியும், எனவே நீங்கள் பரீட்சையில் தேர்வு பெற்று விட்டீர்கள்'' என்றேன். ஏறக்குறைய நூறு வயதுள்ள அந்த வயோதிபர் சபைக்கு சென்றதேயில்லை. ஆனால் முதன்முறையாக அந்த ஒளி அவர் பாதையில் பிரகாசித்த போது, அவர் அதை ஏற்றுக் கொண்டார். புதைந்து கிடந்த முன் குறிக்கப்பட்ட அந்த வித்தைப் பாருங்கள். ஹா - ஹம். ஆம், ஐயா. பாருங்கள், வெளிச்சம் அதன் மேல் பட்டவுடனே, அது உடனே உயிர் பெறுகின்றது. 12இப்பொழுது, இன்று மிகவும் உஷ்ணமாயுள்ளது என்று அறிவேன். மறுபடியும் உங்களை ஆராதனைக்கு வரவழைத்து, நீங்கள் இவ்வாறு நெருக்கமாக உட்கார்ந்திருப்பது மிகவும் கடினமானதொன்றாகும். ஆயினும் நான் - நான் சிறிது காலம் உங்களை விட்டுப் பிரிந்து போக வேண்டியுள்ளதால், தேவ கிருபையினால் மீண்டும் ஒரு ஆராதனைக்கு உங்களை வர வழைக்கலாமென்று எண்ணினேன். நாளை இரவு சிக்காகோவுக்கு செல்ல வேண்டும். புதன் கிழமை முதல் கூட்டங்கள் அங்கு ஆரம்பிக்கின்றன. நான் கூடுமானால் நேரத்திற்கு முன்னால் அங்கு சென்று, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு சற்று இளைப்பாறலாம் என்று நான் எண்ணியுள்ளேன். நான் நம்புகிறேன், அவர்கள் அதை ஏற்... இங்கே அதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த கூட்டங்கள் இந்த பத்திரிக்கையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. அது மாரேன்கோ என்றழைக்கப்படுகிறது .... (யாரோ ஒருவர் ''மாரிகோல்ட்''- ஆசி... ஆம், மாரிகோல்ட், மாரிகோல்ட், ஆமாம், அரங்கம். மாரிகோல்ட் (Marigold) அரங்கத்தில் இக்கூட்டங்கள் புதன் இரவு முதல் ஞாயிறு முடிய நடைபெற விருக்கின்றன. சனி காலை, முழு சுவிசேஷவர்த்தகர் சங்கம், காலை ஆகாரக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அவர்கள் அதை எங்கே விளம்பரப்படுத்தியுள்ளனர் என்று எனக்குக் சரியாகத் தெரியவில்லை. இல்லை, சனி மாலையில் லேன் டெக் (Lane Tech) என்னுமிடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. 13இப்பொழுது, அந்நேரம் நீங்கள் அங்கிருக்க நேர்ந்தால் - நாம் வழக்கமாக நடத்தும் சுவிசேஷக் கூட்டங்கள் தாம் அவை. அங்கு அளிக்கப்படவிருக்கும் செய்திகள் பெரும்பாலும் இங்கு ஏற்கனவே அளிக்கப்பட்டவை. ஏனெனில் இங்கு தான் நாம் ஒலிநாடாக்களை ஆயத்தம் செய்கிறோம், நீங்கள் பாருங்கள். இச்செய்திகள் அங்கு அளிக்கப்பட்டால், அவர்கள் குறை கூற வாய்ப்புண்டு. ஆனால் இங்கு பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்களை அவர்கள் பெற்றுக் கொண்டால், அதைக் கேட்பதும் கேட்காததும் அவர்களைப் பொறுத்த விஷயம். இந்த ஒலிநாடாக்கள், நமது சொந்தமான பிரசங்க பீடத்திலிருந்து புறப்பட்ட செய்திகளைக் கொண்டவை. ஆனால் வேறு இடங்களில் ஆழமான செய்திகளை நான் பிரசங்கிப்பதில்லை. ஏனெனில் அங்குள்ள அநேகர் ஆழமற்ற அனு பவம் உள்ளவராயிருக்கின்றனர். ஆனால் இங்கோ , தேவன் என் இருதயத்தில் அருளுவதைப் பேச எனக்கு உரிமையுண்டு. எனவே தான் நம் ஒலிநாடாக்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. பாருங்கள்? அந்த அறையில் உட்கார்ந்து கொண்டு ஒலிப்பதிவு செய்யும் நபர்களை இந்த கண்ணாடியின் வழியாக நீங்கள் காணலாம். 14இப்பொழுது, ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டங்களுக்கு நீங்கள் வர விரும்பினால், உங்களை வரவேற்பதில் எங்களுக்கு மிக மகிழ்ச்சியுண்டு. கூட்டம் நடக்கும் இடத்திற்கு வழி தெரியாமல் போனால், அங்கு வந்து முழு சுவிசேஷ வர்த்தகர் சங்க அங்கத்தினர் களை, அல்லது - அல்லது சகோதரன் கார்ல்ஸனை, அல்லது பிலடெல்பியா சபையை அல்லது அங்குள்ள எவரையாவது அணுகினால், அவர்கள் வழி காண்பிப்பார்கள். 15பிறகு திங்கள் பிற்பகல் அல்லது மாலை இங்கு மறுபடியும் வருவேன். செவ்வாயன்று, நாங்கள் அரிசோனாவுக்குச் சென்று பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும். மீண்டும் எப்பொழுது இங்கு வருவேனென்று எனக்குத் தெரியாது. ஏனெனில், கர்த்தர், என்ன செய்ய வேண்டுமென்று அவர் என்னை நடத்த நான் விரும்புகின்றேன். வினோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இது ஒலிநாடா வில் பதிவாகிறது என்றறிவேன். ஆகவே இதை கூறலாம் என்று நினைக்கிறேன். தரிசனங்களும் பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலும் உள்ள போது, அவைகளை உபயோகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அதாவது... இதுவரை என் ஊழியத்தில் நான் அதிகப் படியாக தரிசனங்கள் கண்டது சென்ற ஆண்டில் தான். அவைகளை ஆதாரமாகக் கொண்டு நான் முன்னுரைத்தவை அனைத்தும் அப்படியே நிறைவேறின என்பது உங்களுக்குத் தெரியும். 16இப்பொழுது, உங்களைச் சந்திக்கவே நாங்கள் மீண்டும் வருவோம். இங்குள்ள சீதோஷ்ண நிலை எனக்குப் பிடிக்கவில்லை. இங்கு வந்தவுடன் என் உடல் நிலை பாதிக்கப்படுகின்றது. அந்த மலை உச்சிகளைக் கடந்து இந்த பள்ளத்தாக்கிற்கு வந்து சேர்ந்த பத்து நிமிடத்திற்குள், நான் நோய்வாய்ப்பட்டு, என் தலை சுழல ஆரம்பிக்கிறது. என் கண்கள் இருளடைகின்றன. இவையனைத்தும் நான் சமாளிக்க வேண்டியதாயுள்ளது. அன்றொரு நாள் நான் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.... 17முதலாவதாக இங்கு என்னைக் கொண்டுவருவது என்னவென்றால், இந்த சபையும், ஜனங்களாகிய நீங்களும், பாருங்கள். என் வாழ்க்கையில் நான் சென்றுள்ள எல்லாவிடங்களைக் காட்டி லும், இங்கு வந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே எனக்கு மிகுந்த ஆவலாயுள்ளது. இங்கு பதிவாகும் ஒலிநாடாக்கள் மற்றவிடங்க ளில் பதிவானவைகளைவிட பன்மடங்கு நன்றாயுள்ளன. பாருங் கள்? பாருங்கள், அதன் காரணமாகத்தான், “எங்கே ஒரு காரியத்தை தேவன் செய்யும் போது, சரியாக அதனுடன் நிலைத்திருங்கள்” என்று கூறுகிறேன். ஆனால் முக்கியமான காரியம் என்னவெனில், நான் இவ்விடம் விட்டுச் செல்ல வேண்டுமென்று அவர் முதன் முறை என்னிடம் கட்டளையிட்டபோது, நான் கீழ்ப்படியத் தவறி விட்டேன். ஆகவே தான் நான் இங்கு வரும் போதெல்லாம் அவர் என்னிடம் கடூரமாக உள்ளார் என்று நினைக்கிறேன். பலியைக் காட்டிலும் கீழ்ப்படிதலே மேலானது. 18நான் அவ்வப்போது இந்த கூடாரத்திற்கு வந்து பிரசங்கம் செய்துவிட்டு செல்வேன். இப்பட்ணத்தின் வெளியில் தங்குப் வர்க்கு என் வருகை அறிவிக்கப்படும். பில்லி பால் இந்த அலு வலகத்தில்தான் இருப்பான். அவன் மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். கர்த்தருக்குச் சித்தமானால், ஏழு எக்காளங்கள், ஏழு வாதைகள், கலசங்கள் என்பவைகளின் பேரில் பிரசங்கம் செய்ய வேண்டும். இந்த ஸ்தலம் சற்று குளிர்ந்த சீதோஷ்ண நிலையை அடையும் சமயத்தில், தேவன் வழி நடத்தும் போது, இங்கு வரு வேன். 19அன்றொரு நாள் ஒரு காரியத்தைக் குறித்து ஒரு கேள்வி எழுந்தது. ஒருவர் என் பேரில் ஒரு காசோலையைக் கொடுத்து, அது எனக்கு மாத்திரமே என்றும், அதற்கான வருமானவரி செலுத்தப் பட்டுவிட்டது என்றும், இனி செலுத்த வேண்டிய அவசியமில்லை யென்றும் கூறினார். நாங்கள் சென்றோம்... எனக்கு அந்த காசோலை அவசியமாயிருந்ததென்று பில்லி அறிந்திருந்தான். அவன் வக்கீல் மாரிடம் (attorneys) சென்று அதை வங்கியில் பணமாக்கலாமா என்று கேட்டான். அங்கிருந்தவர், “ஏன், அவர் அமெரிக்க குடிமகனல்லவா? அவர் ஏன் அதை பண மாக்கக் கூடாது?'' என்றார். பாருங்கள்? அவர், ''அதற்கு ஏற்கெனவே வருமானவரி செலுத்தப்பட்டு விட்டது. எந்த குடிமகனும் அதை பணமாக்கலாம்'' என்றார். 20ஆனால் பில்லிக்கு திருப்தி ஏற்படவில்லை. அவன் பொது ஜன கணக்கரிடம் (Public Accountant) சென்று கேட்டான். அவரும், ''நிச்சயமாக அவர் அதை பணமாக்கலாம். அவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடிமகன்'' என்றார். அப்பொழுதும் பில்லிக்கு நம்பிக்கை வரவில்லை. அவன் மெர்லி மில்லர் என்ப வரை தொலைபேசியில் கூப்பிட்டான். அவர்தான் இந்தியானா போலீசிலுள்ள வருமானவரி சங்கத்தின் தலைவர். அவர்கள் தான் எங்கள் ஆலோசகர். அவர் ஐஸ் அண்டு மில்லர் நிர்வாகி. அவனிடம், “நிச்சயமாக, அதில் தவ றொன்றுமில்லை. அந்த காசோலை அவர் பெயருக்கு எழுதப்பட் டுள்ளதால் அவர் அதை தமக்கே வைத்துக் கொள்ளலாம். அவர் கையொப்பமிட வேண்டியதுதான்'' என்றார். 21பாருங்கள், எந்த காசோலையையும் நான் இப்பொழுது பண மாக்குவதில்லை. அப்படிச் செய்ததனால்தான் வருமானவரி அதிகாரி கள் குற்றம் கண்டு பிடித்தார்கள். யாராவது ஒருவர் மொத்தமாக காசோலைகளைக் கொண்டு வந்து, 'சகோதரன் பிரன்ஹாமே, இதோ காசோலைகள்'' என்று கூட்டங்களில் பெற்ற காசோலைகளை என்னிடம் கொடுத்து விட்டு போய் விடுவார். நானும் அவை களில் 'வில்லியம் பிரன்ஹாம், வில்லியம் பிரன்ஹாம்'' என்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்தேன். அரசாங்கம் இதை கவனித் துக் கொண்டே வந்தது. நான் காசோலைகளில் என் கையொப்ப மிட்டு, கடன்களையெல்லாம் செலுத்திக் கொண்டிருந்தேன். முடிவில் அவர்கள், நான் 300,000 டாலர்கள் வருமான வரி செலுத்த வேண்டுமென்று கூறி விட்டார்கள். அப்பொழுதுதான் எனக்கு தொல்லை ஏற்பட்டது. இப்பொழுது நான் எனக்களிக்கப்பட்ட இந்த காசோலையில் கையொப்பமிட்டு வங்கியில் கொடுத்தவுடனே, அதிகாரி வந்து “இந்த வழக்கை நாங்கள் மீண்டும் தொடங்கப்போகிறோம்'' என்று கூறி விட்டார். அது என்னை கஷ்டத்திற்குள்ளாக்கியது. 22இங்கு அமர்ந்துள்ள சகோதரன் லீ வேயில் வந்திருந்தார். நான் கூறுவதில் தவறில்லையென்று எண்ணுகிறேன். இந்த சிறந்த பாப்டிஸ்டு பண்டிதருக்கு அன்றொரு நாள் குளத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேன். சகோதரன் லீ வேயில், அவர் மிகவும் அருமையானவர், கிறிஸ்துவுக்குள் ஒரு நல்ல சகோதரன். அவர் முன்பு இங்கு பிரசங்கம் செய்திருக்கிறார். அவர் அதிகம் கல்வி கற்ற அறிவாளி. அது மாத்திரமல்ல. அவர் ஆவியினால் நடத்தப்படும் ஒரு மனிதர் - அந்த வெளிச்சம் அவர் மேல் பட்டபோது, அதிலிருந்து அவர் விலக முயன்றாராம். ஆனால் அவரால் முடியவில்லை. எனவே அன்றொரு நாள் காலை நான் அவருக்கு இங்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். அவரால் அதை தாமதம் செய்ய முடியவில்லை. எனவே நாங்கள் இங்கு வந்து, ஞானஸ்நான உடைகளையணிந்து, தண்ணீருக்குள் இறங்கினோம். அவருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. 23அவர் ஆவிக்குரிய ஆகாரத்தை அருந்தினால், நாம் சற்று நேரம் அவருடன் பேசிக் கொண்டே இயற்கை ஆகாரம் உண்ண லாம் என்று கருதி, நாங்களிருவரும் ப்ளூ போர் (Blue Boar) உணவு விடுதிக்குச் சென்று, அங்கு அமர்ந்து அளவளாவினோம். அப்பொழுது அவர் ''ஜனங்கள் உம்மை மோசமாக பேச நீர் எப்படி விட்டுக் கொடுக்கிறீர்?'' என்று கேட்டார். சகோதரன். லீவேயில் நான் அறிந்துள்ள சிறந்த சகோதரர் களில் ஒருவர். ஆனால் அவர் சற்று அவசரமுள்ளவர். நான் அவரிடம் எப்பொழுதும் கூறுவதுண்டு. (சகோதரன். லீ வேயில், இதை கூறுவதில் தவறில்லையென்று நினைக்கிறேன்). ஆதலால் அவர்... நான் உடனே அவசரப்பட்டு (கட்டுதளர்வுற்று பாய்ந்து) விடாதீர்கள். அமைதலாயிருங்கள். தேவன் ஒருவர் தான் அதைச் செய்கின்றார்,'' என்று கூறினேன். அவர் , அது உங்கள் விஷயத்தில் சரியாக இருக்கலாம்'' என்பார். அவர் சிறந்த அறிவாளி. அவர் சந்திப்பதும் அறிவாளி களையே. எனவே அவர்களுக்கு எவ்விதம் பதிலளிக்க வேண்டு மென்று அவருக்குத் தெரியும். அப்பொழுது அவர்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் போய்விடும். 24நான் அவரிடம், “பாருங்கள், சகோதரன். லீவேயில். என்றேன். நாங்கள் அப்பொழுது ப்ளூ போர் உணவு விடுதியில் அமர்ந்திருந்தோம். தாவீது ஒரு நாள் தன் சொந்த குமாரனால் சிம்மாசனத்திலிருந்து தூக்கியெறியப்பட்டான். அவன் சிம்மா சனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டான். அங்கு கலகம் உண்டாகி இஸ்ரவேலர் இரண்டாகப் பிரிந்தனர். அவன் அழுது கொண்டே பட்டணத்தை விட்டு வெளியே சென்றான். அவனுடைய கடைசி நாள் செய்தியை விரும்பாத ஒருவன் சிறிதேனும் கவலை கொள்ளவேயில்லை. அவன் முட வனாயிருந்தான். அவன் தாவீதைக் கேலி செய்து, அவன் முகத்தில் துப்பினான். தாவீதின் மெய்க் காப்பாளன் பட்டயத்தை உருவி, ''என் ராஜாவின் முகத்தில் துப்பின அவன் தலையை வாங்கிப் போடட்டும்'' என்றான். தாவீதோ, ”அவனை விட்டுவிடுங்கள். அப்படி செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருப்பார் என்றான். அவன் தாவீதினுடைய முகத்தில் துப்பி அவனைக் கேலி செய்தான். ''அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருப்பார்'' அவன் எப்படி திரும்ப வந்தான் என்றெல்லாம், அந்த வரலாறு நமக்குத் தெரியும். அப்படி நடந்து கொள்ள மிகுந்த கிருபை அவசியம் என்று சகோதரன். வேயில் எண்ணினார். 25எனவே அலுவலகத்தில் நுழைந்தவுடனே, அந்த பொது ஜன கணக்கர் பில்லி பாலை தொலைபேசியில் கூப்பிட்டு இதைக் குறித்து சொன்னார். சகோதரன். வேயில் என்னுடன் வந்திருந்தார். நான் உள்ளே நுழைந்த போது, அப்பொழுது பிற்பகல் இருக்கும். நாங்கள் அறைக்குள் சென்றோம். நான் மனைவியிடம், ''தேனே, உன்னிடம் ஒன்றைக் கூறப் போகின் றேன்'' என்றேன்... நான் வீட்டை விடுவதற்கு முன்பு நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவள், ''பில், கர்த்தர் தாம் உம்மை அனுப்பியிருக்கிறார் என்று நம்மெல்லோருக்கும் தெரியும். ஆனால் நீர் அங்கிருந்து திரும்பி வந்து விடவேண்டுமென்று அவர் சொல்லவில்லையே. அதைக் குறித்து தான் எனக்கு கவலையாயுள்ளது'' என்றாள். 26நான், ''அது உனக்கும் பிள்ளைகளுக்கும் கடினமாயில்லையெ னில் எனக்கு ஒன்றுமில்லை. கர்த்தருக்குச் சித்தமானால், எங்கிருந்தாலும் நான் அவருக்கு ஊழியம் செய்வேன்“ என்றேன். எனவே நான் அவளிடம் சென்று இந்த விவகாரத்தைக் குறித்து கூறினேன். நான் திரும்பி தொப்பியைக் கழற்றி வைத்தேன். அப்பொழுது யாரோ என்னிடம், இந்த வரி வசூலிப்பவர் நாம் வெளியே செல்ல வேண்டும்...'' ஏதோ சோதிக்க வந்தது போல காணப்பட்டது. நான் சகோதரன். லீவேயிலிடம் கூறினதை நினைக்காமலே, என்னையும் அறியாமல், “அவனை விட்டு விடுங்கள். அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருப்பார்” என்று சொன் னேன். அப்படிக் கூறின மாத்திரத்தில் ஒரு ஒளி சுவற்றின் மேல் பிரகாசித்து, ''அரிசோனாவுக்குத் திரும்ப வா'' என்று சுவற்றில் எழுதினது. சகோதரன். வேயிலும் என் மனைவியும் அங்கு அமர்ந் திருந்தனர். 'அரிசோனாவுக்குத் திரும்ப வா“ என்று அது எழுதினது, அது உண்மை . எனவே ஆமென், நான் அரிசோனாவுக்குத் திரும்பச் செல்கிறேன். 27இந்த வாரம் மகத்தான ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒன்றா யிருந் தது. எங்களுக்கு தனிப்பட்ட பேட்டிகள் இந்த வாரம் இருந்தன. ஏழு முத்திரைகள் வெளிப்பட்ட சமயம் முதற்கு காத்துக் கொண் டிருந்த ஜனங்களை நாங்கள் பேட்டி கண்டோம். சிலர் பட்டணத்தின் வெளியிலிருந்தும், நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்திருந்தனர். ஆனால் பேட்டி தொடங்குவதற்கு முன்பே, அந்தக் காலையில், அவர்கள் கேட்க விரும்பினவைகளையும் அவர்கள் எந்த வரிசையில் கேள்விகள் கேட்கப் போகிறார்கள் என்றும், அவர்கள் சொப்பனங்களையும் அவைகளின் அர்த்தங்களையும், பரிசுத்த ஆவியானவர் எனக்கு முன் கூட்டி அறிவித்து, நான் அவைகளை எழுதி வைத்துக் கொள்ளும்படி செய்தார். இப்பொழுது, அறையில் ஜனங்கள் வருவார்கள். அவர் களைப் பேச விட்டு விடுவேன். அவர்கள், ''சகோதரன். பிரான் ஹாமே, இன்னின்ன காரியத்திற்காக நான் வந்திருக்கிறேன்“ என்பார்கள். 28அப்பொழுது நான், ''நினைவில் கொள்ளுங்கள். நாம் இங்கு ஒருவரோடொருவர் ஐக்கியங் கொள்வதற்காக கூடி வரவில்லை, ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ள நாம் இங்கு வரவில்லை. உங்கள் சிந்தையில், உங்களுடைய இருதயத்தில் ஒரு கேள்வி எழுந்துள்ளது? அதினால் - அதினால் நீங்கள் நிலை தடுமாறி அதற்கு பதில் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. தேவ ஒத்தாசை யைக் கொண்டு ஒருக்கால் என்னால் உதவி செய்ய முடியும்'' என்றேன். நான் “நினைவில் கொள்ளுங்கள். தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனிடம் வந்த போது, அவளுடைய மனதிலும் சில கேள்விகள் இருந்தன. அவளுக்கு பதிலளிக்கக் கூடாதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. அவன் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தான் என்று வேதாகமம் கூறுகின்றது என்றேன். மேலும், ''இதோ சாலொமோனிலும் பெரியவர் இங்கேயிருக்கிறார். பாருங்கள்? அது உண்மை . இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன். அவர்கள் நினைக்கிறதும், விரும்புகிறதும் கேட்டுக் கொள்கிறதும் எதுவோ, அது அவர்களுக்கு அருளப்படும் என்று கர்த்தராகிய இயேசு வாக்களித்துள்ளார். உங்கள் பிரச்சினை என்னவென்றால், அதை எப்படி அணுகுவது அல்லது அது என்னவென்று தெரியாமலிருப்பதே'', என்று கூறினேன் 29மேலும் நான், ''தேவனுடைய தூதர்கள் அவருக்குப் பயந்த வர்களைச் சூழப் பாளயமிறங்குகிறார்கள்'' என்று வேதம் கூறுகிறது. எனவே அந்த வேறொரு உலகிலே ''ஐம்புலன்களும் கிரியை செய்யமுடியாது என்று அறிவிக்கின்றது.'' ஐம்புலன்கள் இவ்வுலகுடன் மாத்திரமே தொடர்பு கொண்டுள்ளன. உங்களுக்கு ஸ்பரிச உணர்ச்சி என்று ஒன்றில்லை யென்றால், உங்களுக்கு உணர்ச்சியே ஏற்படாது. உங்களுக்கு ஸ்பரிச உணர்ச்சி எதுவுமில்லையென்றால், அப்பொழுது அது மற்ற உலகம். உங்களுக்குப் பார்வை இல்லையென்றால், நீங்கள் பார்ப் பது வேறொரு உலகைத்தான், அப்பொழுது இவ்வுலகைக் குறித்து உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. எனவே இந்த ஐம்புலன்களை நாம் இவ்வுலகில் உபயோகிக்க தேவன் அனுமதித்துள்ளார். இப்பொழுது ஆனால் விசுவாசம் என்னும் வேறொன்று உள்ளது. விசுவாசத்தினால் ஏணிப்படிகளில் ஏறிச்சென்று, மற்ற உலகிற்கு செல்லும் அளவிற்கு உயர சென்றுவிடலாம். அதுதான் தரிசனம் காண்பது. அங்கே நாம் பார்க்கலாம். 30உணர்வு என்னும் புலனைக் கொண்டு நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் என்பதை அறியாமலிருப்பது போல, காணாதிருப் பீர்கள்; பிறகு உங்கள் கண்கள் திறக்கப்பட்டு, உங்களால் அதைக் காணமுடிகின்றது. அதை காணமுடியாத மனிதனுக்கு அது இரகசியமாகவே அமைந்திருக்கும். ஆனால் அது உண்மை “. அங்கு ஆண்டவர்... இங்கு வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலுமிருந்து அநேகர் பேட்டி காண வந்திருந்தனர். அவர்கள் பேசத் தொடங்கி, கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன், நான் “இங்கு பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, எழுந்து போய் அந்த காகிதத்தைக் கொண்டு வருவேன். அவர்கள் எந்த வரிசையில் கேள்விகள் கேட்பார்களோ, அதே வரிசையில் அதில் கேள்விகள் எழுதப்பட்டிருக்கும். கர்த்தர் பெரியவர். அவர் எல்லா காரியங் களையும் அறிந்திருக்கிறார். எனக்கு அதை எழுதி முடிப்பதற்கு மூன்று நாட்கள் பிடித்தது. தனிப்பட்ட நபர்களுக்கென, ஒரு சரியான முறை, உண்மையான வழி இருக்கின்றது. இப்பொழுது, அநேக காரியங் களைக் கூற முடியும். 31ஆனால் எனக்கு வெளிப்பட்ட, ஜனங்களின் இருதயத்தி லிருந்த சிந்தனைகளை, இங்குள்ளவர்கள் அறிவார்களானால், அது பயங்கரமாக இருக்கும். அது குற்றம் புரிவதற்கு வாய்ப்பை அளித்துவிடும். அந்த இரகசியங்கள் மேடையின் மேல் பொது ஜனங்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டால், அது ஒருவர் மற்றொருவரை துப்பாக்கியால் சுடுவதற்கும் குற்றவாளிகளைத் திருத்தும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் சிறு சிறு குற்றங்கள், மற்றும் இருக்கின்ற எல்லாவற்றையும் புரிய காரணமாயிருக்கும். 32ஆனால் இரண்டு பேர் மாத்திரம் தனிமையாக உட்கார்ந்து கொண்டிருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்து வதை... அதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அவர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகள் இரகசியமானவை. அதை நான் யாரிடமும் கூற மாட்டேன். நான் அவர்களுக்கு அளிக்கும் பதிலை, அவர்கள் மற்றவரிடம் கூறுவதும் கூறாததும் அவர்களைப் பொறுத்தது. பாருங் கள்? ஆனால் அந்த பேட்டியின் போது பேசப்படும் விஷயம் எங்களிருவருக்கு மாத்திரமே தெரியும். அதனால்தான் நான் ஒவ்வொருவராக அழைத்து அவர்களைப் பேட்டி காண்கிறேன். பரிசுத்த ஆவியானவர் அப்பொழுது எல்லாவற்றையும் சரிபடுத்தித் தருகிறார். 33அவர்கள் ஒவ்வொருவரையும் பேட்டி காணும் முன்பே, பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் எனக்கு முன்கூட்டி அறிவிக்கும் கிருபையை நினைத்துப் பார்க்கும் போது அவர்களில் அநேகர் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்தவர்கள். அவர் களை நான் அதற்கு முன்பு கண்டதேயில்லை. அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளை, அவர்களுக்குக் காண்பிப்பதற்காக, முன்ன மே எழுதி வைத்திருந்தேன். 34.67ஒரு சகோதரனுக்கு சர்ப்பத்தின் வித்தைக் குறித்த கேள்வி உண்டாயிருந்தது. அதற்கான விடையை நான் காகிதத்தில் எழுதி வைத்திருந்த விதமாகவே எடுத்துக் கூற முடியவில்லை. ஏனெனில் அவருக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அரை மணி நேரம் அதற்குள் முடிந்து விட்டது. விடைகள் எழுதப்பட்டிருந்த காகிதம் அவரிடம் கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். இல்லையென்றால், அது பில்லி பாலிடம் உள்ளது. அந்த மனிதன் இங்கு அமர்ந்திருக்கிறா ரென்று எனக்குத் தெரியும். சற்று முன்பு அவரைப் பார்த்தேன். அவருடைய கேள்விகளுக்கான விடைகளை அறிந்து கொள்ள விரும்பினால், அவர் அந்த காகிதத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 35இப்பொழுது தேவன் எவ்வளவு நல்லவராக இருக்கிறார்! எல்லாரும் நன்றாயிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஹுஹும். இப்பொழுது நாம் இந்த உறுமால்களுக்காக ஜெபம் செய்யும்போது சகோதரன் டெளவை நினைவு கூருவோம். அவர் மிகவும் அருமையான சகோதரன். அவரை ஜெபத்தில் நினைவுகூர நான் விரும்புகிறேன். 36சகோதரன். அன்கிரனை நான் - நான் காண்கிறேன். ஆனால் நான் - நான் சகோதரி அன்கிரனை எங்கேயும் காணவில்லை. அவர் களுக்கு உடல் நலம் சரியாக உள்ளதோ என்னமோ தெரிய வில்லை... ஆம், அவர்கள் அங்கு அமர்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக. ஆம். எனக்கு மகிழ்ச்சி. ஏனெனில் அன்றொரு இரவு எங்களுக்கு அவசர அழைப்பு உண்டாயிருந்தது. சகோதரி, அவர்களுடைய மகள் சகோதரி டெளனிங், இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது, அது சாலையை விட்டு கீழே இறங்கி விட்டது. அது தேவனுடைய சுத்த கிருபை. இல்லையென்றால் இருவரும் அந்த இடத்திலேயே நசுங்கி செத்திருப்பார்கள். அவர்கள் ரயிலில் பிரயாணம் செய்து சபைக்கு வந்துள்ளனர். 37உங்கள் யாவரையும் என்னால் மறக்க முடியாது. உங்களை நான் நேசிக்கிறேன். அது தேவனுக்குத் தெரியும். நான் - நான் உங்களை நேசிக்கிறேன். அந்த பயங்கரமான சீதோஷ்ண நிலையிலும் அவர்கள் பிரயாணம் செய்து இங்கு வருவது... ஜார்ஜியா, அலபாமா, டென்னஸி போன்ற இடங்களில் லிருந்து இங்கு வந்துள்ள சகோதரர் யாரையாகிலும் காணும் போது; அங்கு பனிக்கட்டி மேலும் கீழுமாக சரிந்து கொண்டிருக் கும். அப்படிப்பட்ட நிலையிருப்பினும், அவர்கள் காரில் பிரயாணம் செய்து இங்கு நடைபெறும் ஒரு ஆராதனைக்கு வருகின்றனர். 38சகோதரன் டெளக்காக எனக்கு அவசர அழைப்பு உண்டான போது, ஓஹையோவிலுள்ள லீமா அத்தனை தூரம் என்று நான் நினைக்கவேயில்லை சுமார்... அது ஒரு சிறிது தத்தித்தாண்டும் அல்லது ஒரு தாவுகின்ற தூரம் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், என்னே, நான் அதிகாலை புறப்பட்டு, அந்த இரட்டை நெடுஞ்சாலையில், வேகத்தில் செல்ல வேண்டுமென்று இருந்த அந்த அளவிற்கு வேகமாக காரோட்டி ஒரு மணிக்கு சென்ற டைந்தேன். அந்த இடம் தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலுமிருந்து வருபவர்க்கு அருகாமையிலுள்ளது என்று நினைக்கும் போது... உங்களை நான் நேசிக்கிறேன். அதனால் தான் நான் மிகமிக உத்தமமாக இருக்க பிரயாசப்படுகிறேன். 39பழைய காலத்தவர் சகோதரன் க்ரீச்சும் மற்றவர்களும் அங்கு அமர்ந்துள்ளதை காண்கிறேன். இவர்கள் இத்தனை ஆண்டு காலமாக என்னோடு கூட இருந்து வருகின்றனர்; நாங்கள் ஒன்றா கவே வளர்ந்து வந்திருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு மேரி ஜோவின் புகைப்படத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் எவ்வளவு சிறியவளாக இருந்தாள். இப்பொழுது அவளுக்கு விவாகமாகி குழந்தைகளும் இருக்கிறதென்று நினைக்கி றேன். புகைப்படத்தில் சகோதரன் க்ரீச், சகோதரி க்ரீச் இருவரும் வாலிபமாய், கறுத்த முடியுடன் காணப்படுகின்றனர். நானும் மேடாவும் அந்த படத்தில் இருக்கிறோம். இப்பொழுது எங்களுக்கு முடி நரைத்துப் போய் தோள்கள் தொங்கிவிட்டன. அப்படிப்பட்ட மக்களைக் காணும் போது நமது உள்ளத்தில் உணர்ச்சி தோன்றுகிறது. அப்படிப்பட்ட மக்களைக் குறித்த ஏதோ ஒன்று உங்களை இறுகி பிடிக்கச் செய்கின்றது. பாருங்கள், நீங்கள் - நீங்கள் - நீங்கள் அவர்களோடு தங்க விரும்புகிறீர்கள். பாருங்கள்? உங்கள் எண்ணங்கள் முந்தைய நாட்களுக்கு சென்றுவிடுகிறது. இங்குள்ள வாலிபருக்கும் வயோதிபருக்கும் அவர்களை முன் மாதிரியாக அளிக்கிறேன். நாம் கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். 40ஆகவே இன்று காலை ஒரு ஞாயிறு பள்ளி போதனையை உங்களுக்குத் தரவேண்டுமெனும் எண்ணத்தை தேவன் என் இருதயத்தில் அளித்திருக்கிறார் என்று நம்புகிறேன். தேவனுக்குச் சித்தமானால் அது நீண்ட நேரம் பிடிக்கும். நான் அறிந்தவரையில் சற்று காலத்திற்கு இது எனது கடைசி பிரசங்கமாயிருக்கும். 41சகோதரன் நெவில் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் இந்த கூடாரத்தின் பொறுப்பாளியாய் நியமிக்கப்பட்டிருக்கிறார். நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புவது என்னவென்றால், அவர் இந்த செய்தியை விசுவாசித்து, நான் போதிப்பது போன்றே அவரும் அதை போதிக்கிறார். சகோதரன் நெவிலின் பிரசங்கத்தை கேட்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றி நீங்கள் இங்கு வருவீர்களானால், அது உங்களுக்கு நன்மை பயக்கும் என்று அறிவேன். அவர் இயேசு கிறிஸ்துவின் மகத்தான ஒரு ஊழியன். என் சிறு வயது முதற் கொண்டே ஆர்மன் நெவிலை எனக்குத் தெரியும். அவர் சிறிதளவும் மாறவேயில்ல. ஆனால் ஒரு மாற்றம் -தேவனுக்கு அருகாமையில் அவர் வந்துவிட்டார். நான் மெதோடிஸ்டு மேடைக்கு அழைக்கப்பட்டபோது, அங்கு அவரை சந்தித்தேன். நான் இக்கூடாரத்திற்கு திரும்பி வந்து, என்றாவது ஒரு நாள் நான் அவருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பேன் என்றேன். இதோ அவர் இங்கு இந்த செய்தியுடன் இருக்கிறார்- தீரமான, உண்மையான தேவ ஊழியன். 42சகோதரன் நெவிலுக்கு அநேக பிரயாசங்களும் மனக்கவலை களும் உண்டு. ஆனால் அதையெல்லாம் அவர் இக்கூடாரத்தில் காட்டிக் கொள்வதில்லை. ஜனங்களின் வாழ்க்கையிலுள்ள அந் தரங்க காரியங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பினை தேவன் எனக்குத் தந்திருக்கிறபடியால், அவர் எதைக் கடந்து கொண்டிருக் கிறார் என்று எனக்குத் தெரியும் - அது அதிகமாயுள்ளது. பாருங்கள் அவர் அதிகமான கஷ்டங்களையும் தொல்லைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். மோசேயின் கரங்களை யோசுவாவும் காலேபும் உயர்த்தி பிடித்திருந்தது போல, இவர் தேவனுடைய வார்த்தையை அளிக்கும் போது, இங்குள்ள நீங்கள் அவரைத் தாங்கி வருகிறீர்கள். 43எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் அன்பு கூருங்கள். ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்... பிசாசு என்ன கூறமுயன்றாலும் சரி! நீங்கள் எல்லாரும் ஒரு பெரிய இனிய கூட்ட மாயிருந்து வருகிறீர்கள். ஆனால் என் எச்சரிக்கையை ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள், சாத்தான் உங்களை அவ்விதம் விட்டு வைக்கமாட்டான், இல்லை ஐயா! அவன் எல்லாவித அம்புகளையும் எய்வான். யாரையாவது ஒருவரை அவனுடைய கையாளாக வைத்துக் கொள்வான். குற்றம் கண்டுபிடிப்பவர் யாரையாகிலும் அல்லது ஒரு அவிசுவாசியை அவன் உள்ளே நுழைத்து, மெதுவாக உங்களுடன் ஐக்கியங் கொள்ளச் செய்து, அவனுக்குள் விஷத்தை திணிப்பான். அந்த மனிதன் விஷத்தை சபையில் நுழைக்கத் தொடங்குவான். அப்படிப்பட்ட எதனுடனும் நீங்கள் சேராதீர்கள். அதனுடன் நீங்கள் எவ்விதத் தொடர்பும் கொள்ள வேண்டாம். நீங்கள் ஒருவரோடொருவர் இனிமையாக இருந்து, ஒருவரி லொருவர் அன்பு கூர்ந்து தயையுள்ளவர்களாக இருங்கள். விஷத்தைத் திணிக்கும் அந்த மனிதன் அல்லது ஸ்திரீ- அது யாராயிருந்தாலும் அவர்களும் இரட்சிக்கப்பட வேண்டுமென்று அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்களுக்காக ஜெபித்து, ஒருவரோடு ஒருவர் ஒட்டிக்கொள்ளுங்கள். 44உங்கள் போதகருடன் தரித்து நில்லுங்கள். அவர்தான் உங்கள் மேய்ப்பன். அவருக்கு எல்லாவித மரியாதையும் செலுத்துங்கள். அவர் உங்களை வழிநடத்துவார். ஏனெனில் அதற்கென அவர் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாருங்கள்? நான் கூறுவதை கவனம் வைத்து கொள்வீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) சத்துரு வருவான். அவன் வரும்போது நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக் கமாக பிணைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுடைய சத்துருவான பிசாசினால் உபயோகிக்கப்படும் அந்த மனிதன் உங்களை விட்டுப் போய் விடுவான்; அல்லது உங்களில் ஒருவனாக ஆகிவிடுவான். அவ்வளவுதான். நீங்கள் ஒரு தனிக்குழுவாக ஆக்கிக்கொள்ளாதீர்கள், அல்லது - அல்லது கலந்து பேசி உங்களையே ஒரு தனக்குழுவாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். நாம் அனைவரும் ஒருவரே. நான், 'இடது கையே, உன் மேல் நான் கோபமாயிருக்கிறேன். நீ வலது கையாயில்லாதபடியால், உன்னை சரீரத்திலிருந்து அகற்றிவிடப் போகிறேன்'' என்று கூறமுடியாது. அது என் இடது கை. அதனுடைய இடத்தில் அது இருக்க வேண்டுமென்றே நான் - நான் விரும்புவேன். என் விரலின் நுனிகளும் கூட அதனதன் இடத்தில் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புவேன் - அவ்வாறே சரீரத் தின் சிறு அவயவங்களும் கூட. அது போன்று, விசுவாசிகளின் சரீரமாகிய நாம் ஒருவருக்கொருவர் இணைந்து, ஒருவரோடொருவர் சரியாக இருந்து, நமது இடத்தில் பொருத்தப்பட வேண்டு மென்றே தேவன் விரும்புகிறார். 45இப்பொழுது அதைக் குறித்த ஒலி நாடாக்கள் உங்களிடம் இருக்கின்றன. நாம் விசுவாசிக்கும் போதகங்களின் ஒலிநாடாக்கள் உங்களிடம் உள்ளன. சபையில் கடைபிடிக்க வேண்டியதைக் குறித்த ஒலிநாடாக்களும் உங்களிடம் உள்ளன - நாம் தேவனுடைய சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், நாம் எவ்விதம் இங்கு ஒன்று கூடி உன்னதங்களில் ஒருமித்து உட்கார வேண்டும் போன்றவை. நீங்கள் வீட்டில் தங்கிவிடவேண்டாம். தேவன் உங்கள் இருதயத்தில் வாசம் செய்வாரானால், உங்கள் சகோதரருடன் ஐக்கியங்கொள்ள, இக்கூடாரத்தின் கதவுகள் திறக்கும் வரைக்கும் உங்களால் காத்திருக்க முடியாது. அத்தகைய உணர்ச்சி உங்களில் இல்லையென்றால், நீங்கள் ஜெபத்தில் தரித்திருக்க வேண்டிய நேரம் இதுவே என்று உங்களிடம் கூற விரும்புகிறேன். ஏனெனில் நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். வேதாகமானது உயர்த்தினது . . .இந்நாட்களில் “நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய் பார்க்கிறோமோ அவ்வளவாய் நாம் ஒருவரிலொருவர் அந்த திவ்விய அன்பில் - கிறிஸ்தவ அன்பில் - அன்பு கூர்ந்து, நாம் சபை கூடி வந்து கிறிஸ்து இயேசுவுக்குள் அவரோடு கூட உன்னதங்களில் உட்காருவோம்'' ”நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ள வர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்''. அது உண்மை , நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். 46சகோதரன் அல்லது சகோதரி யாராகிலும் தவறு சிறிது செய்துவிட்டனர் என்று நீங்கள் நினைத்தால், 'ஆண்டவரே, கசப்பான வேர் முளைத்தெழும்ப அனுமதிக்க வேண்டாம். ஏனெனில் அது அவரையும் பாதிக்கும், என் வாழ்க்கையிலிருந்தும் அது கிறிஸ்துவை எடுத்துப் போடும்'' என்று ஜெபியுங்கள். குரோதம், விரோதம், பகை என்னும் விஷ அமிலம் உங்களிட மிருந்து பரிசுத்த ஆவியை எடுத்துப் போட்டு விடும். அது அவரை இந்த கூடாரத்திலிருந்து ஓட்டி விடும். அது தேவனுடைய ஆவியை அழித்துவிடும். இல்லையேல் அதை உங்களைவிட்டு ஓட்டி விடும். உங்கள் போதகரின் மனதை அது புண்படுத்தும். அது எல்லாவற்றையும் செய்துவிடும். பாருங்கள்? நீங்கள் அப்படி செய்ய வேண்டாம். நீங்கள் அவ்வளவுக்கவ்வளவு அருகில் வாருங்கள். உங்கள் கொக்கியை (Buckle) எடுத்துக் கொள்ளுங்கள் - அன்றிரவு அந்த சகோதரன் (போதகர்) கொக்கியைப் பெற்றுக் கொண்டதாக தரிசனம் கண்டார் என்று சாட்சி கூறினது போல, அந்த கொக்கியை தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை மாட்டிக் கொள்ள உதவி செய்யும். அதை தரித்துக் கொண்டு, இறுக்கிக்கொண்டு, ஒருவருக்கொருவர் அருகில் வாருங்கள். ஒருவரைக் குறித்து ஒருவர் நல்லதை மாத்திரம் பேசுங்கள், மற்றவரைக் குறித்த நல்ல காரியங்களை மாத்திரம் கூறுங்கள், அப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். 47இப்பொழுது இன்று காலை, கர்த்தருடைய சித்தத்தினாலும், அவருடைய உதவியினாலும் கிருபையினாலும், இங்கே ஒரு கொத்து கேள்விகளை, நான் வைத்திருக்கிறேன். சரியாக கூறுவோமென்றால், அது வேத வாக்கியங்களைக் குறித்ததாகும். இப்பொழுது அதை நாம் அணுகும் முன்பு... ஒலிப்பதிவு கருவி இயங்கும் சத்தம் கேட்டதென்று நினைக்கிறேன். தேவனுடைய கிருபையினால் இப்பொழுது செய்தியைக் கொண்டுவரப் போகிறேன்.முதலில், ஜெபம். 48கர்த்தராகிய இயேசுவே, தேவனுடைய மாறாத கரத்தினால் - முற்றிலுமான அந்த வார்த்தையினால்- இவர்கள் ஒன்றாக பிணைக் கப்பட வேண்டுமென்று இந்த சரீரமாகிய சபைக்கு நான் இப்பொ ழுது ஆலோசனை கூறினேன். கொடிய ஓநாய்கள் அவர்களுக் குள்ளே வரும் என்று பவுல் அவனுடைய மந்தையை எச்சரித்தது போல் நானும் எச்சரித்தேன். அன்றிருந்தது போலவே இன்றைக் கும் நீர் மாறாத தேவனாயிருக்கிறீர். அதே போல் சத்துருவும் தன் வழிகளில் மாறாதவனாயிருக்கிறான். இந்த ஐக்கியமும் அன்பின் பிணைப்பும் இந்த மக்களிடையே எப்பொழுதுமே கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் நிலைத்திருப்பதாக! ஆண்டவரே, நாங்கள் வார்த்தையை வாசிக்கும் பொழுது எங்களுக்கு உதவி புரியும். பரிசுத்த ஆவியானவர் தாமே அதை வெளிப்படுத்தித் தந்து, பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புவிக் கப்பட்ட அந்த விசுவாசத்திலே நாங்கள் இறுகக் கட்டப் பட்டிருக்க அருள் புரியும். ஆகாரத்தை சேமித்து வைக்க வேண்டுமென்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு தரிசனம் தந்தீர் - நல்ல, ஆரோக்கியமான காய்கறிகள் இந்த கூடாரத்தில் சேகரித்து வைக் கப்பட்டிருந்ததை நான் தரிசனத்தில் கண்டேன். அதை பீப்பாய் நிறைய - அல்லது ஒலி நாடாக்கள் நிறைய - பெற்றுக் கொள்ள உதவி புரியும். அது இயேசு கிறிஸ்துவை நாங்கள் வாழும் இந்த மணி நேரத்தில் வெளிப்படுத்தித்தரவும், எங்களுக்கு முன் வைக்கப்பட் டுள்ள பணியை நாங்கள் சரிவர செய்து முடிக்க அது எங்களுக்கு ஆவிக்குரிய பெலனை அளிக்கவும் கிருபையருளும் பிதாவே. 49உம்முடைய பிள்ளைகளாகிய இவர்களை ஆசீர்வதியும். இந்நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து அவர்கள் இன்று காலை இங்கு குழுமியுள்ளனர். இது மிகவும் உஷ்ணமான, வியர்வை தோன்றும் காலையாயுள்ளது. ஆயினும் இவைகள் அனைத்திலும் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை நாங்கள் உணருகிறோம். நாங்கள் ஜான் வெஸ்லி, கால்வின், சாங்கி, நாக்ஸ், ஃபின்னி, இன்னும் அநேகரை இந்நேரத்தில் நினைவு கூருகிறோம். அவர்களுக்கு மின்விசிறி ஒன்றும் இருக்கவில்லை. ஜனங்கள் தங்கள் முகங்களில் வியர்வை ஒழுக, கூடங்களில் (Halls) உட்கார்ந்து கொண்டிருந்தனர். தேகம் முழுவதும் மூடும் உடைகளை உடுத்திய பெண்மணிகள் அங்கு அமர்ந்து கொண்டு, வியர்வையினால் தங்கள் உடைகள் பூராவும் நனையுமட்டும் தேவனுடைய வார்த் தையை உற்றுக் கேட்டு, தங்கள் ஆத்துமாக்களை போஷித்துக் கொண்டனர். இப்பொழுது, கர்த்தாவே, அவர்கள் எங்கேயோ அப்புறத்தில் இளைப்பாறிக்கொண்டு, கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று நாங்கள் உணருகிறோம். 50பிதாவே, எங்களை ஒன்றாக வைத்தருளும். பரிசுத்த ஆவியா னவர் எங்களை வழிநடத்துவாராக, திசைகாட்டுவாராக. உமக்கென ஊழியம் செய்யும் நீண்ட ஜீவியத்தை எங்களுக்குத் தாரும். உம் முடைய வார்த்தையிலிருந்து நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கும் அந்த மகத்தான செய்தியை இன்று காலை எங்களுக்குத் தந்தருள்வீராக! அது ஒவ்வொருவருடைய இருதயங்களிலும் பாய்வதாக! ஆண்டவரே, இந்த உதடுகள் சத்தியத்தை மாத்திரம் பேசச் செய்யும். அதை கேட்கும் ஒவ்வொரு இருதயமும் சத்தியத் தை ஏற்றுக் கொள்வதற்கென வளம் பொருந்தியதாய் இருப்பதாக! அது நித்திய ஜீவனின் மகத்தான மரங்களாக வளர்ந்து, பிரகாசிக்கிற ஒளியாகவும், எல்லாராலும் விரும்பிப் படிக்கும் நிரூபங்களா கவும் அமைந்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து எங்கள் மத்தியில் இருக்கும் இயேசு கிறிஸ்துவை மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாயிருக்கட்டும். எங்களை உமது அன்பினால் நிறைத்து ஆவியின் கனிகள் எங்களில் காணப்பட்டு, இரண்டா யிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் இயேசு வின் ஜீவன் எங்களுக்குள் வாசமாயிருப்பதனால் நேரிட்டுள்ள பலனை மற்ற மனிதர், ஸ்திரீ கள், பையன்கள், பெண்கள் அனைவரும் கண்டு கொள்ள அருள் புரியும். பிதாவே, உம்மை கனப் படுத்துவதற்கு இதை எங்களுக்கு அருள்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கி றோம். ஆமென். 51இப்பொழுது வேதாகமத்திலிருந்து ஒரு பாகத்தை இப்பொழுது வாசிக்க விரும்புகிறேன். உங்கள் காகிதங்களையும் எழுதுகோல்களையும் ஆயத்தமாக வைத்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். சகோதரன் நெவில், நீங்கள் அமைதியாக அமர்ந்திருக் கிறீர்கள். என் கோட்டை நான் கழற்றி விடப்போகிறேன். (சகோதரன் நெவில், ''அது சரியே என்று கூறுகிறார் - ஆசி) என் கோட்டை நான் கழற்றுவதற்காக என்னை மன்னிக்கவும். இங்கு மிகவும் உஷ்ணமாக இருக்கிறது. 52உங்கள் வேதாகமத்தை கொலோசெயர் நிரூபத்தின் முதலாம் அதிகாரத்திற்கு திருப்புங்கள். நீங்கள் வீட்டிற்கு சென்று அந்த முழு அதிகாரத்தையும் படியுங்கள். ஆனால் இன்று காலை நான் 15ம் வசனம் முதல் 29ம் வசனம் முடிய வாசிக்கப் போகிறேன். ஆகவே இப்பொழுது கூடுமானவரை பொறுமையா யிருங்கள். தேவன் எனக்கு உதவி செய்வாரானால், இத்தனை நாட்களாக நான் கூடாரத்தில் பேசி வந்த அனைத்தையும் இந்த பாகம் வெளிப்படுத்தி, எல்லாவற்றையும் உங்கள் நினைவுக்கு கொண்டு வரும் - ஏன் அவைகளைக் கூறினேன், நான் என்ன கூறினேன், எதற்காக இவைகளைச் செய்தேன் என்னவெல்லாம் நான் செய்தேன் - அவையாவும் இதன் காரணமாகத்தான் என்பதை அது வெளிபடுத்தும். இப்பொழுது 15ம் வசனம் முதல்:''அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளு மாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங் களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களா னாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர். எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லா வற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித் தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும் அதை மறுபடியும் அழுத்திக்கூற விரும்புகிறேன் -19ம் வசனம் சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ள வைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று, அந்த ஒப்புரவாக்குதல் எங்கு சென்றது என்பதைக் கவனியுங்கள் முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும் படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையை விட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விகவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிக ளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன். இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன். ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறை வாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவ வசனத்தையும் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, இதை மறுபடியும் படிக்க விரும்புகிறேன் ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறை வாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவ வசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, உங்கள் பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக் காரனானேன். புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐகவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்து வானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் நாங்கள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு அவரையே நாங்கள் அறிவித்து எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப் பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப் படுகிறேன்“ 53கொலொ 1:15-29 இந்த வேதவாக்கியங்களிலிருந்து ஒரு பொருளைத் தெரிந்து கொண்டு, வேதம் முழுவதிலும் அதை ஆதாரப்படுத்த விரும்பு கிறேன். ''கிறிஸ்து தேவனுடைய பரமரகசியத்தின் வெளிப்படு தலாயிருக்கிறார்“ என்று இதற்கு தலைப்பு கொடுக்க விரும்புகிறேன். இதை ஞாயிறு பள்ளி பாடமாக எடுத்து, நாமனைவரும் அதை ஒருமித்துப் படித்து ஐக்கியங் கொள்வோம். 54உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் தமது பரம் ரகசியத்தை தமது சிந்தையில் கொண்டிருந்தார். இப்பொழுது, அங்கே தேவனுடைய சிந்தையின் பின்புறத்தில், அவர் முயற்சித்து செய்து முடிக்கப்போகும் ஏதோ ஒன்று அங்கே இருந்தது. அப்படிச் செய்வதில் அவருக்கு ஒரு நோக்கம் உண்டாயிருந்தது -அதாவது, தம்மை வெளிப்படுத்த வேண்டு மெனும் நோக்கமே அது. ஆதியில் சந்திரன், நட்சத்திரங்கள், அணுக்கள், மூலக் கூறுகள் போன்றவை இருக்கவேயில்லை. அவர் தேவனாயிருந்தார். சரியாகக் கூறினால் அவர் அப்பொழுது தேவனாகவும் இல்லை. ஏனெனில் 'தேவன்' என்னும் சொல் 'தொழுகைக்குரிய பொருள்' என்று அர்த்தங்கொள்ளும். அவரைத் தொழுது கொள்ள அப்பொழுது ஒன்றுமேயில்லை. எனவே, அவரிலிருந்த தன்மைகள் அனைத்தும் வெளியாக வேண்டுமெனும் கருத்தினை அவர் தமது மகத்தான சிந்தையில் கொண்டிருந்தார். அவரில் அன்பு என்னும் தன்மை உண்டா யிருந்தது. அவருக்குள் பிதாவாக வேண்டிய தன்மை இருந்தது. அவருக்குள் குமாரனாக வேண்டிய தன்மை இருந்தது, அவருக்குள் இரட்சகராக வேண்டிய தன்மை இருந்தது. அவருக்குள் சுகமளிப் பவர் என்னும் தன்மையும் இருந்தது. இப்பொழுது வெளிப்படை யாகி, நாம் கண்டு கொண்டிருக்கும் தன்மைகள் அனைத்துமே தேவனுக்குள் குடிகொண்டிருந்தன. 55அவர் முதலாவதாக தேவ தூதர்களை சிருஷ்டித்தார் என்பது என் கருத்து. இந்த தேவதூதர்கள் அவரைத் தொழுது கொண்டனர். அதுவே அவரை தேவனாக ஆக்கியது. அங்கிருந்து அவர் தொடங்கி (நான் முன்பு அளித்துள்ள செய்திகளில் இவைகளை விவரிக்க முயன்றிருக்கிறேன்)... தேவ தூதர்கள் அவரைத் தொழுது கொள் ளத் தொடங்கினர். பின்பு... இந்த உலகில் மூலக் கூறுகள் தோன்று வதற்கு முன்பே நிகழ்ந்த சம்பவம் அது. அப்பொழுது எதுவும் மில்லை. எல்லாமே இருளாக இருந்தது. அப்பொழுது சூரியன் இல்லை, சந்திரன் இல்லை, நட்சத்திரங்கள் இல்லை, எதுவுமே இல்லை. அவ்வமயம் அவர் தேவனாக இருந்தார். அவர் யோபிடம், ''நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? அப் பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே'' என்றார். “நீ எங்கேயிருந் தாய்? பாருங்கள். பூமி தோன்றுவதற்கு முன்பே அது நிகழ்ந்தது. 56இப்பொழுது, தேவனுக்கு ஒரு நோக்கமும், அவரிடம் மறைக்கப் பட்டிருந்த பரமரகசியமும் உண்டாயிருந்தது. அதைக் குறித்து தான் இன்று காலை நான் சபையிடம் பேச விரும்புகிறேன். இவ்வுலகம் தோன்றுவதற்கு முன்னமே அவருடைய சிந்தையில் இருந்த, மறைக்கப்பட்டிருந்த தேவ ரகசியத்தைக் குறித்தும், அது எப்படி நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மணி நேரம் வரை படிப் படியாக வெளிப்பட்டுக் கொண்டு வந்தது என்பதைக் குறித்தும்? பாருங்கள்? அப்பொழுது நீங்கள் எல்லாவற்றையுமே - என்ன நேர்ந்தது என்பதைக் குறித்து தெளிவாய் அறிந்து கொள்வீர்கள். 57தேவனுடைய பரம ரகசியம்... அது இரகசியமாக இருந்தது. அவர் அதை இரகசியமாக வைத்திருந்தார். அதைக் குறித்து யாருமே ஒன்றும் அறிந்திருக்கவில்லை. தேவதூதர்களும் கூட அதை விளங்கிக் கொள்ளவில்லை. பாருங்கள்? அவர்களுக்கும் கூட அவர் அதை வெளிப்படுத்தவில்லை. அதனால்தான் நம்முடைய ஏழாவது இரகசியத்தில் ஏழாம் முத்திரை திறக்கப்பட்ட போது, பரலோ கத்தில் அமைதல் உண்டாயிற்று. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது, அவர் மறுபடியும் எப்பொழுது வருவார் என்று அவரைக் கேட்டனர். “என்ன நிகழப்போகிறதென்று குமாரனும்தாமே அறியார்' என்று அவர் பதிலுரைத்தார். பாருங்கள், இவையனைத் தையும் அவர் தமக்குள்ளே கொண்டிருந்தார். அது ஒரு இரகசிய மாயிருந்தது. அதன் காரணமாகத்தான் பரலோகத்தில் அரை மணி நேரம் அமைதல் உண்டாயிற்று. ஏழு இடிகள் சத்தமிட்டு முழங் கின போது, அதை எழுத வேண்டாமென்று யோவான் தடை செய்யப்பட்டான். பாருங்கள், கர்த்தருடைய வருகை. அவர் எவ் விதமாக வருவார், எப்பொழுது அவர் வருவார், என்கின்ற ஒரு காரியத்தை மாத்திரமே அவர் இன்னமாக வெளிப்படுத்தவில்லை. அவர் வெளிப்படுத்தாமல் இருப்பது ஒரு நல்ல காரியமாகும். இல்லை . 58அவர் வேதாகமத்தில் காணப்படும் ஒவ்வொரு நிழலான காரியங்களிலும் அதை காண்பித்தோ அல்லது வெளிப்படுத்தியும் மிருக்கின்றார். எனவே வேதம் முழுவதும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் தேவனுடைய பரமரகசியத்தின் வெளிப்பாடாய் அமைந்துள்ளது. ஹம். வேதாகமம் முழுவதுமே தேவனுடைய ஒரே குறிக்கோளை - ஒரே நோக்கத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளது. முழு வேதாகமத்தில் அந்த நோக்கத்தை நிறைவேற்றவே அவர் விரும்பினார்: வேதத்தில் காணப்படும் விசுவாசிகளின் செயல்கள் அனைத்துமே தேவனுடைய நோக்கத்தை வெளியரங்க மாக்கும் முன்னடையாளங்களாக அமைந்துள்ளன. இந்த கடைசி நாட்களில் அவைகளை அவர் வெளிப்படையாக்கி நமக்குக் காண் பிக்கிறார். தேவனுடைய உதவியைக்கொண்டு, தேவனுடைய சிந்தையில் இவ்வளவு காலமாக என்ன இருந்து வந்தது என்றும், அதை எப்படி அவர் வெளிப்படுத்தினார் என்றும் இன்று காலை நாம் பார்க்கலாம். 59எனவே அதன் மகத்தான அர்த்தம் என்ன வென்று தெரிந்து கொண்டு அதை மக்களிடம் கொண்டுவர முயல்வது எப்படி யிருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். பாருங்கள்? அதை தேவன் எனக்கு வெளிப்படுத்தித் தந்த விதமாக, அவ்வளவு விவரமாக நான் உங்களிடம் கூறப்போவதில்லை. நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால்... வேதாகமத் திலுள்ள அநேக புத்தகங்களிலிருந்து வேதவாக்கியங்களைப் படிக்க வேண்டுமெனும் எண்ணம் எனக்குள்ளது. இப்பொழுது லூக்கா எழுதின சுவிசேஷம் 24ம் அதிகாரத்தில் இரண்டு சீஷர்கள் எம்மாவூருக்குச் செல்வதை நாம் காண்கிறோம். இவர்களிருவரும் எம் மாவூருக்குப் போகும் வழியில் அவருடைய மரணத்தைக் குறித்து பேசி அழுது கொண்டு - காரணமின்றி அவர் பாடுபட்டார் என்று பேசிக் கொண்டு - நடந்து சென்றனர். அவர்களுடைய ஆண்டவரை அவர்கள் கொண்டு போய் சிலுவையிலறைந்தனர். ஆகவே அவர் சாலையோரத்திலிருந்து வந்து, அவர்களுடன் சேர்ந்து கொண்டு, இயேசுவைக் குறித்து அவர்களிடம் பேசத் தொடங்கினார். அவர், 'தீர்க்கதரிசிகளும், சங்கீதப் புத்தகமும் சொன்னயாவையும் விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத முட்டாள் களே (fools)...' என்று அவர்களைக் கடிந்து கொண்டார். பாருங் கள்? அவர் என்ன செய்தார்? தீர்க்கதரிசிகள் அனைவரும், சங்கீதங் களும் கூறினவைகளுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, அவையனைத்தின் வெளிப்பாடும் அவரே என்று காண் பித்தார். 60இன்று காலை நான் பிரசங்கம் செய்யாமல், பாடம் கற்பிக்கிற காரணம் என்னவெனில்; அவ்விதம் கற்பிக்கும் போது அதை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும். ஒரு வேதவாக்கியத்தை எடுத்துக் கொண்டு அதை சரியாக விளக்காமல் விட்டு விட்டு மற்றொன்று க்கு செல்வதைக் காட்டிலும், இவ்வாறு கற்று கொடுத்தல் சிறந்த முறையாகும். 61சங்கீதங்களும், மற்றும் தீர்க்கதரிசிகள் எல்லாரும் தம்மைக் குறித்தே பேசினர் என்பதாக அங்கு கூறினார். பழைய ஏற்பாடு முழுவதும், புதிய ஏற்பாடு முழுவதும் அவரைக் குறித்தே எழுதப் பட்டுள்ளன என்றும் பாடப்பட்ட சங்கீதங்கள் அனைத்தும் அவரைக் குறித்தே பாடப்பட்டன என்றும் அது காண்பிக்கிறது. 22ம் சங்கீதத்தை நீங்கள் பாடி, இயேசு சிலுவையிலறையப் பட்ட அன்று காலை நிகழ்ந்த சம்பவத்துடன் அதை ஒப்பிட்டு பாருங்கள். பாருங்கள்? “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளையெல்லாம் அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்''. அவையனைத்துமே ..... அவர்கள் தேவாலயத்தில் அந்த சங்கீதத்தைப் பாடிக் கொண்டே, யாரைக் குறித்து பாடினார்களோ அவரையே... அந்த பெரிய மார்க்கத் தலைவர்கள், பெரிய மனிதர்கள், பெரிய போதகர்கள் குருடராயிருந்து, தீர்க்கதரிசிகள் கூறினவைகளைப் படித்துக் கொண்டும் அந்த சங்கீதங்களைப் பாடிக் கொண்டும்... அதே சமயத் தில், அவர்கள் என்ன செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளதோ, அந்த குற்றத்தை அவர்கள் அக்காலையில் புரிந்தனர். அதே காரியமானது இக்காலை சம்பவித்துக் கொண்டடிருக் கிறது. 62இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்... கடிகாரம் என்ன மணி காட்டுகிறது என்று நான் கவனிக்கப் போகிறதில்லை. இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். பாருங்கள்? நேரம் எவ்வள வானாலும் பரவாயில்லை. பாருங்கள்? (சபையார் “ஆமென்'' என்று களிகூறுகின்றனர்- ஆசி) ஆதி முதற்கொண்டே தேவன் தமது சிந்தையிலிருந் தவைகளை கல்விமான்களுக்கு மறைத்துக் கொண்டே வந்திருக் கிறார். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட முன் குறிக்கப் பட்ட குழு மாத்திரமே அதை ஏற்றுக் கொண்டே வந்துள்ளனர். தீர்க்கதரிசிகளின் காலம் முதற்கொண்டுள்ள காலங்களை நீங்கள் வேதத்தில் ஆராய்ந்து பார்த்து, ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறு தான் நிகழ்ந்து வந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். இயேசு இங்கு தீர்க்கதரிசிகள் உரைத்தவைகளையும் சங்கீதங்களையும் குறிப்பிடுகிறார்; அவர்கள் அவரைக் குறித்தே முன்னுரைத்தனர் என்றார் அவர். ஆனால் இந்த யூத போதகர்களும், ரபீக்களும், நியாயப்பிரமாணத்தில் கை தேர்ந்தவர்களும், பேராசிரியர்களும், முன்பு நடந்தது போலவே சரியாக அப்பொழுதும் செய்தனர். 63கவனியுங்கள், அவர் “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். என்னைக் குறித்து சாட்சிக் கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்றார். இப்பொழுது நான் என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறேன்? இந்த வேதம் உண்மை என்பதை உங்களுக்கு நிரூபிக்க விரும்புகிறேன். 64அன்றொரு நாள் ஒரு மருத்துவமனை அறையில் ஒரு சகோதரி ஸ்தாபனங்களைக் குறித்து விவரமாகக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் - நாம் ஏன் ஸ்தாபனங்களுக்கு, சில ஸ்தா பன ஜனங்களுக்கு எதிராயிருக்கிறோம் என்பதைக் குறித்ததாகும். அதற்கு நாம் வார்த்தைக்கே மறுபடியும் வர வேண்டியவர் களாயிருக்கிறோம். ஏனெனில் வார்த்தை தேவனாயிருக்கிறது. பாருங்கள்? இயேசுவும் அதையே தான் இங்கு செய்கிறார். வார்த் தையே அவர் என்பதை இங்கு பிரகடனம் செய்கிறார். வேதவாக்கி யங்கள் ஒன்றுக்கொன்று முரணானவைகளைக் கூறும்படி நீங்கள் செய்ய முடியாது. ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது அந்த வார்த்தை மாம்சமாகி... 65இங்கு அவர், “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணு கிறீர்களே (அது உண்மை ), என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிற வைகளும் அவைகளே'' என்கிறார் (யோவான் 5:39). ”இவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. நானும் அவைகளைக் குறித்து சாட்சி கொடுக்கிறேன். நான் செய்வேன் என்று வாக்களிக் கப்பட்டுள்ள கிரியைகளை நான் செய்யாமற் போனால் எனக்கு செவி கொடுக்க வேண்டாம். செய்தேனேயானால், என்னை விசுவாசிக் காமல் போனாலும், அந்தக் கிரியைகளையாவது விசுவாசியுங்கள். ஏனெனில் நான் வார்த்தை யென்று அவை சாட்சி கொடுக்கின்றன. 'இதைக்காட்டிலும் வேறொன்றும் அதிக வெளிப்படை யாய் இருக்க முடியாது. பாருங்கள்! சரி, இப்பொழுது வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். மோசேயும், நியாயப் பிரமாணங் களும், தீர்க்கதரிசிகளும், சங்கீதங்களும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கின்றனவென்றும் அவர் கூறினார். ஆகவே வேத வசனங்கள் தம்மைக் குறித்தே சாட்சி கொடுக்கின்றது என்று மறுபடியுமாக அவர் கூறினார். 66அவர் வேதாகமம் முழுமையிலும் முக்கிய பொருளாக (theme) திகழ்கிறார். நீங்கள் வேதத்தைப் படிக்கும் போது, ஒவ்வொரு வேத வாக்கியத்திலும் கிறிஸ்துவைக் காணமுடியா விட்டால், மறுபடியும் அந்த வேத வாக்கியத்தைப் படியுங்கள். பாருங்கள்? ஒவ்வொரு வேத வாக்கியத்திலும் நீங்கள் கிறிஸ்து வைக் காணமுடியாவிட்டால் மறுபடியும் அதைப் படியுங்கள். ஏனெனில், அப்படியானால் நீங்கள் ஏதோ ஒன்றைக் காணாமல் தவறி விட்டீர்கள். வேதாகமம் கிறிஸ்துவாகும். அவரே வார்த்தை . நீங்கள் “ஆதியிலே தேவன் ... சிருஷ்டித்தார்' என்று படிக்கும் போது, அங்கு கிறிஸ்து இருக்கிறார். பாருங்கள்? அதில் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் ”ஆமென்'' என்று முடியும் வரை உள்ள ஒவ்வொரு வார்த்தையும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுக்கிறது. அதனால் தான், பின்னர் வேதாகமத்தில் சேர்க்கப்பட்ட “தானியேலின் இரண்டாம் புத்தகம்'', ''மக்காபிகளின் புத்தகம்', ''ஆக்கஸ் பாவ விமோசன ஸ்தலம்' போன்றவை... பாருங்கள், அவை வேதத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. அது வேதத்தின் இதர பாகங்களுடன் இணைவதில்லை. பாவ விமோசன ஸ்தலத்தைப் பொருத்துவதற்கு வேதத்தில் எங்குமே இடமில்லை, பரிசுத்தவான்களுக்கு ஜெபங்களை ஏறெடுத்தல் போன்ற செயல் களுக்கு வேதத்தில் இடமே கிடையாது. ஸ்தாபனங்களைப் பொருத்துவதற்கும் வேதத்தில் இடமில்லை. வேதத்திற்குப் புறம்பாயுள்ள கோட்பாடுகளுக்கு அதில் இடமில்லை. பாருங்கள்? எனவே அவை இடம் பெறுவதற்கு வழியேயில்லை. ஆனால் ஜனங்களோ இத்தகைய புத்தகங்களை வேதத்தில் புகுத்த முயன்று, சரியான இடங்களில் பொருத்தி சரியான படம் கிடைக்கப் பெறும் செயலில் (Jigsaw Puzzle) தங்களைக் குழப்பிக் கொண்டிருக் கின்றனர். பாருங்கள்? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறா தவர் என்னும் அந்த படத்தை அவர்களால் சரிவர அமைக்க முடிய வில்லை . 67வேத வாக்கியங்களை நாம் சரியான இடத்தில் அமைத்தோ மென்றால், மனிதனின் வீழ்ச்சி, மீட்கப்படுதல் இவைகளைக் குறித்த முழு படத்தையும் நாம் பெற்றுக் கொள்வோம். சிருஷ்டிப்பு களைக் குறித்து முழு படமும், தேவனுடைய திட்டமும் இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுகின்றது. ஆமென்! அந்த படம் எல்லா மூலைகளையும் கூட சரிவர பொருத்துகின்றது. நான் தேவ தூஷணம் (Sacrilegious) சொல்வதாக நினைக்க வேண்டாம். இது சரியான இடங்களில் பொருத்தி சரியான படத்தைப் பெறுவது போன்றது. ஆனால் இன்று அவர்கள் விகாரமான படங்களைப் பெற்றுள்ளனர். நாங்கள் விசுவாசிகள்“ என்று சொல்லிக் கொண்டே, மரத்தின் மேல் பசு புல் மேய்வது போன்ற படத்தை அவர்கள் பெற்றுள்ளனர். அது சரியாக இராது. ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்தான்; ஆனால் சில விஷயங்களில்...'' என்கின்றனர், அவ்வாறு கூறுவதனால், உங்கள் படத்தை நீங்கள் பாழாக்கிவிடுகிறீர்கள். அவர் மாறாதவர் என்று வேதம் கூறுகின்றது. 68யோவான் 14:12ல் அவர், “என்னை விசுவாசிக்கிறவன் (அது யாராயிருப்பினும்) நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று கூறியுள்ளார். ''நல்லது! அது வேறொரு காலத்துக்குரியது'' அப்படியானால் மறுபடியுமாக உங்கள் படம் தவறானது. ஒரு மனிதன் பாலைவனத்தில் மீன் பிடிப்பது போன்ற படத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். பாலைவனத்திலுள்ள சூடான மண்ணில் மீன் இருக்காது. மீன்கள் நிறைந்துள்ள கலிலேயாக் கடலில் அவர் மீன் பிடிப்பது போன்ற படத்திற்கு நீங்கள் மீண்டும் வர வேண்டும். பாருங்கள்? உங்கள் படத்தை நீங்கள் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். தேவனுடைய மகத்தான படத்தை நீங்கள் ஒரே ஒரு அமைப்பில்தான் காண முடியும். அதுதான், நீங்கள் இயேசு கிறிஸ்துவை காணும்போது அதைக் காண்கிறீர்கள். அங்குதான் வேதாகமம் முழுவதுமே உள்ளது. அவர்தான் வேதாகமத்தின் முக்கிய அம்சமாக உள்ளார். 69இத்தகைய பொருளை போதகர் ஒருவர் பிரசங்கத்துக்காக எடுத்துக் கொண்டால், அவர் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அவர் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே செல்ல விரும்புவார். ஆனால் நம்முடைய பாடத்துக்கு நாம் வரவேண்டியவர்களாயிருக்கிறோம். அவர்தான் வேதாகமத்தின் முக்கிய பொருளாகும். அவர் தீர்க்கதரிசிகளுக்குள் இருந்தார். அவர் சங்கீதங்களில் இருந்தார். வேதாகமத்தின் சரித்திரத்தில் அவர் இருந்தார். வேதாகமம் தீர்க்கதரிசனங்கள் அடங்கிய புஸ்தகம் ஆகும்; அது சரித்திரப் புஸ்தகம். அது அன்பின் புஸ்தகம் ; அது பாட்டுக்கள் அடங்கிய புஸ்தகம்; அது ஜீவனுள்ள புத்தகம். அதில் நீங்கள் கிறிஸ்துவைக் காணலாம். அவர் தீர்க்கதரிசிகளில் இருந்தார்; அவர் சங்கீதங்களில் இருந்தார்; அவர் சரித்திரத்தில் இருந்தார். வேதத்தில் காணப்படும் இனி நிகழ விருக்கும் காரியங்களிலும் அவர் இருக்கிறார். எனவே அவர் முன்பும் இருந்தார்; பின்பும் இருக்கிறார். அப்படியானால் அது அவரை என்னவாக ஆக்குகிறது? “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக.'' 70அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரல்ல என்று காண்பிப்பதற்கு, வேதத்துடன் ஒவ்வாத சிலவற்றைப் புகுத்து கின்றனரே. சகோதரன் லீவேயில் அவர்கள் எங்கு நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்? ஒரு பயங்கரமான படத்தை அவர்கள் பெற்றிருக்கின்றனர். அவரே சரித்திரமாக இருந்தார் (பாருங்கள்?). அவரே தீர்க்கதரிசி. அவரே சங்கீதங்கள். அவரே எல்லாம். அவரை எல்லாமாக, மாறாதவராக நீங்கள் செய்யவில்லையென்றால், உங்களுடைய படம் எப்படிப்பட்டதாயிருக்கும்? உங்களுக்குப் புரிகின்றதா? (சபையார் “ஆமென்' என்கின்றனர் - ஆசி) சரி. 71அவர் மாறாதவர்; அவரே தீர்க்கதரிசிகள் - அவர் தீர்க்கதரி சிகளுக்குள் இருந்தார். அவர் சங்கீதங்களில் இருந்தார். அவர் சரித்திரத்தில் இருந்தார்; இனி நிகழவிருக்கும் காரியங்களிலும் அவர் இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார். (எபி. 13:8- நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால்), அப்படியானால் அவரே முக்கியமானவராயிருக்க வேண்டும் - அவர் அப்படித்தான் இருக்கிறார். அதை நாம் விசுவாசிக்கிறோம். இல்லையா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) அவரே நம்முடைய பேச்சின் முக்கிய அம்சமாக, நம்முடைய நினைவு களின், நம்முடைய பாட்டுகளின், நம்முடைய நடத்தையின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும். (“ஆமென் ) நம்முடைய ஜீவியத்தின் முக்கிய பொருளாக அவர் இருக்க வேண்டும். வேதாகமத்தின் மையப் பொருளாக அவர் இருக்கையில், நமக்குள் வேதாகமம் இருக்கையில், அப்படியானால் நமது செயல்களின், நினைவுகளின் முக்கிய அம்சமாக கிறிஸ்து திகழ வேண்டும். அது சரியா? ('ஆமென்” ) சரி. 72நாம் இதைக் குறித்து சிந்திக்கையில் அவர் “எல்லாவற் றிற்கும் தலையாக” நியமிக்கப்பட்டிருப்பதால்- கொலோசெயர் அப்படித்தான் கூறுகிறது. அவர் நமக்கு “எல்லாவற்றிற்கும் தலையாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று நாம் பார்த்தோம். 'அப்படியானால் பாவிகளைக் குறித்தென்ன?'' என்று நீங்கள் கேட்கலாம். அவர் பாவிக்கு நியாயாதிபதியாக நியமிக்கப் பட்டிருக்கிறார் - அவன் அதை ஏற்றுக் கொள்ளாமற் போனால் அதை ஏற்றுக்கொள்ளும் விசுவாசிக்கு அவர் மகிமை பொருந்தினவராக இருக்கிறார். சகலமும் அவரைக் கொண்டும் அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது. பகலின் மகிமையை வெளிப்படுத்த இரவு தேவையா யுள்ளது. கனமுள்ள பாண்டங்களின் மேல் அவர் வைத்துள்ள அன் பையும் கவனத்தையும் வெளிப்படுத்த கனவீனமான பாண்டம் அவசியமாயுள்ளது. ஒழுக்கமுள்ள ஒரு பெண்ணின் நற்பண்புகளை வெளிப்படுத்த, ஒழுக்கங் கெட்ட ஆடைகளையணிந்து, தனது ஒழுக் கங்களை விற்றுப்போட்ட ஒழுக்கமற்ற பெண் ஒருத்தி அவசிய மாயுள்ளது. பாருங்கள்? ஒரு உண்மையான விசுவாசி உண்மை யான கிறிஸ்தவன் ஒருவனின் உத்தமத்தை வெளிப்படுத்த, தந்தி ரமும் கள்ள புத்தியும் கொண்டவன் தேவையாயிருக்கின்றது. ஒரு விசுவாசி யார் என்பது காண்பிக்கப்பட ஒரு மாய்மாலக்காரன் அவசியமாயுள்ளது. 73சகலமும் அவரைக்கொண்டு சிருஷ்டிக்கப்பட்டது. ஆகவே சகலமும் அவர்..... சிருஷ்டிக்கப்பட்டது, நம்மெல்லாருக்கும், சகலமும் அவரால், சிருஷ்டிக்கப்பட்டது. அப்படியானால், அது உண்மையாயிருப்பதனால், நாம் நம்முடைய அடையாளங்கண்டு கொள்ளுதலை அவருடன் (அவரிடத்தில்) செய்ய வேண்டும். நாம் நம்மையே அவருடனே அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் அவர் தம்மைத்தாமே நம்முடன் அடை யாளங்கண்டு கொண்டார். எவ்விதமாக? அவருக்காக வாழ்வதன் மூலம் - அவருக்காக வாழ்வதாக கூறிக் கொள்வதனால் அல்ல. அவர்கள் அவருக்காக வாழ்வதாக கூறிக்கொள்கின்றனர். அது இந்நிலைக்கு வந்து விட்டது. “நீங்கள் கிறிஸ்தவரா?'' என்று கேட்டால், ”நான் மெதோடிஸ்டு'' என்கின்றனர். கிறிஸ்தவன் என்னும் நிலையிலிருந்து அது அதிக தொலைவில் உள்ளது. மெதோ டிஸ்டு ஒருவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனித்து பாருங்கள். “நான் பாப்டிஸ்டு.'' பாப்டிஸ்டு ஒருவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனித்து பாருங்கள். ”நான் கத்தோலிக்கன்.'' அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதைக் கவனியுங்கள். 74நீங்கள் கிறிஸ்தவராயிருக்க ஒரே ஒரு வழி கிறிஸ்து தம்மை உங்களுடன் ஒன்றுபடுத்திக் கொள்ளுதலே.... இப்பொழுது கடுமையான ஒன்றை கூறப் போகிறேன். ஒலிநாடாக்களைக் கேட்பவர்களும் அதை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். நீங்கள், “நான் பெந்தெகொஸ்தேயினன்'' என்கிறீர்களே, அதனால் ஒரு அர்த்தமுமில்லை. 137. அது கிறிஸ்து உன்னில் அடையாளங்கண்டு கொள்ளப் படுதலே. அது அவர் உன்னை அடையாளங்கண்டு கொண்டபோது ஆகும். ”நான் அந்நிய பாஷையில் பேசினேன். ''பிசாசுகளும் கூட பேசுகின்றன. 75''நான் கூச்சலிட்டேன். முகம்மதியர்கள், பெளத்தர்கள் போன்ற இதர மதஸ்தர்களும் கூட கூச்சலிடுகின்றனர். பாம்பை மேலே போட்டுக் கொண்டு நடனமாடும் போதும், இந்தியர்களும் கூட கூச்சலிடுகின்றனர். பாருங்கள்? நிச்சயமாக அவர்கள் எல்லாருமே அவ்விதம் செய்கின்றனர். வெறி ஈடுபாடுகள் கொண்டவர்கள் (cults) சில குழுக்கள் மற்ற எல்லாருமே சத்த மிட்டு கூச்சலிடுகின்றனர். 'பேஸ்பந்து' (Baseball) விளையாட்டின் போதும் கூட அவர்கள் கூச்சலிடுகின்றனர். ஆனால் கிறிஸ்து தம்மை உன்னில் அடையாளங்கண்டு கொள்ளப்படுகின்ற போது, தம்மையே அடையாளங்கண்டு கொள்ளப்படும் போது நீ கிறிஸ்துவைப் போல் ஆகின்றாய். 'கிறிஸ்தவன்' என்னும் வார்த்தைக்கு 'கிறிஸ்துவைப் போல் (Christ-like) என்று பொருள். அதோ உங்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படுதல். அது சரி. இப்பொழுது, அவரே நமது அடையாளப் பொருளாக இருப்பதால், அவருக்காக வாழ்வதன் மூலம் அவருடனே நாம் அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டும். 76கவனியுங்கள், இந்த மகத்தான பரம இரகசியத்தில் மூன்று விதமான நோக்கத்தை தேவன் கொண்டிருந்தார். உலகத் தோற்றத்திற்கு முன்னர் தேவன் கொண்டிருந்த தம்முடைய மகத்தான பரம் இரகசியத்தில், மூவகை நோக்கங்களை அதனுள் அவர் கொண் டிருக்கிறார். ஆகவே இன்று காலை நாம் பார்க்கப் போவது என்ன வென்றால், என்ன அந்த மூவகை நோக்கங்கள்? பாருங்கள்? இப்பொழுது இங்கே பிரசன்னமாயிருக்கம் தேவனுடைய ஒத் தாசையுடனே... அவர் - அவர் அதை நமக்கு காண்பிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அவர் இந்த மூவகை நோக்கத்தை கொண்டிருப்பாரென்றால், இந்த மூவகை நோக்கம் என்ன என்பதை நாம் காண விரும்புகிறோம். முதலாவது காரியம் என்னவென்றால், அது, தேவன் தம்மைதாமே ஜனங்களுக்கு வெளிப்படுத்த சித்தம் கொண்டார். 77எல்லா இடங்களையும், காலங்களையும், நித்தியத்தையும் நிறைத்த மகத்தான யேகோவா என்னும் ரீதியில் அவர் அப்படி செய்ய முடியவில்லை. அவரால் முடியாது. அந்நிலையில் அவர் மக்களுக்கு வெளிப்படக் கூடாத அளவிற்கு அவ்வளவு மகத்துவ முள்ளவராயிருந்தார் ஏனெனில் அது மக்கள் புரிந்து கொள்ள முடியாத பரமரகசியமாயிருந்திருக்கும், எவ்விதம் துவக்கமே இல்லாத அந்த மகத்தானதானது. நூற்றுக்கணக்கான கோடிகளின் சுழற்சிகள் கோடிகள், மற்றும் கோடிக்கணக்கான மற்றும் எண்ணவே முடியாததற்குள், நித்தியத்திற்குள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்ற ஆண்டுகள் முன்பு இந்த இந்த மகத்தான எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய், இன்று இருந்து கொண்டிருக் கின்ற அந்த மகத்தான ஒன்று, எப்படி தம்மை அந்த நிலையில் வெளிப்படுத்த முடியும்? 78ஆனால் அவர் செய்ய விரும்பியது என்னவென்றால் அவர் பிதாத்துவத்தை நேசித்தார், ஏனெனில் அவர் பிதாவாக இருந்தார். அவர் தம்மை வெளிப்படுத்தக் கூடிய ஒரே ஒரு வழி என்னவென்றால், மனுஷக்குமாரன் ஆவதேயாகும். அதன் காரணமாகத்தான் “ அந்த மனுஷக் குமாரன்” என்று இயேசு கூறிக் கொண்டேயிருந்தார். பாருங்கள், அவர் எதைக் குறித்துப்பேசிக்கொண்டியிருந்தார் என்பது அவர்களுக்கு, அவர்களில் அநேகருக்கு தெரியவில்லை. ஆனால் இப்பொழுது நீங்கள் கிரகித் தக் கொள்கிறீர்கள்? (சபையார், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) பாருங்கள்? அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்த விரும்பினார். அது தான் அவருடைய , அவருடைய மகத்தான மூவகை நோக் கங்களில் ஒன்று, தம்மை வெளிப்படுத்துவது, மானிடருடன் தம்மை அடையாளங்கண்டு கொள்வது, கிறிஸ்துவிற்குள் தம்மை வெளிப்படுத்துவதாகும். 79இரண்டாவதாக தம்முடைய சரீரமாகிய விசுவாசிகளில், அதாவது, தம்முடைய மணவாட்டிக்குள் முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை (pre-eminence) கொண்டிருப்பதேயாகும், அதினால் அவர் ஜனங்களுக்குள் ஜீவிக்க ஏதுவாகயிருக்கும். 80இப்பொழுது அவர் ஆதாமிலும் ஏவாளிலும் அப்படி வாழ்ந்திருக்கலாம். ஆனால் பாவம் அவர்களைப் பிரித்து விட்டது. எனவே அந்நிலையை மீண்டும் பெற்றுக் கொள்ள ஏதாவது ஒரு வழி இருக்கவேண்டும். என்னே! அதைக் குறித்து யோசனை செய்தாலும் கூட அது மிகவும் ருசியாயுள்ளது. பாருங்கள்? தேவ னுடைய நோக்கம் என்னவென்று பார்த்தீர்களா? இப்பொழுது ஆதாமையும் ஏவாளையும் அப்படியே அவர் ஏன் வைத்திருக்க வில்லை? அப்படியிருந்திருந்தால், அவருடைய முழுமையையும், அவருடைய முழு தன்மைகளையும் அவர் வெளிப்படுத்தி யிருக்கவே முடியாது. அவர் பிதாவாக இருந்திருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அவர் இரட்சகரும் கூட. “அவர் இரட்சகர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?'' என்று நீங்கள் கேட்கலாம். அவர் அப்படிதத்தான். ஏனெனில் எனக்கு அந்த அனுபவம் உள்ளது. பாருங்கள்? அவர் இரட்சகர் என்பதை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. அவர் எப்படி அதை வெளிப்படுத்தினார்? கிறிஸ்துவின் மூலமாகவே, அவர் எப்படி குமாரனாயிருக்க முடியும்? கிறிஸ்துவின் மூலமாகவே. அவர் எப்படி சுகமளிப் பவராக இருக்க முடியும்? கிறிஸ்துவின் மூலமாகவே. பாருங்கள், எல்லாமே அந்த ஒரு நபரில் - இயேசு கிறிஸ்துவில் - முடிவடை கிறது. ஓ, என்னே ! நான் அதை - நான் அதை .... 81தம்மைத்தாமே வெளிப்படுத்துகின்ற, தேவனுடைய மகத்தான நோக்கத்தை நான் காணும் போது, அதைக் குறித்து நான் யோசனை செய்து பார்க்கும் போது, ஸ்தாபனங்கள் அனைத்துமே காட்சியை விட்டு அகன்று விடுகின்றன. பாருங்கள்? ஆகவே முதலாவதாக “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக” தம்மைத் தாமே கிறிஸ்துவில் வெளிப்படுத்தி, பிறகு அந்த “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக” ஒரு ஜனத்திற்குள் கொண்டு வந்து அதனால், அவர் தாமே முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களையும் மேற்பார்வையும், வழிநடத்துபவராகவும் இருக்க ஏதுவாகும். 82அன்று இரவில் இயேசு கிறிஸ்துவின் சிறைக்கைதியாகிய பவுல் (பவுல், ஒரு சிறைக்கைதி) என்று ஒரு இரவில் நான் பிரசங்கித்தேன். இந்த ஒலி நாடாவை நீங்கள் பெற்றுக் கொள்ளாம லிருந்தால், பாருங்கள்? தேவன் தமக்கென உங்களைச் சிறை பிடித்துக் கொண்டால், பரிசுத்த ஆவியானவர் கூறுவதைத் தவிர வேறொன்றையும் உங்களால் செய்ய முடியாது. பவுல் நுண்ணறிவு படைத்தவனாயிருந்தான். அவன் பெரிய ஆசாரியனாக அல்லது ரபீயாக ஆவதற்கு கமாலியேலிடம் பயின்றான். அவன் உயர்ந்த லட்சியங்களை உடையவனாக இருந்தான். அறிவில் அவன் தேர்ந்தவன்- அவனுடைய பாடத்தில் அவன் சிறந்த அறிவாளி, நாட்டிலேயே மிகப்பெரியவன். ஆனால் வார்த்தையின் பாகமாக ஆகி இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்காக அவன் அதனுடைய ஒவ்வொரு இமியளவையும் கூட அவன் தியாகம் செய்ய வேண்டியதாயிருந்தது. சில சகோதரரின் அழைப்புக்கிணங்கி - ஓரிடத்திற்கு செல்ல அவன் எத்தனித்தபோது, அவனுடைய சொந்த சித்தத்தை அவன் செய்யாதபடிக்கு ஆவியானவரால் தடை செய்யப்பட்டான். அவனைப் போல் பாதியாகிலும் ஆவிக்குரியவர்கள் இதை புரிந்து கொண்டால் எவ்வளவு நலமாயிருக்கும் பாருங்கள்? அவனு டைய சுய சித்தத்தை நிறைவேற்றாதபடி அவன் தடை செய்யப் பட்டான். “ஆவியானவர் என்னை தடை பண்ணினார்” பாருங்கள்! அவன் கிறிஸ்துவின் சிறைக்கைதியாக இருந்தான். 83பிறகு அந்த குறி சொல்லும் பெண் ஒரு நாள் - பிசாசுகளைத் துரத்த தனக்கு வல்லமையிருந்ததை பவுல் நன்கு அறிந்திருந்தான். ஆயினும் தேவனுக்கு சித்தமானதாயிருந்தால் மாத்திரமே அவனால் அதைச் செய்ய முடியும். நாள்தோறும் அந்தப் பெண் அவர்களைப் பின் தொடர்ந்து, அவர்களைக் குறித்து சத்தமிட்டுக் கொண்டே யிருந்தாள். ஆனால் ஒரு நாள் ஆவியானவர் அந்த பிசாசைத் துரத்த அவனுக்கு அனுமதியளித்தார். அவன் அவளுக்குள் இருந்த அசுத்த ஆவியைக் கடிந்து கொண்டான். பாருங்கள்? இயேசுவின் சிறைவாசியாக இருப்பது என்னவென்பதை பவுல் அறிந்திருந் தான். 84மோசேயைப் பாருங்கள். கிறிஸ்துவின் சிறைவாசியாக ஆவதற்கென அவன் தனது ஞானம் அனைத்தையும் இழந்து விடவேண்டியதாயிருந்தது. அவனுக்குள்ளிருந்த உலக காரியங் களையெல்லாம் தேவன் தகர்த்தெறிந்து, அவனை மகத்தான மனிதனாகக் கருதுவதற்கு காரணமாயிருந்த அனைத்தையும் அவர் அறவே அகற்றினார். ஒரு நாள் அவன் அக்கினி ஸ்தம்பத்தின் முன்னால் நின்றபோது, அவனால் பேசவே முடியவில்லை. அப் பொழுது தேவன் அவனை சிறை பிடித்துக் கொண்டார். பாருங்கள்? அவர் அப்படிச் செய்யும்போது, உங்களால் எதையும் ஆராய்ந்து பார்க்க முடியாது. அதன் பிறகு அவர், அவனை எகிப்துக்கு அனுப்ப பரத்திலிருந்து வரும் வல்லமையால் நிரப்ப வேண்டியதா யிருந்தது. அவன், “ஆண்டவரே, நான் பார்வோனிடம் நீர் கூறச் சொன்னதை சொன்னேன். அவனோ கேட்க மறுக்கிறான்” என்றான். அவர், ''இந்த உன்னுடைய கோலை எடுத்துக் கொண்டு போ“ அது தேவன் பேசுவது. அது தேவனுடைய வார்த்தை . ''நீ கிழக்கு திசை நோக்கி அதை நீட்டி வண்டுகளை வரவழைப்பாயாக” என்றார். அப்பொழுது வண்டுகள் சிருஷ்டிக்கப்பட்டு, அங்கு திரளாகவந்தன. தேவன் மோசேயை சிறை பிடித்திருந்தார். ஆகவே பார்வோனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.. யாருமே அவனைத் துரத்த முடியவில்லை. அவன் முற்றிலுமாக தேவனுடைய வார்த்தை என்னும் சங்கிலியால் கட்டப்பட்ட சிறைவாசியாக இருந்தான். அவன் 'கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதற்கு முழுவதுமாக கட்டப்பட்டிருந்தான். 85தேவன் தாமே தமக்கென அத்தகைய சிறைவாசிகளைக் கொண்டிருந்தால் அப்பொழுது தான் அவர் தமது முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை வெளிப்படுத்த முடியும். பார்த்தீர்களா? கிறிஸ்துவைத் தவிர வேறொன்றையுமே அறியாத ஒரு நபரை அல்லது ஒரு மனிதனை அவர் கொண்டிருக்கிறார். நான் என்ன கூற முற்படுகிறேன் என்பதை நீங்கள் பிடித்துக் கொள்கிறீர்களா? (சபையார், ''ஆமென்“ என்கின்றனர்- ஆசி) சரி, அது அவருடைய இரண்டாம் நோக்கம். முதலாவதாக, தம்மை முழுவதுமாக வெளிப்படுத்துவது, கிறிஸ்துவுக்குள் தேவன். இரண்டாவதாக, இதன் மூலம், தம்முடைய சரீரமாகிய, மணவாட்டியாகிய, தம்முடைய சபையில், முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை கொண்டிருக்க விரும்பினார், அவர்கள் மூலமாக தம்மை வெளிப்படுத்த முதன்மை ஸ்தானத்தை கொண்டி ருத்தல். சரி மூன்றாவதாக, முதலாம் ஆதாமின் பாவத்தின் காரணமாக விழுந்து போன இராஜ்யத்தை அதற்குரிய சரியான ஸ்தானத்தில் திரும்ப கொண்டுவந்து, அங்கே சாயங்காலத்தின் குளிர்ச்சியான வேளையில் தம்முடைய ஜனங்களுடன் நடந்து அவர்களுடனே பேசி அவர்களுடன் ஐக்கியங்கொண்டிருந்த நிலைக்கு திரும்பவு மாகக் கொண்டுவருதல். இப்பொழுது பாவமும் மரணமும் அவருடைய பிரசன்னத் திலிருந்தும், அவருடைய முழு வெளிப்படுத்தப்பட்ட விதத்தி னின்றும் அவர்களை பிரித்து விட்டிருந்தது. நீங்கள் அதைப் படிக்கிறீர்களா? உலகத் தோற்றுத்துக்கு முன் அவர் என்னவாயிருந் தாரோ அந்த அவருடைய- அவருடைய - அவருடைய தன்மைகளை வெளிப்படுத்துதல்.... 86இங்குள்ள திரித்துவக்காரர்கள் யாராகிலும் ஒரு நிமிடம் செலவழித்து நான் கூறுவதைக் கேட்பார்களானால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூன்று தேவர்கள் அல்லவென்றும், அவை ஒரே தேவனின் மூன்று தன்மைகள் (attributes) என்றும் அறிந்து கொள்ளலாம். அது தோற்றம் (expression) பிதாவாக... அவர் பிதாவாயிருக்க சித்தம் கொண்டார். அவர் பிதாவாயிருந்தார். குமா ரனாயிருந்தார். பரிசுத்த ஆவியாக இருக்கிறார். பிதாவும் பரிசுத்த ஆவியும் ஒரே ஆவி. உங்களால் காணமுடியவில்லையா? நீங்கள் விளங்கிக் கொண்டீர்களா? (சபையார் 'ஆமென்'' என்கின் றனர்-ஆசி) மூன்று தேவர்கள் அல்ல. உங்களை விக்கிரகாராதனைக் காரராக்க, பிசாசு இப்படிப்பட்ட பொய் ஒன்றைக் கூறி விட்டான். பாருங்கள்? அது ஒரே தேவன் மூன்று தன்மைகளில் வெளிப் படுத்தல். பிதாவாக; இரட்சகராக, குமாரனாக; சுகமளிப்பவராக (பாருங்கள்?)-அவருடைய வெளிப்பாடுகள். 87இக்கருத்தை இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களும் கிரகித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, இதை மீண்டும் வலி யுறுத்த விரும்புகிறேன். இதன் ஒவ்வொரு பொருளையும் விளக்கு வதற்கு நேரம் பிடிக்கும். நான் என்ன கூற வருகிறேன் என்பதை நீங்கள் காணும் விதத்தில் நான் அதை மிக தெளிவாக ஆக்குகிறேன் என்று நான் நம்புகிறேன். தேவன் இயேசுகிறிஸ்துவில் வெளிப்பட்டார். அவரே பிதா வும், குமாரனும், பரிசுத்த ஆவியுமானவர் - “தேவத்துவத்தின் பரி பூரணம் சரீரப்பிரகாரமாக வாசம் செய்தல்.'' இப்பொழுது “தேவத்துவத்தின் பரிபூரணம். சரீரப்பிரகார மாக சபையில் வாசம் செய்கிறது - முதன்மையான உயர்ந்த ஸ்தானம் வகித்தல் (pre-eminence), தேவன் தம்முடைய எல்லாவற் றையும் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார்; கிறிஸ்து தம்முடைய எல்லாவற்றையும் சபைக்குள் ஊற்றி விட்டார்- விசுவாசிகள் கொண்ட சபை. ஸ்தாபனங்கள் அல்ல! அதற்கு இன்னும் சில நிமிடங்களில் நாம் வருவோம். அப்பொழுது அதைக் குறித்து நீங்கள் கொண் டுள்ள தவறான அபிப்பிராயங்கள் உங்கள் மனதை விட்டு நிரந்தர மாக அகன்று விடும். பாருங்கள்? அதன் காரணம் என்னவென்று தேவனுடைய உதவியைக் கொண்டு, அவர் அனுமதித்தால், உங்களிடம் கூறுவேன். 88அவருடைய நோக்கம் இப்பொழுது என்ன? தம்மைத்தாமே குமாரனாக வெளிப்படுத்துதல், பாருங்கள், ஆகவே இப்பொழுது, அவருக்குள் தாமே 'தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிர காரமாக' வாசம் செய்தல். எனக்கு முன்பாக கொலேசெயரை நான் திறந்து வைத்திருக்கிறேன். பாருங்கள்? அது, வேதாகமம் முழுவதுமாக, அது தான் தேவனுடைய நோக்கம் ஆகும். பிறகு இந்த குமாரனின் ஜீவியம், அவருடைய சிலுவை, 'அந்த இரத்தம்“, இங்கே ”அவருடைய சிலுவை“ என்று கூறுகிறது, ஆகியவற்றின் மூலமாக தம்மைத் தாமே ஒரு சரீரத்திற்கு ஒப்புரவாக்கிக் கொண்டார், ஒரு மணவாட்டி; அது தான் ஏவாள், இரண்டாம் ஏவாள். மோசே மற்றும் எல்லாருக்கும் செய்தது போல தேவன் அதை ஒரு நிழலாக அளித்தார். அதே விதமாகத்தான் அவர் ஆதாமிற்கும் ஏவாளுக்கும் செய்தார், அவர்கள் கிறிஸ்துவும் மணவாட்டியும் என்பதற்கான ஒரு நிழல். அவர் இரண்டாம் ஆதாம். சபை இரண்டாம் ஏவாள். இரண்டாம் ஏவாள் வார்த்தைக்கு எதிராக சமரசம் செய்து கொண்டே இருக்கும் வரையில், முதலாம் ஏவாள் செய்த அதே காரியத்தை அவள் செய்து கொண்டிருக்கின்றாள் அல்லவா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்-ஆசி) ''அது வேறொரு காலத்திற்குரியது“ என்று அவள் சொல்வதன் மூலம் அதைத் தான் செய்கிறாள். இன்னும் சில நிமிடங்களில் அதற்கு வருவோம். அது வேறோரு காலத்திற்குரிய தென்று அவர் சொன்னாரா என்று பார்ப்போம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்க, அது எப்படி வேறொரு காலத்துக் குரியதாக இருக்கமுடியும்? ஆனால் தேவனோ “அதை கல்விமான்களின் கண்களுக்கு மறைத்து, முன்குறிக்கப்பட்ட பாலகருக்கு வெளிப்படுத்த சித்தம் கொண்டார். அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள முன்குறிக்கப் பட்டுள்ளனர். 89அதுதான் காரணம்... ஒவ்வொரு காலத்தையும் கவனித்துக் கொண்டே வாருங்கள். ஒவ்வொரு முறையும் வெளிச்சம் அவர் கள் மேல் பட்டபோது, அவர்கள் அதைப் புறக்கணித்து வந்தனர். நுண்ணறிவு படைத்தவர்கள், பெரிய ஆசாரியர்கள், ரபீகள், போதகர்கள் எல்லாருமே அப்படிச் செய்தனர். நிக்கொதேமுவைப் போன்று அதிகம் படித்தவர்கள் அது என்ன வென்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அந்த வார்த்தையில் போதிக்கப்பட்டிருந்த அந்த ரபீக்களும் மற்றும் அந்த மகத்தான ஆசாரியர்களும் அங்கே நின்று கொண்டிருந்தனர். என்னே, அவர்கள் அதை அறிவுபூர்வமாக அறிந்திருந்தனர். ஆனால் அவரோ அவர்களை நோக்கி, ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள். அவனுடைய கிரியைகளை நீங்கள் செய்வீர்கள்“ என்றார். அதைக் குறித்து சற்று யோசித்து பாருங்கள் - பரிசுத்தமுள்ள மனிதன். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலோ, அல்லது அவர்களுடைய தகப்ப னாருடைய வாழ்க்கையிலோ, அல்லது அவர்களுடைய பாட்ட னாருடைய வாழ்க்கையிலோ, அல்லது அவர்களுடைய பெரிய - பெரிய - பெரிய - பெரிய - பாட்டானாருடைய வாழ்க்கையிலும் கூட களங்கம் எதுவும் இருந்ததாக நீங்கள் சுட்டிக் காட்டவே முடியாது. அப்படி ஏதாகிலும் களங்கம் ஏற்பட்டால், அவர்கள் அவமானம் தாளாமல் மரித்து விடுவார்கள். அவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். ஆனால் இயேசு அங்கே நின்றுகொண்டு அந்த குழுவை, பக்தியுள்ள ஜனங்களைப் பார்த்து ”பிசாசுகளின் கூட்டம்' என்ற அழைக்கின்றார். 90இப்பொழுது, அந்த மகத்தான வெளிப்பாடு இப்பொழுது தம்முடைய உறவின் முறையை திரும்ப அளிப்பதற் காக, திரும்பவுமாக கொண்டு வருவதற்காக, இப்பொழுது, அவர்கள் இழந்து போகும் படிக்கு அவர் செய்ய வேண்டிய தாயிருந்தது. உங்களுக்குப் புரிகிறதா? அவர் அவர்களை பாவம் செய்ய விட்டுவிட்டு, அவர்களை சுயாதீன... அவரால், அவரால் அவர்களை பாவம் செய்ய விட்டு விட்டு, தேவனாக இருந்து, பிறகு அவர்கள் செய்ய அவர் விட்டு விட்ட ஏதோ ஒன்றிற்காக அவர்களை தண்டிக்க முடியாது. ஆனால் அவர் மனிதனை தம்முடன் கூட்டாளி ஸ்தானத்தில் வைத்து அவரை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததுமான விஷயத்தில் அவனுக்கு சுயாதீனத்தை அளித்திருக்கும்போது... பாருங்கள்? இன்றைக்கு உங்களுக்கும் அதே சுயாதீனத்தை அவர் அளித்திருக்கிறார். பாருங்கள்? பாருங்கள்? உங்கள் விருப்பப்படி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் நீங்கள் சுயாதீனமுள்ளவர்கள். எனவே, முதலாவதற்கு அவர் சுயாதீனத் தை அளித்திருந்தால், இரண்டாவதற்கு அவர் அப்படியே செய்ய வேண்டும். எல்லாருக்கும் அவர் அப்படியே செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் தொடக்கத்திலேயே தவறு செய்தவராகி விடுவார். பாருங்கள்? எல்லாரும் அதே அடிப்படையில் தான் இருக்கிறோம். 91இப்பொழுது அவரைக் கவனியுங்கள். அந்த மனிதன் பாவம் செய்ய அனுமதித்து அதன் பின்பு அவனை மீட்டுக் கொள்வது. அவன் பாவம் செய்வான் என்று அவருக்குத் தெரியும். அவன் பாவம் செய்ததால் என்ன நேர்ந்தது? அவருடைய இரட்சகரின் தன்மை அதன் மூலம் வெளியானது. அப்பொழுது இயேசு கிறிஸ்துவே தேவனாகி, தம்முடைய சொந்த பிரமாணத்தினால் ஏற்பட்ட தண்டனையாகிய மரணத்தை அவர் மேல் சுமந்து, அவரைப் புறக்கணித்து விழுந்து போயிருந்த அவருடைய மனைவியை மீட்டுக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கம் நிறைவேறினது. ஏவாள் வார்த்தையை விட்டு விலகிச் சென்றபோது, தன் கணவனிடமிருந்து பிரிந்து சென்றாள். அது போன்று சபையும் வார்த்தையை விட்டு விலகி ஸ்தாபனத்துக்குள் செல்லும் போது, அவள் தன் மணவாளனைப் புறக்கணித்து, மனித ஞானம் கொண்ட இவ்வுலகுடன் விபசாரம் செய்கிறாள் - தேவனுடைய வார்த்தை யின் அதிகாரத்தைப் புறக்கணித்தல். அது தெளிவாயுள்ளதா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்- ஆசி ) அவள் “ஆவிக்குரிய விபசாரம் செய்வதாக வேதம் கூறுகின்றது. வேதத்திலுள்ள எந்த ஒரு வார்த்தையை புறக்கணிக்கவோ அல்லது சொந்த வியாக்கி யானத்தை அளிக்கவோ செய்தால், அது உங்கள் கணவனான தேவனைப் புறக்கணித்து அவருக்கு விரோதமாக விபசாரத்தில் ஈடுபடுவதற்கு சமம். விபசாரி ஒருக்காலும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லையென்று நமக்குத் தெரியும். பாருங்கள், முதலாவதாக ஏவாள் அதைத்தான் செய்தாள். 92இப்பொழுது மறுபடியும் கவனியுங்கள். இப்பொழுது, அவருடைய அந்த மூவகை நோக்கமென்ன? தம்மை இயேசுகிறிஸ்துவில் வெளிப்படுத்துதல்; இயேசு கிறிஸ்துவினால் சரீரத்திற்குள் வந்து முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை தாம் கொண்டுடிருக்கத்தக்கதாக; (எதற்கு?) ஏதேனை திரும்ப அளிக்க, இழந்து போனவற்றை திரும்ப கொண்டு வர. அந்த ஒரு காரியம் மாத்திரமே ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட தாயுள்ளது. அவருடைய மற்ற எல்லா காரியங்களும் ஒழுங்கில் இருந்தன. மனிதன் பாவத்தில் விழ, அவனுக்கு அவர் சுயாதீனத்தை அளிக்க வேண்டியதாயிருந்தது. அதினால் அவர் ஒரு இரட்சகராக இருந்து அவருக்குள் என்ன இருக்கின்றது என்பதை காட்சிக்குக் கொண்டு வர ஏதுவாகின்றது. பாருங்கள், அவருடைய இரட்சிப் பின் தன்மை. ஏதோ ஒன்று இழக்கப்பட்டாக வேண்டியுள்ளது. ஆகவே மனிதன் விழுந்து போய் இழக்கப் பட்ட போது, அவர் தம்முடைய சொந்த பிரமாணத்தை எடுத்து அவனுக்கு இரட்சகர் ஆனார். மகத்தான யேகோவாவாக அவர் அவ்விதம் செய்திருக்க முடியாது. ஏனெனில் அந்த யேகோவா எல்லாவிடங்களையும், எல்லா காலங்களையும் நிரப்பினவராக இருந்தார். பாருங்கள்? அந்நிலையில் அவர் அப்படி செய்திருக்கமுடியாது. எனவே அவர் ஒரு மனிதனாக வேண்டியதாயிருந்தது. தவறின மனிதனுக்கு அவர் உறவின் முறையானாவதற்கு (ஆமென்!) ஒரு மனதனாக ஆனார். தேவன், மாம்சமானார். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். அல்லேலூயா! உணர்ச்சிவசப்படுவது நான் என்று நினைக்கிறீர்களா? ஆனால் நான் அல்ல, எனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று! 93என் பாவத்தை அவர் மேல் சுமந்து கொள்ள, தேவன் என்னைப் போல் ஒருவராகி, நான் அவராக ஆகவேண்டுமென்று சித்தம் கொண்டார். ஆமென்! நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக வேண்டுமென்று அவர் கொண்டிருந்த நோக்கம். அவர் நித்திய பிதா. அந்த தன்மை அவரிலிருந்தது. (பாருங்கள்?). அது காட்சிக்கு கொண்டு வரப்பட வேண்டும். இப்பொழுது அந்த மூவகை நோக்கத்தை உங்களால் காணமுடிகிறதா? பாருங்கள்? தம்மை தாமே வெளிப்படுத்த... இப்பொழுது உலகம் இழந்து போன நிலையில் உள்ளது. எனவே சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலமாக தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ள, அவர் இரட்சகராக ஒரு மனிதனில் வெளிப்பட வேண்டியதாயிற்று, அவர் ஜனங்களை இரட்சித்து, தம்மை தாமே மீண்டும் சபையில் கொண்டு வந்து தம்முடைய சபையில் முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக்கத்தக்கதாக, அவர் மனிதனாகத் தோன்றி மரிக்க வேண்டியதாயிருந்தது. 94இப்பொழுது அது ஒருக்காலும் ஒருபொழுதும், இனி மேலும், எக்காலத்தும் அது ஸ்தாபனமாயிராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக்கத்தான் வேண்டும். அவர் வார்த்தையாயிருக்கிறார். ஆமென் அப்படியிருக்க ஸ்தாபனப் பிரமாணங்களை அதில் எப்படி நுழைக்க முடியும்? அப்படி செய்தால் சபை விபசாரியாகி விடுமே! ஒரு மனிதனுடைய வார்த்தைகளையோ, ஸ்தாபனக் கோட்பாடு களையோ அது ஏற்றுக் கொள்ளும் போது, உடனே அது விபசாரியாக, வேசிகளாக வெளிப்படுத்தல் 17ல் கருதப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க சபை விபசாரியாகவும் பிராடெஸ்டெண்டு சபைகள் வேசிகளாகவும் கருதப்படுகின்றன. அது எல்லாரும் அறிந்து கொள்ளும் அளவிற்கு அவ்வளவு தெளிவாயுள்ளது. நாம் சபையின் காலங்களைக் குறித்து பிரசங்கித்தோம். உங்களுக்கு விருப்பமிருந்தால், அந்த ஒலி நாடாக்களை நீங்கள் கேட்கலாம். வேதத்திற்குப் புறம்பாயுள்ள கோட்பாடுகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் எதுவும் தேவனுடைய பார்வையில் ஒரு வேசியாக உள்ளது. ஏவாள் செய்ததையே அவர்களும் செய்கின்றனர் - அவர்கள் வார்த்தையாகிய கிறிஸ்துவினின்று புறம்பே சென்று விட்டனர். என்னே ! சரி. 95உலகத்தோற்றத்துக்கு முன்னமே அவர் தமது சிந்தையில் மறைத்து வைத்திருந்த இரகசியங்களை நாம் காண்கிறோம். இதை சற்று படிக்க விரும்புகிறீர்களா? சற்று படிப்போம். உங்களுக்கு போதிய நேரம் இருக்கிறதா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) நாம் - நாம் அதை படிப்போம். ஒரு சிறு பாகத்தைப் படிக்க எபேசியர் நிரூபத்துக்கு நமது வேதாகமத்தை திருப்புவோம். எபேசியர் முதலாம் அதிகாரத்திலிருந்து தொடங்குவோம். கிறிஸ்துவின் மூவகைத் தோற்றத்தைக் குறித்து இந்த ஞாயிறு பள்ளி பாடத்தில் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இதை நாம் படிப்போம்: தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்... இப்பொழுது கவனியுங்கள். இது உலகத்தாருக்கு எழுதப் பட்டதல்ல, ஆனால்... எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: 96நீங்கள் எப்படி இயேசுகிறிஸ்துவுக்குள் வருகிறீர்கள்? ஒரு சபையை சேர்வதினாலா? (சபையார் ''இல்லை'' என்கின்றனர் - ஆசி ), பிறப்பினால். “ஒரே ஆவியினாலே', ஒன்று கொரிந்தியர் 12. ''ஒரே சரீரத்திற்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பண்ணப்படு கிறோம்.'' பாருங்கள்? சரி, அப்படிப்பட்ட பரிசுத்தவான்களுக்குத் தான் பவுல் இதை கூறுகிறான். இது வெளி உலகத்தாருக்கு எழுதப்பட முடியாது. பாவிகளிடம் இதைக் குறித்து நாம் பேசமுடியாது. ஏனெனில் அவனுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. பவுல் இதை பாவிகளுக்கு எழுதவில்லை. இது “கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற அந்த- அந்த- அந்த குழுவுக்கு'' என்கிறான் அவன். நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் (எங்கே? உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்; 97''உன்ன தங்களிலே (heavenly places), எனக்கு நேரமிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! உன்னதங்களைக் குறித்து, உன்னதங்கள் என்றால் என்ன என்று என் வேதத்திலே இங்கு குறித்து வைத்திருக்கிறேன், உன்னதங்கள், ஒரு க்ஷணம், அது “கிறிஸ்துவில் ஒரு விசுவாசியின் ஸ்தானம்'' பாருங்கள், ''கிறிஸ்துவுக்குள் ஒரு விசுவாசி எங்கு நின்று கொண்டிருக் கின்றான்,'' உன்னதங்களில். ''தமக்கு முன்பாக நாம் (எதில்?) அன்பில் பரிகத்த முள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே (கூர்ந்து கவனியுங்கள்). அவர் எப்பொழுது நம்மை தெரிந்து கொண்டார்? “உலகத் தோற்றத்திற்கு முன்னே'' தம்முடைய மகத்தான மறைக்கப் பட்டிருக்கின்ற ரகசியம் , அவருடைய மகத்தான ரகசியம் பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவீகாரப் புத்திரராகும்படி (என்ன செய்திருக்கிறார்?) முன்குறித்திருக்கிறார்.'' 98“முன்குறித்திருக்கிறார் - '' அதுதான் அந்த பரமரகசியம். பாருங்கள்? கிறிஸ்து அல்லது வேறெதுவும் இவ்வுலகில் தோன்றும் முன்பே என்ற அவருடைய மகத்தான பரம இரகசியத்தை நீங்கள் பாருங்கள். அவர் தமது மணவாட்டியைத் தெரிந்து கொண்டார். தேவனுடைய வார்த்தையை விசுவாசிக் காததனால் ஏவாள் விழுந்து போவாளென்று அவர் அறிந்திருந்தார். ஆனால், உலகம் என்ன கூறினாலும், வார்த்தையை பற்றிக் கொண்டு, விழுந்து போகக்கூடாத ஒரு மணவாட்டியை அவர் தெரிந்து கொள்வார். அவர்கள் வார்த்தையை பற்றிக்கொள் வார்கள். வார்த்தையில் நிலைநிற்க அவர்கள் முன்குறிக்கப்பட்டவர்கள். ”இயேசு கிறிஸ்துவின் மூலமாய் சுவீகாரப்புத்திர ராகத் தெரிந்து கொள்ளுதல்'' என்பது, அந்த மகத்தான மகிமையான நிலையில் நிற்பதற்கு சபையை முன்குறித்து விட்டது என்பதாகும். 99இப்பொழுது அந்த ரகசியத்தை உங்களால் காண முடிகிறதா? எதற்காக? விழுந்து போன ஏவாளை மீட்டுக் கொள்ள. அவள் சபையின் முன்வடிவமாக இருந்தாள். இப்பொழுது கவனியுங்கள். தேவன் ஆதாமின் ஒரு பக்கத்தை திறந்து ஏவாளை அவனுடைய சொந்த மாம்சமும் இரத்தமுமாக எடுத்து, அவனுடைய ஆவியை இரண்டாக - ஆண் ஆவி, பெண் ஆவி என்று இரண்டாக பிரித்து, அந்த பெண் ஆவியை ஏவாளுக்கு அளித்தார். அவனுடைய ஒரு பக்கத்தின் கீழிருந்து விலாவை எடுத்து அதிலிருந்து ஏவாளை உண்டாக்கினார்; அதே விதமாக தேவன் செய்தார், இரத்தத்தையும் தண்ணீரையும் கிறிஸ்து வினுடைய பக்கத்திலிருந்து எடுத்தார். கிறிஸ்துதான் வார்த்தை, வார்த்தையை எடுத்து தம்முடைய சபையை உண்டாக்குதல், ஏவாள்; பாருங்கள், தம்முடைய சரீரத்திலிருந்து வந்த இரத்தத் தினால் மீட்கப்பட்டு, மறுபடியுமாக தம்முடைய நிலைக்கு திரும்புதல். நீங்கள் இதை புரிந்து கொள்கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்- ஆசி ) உலகத்தோற்றத்துக்கு முன்பு மறைக்கப்பட்டிருந்த தேவனு டைய பரமரகசியம் இப்பொழுது வெளியரங்கமாகிறது; ஆனால் காலங்கள் தோறும் அது முன்னடையாளமாக அளிக்கப்பட்டு வந்துள்ளது. இப்பொழுது கவனியுங்கள் - நாம் கண்டது என்ன வெனில், அவர் - அவர் அதைச் செய்தார். எபேசியர் நிரூபத்திலும் இன்னும் வேதத்தில் மற்றவிடங்களிலும்... இது உங்களுக்குப் போதிய விளக்கம் அளித்து விட்டது. காலங்கள் தோறும் அவர் இந்த இரகசியத்தை படிப்படியாக வெளிபடுத்திக் கொண்டே வந்தார், உங்களால் இப்பொழுது அதைக் காணமுடிகிறதா? இப்பொழுது காலங்... 100அவர் எப்படிச் செய்தார்? இப்பொழுது முன்னடை யாளத்தில் என்ன சம்பவித்தது? அவர் ஏவாளை உண்டாக்க ஆதாமின் ஒரு பக்கத்தை திறந்து அவனுடைய மாம்சத்தின் ஒரு பாகத்தை எடுத்தார். மணவாட்டி வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார். அவளால் ஸ்தாபனக் கோட்பாடுகள் பேரில் நிற்கமுடியாது. ஸ்தாபனத்தின் பேரில் அவள் நிற்க முடியாது. நல்ல நடத்தையின் பேரில் மாத்திரம் அவளால் நிற்கமுடியாது. அவள் தனியாக வார்த்தையின் பேரில்தான் நிற்க வேண்டும்; ஏனெனில் அவள் அதன் பாகமாயிருக்கிறாள். அவள் கிறிஸ்துவிலிருந்து எடுக்கப்பட்டவள். பாருங்கள்? 101ஆகவே நிச்சயமாக தெரிந்து கொள்வதற்கு, எடுத்துக் கொள்ளப்படுதல் முழுவதுமே........ லூத்தர் ஒரு பாகமாக இருந்தார். வெஸ்லி ஒரு பாகமாக இருந்தார். தீர்க்கதரிசிகள் ஒரு பாகமாக இருந்தனர். அவர்கள் பாகமாக இல்லாவிடில்... இந்த வெளிப்படுதலில் அவர்கள் சரீரத்தை உருவாக்கிக் கொண்டே வந்தனர். பாதங்கள், கால் விரல்கள், கைகள் போன்றவை - தலை வரும் வரைக்கும் (இன்னும் சில நிமிடங்களில் அதற்கு வருவோம்). பாருங்கள், அது முழு எடுத்துக்கொள்ளப்படுதலை உண்டாக்குகின்றது. அது கிறிஸ்துவாகிய வார்த்தையினுடைய சரீரம். ஆமென்! அதற்கு புறம்பே இருந்தால், நீ இழக்கப்பட்டுப் போவாய். நீ எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும், அல்லது உன்னுடைய உறவின் முறை என்னவாக இருந்தாலும், அல்லது நீ எத்தகைய ஐக்கியத்தில் சேர்ந்திருந்தாலும், உன்னுடைய ஸ்தாபனம் எதுவா யிருந்தாலும் எனக்குக் கவலையில்லை - உனக்குள் இருக்க வேண்டிய அந்த வார்த்தைக்கு வெளியே இருந்தால் நீ இழந்து போகப் பட்டாய். 102''நீங்கள் என்னிலும் அந்த வார்த்தை, என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ....'. ஏனெனில் நீங்களும் வார்த்தையும் ஒன்றாயிருக் கிறீர்கள். அவர் முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களைக் கொண் டிருக்கிறார். அவர் ஆளுகையை கொண்டிருக்கிறார். நீங்கள் ஒரு.... நீங்கள் அவருக்கு சிறைக்கைதியாயிருக்கிறீர்கள். உலகம் உங்களுக்கு மரித்திருக்கிறது. உங்களுக்கு வேறொன்றும் அவசியமில்லை...... உலகமக்களின் வாழ்க்கையை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் அத்தகைய வாழ்க்கையை நீங்கள் வாழமாட்டீர்கள்; நீங்கள் சிறைபிடிக்கப்பட்டவர்கள். நீங்கள் அவருடன் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள். “என் நுகம் மெதுவாய் இருக்கிறது''. கிறிஸ்துவுடன் - அவருடைய வார்த்தை யுடன் - நீங்கள் நுகத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள். ''பிதாவுக்குப் பிரியமானவைகளையே நான் செய்கிறேன். நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கா விட்டால், வார்த்தையை விசுவாசியுங்கள்'' அவ்வளவு பரிபூரணமாக இருக்கிறது! கவனியுங்கள். 103இப்பொழுது கவனியுங்கள், காலங்கள் தோறும் அவர் இந்த இரகசியத்தை தீர்க்கதரிசிகள் மூலமாகவும் முன்னடையாளங் களாலும், மெதுவாக வெளிப்படுத்திக் கொண்டே வந்தார். அவர் தம்மை எவ்விதம் வெளிப்படுத்தினார் என்று தொடர்ந்து பார்ப் போம். அவர் மோசேயில் தம்மை வெளிப்படுத்தினார். மோசேயைப் பாருங்கள். பிள்ளைகள் துன்புறுத்தப்பட்ட நேரத்தில் அவன் பிறந்தான், அவன் ஒரு இரட்சகனாக இருக்கத்தக்கதாக பிறந்தான். இயேசு எகிப்துக்குள் கொண்டு செல்லப் பட்டது போல அவன் நாணலுக்குள் மறைத்து வைக்கப்பட்டான். மோசே வெளியே வந்தான். அவன் மலையின் மேல் ஏறிச் சென்று பத்து கட்டளைகளுடன் திரும்பி வந்தான். இயேசுவும் மலையின் மேல் ஏறிச் சென்றார்,- அவருடைய முதல் பிரசங்கம் மலைப்பிரசங்கம். அவர் கீழே கட்டளைகளுடன் இறங்கிவந்தார்: 'விபசாரஞ் செய்யாதிருப்பாயாக' என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்ட தென்று கேள்விப்பட்டிருக்கிறீர் கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சை யோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று. பிரமாணம் அளிப்பவர்; ஆசாரியன்; ராஜா; தலைவர் - மோசேயைப் போன்றே. 104அவர் யோசேப்பில் தம்மை வெளிப்படுத்தினார். அவனும் டைய சகோதரராகிய ஸ்தாபனத்தின் நடுவில் அவன் பிறந்தான். அவன் ஆவிக்குரியவனாயிருந்தபடியால், அவனுடைய சகோதரர் முகாந்தரமின்றி அவனைப் பகைத்தனர். அவன் தரிசனங்களைக் கண்டான்; தேவன் அவனோடு கூட இருந்தார். அவனால் சொப் பனங்களுக்கு அர்த்தம் கூறமுடிந்தது. அவனுடைய சகோதரர் அவனைப்பகைத்தனர். அவனுடைய சகோதரரால் அவன் ஏறக் குறைய முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டான். அவ்வாறே இயேசுவும் அவருடைய சகோதரரில் ஒருவனான யூதாஸ்காரியோத் தால் முப்பது வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டார். அவன் குழியில் போடப்பட்டு, மரித்து போனதாக எண்ணப்பட்டான். அது உண்மை. அவனுடைய தந்தைக்கும் மற்றவர்க்கும் அவன் மரித்துப் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவன் குழியில் லிருந்து வெளியே எடுக்கப்பட்டு, பார்வோனின் வலது கரத்தையடைந்தான். அந்த இருண்ட சிறையில் அவன் எவ்வளவாக பாடு பட்டான்! ஆகவே -ஆகவே அங்கே இரட்சிக்கப்பட்ட இரண்டு பேர் இருந்தனர். அங்கு பானப்பாத்திரக்காரனும் சுயம்பாகியும் இருந்தனர் ஒருவன் இரட்சிக்கப்பட்டான், மற்றவன் கைவிடப்பட்டான், ஆமாம். ஆகவே அந்த அந்த பானப்பாத்திரக் காரன் .... அவர்களின் ஒருவன் கைவிடப்பட்டான், மற்றவன் இரட்சிக்கப்பட்டான். அது போன்றே, சிலுவையாகிய சிறையில் இயேசு இருந்தபோது - நம்முடைய பாவங்களுக்காக, நமக்குப் பதிலாக அவர் சிலுவையில் சிறைவாசம் செய்த போது - ஒரு கள்ளன் கைவிடப்பட்டான், மற்றவன் இரட்சிக்கப்பட்டான். பாருங்கள்? அதே விதமாக நிகழ்ந்தது? 105அவன் ராஜாவாகிய பார்வோனின் வலது பாரிசத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். அவன் ராஜாவின் பாதங்களில் அமருவான் என்றும், எகிப்தின் சகல அதிகாரமும் அவனுக்கு கொடுக்கப்படுமென்றும் அவன் தரிசனம் கண்டான். அந்த தரிசனம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. அவன் சிறைவாசம் செய்து, அவனுடைய தாடி வளர்ந்திருந்த அந்த நிலையில், இத்தரிசனத்தை அவன் அநேக முறை ஆராய்ந்து பார்த்தான். என்றாவது ஒரு நாளில் அது நிறைவேற வேண்டுமென்று அவன் அறிந்திருந்தான். அது தாமதமானாலும் நிறைவேறியே ஆகவேண்டும். நான் சென்ற இரவு - இல்லை, அதற்கு முந்தின இரவு; புதன் இரவு ஆராதனையில் பேசின வண்ணமாக. பாருங்கள்? அது எப்படியா கிலும் நிறைவேற வேண்டும். தேவன் கூறினால் அது நிறை வேறியே ஆகவேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்க தரிசியாயிருக்குமானால் அது நிறைவேறியே தீர வேண்டும். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தை. 106வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வருகிறது. தீர்க்கதரிசி என்னும் சொல் எழுதப்பட்ட தெய்வீக வார்த்தையை வெளிப்படுத்துபவன் அல்லது முன்னறிவிப்பவன் அல்லது (பாருங்கள்?) - காண்பவன் (Seer) என்று பொருள்படும். கவனியுங்கள், தரிசனம் காண்பவன், முன்னுரைக்கிறவன் என்பதை எவ்வாறு நீங்கள் அறிந்து கொள்வீர்கள், அவன் முன்காணுதலானது நிறைவேறும்போது அவன் தெய்வீகமாக உறுதிபடுத்தப்படுகிறான். ''உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசி யாயிருந்தால், நான் அவனோடே பேசி, வரப்போகும் சில காரியங்களை அவனுக்கு அறிவிப்பேன். அது நிறைவேறாமல் போனால், அவனுக்கு செவிகொடுக்க வேண்டாம். அது நிறை வேறுமானால், நான் அவனோடு கூட இருக்கிறேன் என்று அதன் அர்த்தம். அவனுக்குப் பயப்படுங்கள், ஏனெனில் நான் அவனோடு கூட இருக்கிறேன்''. பாருங்கள்? அது முற்றிலும் உண்மை . அது தான் உறுதிப்படுத்துதல். அது உண்மையா இல்லையாவென்று அப்பொழுது அறிந்து கொள்வாய். தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமாக திரும்ப, தம்முடைய ஜனங்களுக்கு, ஜனங்களின் மூலமாக பேசிக் கொண்டிருக்கிறார். பாருங்கள், தேவன் ஒரு மனிதனின் மூலமாகவே பேசுகிறார். ''நானே திராட்சச் செடி; நீங்கள் கொடிகள். ''திராட்சச் செடி கனி கொடுப்பதில்லை. கொடிகள்தான் கனிகளைத் தருகின்றன. கவனியுங்கள், எக்காலத்திலும் அது அவ்விதமாய் இருந்து வந்துள்ளது. 107இப்பொழுது நாம் யோசேப்பைக் காண்கிறோம்.... யோசேப்பை முதலில் காணாமல், யாரும் பார்வோனை தொடவோ அல்லது வரவோ முடியாது. “என்னாலேயல்லாமல், குமாரனின் மூலமேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்'' யோசேப்பு சிம்மாசனத்தை விட்டு புறப்பட்டபோது, அவர்கள் எக்காளங்களை முழங்கினர். ''யோசேப்பு வருகிறார்” என்னும் செய்தியைக் கேட்டதும், முழங்கால்கள் யாவும் முடங்கின. மகிமை! ஒருநாள் இயேசு அவருடைய பிதாவின் சிங்காசனத்தை விட்டு புறப்பட்டு வரும் போது, முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும். அவர் தேவனுடைய குமாரன் என்று எல்லாரும் சாட்சி கூறுவார்கள். இப்பொழுதே வந்துவிடு, இல்லையேல்.... அப்பொழுது காலதாமதமாயிருக்கும். அதை இப்பொழுதே செய். 108இப்பொழுது இவ்விதமாக நாம் பார்க்கிறோம். முன்னடை யாளங்களின் மூலமாக... தாவீதைக்கூட நாம் எடுத்துக் கொள்ளலாம் (நான் சற்றுமுன்பு பேசினவண்ணமாக) அவன் ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டு, சிம்மாசனத்தை விட்டுச் சென்று, அதே மலையின் மேலேறி (ஒலிவ மலை), அவனுடைய சிறைக்குச் சென்றான். அவன் தன் சகோதரராலும் சொந்த ஜனங்களாலும் புறக்கணிக்கப் பட்ட காரணத்தால், அவனுடைய சிறைக்கு அவன் சென்றான். அவன் அழுதுகொண்டே சென்றான். அது அவனுக் குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவி இயேசுவும் அது போன்று புறக்கணிக்கப்பட்டு எருசலேமைப் பார்த்து, 'எருசலேமே, எருசலேமே, எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக்கூட்டி சேர்த்துக் கொள்ள மனதாயிருந் தேன்“ என்று அழுதார் - புறக்கணிக்கப்பட்ட ராஜா. ஆம், எண்ணூறு ஆண்டுகள் கழித்து தாவீதின் குமாரன் புறக்கணிக்கப் பட்டவராய் எருசலேமில் நின்றுகொண்டு, எருசலேமைப் பார்த்து கண்ணீர்விட்டு, ”இதோ, உன் நேரம் வந்துவிட்டது'' என்கிறார். அது சரி. பாருங்கள்? 109இவையனைத்தும் அவருக்கு முன்னடையாளங்களாகத் திகழ்கின்றன. (முன்னடையாளங்களாக மாத்திரமே), ஆனால் இன்னுமாக அந்த இரகசியம் மறைக்கப்பட்டிருந்தது. இந்த மனிதர்களுக்கு தாங்கள் செய்தது என்னவென்றே தெரியவில்லை. ஏதோ ஒன்றை செய்ய அவர்கள் ஆவியால் உந்தப்பட்டனர் என் பாதை மாத்திரமே அவர்கள் அறிந்திருந்தனர். இந்த மகத்தான வெளிப்பாட்டை அவர் கடைசி நாட்களுக்கென வைத்திருந்தார். ஆனால் அதே சமயத்தில் அவர் தம்மை மோசே, தாவீது, யோசேப்பு, எலியா போன்றவரின் மூலமாக படிப்படியாக வெளிப்படுத்திக் கொண்டே வந்தார். நீங்கள் ..... நாம் ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்து, அது எவ்வாறு இயேசு கிறிஸ்துவை பிழையின்றி வெளிப்படுத்தினது என்றும், அதே சமயத்தில் அவர் இன்னுமாகத் தம்முடைய இரகசியத்தை முழுமையாக அளிக்கவில்லை; அவர் வாக்குத்தத்தம் செய்தவாறே கடைசி நாட்களில் அதைத் தெரியப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறார், அது முழுவதுமாக கிரகித்துக் கொள்ளப்பட அவர் காத்துக் கொண்டிருக்கிறார், பாருங்கள். அவர் அதை வெளிப்படுத்து முன்னர், முழு காரியத்தையும் அவர் கூறியிருந்தால்... 110ஏனெனில், வேதாகமம் இரகசியங்களாக எழுதப்பட் டுள்ளது. பாருங்கள், அது இரகசியங்களாக எழுதப்பட்டிருந்த படியால் அதற்காக இயேசு பிதாவை ஸ்தோத்தரித்தார். இப்பொழுது கர்த்தருடைய வருகையும் இரகசியமாகவே உள்ளது. அவர் எப்பொழுது வரப்போகிறார் என்றும், எப்படி வரப்போகிறார் என்றும் நமக்குத் தெரியாது. ஆனால் அவர் வரப்போகிறார் என்பதை மாத்திரம் அறிந்திருக்கிறோம். பாருங் கள்? எனவே தேவனுடைய எல்லா இரகசியங்களும் இந்த கடைசி நாளிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அவர் ஏற்கெனவே முடித்துவிட்ட பிறகு, அதன் பின்னர் தாம் என்ன செய்திருக் கின்றார் என்பதை அவர் வெளிப்படுத்திக் காண்பிக்கின்றார். என்னே! தம்முடைய இரகசியத்தை முழுவதுமாக அவர் அளிக்கவில்லை. இது எனக்கு மிகப்பிரியம், ஏழு முத்திரைகளுடன் ஒப்பிடுவது. இப்பொழுது, தேவன் மார்டின் லூத்தரை அந்த முதலாம் சபை அல்லது அந்த சபையின் காலம், தோன்றுவதற்காக உபயோகித்தார். அவ்வாறே ஜான் வெஸ்லியை அவர் உபயோகித்தார். அவர் சபையின் காலங்களின் இரகசியங்களை அவர்கள் மூலம் படிப்படியாக வெளிப்படுத்தினார். இக்காலத்தில் வேதத்தை படிக்கும் எவரும், அவர்கள் காலத்தில் நடந்தது என்னவென்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த கடைசி நாட்களில், ஒரு மிக மகத்தான காரியமாக இருக்க காரணம் என்னவென்றால், இங்கே அவர் அந்த ஏழு இடிழுழக்கங்களை காண்பித்து அதைக் குறித்து பேசினார். லுக் (Look) மற்றும் லைஃப் (Life) பத்தி ... 111லைஃப் (Life) பத்திரிக்கைகள் அந்த வட்டமான மேகத் தையும் ஒளியையும்'' வெளியிட்டன. அது என்னவென்று அவர் களால் இன்றுவரை அறிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் என்னிடம் அவர் “இந்த இரகசியங்கள் வெளிப்படுத்தப்படத்தக் கதாக அங்கே சென்று காத்திரு'' என்று அது நிறைவேறுவதற்கு மாதங்கள் முன்பே கூறிவிட்டார். அவர் சொன்ன விதமாகவே அது எவ்வித பிழையுமின்றி நிறைவேறினது. அந்த புகைப் படத்தில், வலது பாகத்திலுள்ள அந்த தூதன் காணக்கூடிய ரூபத்தில் இறங்கி வரும்போது, அவனுடைய செட்டைகள் பின் நோக்கியும் அவனுடைய தலை பக்கவாட்டிலும் இருப்பதைக் கவனித்தீர்களா? அது அந்த புகைப்படத்தில் உள்ளது. இது நிகழ்வதற்கு மாதங்கள் முன்னரே அவர், ”சரீரமாகிய விசுவாசிகளை ஒன்று சேர்த்து, அந்த தளர்ந்த முனைகளை வெளிப்படுத்தப் போவதாக'' இங்கு கூறினார். 112லூத்தர் தோன்றினார். அவர் காலத்தில் நீதிமானாக்கப்படுதல் என்பதைக் குறித்து மாத்திரமே அவர் பிரசங்கித்தார். அந்த காலத்தில் அவர் தாக்கி தூளாக்கினார். அது எந்த சபையின் காலம் என்பது அவருக்குத் தெரியாது. பின்பு வெஸ்லி தோன்றினார். அவருடைய காலத்தில் அவர் தன்னுடைய காலத்தில் தாக்கி தூளாக்கினார். பார்த்தீர்களா? பிறகு அதிலிருந்து அநேக வடிகால்கள் வெளிவந்தன், மற்ற சபைகள் எழும்பின. பின்பு பெந்தெகொஸ்தேயினர் தோன்றி வல்லமையாய் கிரியை செய்தனர். அவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு சரியாக நேராக மரணத்திற்குள் சென்றனர். இன்னும் சில நிமிடங்களில் அதைக் குறித்து பேசுவோம் - நேராக மரணத்திற்குள் சென்றனர். ஆகவே பிறகு அதைக் குறித்தென்ன என்பதை வெளிப் படுத்த இரகசியத்தின் வெளிப்பாடு வருகின்றது, அதென்ன வென்றால், இந்த சிறு போதனைகள், லூத்தர் சபை போதனைகளை கற்றுக் கொடுக்க வினா விடை அடங்கிய நூலைக் கொண்டு வந்தார். (catechism) மற்றும் எல்லாவற்றையும்; வெஸ்லி இதை, அதை மற்றதை, இன்னும் வேறு காரியங்களை கொண்டு வந்தார். பெந்தெகொஸ்தேயினரும் அவர்களைப் போலவே ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' ஞானஸ்நானம் போன்றவைகளைக் கொடுத்தனர். அவை எத்தகைய வித்தியாசத்தை உண்டாக்குகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஏனெனில்.... பிறகு மறுபடியும் வந்து, இந்த இரகசியங்களையெல்லாம் தெளிவாக விளக்கி, அவைகளை வெளிப்படுத்துகிறார். ஏன்? இந்த கடைசி நாட்களில்தான் தேவன் தம்முடைய இருதயத்தில் கொண்டிருந்த இந்த மகத்தான இரகசியம் வெளிப்படுத்தப்படுகின்றது. 113இதை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்- ஆசி) உங்களால் விளங்கிக் கொள்ள முடியாவிட்டால், இந்த ஒலிநாடாவை மறுபடியும் கேளுங்கள். இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடனே இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது, 'கர்த்தர் உரைக்கிறதாவது என்னும் சத்தியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுதான் சத்தியம். இது வேத வசனம். ஏழு கடைசி முத்திரைகளின் ஏழு இரகசியங்களைப் போல, அவைகளைக் குறித்த இரகசியங்கள். முத்திரைகள் உடைக்கப் பட்டுவிட்டன. ஒவ்வொரு சபையின் காலத்திலும் அவர்கள் சிதறப்பண்ணினர். அது சிதறக்கூடாது என்னும் சித்தம் கொண்ட வராய் தேவன் மறுபடியும் வந்து, அவர்கள் தொடங்கின போதனை களையெல்லாம் கையிலெடுத்து, முழுவதையுமே தெளிவாக வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் இரகசியத்தை குறித்து வெளிப் படுத்திக் கொண்டிருக்கையில் எப்படி அவர் சபைக்கு தேவனு டைய மூவகை நோக்கமாக அமைந்திருந்தார் என்பதைக் குறித்து அதே காரியத்தைத் தான் அவர் இப்பொழுது செய்து கொண்டிருக் கின்றார். என்னே! தம்மை வெளியாக்குகின்றார்; வெளிப் படுத்தல். 114'வெளிப்படுத்து (Reveal) என்னும் சொல்லுக்கு வெப்ஸ்டர் அகராதி இவ்வாறு கூறுகின்றது. “தெரிவித்தல். தெரியப் படுத்துதல், விசேஷமாக அந்த வெளிப்படுத்தல் என்பது தெய்வீக சத்தியத்தில், '' என்று கூறுகின்றது. வெளிப்படுத்தல், தம்மைத் தாமே தம்முடைய சபைக்கு தெரியப்படுத்திக் கொள்ளும் கிறிஸ்துவினுடைய வழியாகும். இப்பொழுது நாம் கூறப் போகிறோம், ''இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாம், நீர் தான் இதை கூறுகின்றீர், அவ்வளவு தானே என்று.' இப்பொழுது, இதை மட்டும் கூறுங்கள் என்று நாங்கள் சொல்லமாட்டோம். இப்பொழுது கவனியுங்கள், அவர் பேதுருவுக்கு தம்மை வெளிப்படுத்தினார். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அல்லது படிக்க விரும்பினால் (நீங்கள் விரும்பினால், நாம் அதைப் படிக்கலாம்) அது மத்தேயு 16:15 முதல் 17 வசனங்களில் அடங்கியுள்ளது. நான் அதை மேற்கோள் காட்டுவேன். அவர் மறுரூபமலையிலிருந்து இறங்கி வந்தபோது, ''மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யாரென்று சொல்லுகிறார்கள்?'' என்று கேட்டார். 115நீர் எலியா என்று அவர்கள் நினைத்துக் கொண்டிக் கிறார்கள். சிலர் நீர் எரேமியா என்றும் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள். ஆனால் அவர் அதைக் குறித்து கேட்கவில்லை. “இப்பொழுது, நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். இப்பொழுது அவர் பேசிக்கொண்டிருக் கின்ற சபை அதோ இருக்கிறது. பாருங்கள்? ''நான் யாரென்று மனிதன் நினைக்கிறான்?'' இன்றைக்கு: “அவர் ஒரு தத்துவ ஞானி; '' - இந்த சமுதாய மதம். அவர் ஒரு நல்ல மனிதன். அவருடைய போதனைகள் சரியென்று நாங்கள் கருதுகிறோம். அதை நாம் வாழ்ந்து காட்டவேண்டிய வர்களாயிருக்கிறோம். அப்படிச் செய்தால் அது நம்மை சிறந்தவர்களாக்கும். நாம் நமது சபைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்னும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அது ஒரு சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா), (Santa Claus) கதையைப் போன்றவை ஆகும். அது நாம் ஏதோ ஒன்றை வெளிப்படுத்துகின்றதாயிருக்கின்ற சில சபையின் வெளிப்பாடுகள் அல்ல. அது நீயாகவே வாழ்ந்து கொள்ளும் ஒரு ஜீவியம் அல்ல, அவர் உனக்குள் வந்து தாமாகவே ஜீவிப்பது, நீ எந்த ஒரு மனித ஞானமான ஒன்றிற்கும் இல்லாமல், அவருடைய சிறைவாசியாக நீ ஆகிவிடுகிறாய். நீ ஆவியினாலே அப்பொழுது நடத்தப்படுகிறாய். எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்? 116இப்பொழுது நீங்கள், “என் புத்தியை இழந்து கொண் டிருக்கிறேன் என்பதை நான் ஒருக்கால் தெரிந்து கொள்ளலாம். ஒருக்கால் புத்திசுயாதீனமில்லாதவன் தான் அப்படி செய்வான்'' எனலாம். ஆனால் கிறிஸ்துவின் சிந்தையை நீங்கள் உடையவர்களா யிருந்தால், உங்கள் மூலமாக கிறிஸ்து தம்மை வெளிப்படுத்துவார். அது அவர் என்பதை அவர் காண்பிக்கிறார். நீ.... புத்திசுயாதீன மில்லாதவன் என்று அர்த்தமல்ல. சிலர் பொய்த் தோற்றங்களில் (illusions) நம்பிக்கை கொண்டு அதன் விளைவாக அவர்களுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது... அது தவறென்று நமக்குத் தெரியும். அது உண்மையான ஒன்றை, அது தோன்றுவதற்கு முன்பு, பிசாசு பாவனை செய்தலாகும். அது போலியான ஒரு காரியம். பாருங்கள்? ஆனால் இங்கு ஒரு மனிதன் தன் சுயகருத்துக்களையும் சுயசிந்தனைகளையும் விட்டுவிட்டு, குருட்டுத் தனமாக ஒன்றைப் பின்பற்றுவது அல்ல. இல்லை, ஐயா! உங்கள் சரியான புலன்களுடன் நீங்கள் வருகிறீர்கள். அப்பொழுது கிறிஸ்து உங்களை ஆட்கொண்டு தம்மை தாமே வெளிப்படுத்துகிறார். உலகிற்கு நீங்கள் பைத்தியக்காரராக தென்படலாம். இப்பொழுது நீங்கள் உண்மையிலேயே பைத்தியம் பிடித்தவர்களாயிருந்தால், அப்படியென்றால் ஒன்றுமில்லை, பிசாசு உங்களை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியாது. அவன் உங்களை இந்த வார்த்தைக்கு புறம்பான ஒவ்வொரு காரியத்தையும் செய்ய வைப்பான். ஆனால் கிறிஸ்து உங்களை ஆட்கொள்வாரானால், அவர் அந்த வார்த்தையை உங்கள் மூலம் வெளிப்படுத்துவார். ஏனெனில் அது அவர். அவர் வார்த்தையாயிருக்கிறார். பாருங்கள்? அப்பொழுது கிறிஸ்துவின் வெளிப்படையான காண்பித்தல் (Expression) உங்களால் காண முடியும். அது பொய்த் தோற்றம் எதுவுமல்ல; அது கிறிஸ்து உண்மையாக தம்மை உங்கள் மூலம் வெளிப் படுத்துதல். அது எவ்வளவு அழகாயுள்ளது! 117இப்பொழுது கவனியுங்கள். ''நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?'' அவர் சபையைக் கேட்கிறார் - அந்த நாளின் கோடிக்கணக்கானவர்களுக்கு புறம்பே இருந்தவர்களில் அவருடைய பன்னிருவரைப் பார்த்து, அவர் தம்முடைய சபையாகிய பன்னிரண்டு பேரை அவர் கேட்டார். நோவாவின் காலத்திலிருந்த கோடிக்கணக்கானவர்களில் அவர் எட்டுப் பேரைப் பார்த்துக் கேட்டார். ஹூ ஹும் பாருங்கள்? “நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் இருக்கும்,'' என்று அவர் கூறினார், பாருங்கள். அன்று எட்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். எட்டு பேர் மாத்திரமே இப்பொழுது இரட்சிக்கப்படும் வார்கள் என்று நான் கூற வரவில்லை. அப்படி தவறாக எண்ண வேண்டாம். நான் அப்படி கூறமாட்டேன். எத்தனைப் பேர் அதில் இரட்சிக்கப்படுவார்கள் என்று எனக்குத் தெரியாது, அது, அது, அந்த... அந்த சிறிய குழு எடுத்துக் கொள்ளப்படயிருக்கும் அந்த கடைசி பொழுதில்... அது ஒரு சிறு குழுவாக இருக்கும், என்பதை நான் உங்களிடம் கூறுகிறேன். 'ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதை கண்டுபிடிப்பவர்கள் சிலர்''. 118ஆனால் காலங்கள் தோறும் மீட்கப்பட்டவர்களைக் கொண்ட அந்த மகத்தான சரீரம் வரும்போது, அப்பொழுது அங்கே ஒரு மகத்தான சிங்காசனம் இருக்கப்போகின்றது! வெளிப்படுத்தல் 7ம் அதிகாரம் அவ்வாறு உரைக்கின்றது. ''... ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் அவர்கள் ஒவ்வொரு சபை காலங்களினூடாக மீட்கப்பட்டவர்கள். அவர் களுக்கு வெளிப்படுத்தப்பட்ட அளவுக்கு அவர்கள் வேதத்தின் வெளிச்சத்தில் நடந்தவர்கள். ''லூத்தரைக் காட்டிலும் வெஸ்லிக்கு அதிக வெளிச்சம் இருந்தது என்று நாமறிவோம். பாருங்கள்? அது அவ்விதமாகவே இருந்தது. ஏனெனில் அது தீர்க்கதரிசிகளின் மூலமாக படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டு, முடிவில் முழுவதுமாக அது தெரியப் படுத்தப்பட்டது - ''தேவத்துவம் கிறிஸ்துவின் சரீரத்துக்குள்.'' ஆகவே இப்பொழுது சபையில் உள்ள கிறிஸ்து தெரியப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த முழு காரியமும் தேவனுடைய வெளிப்பாடாகும், அது, தன்னுடைய புருஷனுடன் மறுபடியுமாக ஏவாளை தன்னுடைய சரியான ஸ்தானத்திற்கு திரும்பவுமாக கொண்டு செல்வதற்காகவே ஆகும். கவனியுங்கள், தேவன் சபையின் புருஷன் ஆவார், சபை அவருடைய மணவாட்டி ஆகும். 119இப்பொழுது அவர் அழைத்த போது பேதுரு, ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து' என்று கூறினான். இப்பொழுது கவனியுங்கள்: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; Bar-Jona, என்றால் ” யோனாவின் குமாரன்'' என்று அர்த்தம். பாருங்கள்? ''நீ பாக்கியவான், ஏனெனில் மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்த வில்லை, நீ ஏதோ ஒரு பள்ளியில் இதை கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப் படுத்தினார். அவர் மேலும் அவனிடம் என்ன கூறினார் என்று கவனியுங்கள். ''இந்தக் கல்லின்மேல்...'' அது பேதுரு, இந்த வெளிச்சத்தை பெற்றுக் கொண்ட இராஜ்ஜியத்தின் திறவு கோல்கள் அளிக்கப்பட்ட முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்து. “இயேசு கிறிஸ்து யார் என்னும் வெளிப்பாடாகிய இந்தக் கல்லின்மேல்...'' பிதா குமாரன், பரிசுத்த ஆவி; அவர் இரண்டாம் ஆள் என்பதன் மேல் அல்ல. 'இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள் வதில்லை (பாருங்கள்?). இந்தக் கல்லினமேல் என் சபையைக் கட்டுவேன்” இயேசு கிறிஸ்து யார் என்னும் வெளிப்பாடு. 120பாருங்கள், கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதே வெளிப் பாட்டின் ஜீவனின் மையமாக அவரை ஆக்குகிறது. பாருங்கள்? உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் ஜீவனே வெளிப்பாட்டின் மையமாக அவரைத் திகழச் செய்கின்றது. வேதத்தில் கிறிஸ்து , வேதாகமத்தை கிறிஸ்துவின் முழுமையான வெளிப்பாடாக ஆக்கு கின்றார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து உங்களை அந்த முழு காரியத்தின் முழுமையான வெளிப்பாடாக ஆக்குகின்றார். தேவன் என்ன செய்ய முயல்கிறார் என்று பாருங்கள்! அப்படியானால் மறுபிறப்பு என்றால் என்ன? 'நல்லது சகோதரன். பிரன்ஹாமே, மறுபிறப்பு என்றால் என்ன?' என்று நீங்கள் கேட்கலாம். நீ தனிப்பட்ட விதத்தில் பெறும் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடே அது. ஆமென்! பாருங்கள் அது, நீ ஒரு வித்தியாச மான ஏதோ ஒன்றை செய்துவிட்டிருந்தாலோ, ஒரு ஸ்தாபன பிரமாணத்தை உச்சரித்திருந்தாலோ, ஒரு - ஒரு குறிப்பிட்ட நெறி முறைகளை பின்பற்ற வாக்கு கொடுத்திருந் தாலோ அல்ல. ஆனால் கிறிஸ்து, அந்த வேதாகமம், உனக்கு வெளிப்படுத்தப்பட்ட அந்த வார்த்தை அவர்தான். யாராவது என்ன கூறினாலும், என்ன நடந்தாலும் ஒரு பொருட்டல்ல, அது கிறிஸ்து; மேய்ப்பன், ஆசாரியன், என்னவாயிருந்தாலும் சரி. அது உனக்குள் இருக்கும் கிறிஸ்து , சபை கட்டப்பட்டிருக்கும் வெளிப்பாடு அதுதான். 121நீங்கள் ''நல்லது நான் ஒரு லூத்தரன்; நான் ஒரு பாப்டிஸ்டு; நான் பிரஸ்பிடேரியன்“ என்றெல்லாம் உங்களை அழைத்துக் கொள்கிறீர்கள். அதனால் ஒரு அர்த்தமுமில்லை (சகோதரன். பிரன்ஹாம் விரல்களை சொடுக்குகிறார் - ஆசி) அது தேவனுக்கு எவ்வித அர்த்தத்தையும் அளிக்காது. அது என்ன? கிறிஸ்து வெளிப்படுவதே. அவர் வார்தை யாயிருக்கிறார். வார்த்தை வெளிப்படும் போது அது தன்னை உருவகப்படுத்துகிறது. பாருங்கள்? இயேசு கிறிஸ்துவைப் பற்றி தேவன் கொண்டிருந்த நோக்கமே, அவர் தம்மை வெளிப்படுத்தி, தம் நியாயப்பிரமாணத்தின்படி வாழ்ந்து காண்பித்து அவருடைய மரணத்தின் மூலம் அவருடைய நியாயப்பிமாணத்தை நிறை வேற்ற வேண்டும் என்பதே. தேவன் கிறிஸ்துவாக மாம்சத்தில் மரித்து மாம்சத்தில் செய்யப்படும் பாவத்தை நியாயந்தீர்த்து, மனித ஞானத்திற்கு விழுந்து போன ஏவாளைப் போலல்லாமல், தேவனுடைய வார்த்தையை மாத்திரம் முற்றிலும் விசுவாசிக்கும் மகிமையான ஒரு மணவாட்டி நமக்கென்று மீட்டுக்கொண்டார். உங்களால் அதை புரிந்து கொள்ள முடிகிறதா? அதுதான் கிறிஸ்து வின் கருத்தாயிருந்தது. அதுதான் தேவனின் கருத்தாயிருந்தது. மறுபிறப்பு அதை வெளிப்படுத்துகின்றது. 122ஒரு மனிதன் தான் மறுபடியும் பிறந்ததாகக் கூறிக் கொண்டு, அதே சமயத்தில் இக்கடைசி நாளுக்கென்று அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் வேறொரு காலத்துக்குரியது என்று சொல்லி அவரை நேற்றைய கிறிஸ்துவாக - இன்றைய கிறிஸ்துவாக அல்ல - ஆக்குவானானால், அந்த மனிதன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட வனாயிருக்கிறான். அந்த மனிதன் அதை விசுவாசிப்பதாக கூறிக் கொண்டு ஆனால் அந்த அடையாளம் அவன் மூலம் வெளிப்படாது என்று கூறுவானானால்.... இயேசு, 'மாற்கு 16ல், “உலக முழுவதிலும், ஒவ்வொரு காலத்திலும் விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்'' என்று கூறினார். உலகெங்கிலும், எல்லா காலங்களில் லும். அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள். இந்த ஆவிக்குரிய வரங்கள் அவர்களைத் தொடரும்,'' (Shall follow) என்றார். ”அவைகள் தொடரலாம் என்பதல்ல, “அவைகள் தொடர்ந்தாக வேண்டும் கண்டிப்பாகத் தொடரும்,'' என்று அவர் கூறினார். வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், அவருடைய வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. 123எனவே, அது கிறிஸ்து தனிப்பட்ட நபரின் மூலமாக - தம்மைத்தாமே வெளிப்படுத்துவதாகும். ஒருக்கால் அவன் கல்வி அறிவு கொண்டிருந்தாலும் சரி, அல்லது ஒருக்கால் அவன் - அவன் ABC தெரியாதவனாக இருந்தாலும் சரி. அப்போஸ்தலர்கள் பாதிக்குமேல் படிப்பறியாதவர்களாயிருந்தனர். ஆனால் அவர்கள் கிறிஸ்துவை அறிந்திருந்தனர். பேதுருவும் யோவானும் ஏதோ ஒரு வேதபள்ளியிலிருந்து வந்ததனால் அவர்கள் இவர்களை அறிந்து கொள்ளவில்லை, வாசலண்டை இருந்த அந்த சப்பாணியை இவர்கள் சுகப்படுத்தினபடியால், ''இவர்கள் கிறிஸ்துவுடனே கூட இருந்தவர்கள் என்று கவனித்து அறிந்து கொண்டார்கள்'' என்று கூறினர். 124மறுபிறப்பு என்பது கிறிஸ்து - வெளிப்பாடு. தேவன் இந்த மகத்தான இரகசியத்தை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அதுதான் மறுபிறப்பு. இப்பொழுது நீங்கள் அந்த குழுவை ஒன்று சேர்த்து அவர்களுடைய மத்தியில் வெளிப்பாடு இசைவாக இருந்து, தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் தம்மை வெளிப்படுத்தி, அவர் செய்த அதே கிரியைகள், அதே காரியங்கள் வார்த்தையை வெளிப்படுத்துமானால், நீங்கள் என்ன செய்வீர்கள்? சபை மாத்திரம் ஸ்தானத்தை அறிந்து கொள்ளுமானால்! ஒரு நாளில் அதை அறிந்து கொள்ளும். அப்படியானால், அது என்னவென்பதை அது அறிந்து கொள்ளும் போது எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்கும். இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் 'சகோதரன் பிரன்ஹாம், ஆனால் அது - அது அல்ல...'' என்று கூறலாம். ஆம், அதுவும் கூட. அது சத்தியம் ஆகும். 125பவுல் இயேசுவை சரீரத்தில் பார்க்கவேயில்லை. அவரை அவன் அவ்விதமாக அறியவேயில்லை. பவுல் அவரை அறிந்து கொண்டிருந்த ஒரே ஒரு வழி வெளிப்படுத்தலின் மூலமாகவே -தரிசனத்தின் மூலமாகவே. அது சரியா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்.) பேதுரு செய்தது போன்றே, பவுல் இயேசுவை வெளிப்பாட்டின் மூலமாகவே அறிந்திருந்தான். பேதுரு அவரை மாம்சத்தில் கண்டிருந்தான். அப்படி யிருந்தும் அவன் அவரை மாம்சத்தின்படி அறியவில்லை. இயேசு அப்படி கூறினார். “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப் படுத்தவில்லை. என்னுடைய சொந்த வாழ்க்கை உனக்கு அதை வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா, அவர் தான் தேவனுடைய வார்த்தை என்கின்ற காரியத்தை உனக்கு வெளிப் படுத்தினார்”' ''இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பேதுரு அவரை மாம்சத்தின்படி அறிந்திருக்க வில்லை. அந்த மனிதர்கள் அவருடன் கூட நடந்து அவரைத் தங்கள் கைகளினாலே தொட்டனர். ஆனால் பவுல் இந்த அப்போஸ்தலர்கள் எல்லாரையும் விட மேலான ஒன்றைப் பெற்றிருந்தான். பாருங்கள்? 126அவர்கள், ''பவுலே, உன்னைக் காட்டிலும் எனக்கு அதிக வெளிப்பாடு உண்டு. ஏனெனில் உனக்கு தெரியும், நான் அவருடன் நடந்தேன். ஒரு நாள் அவருடன் மீன்பிடிக்கச் சென்றேன். அவர் பேசுவதைக் கேட்டேன். அவர் படகில் என்னுடன் அமர்ந்து, 'இந்த இடத்திற்கு போய் மீன்பிடிப்போம். அங்கு நமக்கு அதிக மீன்கள் கிடைக்கும்' என்றார். நாங்கள் அங்கு சென்றபோது அவர் கூறியபடியே நிகழ்ந்தது. பாருங்கள்? இப்படிப்பட்ட காரியங்களை அவர் செய்ததை நாங்கள் கண்டிருக்கிறோம்'' என்றனர். ஆனால் பவுலோ, அவர் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிரோடெழுந்தபின்பு இஸ்ரவேலரை வழி நடத்தின அந்த அக்கினி ஸ்தம்பத்தில் தம்மை வெளிப்படுத்துவதைக் கண்டான். யூதனான பவுல், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயுள்ள தேவனை அந்த அக்கினி ஸ்தம்பத்தில் காணவில்லையென்றால், அவன் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கமாட்டான். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கின்ற அவர் வந்திருந்தார். அவர் ''பவுல்' என்றார், வேறு விதமாக கூறினால், “நான் ”நேற்றிருந்த அதே தேவனாகத்தான் நான் இன்றும் இருக்கிறேன். எரிந்து கொண்டிருந்த புதருடன் அன்று மோசே பேசின அதே ஒளியில் - அக்கினி ஸ்தம்பத்தில்- இப்பொழுது நான் இருக்கிறேன்'' என்றார், எபிரெயர் நிருபத்தில் அவன் நியாயப்பிரமாணத்தையும் கிருபை யையும் வெவ்வேறாய் பிரித்ததில் வியப்பொன்றுமில்லை. அதே அக்கினி ஸ்தம்பத்தை அவன் சந்தித்தான். அவர்,“ நீ துன்பப் படுத்துகிற இயேசு நானே” என்றார். 127ஆகவே இங்கே இன்றைக்கும் அவர் அதே விதமாகவே இருக்கிறார், அதே அக்கினி ஸ்தம்பம் மூலமாக இன்றைக்கு தம்மை அதே விதத்தில் வெளிப்படுத்தி, உறுதிப்படுத்தி, உலகத் தோற்றத்துக்கு முன்னால் மறைக்கப்பட்டிருந்த தேவனுடைய இரக சியங்களை வெளிப்படுத்திக் கொடுக்கிறார். பார்த்தீர்களா? பவுல் அவரை வெளிப்பாட்டின் மூலமாகவே அறிந்திருந் தான். பேதுருவும் அவரை வெளிப்பாட்டின் மூலமாகவே அறிந்தி ருந்தான். அவன் அவருடன் நடந்தான், அவருடன் பேசினான். எனவே நீங்கள் இந்த வார்த்தையில் அமர்ந்து... அவர் வார்த்தையாயிருக் கிறார் என்று சற்று முன்பு கூறினேன். ஒரு வேத பண்டிதன் வேதத் தைப் படித்துவிட்டு, அவன் விரும்பினால், உங்கள் மனதை எந்த விதத்திலும் திருப்ப முடியும். ஏனெனில் அவன் புத்திகூர்மையுள்ள வனாய், நுண்ணறிவு படைத்தவனாய் இருக்கிறான். ஒரு கத்தோ லிக்க பாதிரியை நாம் எடுத்துக் கொள்வோம். வேண்டாம், அவரைக் காட்டிலும் சிறந்த வேத பாண்டித்யம் பெற்ற ஒரு பாப்டிஸ்டு சகோதரனையோ அல்லது ஒரு பிரஸ்பிடேரியன் சகோதரனையோ நாம் எடுத்துக்கொள்வோம். உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்களுக்கு விவாதிக்க திறமையுண்டு. பாருங்கள், விவாதம் என்று வரும் போது... ஏன்? பாருங்கள்? அவர்கள் அவரை - வார்த்தையை -மாம்சத்தின்படி அவன் அறிந்திருக்கின்றான். (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை கையினால் மெல்லத் தட்டுகிறார் - ஆசி). 128ஆனால் நீங்கள் இரட்சிப்படைய ஒரே வழி அவரை வெளிப் பாட்டினால் அறிந்து கொள்வதேயாகும். நான் பிரஸ்பிடேரியன் போதகங்களைக் கொண்டு பெந்தெகொஸ்தேயினர் ஒன்றுமே பேச முடியாத அளவுக்கு அவர்கள் வாயை அடைத்துவிடமுடியும். அதே போன்று நான் பாப்டிஸ்டு போதகத்தை எடுத்துக்கொண்டு, பெந்தெகொஸ் தேயினராகிய உங்களுக்கு லட்சக்கணக்கான காரியங்களைக் காண்பித்து, உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நிரூபிக்க முடியும். அது உண்மை . ஆனால் அதுவல்ல முக்கியம். அது அவருடைய சபையல்ல. அது அவருடைய சபையல்ல. 129தாமே வெளிப்படுவதுதான் அவருடைய சபையாகும் (ஆமென்! உங்களால் அதை புரிந்து கொள்ள முடிகிறதா?) அவர் தேவனென்று வார்த்தையின் மூலமாகவே வெளிப்படுதல். நீங்கள் எப்படி “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்று கூறிக்கொண்டு அதில் ஞானஸ்நானம் பெறலாம்? அஞ்ஞானிகள். உண்மை . வேதத்தில் யாருமே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிராதபோது, நீங்கள் அப்படி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, இயேசுகிறிஸ்துவை உங்க ளுக்குத் தெரியும் என்று எப்படி கூறலாம்? “இயேசு மாத்திரம்' (Jesus only) குழுவாகிய நீங்கள் - நீங்கள் ஞானஸ்நானத்தின் போது இயேசு' என்னும் பெயரை மாத்திரமே நீங்கள் உபயோகிக்கின்றீர்கள். இயேசு' என்னும் பெயர் கொண்ட ஐந்து பேர்களைத் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும். உங்கள் ஸ்தாபனம் உங்களை எங்கு வழிநடத்துகிறது என்று பார்த்தீர்களா? அது இருள், காயீனின் தோற்றம். அவன் இரத்தத்திற்குப் பதிலாக கனிகளைக் கொண்டு வந்தான். 130ஆனால் வெளிப்பாடானது இரத்தத்தின் மூலமாக வருகின்றது, பாருங்கள், இயேசு கிறிஸ்துவின் மூலமாக, மரியாளின் கர்ப்பத்தில் இருந்த சிருஷ்டிக்கும் திறனுள்ள, தேவனு டைய இரத்தமாக இருந்தார். பவுல் அவரை வெளிப்படுத்தலினால் அறிந்திருந்தான். இன்றைக்கு அவ்விதமாகவே நாம் அவரை அறிந்து கொள்கிறோம், அந்த ஒரு வழியாக மாத்திரமே நீங்கள் அவரை அறிந்து கொள்ளமுடியும். ''நான் மெத்தோடிஸ்டு'' என்று கூறுவதானால் அல்ல. அது ஒன்றிற்கும் உதவாது. 'நான் பாப்டிஸ்டு. ''அது ஒன்றிற்கும் உதாவது. “நான் கத்தோலிக்கன்.'' அது ஒன்றிற்கும் உதவாது. ஆனால் வெளிப்பாட்டின் மூலமே தேவன் வார்த்தையை உனக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவர் தான் அந்த வார்த்தை. ஆகவே அந்த வார்த்தை, அது வெளிப்பட்டது என்று உனக்கு எப்படி தெரியும். அது தானாகவே ஜீவித்து உன் மூலமாக தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது. சபைகள் என்றைக்கோ மகத்தான வெளிப்பாட்டை மறந்து விட்டன. அது உண்மை . சத்தியம் வெளிப்படுதல் என்பதைக் குறித்து அவர்கள் மறந்து விட்டனர்... இப்பொழுது லூத்தர் எழும்பினபோது, அவர் ஒரு மகத்தான மனிதன். அந்நாளிற்குரிய வெளிப்பாட்டை அவர் பெற்றிருந்தார். ஆனால் என்ன நேர்ந்தது? ஒரு கூட்டம் 'ரிக்கிகள் - தட்டையாக மயிரைக் கத்தரித்துக் கொண்டு அவர்களை அப்படித்தான் நாம் இன்று அழைக்கிறோம் - 'ரிக்கெட்டாக்கள். இவர்களல்லாம் அதில் சேர்ந்து கொண்டனர் - ஆகவே, முதலாவதாக உங்களுக்கு தெரியுமா, அது அங்கே இருக்கின்றது. 131அந்த வெளிப்படையான காண்பித்தலானது, நீங்கள் மாத்திரம் - மாத்திரம் வேதாகம எண்சாஸ்திரத்தை நீங்கள் அறிந்திருப்பீர்களானால் எல்விஸ் (Elvis) அல்லது - அல்லது ரிக்கி (Ricky) என்றால் வேதாகமத்தை பொறுத்த வரையில் என்னவென்று அறிந்திருப்பீர்களானால் இயேசு ஏன் என்ப... நீங்கள் “உங்கள் பெயரைப் பொறுத்த வரை ஒன்றுமில்லை'' என்று கூறலாம். ஒன்றுமில்லையா? அந்த பெயர் இந்த கடைசி நாட்களில், இந்த கடைசி நாட்களின் மக்களிற்கு தான் வரமுடியும். இயேசு ஏன் ஆபிராம்' என்னும் பெயரை 'ஆபிரகாம் என்றும், 'சாராய்' என்னும் பெயரை 'சாராள்' என்றும் மாற்றினார்? 'சவுல்' என்னும் பெயரை அவர் ஏன் 'பவுல்' என்று மாற்றினார்? அவர் ஏன் 'சீமோன்னை 'பேதுரு'வாக மாற்றினார்? பார்த்தீர்களா. நிச்சயமாக அதற்கு ஏதோ ஒரு அர்த்தமுண்டு. அந்தப் பெயர் (ரிக்கி, எல்விஸ் போன்றவை) இன்று வரைக்கும் உரைக்கப்பட முடியாமலிருந்தது. அதன் காரண மாகத்தான் நரகத்தைச் சார்ந்த காரியங்களை நாம் இன்று இவ்வுலகில் காண்கிறோம். இக்காரியங்களினால் மானிடவர்க்கம் முழுவதுமே கறைபட்டுள்ளது, எல்லாம் போய் விட்டது. பாருங்கள்? அதனால் தான். 132இப்பொழுது கவனியுங்கள், லூத்தர் அவருடைய நாட்களில் சரியாகத்தான் இருந்தார். அவருக்கு வெளிப்பாடு உண்டாயிருந் தது. ஆனால் அவர் போய்விட்டவுடன் அவர்கள் என்ன செய்தனர் என்று பாருங்கள். வெஸ்லியிடம் ஒரு செய்தி இருந்தது. அவர்கள் பின்பு என்ன செய்தனர் என்று பாருங்கள். ஆரம்ப பெந்தெ கொஸ்தேயினரிடம் ஒரு செய்தி இருந்தது. அவர்கள் என்ன செய்தனர் என்று பாருங்கள். அவர்கள் ஒரு கூட்டம் ஜனங்களை மற்றவர்களைப் போலவே சேர்த்துக் கொண்டனர். சரியாக அதே விதமாக எப்படி ... தேவன் கிருபையாக இஸ்ரவேலுக்கு அக்கினி ஸ்தம்பத் தையும், தீர்க்கதரிசியையும், பலியையும் அனுப்பி, அவர்கள் மத்தியில் தம்மை வெளிப்படுத்தி, அவர்களை சிவந்த சமுத்திரங் களின் வழியாக எகிப்திலிருந்து எப்படி வெளியே கொண்டு வந்தார், அவர்களிடையே செல்வாக்குள்ளவர்களைப் பெற்றிருந்த, ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமெனும் எண்ணம் கொண்டவர் களாய், அவர்கள் நியாயப்பிரமாணத்தை விரும்பினர். ஆனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நாற்பது ஆண்டுகாலமாக வனாந்தரத்தில் அலைந்து திரியத்தக்கதாக விடப்பட்டனர். அவர் களுடைய ஸ்தாபனங்களில் ஒன்றாகிலும் வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்தை அடையவில்லை. 133காலேப், யோசுவா, இவ்விருவர் மாத்திரமே தைரியமாக நின்று, “எங்களால் அதை எடுத்துக் கொள்ள முடியும், தேவனு டைய வார்த்தையை பார்க்க முடியும்' என்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் மரித்தார்கள். அவர்கள் நித்தியமாக மரித்துவிட்டதாக இயேசு கூறினார். அவருடைய ஆசீர்வாதங்களையும் வல்லமையையும் அவர் லூத்தர், வெஸ்லி இவர்களின் காலங்களில் காண்பித்தபிறகு, அவர் என்ன செய்தார்?அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்'' என்றனர். அவரோ, 'அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்'' என்றார். அது தேவனிடமிருந்து நித்திய காலமாக பிரிக்கப்படுதல். அவர்களுடைய பிணங்கள் வனாந்தரத்தில் அழிந்து போயின. பாருங்கள்? அவர்கள் மரித்தார்கள். ''நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்'' அவர்களால் அதைக் காணமுடியவில்லை; அவர் களால் அதை காண முடியவில்லை. 134சரி, அதை சபைகள் அநேக காலத்திற்கு முன்பே மறந்து விட்டன. அவர்கள் வார்த்தையினுடைய சத்தியத்தியத்தினுடைய வெளிப்பாட்டிற்கு பதிலாக மனித அறிவு கொண்ட செய்தி நுண்ணறிவு படைத்தவர்கள், ஸ்தாபன அங்கத்தினராகுதல், அறிவு போன்றவற்றை ஏற்றுக்கொண்டனர் இப்பொழுது இங்கு கவனியுங்கள். 'நீங்கள் உலகமெங்கும் போய், வியாதியஸ்தரை சுகப்படுத்தி, சுவிசேஷத்தைப் பிரசங் கித்து, பிசாசுகளைத் துரத்த வேண்டுமென்று தேவன் நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். , ''ஆம், அது உண்மை யாயிருக்கலாம். ஆனால்...'' பாருங்கள்? 135அன்றொரு நாள் ஒரு ஸ்திரீ என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது, ''சபைகள் அனைத்துமே இணக்கமாக உள்ளன'' என்றார்கள். நானோ, ''ஒரு சபை கூட மற்றொரு சபையுடன் இணக்கமாக இல்லை'' என்று பதிலுரைத்தேன். அப்பொழுது ஒரு கத்தோலிக்கர் அங்கு நின்று கொண்டிருந்தார். நான் அந்த அம்மாளிடம், 'உங்களைக் குறித்தென்ன? நீங்கள் மெ தோடிஸ்டு. அவர் கத்தோலிக்கர். நீங்கள் ஒருவருக்கொருவர் இணங்குகிறீர்களா? போப்பாண்டவர் எல்லாரையுமே ஒன்று சேர்க்க முனைந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட மக்களுக்கு அது ஒரு நல்ல செயலாக காணப்படலாம். ஆனாலும் தேவனுடைய சபைக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது'' என்றேன் - ஒரு சம்பந்தமுமில்லை. அது அந்த கூட்டத்தாரிடமிருந்து விலகியுள்ளது. ஹ - சரி. ஆம், ஐயா! நீங்கள் அதை ஒன்று சேர்க்க விரும்பமாட்டீர்கள். ஒருவர் ஒரு காரியத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறார். மெதோடிஸ்டுகள் ஞானஸ் நானத்தில் தெளித்தல் முறையைக் கையாளுகின்றனர். பாப்டிஸ்டுகள் முழுக்கு ஞானஸ்நானம் பெறுகின்றனர். இருவருமே பரிசுத்த ஆவியின் வல்லமையை முற்றிலுமாக மறுதலிக்கின்றனர். அவர்கள், ''நாங்கள் விசுவாசித்தபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டோம்'' என்கின்றனர். 136ஆனால் வேதமோ, ''நீங்கள் விசுவாசித்த பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்று கேட்கிறது. (ஆங்கில வேதாக மத்தில், அப். 19:2ல், “நீங்கள் விசுவாசித்ததிலிருந்து பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்றிருக்கிறது தமிழாக்கியோன்). அதுதான் வித்தி யாசம். பாருங்கள்? அது உண்மை அவர்கள், ''நாங்கள் கத்தோலிக்க சபையினர். நாங்கள் முன்பே தொடங்கி விட்டோம். நாங்கள் இதை செய்தோம்'' என்கின்றனர்- மொதோடிஸ்டு சபை, ''நாங்கள் வேதாகமத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறோம்'' என்கின்றனர். 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் என்று இயேசு கூறினார். இப்பொழுது அது எங்கே காணப்படுகின்றது? ஹ - ஹம். பாருங்கள். ஆமாம். ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்' - ஒவ்வொரு ஜீவ ராசியும், அவருக்குள் விசுவாசம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரும். அந்த கிரியைகள் எங்கே? அது அவருடைய வார்த்தைகள். “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' அவையெல்லாம் இப்பொழுது எங்கே? பாருங்கள்? ஓ, அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 137அது எதைக் காண்பிக்கிறது? அது கலப்பினமான நிலையில் உள்ளது என்பதை. இங்கு கவனியுங்கள். நீங்கள் ஒரு கலப்பின மான தானியத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். காண்பதற்கு அது மிகவும் அழகாயுள்ளது. நீங்கள் அதை விதைத்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? ஒரு சிறு தண்டு முளைத்தெழும்புகிறது. பின்பு அது பழுப்படைந்து உலர்ந்து விடுகிறது. தேவனுடைய வார்த்தையுடன் மனிதனுடைய வார்த்தைகளை கலப்பினம் செய்துள்ள ஒவ்வொரு ஸ்தாபனமும் அதே நிலையில் உள்ளது. அது அடையாளங்களுடனும் அற்புதங் களுடனும் எழும்பும். ஆனால் வார்த்தையை விசுவாசிக்க வேண்டு மென்று இயேசு சொன்ன அந்த கட்டத்திற்கு வரும் போது, அவர்கள் பழுப்பு நிறமடைந்து, ''எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது“ என்று கூறிவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். கானானுக்குச் சென்ற மற்ற வேவுகாரரைப் போல. அவர்கள் திரும்பி வந்து, அவர்கள் பார்வைக்கு நாங்கள் வெட்டுக் கிளிகளைப் போல் இருந்தோம். அந்த அமலேக்கியரை வெல்ல நம்மால் கூடாது'' என்று சொல்லி பின் வாங்கிப் போயினர். 138ஆனால் காலேபும் யோசுவாவும் தேவனுடைய வார்த்தை யினால் கலப்பினமின்றி பிறந்த நல்ல ஜாதியினர் (நன்கு வளர்க்கப்பட்ட) ஆமென்! தேவன், ''இந்த தேசத்தை உங்கள் கைகளில் ஒப்புக் கொடுப்பேன்“ என்று கூறியிருந்ததை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். எனவே அவர்கள், ''நாம் அதை எளிதில் வென்று விட லாம்'' என்றனர். நீங்கள் எதினால் பிறந்தவர்கள் என்பதை அது பொறுத்தது, நீங்கள் தேவனுடைய வார்த்தையினால் பிறந்தவர்களாக இருந் தால், தேவனுடைய வார்த்தையே அவருடைய சபையில் முதன் மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக்கின்றது. அதற்காக வே அவர் மரித்தார். தம்முடைய முதன்மையான உயர்ந்த ஸ்தானம் தம்முடைய சபையில் கிரியை செய்ய வேண்டுமென் பதை நிறைவேற்ற வேண்டும் என்பதே அவருடைய நோக்கம். மற்றவை எவ்வாறிருப்பினும், தேவனுடைய வார்த்தை முதலாவது பிரகாசிக் கட்டும். படித்த மேதைகள் இதை, அதை, மற்றதை கூறினாலும் எனக்குக் கவலையில்லை. அதற்கும் இதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. தேவனுடைய வார்த்தை இவ்வாறு கூறியுள்ளது. எனவே நாம் அதை எளிதில் வென்று விடலாம். ஒரு போதகர் என்னிடம், “இப்படியாக நான் என் சபையில் பிரசங்கிக்க நேர்ந்தால், சபையின் நான்கு தூண்களுக்கு மாத்திரமே நான் பிரசங்கம் செய்யும் நிலை ஏற்பட்டு விடும்” என்றார். நான், 'அப்படி நேரிட்டாலும், நான் நான்கு தூண்களுக்கு மாத்திமே பிரசங்கம் செய்வேன்“ என்றேன். ஆம், ஐயா தேவனுடைய வார்த்தை அவ்வாறு கூறியுள்ளது. நம்மால் செய்யமுடியும். தேவன் அப்படிச் செய்ய கூறியிருக்கிறார். ஆமென்! 139ஆமாம். ஆனால் இங்கு அவர்கள் சாக்குபோக்கு சொல்லி விடுகிறார்கள். பாருங்கள்? அதனால் தான் தேவன் இந்த கடைசி நாட்களில், தம்மை நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், அவர்கள் கடைசி கால் செய்தியை காணாதபடிக்கு குருடாயிருக் கின்றனர். அது மரித்தவருடைய ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு செயல் அல்லது ஏதோ, (நான் அதை என்ன வென்று அழைப்பது?) ஒருவித மனோதத்துவ, ஒரு மாயையான, அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்று என்றோ கூறி அதை தள்ளி விடுகின்றனர். இல்லாத ஒன்றை அவர்கள் கற்பனை செய்து கொள்கின்றனர். இயேசு இவ்வுலகில் இருந்தபோது அவர்கள் அதையே செய்தனர். அவர்கள் அவரை “பெயல்செபூல் என்றும், ”குறி சொல்லுகிறவன்“ என்றும் அழைத்தனர். இப்பொழுது அவர்கள், அது ஒரு வகை மனோவசிய தத்துவம் (Mental telepathy) என்றழைக்கின்றனர். பார்த்தீர்களா? அவர் அங்கு நின்று கொண்டு ஜனங்களின் இருதயங்களிலுள்ள சிந்தனைகளை வகையறுத்துக் கூற முடியும் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். ஏனெனில் வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவு களையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று எபிரெயர் 4வது அதிகாரம் கூறுகிறது. ஆகவே அவர் அந்த வார்த்தையாக இருந்தார். அந்த வார்த்தை ஒரு மனிதனில் முதன் மையான உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கும்போது, அதே காரியம் மறுபடியும் நிகழ்கிறது. ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது. ஆமென்... இனிமேல் நீங்கள் எப்படி இதன் காரணமாக இடற முடியும் என்று பார்க்கலாம். அது மிகவும் வெளிப்படையாய் உள்ளது. பாருங்கள்? சரி. 140அதனால்தான் அவர்கள் குருடாயிருக்கின்றனர். இயேசுவின் நாட்களில் நடந்தது போலவே இப்பொழுதும் நடக்கிறது. என்னே அதே விதமாக அவர்கள் தடுமாறுகின்றனர். அவர்கள், ''அவன் பெயல்செபூல்...'' என்றனர். அவர் இதை செய்ய முடியும் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆயினும் அவர்கள், “இவன் ஒரு ... இவன் முறை தவறி பிறந்தவன். இவன் வினோத மானவன். இவன் - இவன் ஒரு சமாரியன். இவனுக்கு ஒரு வித பிசாசு பிடித்திருக்கிறது. அதனால்தான் இவனால் இவைகளைச் செய்ய முடிகிறது'' என்றெல்லாம் கூறினர். 141இயேசு அவர்களை நோக்கி, ''அதற்காக உங்களை நான் மன்னித்து விடுகிறேன். பாருங்கள், தேவனுடைய வார்த்தையை தேவனுடைய கிரியைகளை, ஒரு அசுத்த ஆவி என்று அழைத்த தற்காக அவர், “இதைக் குறித்து உங்களை நான் மன்னித்து விடுகி றேன். ஆனால் ஒரு நாளில் பரிசுத்த ஆவியானவர் வருவார். அவருக்கு விரோதமாக பேசப்படும் ஒரு வார்த்தையும்கூட இவ்வுலகிலோ அல்லது மறு உலகிலோ அல்லது அந்த மகத்தான நாளிலோமன்னிக்கப்படாது'' என்றார். பாருங்கள், அது அவ்வளவு வெளிப்படையாய் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே அந்த மகத்தான நாளுக்கு மக்கள் வரும்போது, அவர்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருப்பினும், எவ்வளவு பெரிய ஸ்தாபனங்களாக இருந்த போதிலும், அவர்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுவார்கள். அவர்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட வேண்டும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக அவர்கள் தேவதூஷணம் உரைத்து, அதை 'பரிசுத்த உருளுபவர் என்றும், அல்லது வேறு மோசமான பெயர் கொண்டும் அழைத் தனர். தேவனுடைய சபை இவை எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயுள்ளது. 142பவுலும்கூட அகிரிப்பாவினிடம், இவர்கள் மதபேதம் (heresy) என்று சொல்லுகிறபடியே, அதாவது, பைத்தியக்காரன் என்று அர்த்தம். நான் எங்கள் பிதாக்களின் தேவனை ஆராதித்து வருகிறேன்'' என்றான். அந்த மகத்தான நுண்ணறிவு படைத்த படிப்பாளி அந்த விதமான ஒரு இடத்திற்கு வரவேண்டியதா யுள்ளது. “மதபேதம் என்று சொல்லுகிறபடியே” ஆராதித்து வருகிறேன்“ என்றான். என்ன? அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவனுக்கு முன்பாக தொங்கிக் கொண்டிருந்த அந்த அக்கினி ஸ்தம்பம் ''அங்கே வனாந்திரத்தில் மோசேயோடு இருந்த அந்த மகத்தான தேவன், இயேசு நானே. நான் தான் அவர், முள்ளில் உதைக்கிறது உனக்கு.... உதைக்கிறது உனக்கு கடினமாம்'' என்றது. அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த பவுல், தன் உயிருக்கு தீங்கு நேரவிருப்பதை அறிந்தவனாக, “ மதபேதம் என்று அழைக்கப்படுகின்ற தேவனுக்கு அந்த வழியாகதான் நான் ஆராதனை செய்கிறேன்'' என்றான். ஏனெனில் கிறிஸ்துவினுடைய மகத்தான சத்தியம் என்ன வென்பது அவனுக்கு வெளிப்படுத்தப் பட்டபடியால் அது அவ்விதமாக அழைக்கப்பட்டது. அது மறுபிறப்பாகிய இயேசு கிறிஸ்து உன்னில் வெளிப் படுத்தப்பட்டு, அவர் முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை கொண்டவராய், தம்முடைய வார்த்தைகளை அவர் வெளிப்படுத்த ஏதுவாகயிருப்பதாகும். இந்த கடைசி நாட்களுக்கென ஏதா தொன்றை அவர் வாக்குத்தத்தம் செய்திருப்பாரானால், அவர் கிரி யை நடப்பித்துக் கொண்டிருக்கும் தம்முடைய சரீரத்தின் மூலமாக அவரால் அதை நிறைவேற்ற முடியும். ஆமென்! அது அப்படியே தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதாகும். கவனியுங்கள். அது சரி. 143சரி, இயேசுகிறிஸ்துவின் காலத்திலிருந்தது போலவே இப்பொழுதும் உள்ளது. கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாட்டை அளிக்கும் திறவுகோலை தேவன் வைத்திருக்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? (சபையார், 'ஆமென்'') வேதப்பள்ளிகள் அதை கண்டுபிடிக்கவே முடியாது. இயேசு அவ்விதம் கூறியுள்ளார். நீங்கள் படிக்க விரும்பினால் அது மத். 11:25-27ல் உள்ளது. “பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து கற்றுக்கொள்ளக் கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத் திரிக்கிறேன்'' பாருங்கள், பாருங்கள்? எனக்குக் கவலையில்லை... அந்த காலத்திலிருந்த கல்விமான்களைப் பாருங்கள். அந்த யூதர்கள். அந்த மகத்தான ஸ்தாபனங்களை - பரிசேயர், சதுசேயர், ஏரோதியர் போன்றவர்களை இயேசு நோக்கி, “நீங்கள் குருடாயிருக் கிறீர்கள், நீங்கள் குருடருக்கு வழி காட்டுபவர்களாயிருக்கிறீர்கள். ஏசாயா உங்களைக் குறித்து உரைத்திருக்கிறான், 'கண்களிலிருந்தும் காணாமலும் காதுகளிருந்தும் கேளாமலும் இருக்கிறீர்கள் ஏனெ னில் ஏசாயா இதை ஆவியில் உரைத்தான். பரலோகத்தின் தேவன் உங்கள் கண்களைக் குருடாக்கினார். ஏவாள் செய்தது போலவே நீங்களும் செய்கிறீர்கள் - அதாவது மனித ஞானத்தை ஏற்றுக் கொண்டு, தேவனுடைய ஆவியைக் குறித்து ஒன்றுமே அறியா திருக்கிறீர்கள். எனவே குருடனுக்கு குருடன் வழிகாட்டினால், வழிகாட்டியும் குருடனும் இருவரும் குழியில் விழுவார்கள்'' என்றார். 144தேவன் மாத்திரமே திறவு கோலைத் தம் கையில் வைத்திருக்கிறார்! இதை தான் அவர் சற்று முன்பு நான் வாசித்த வேதவாக்கியத்தில் அவர் குறிப்பிடுகிறார். அவர், ''மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?'' என்றார். பேதுரு, 'நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்றான். அவர் அவனை நோக்கி, “யோனாவின் குமாரனாகிய சீமோ னே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இங்கே இந்த வெளிப்பாட்டின் மேல் மாத்திரமே என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை' என்றார். இப்பொழுது நீங்கள் பாருங்கள்? 145எனவே, எந்தப் பள்ளியும், எந்த வேதபண்டிதர்களும், வேதப்பள்ளியில் போதிக்கப்படும் எந்த உபதேசங்களும், இதைக் குறித்து ஒன்றுமே அறியார்கள். அவர்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளமுடியாது. அவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்து கொள்ளமுடியாது. அந்த தெரிந்து கொள்ளப்பட்ட போதகர்களி லிருந்து மற்ற எல்லாம் அறிந்து கொள்ளாதபடிக்கு அவர்களு டைய புலன்களுக்கு அவர் இதை மறைத்து விட்டார்! அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அந்த கிறிஸ்துவுக்கும், அந்த மனிதருக்கும் தனிமனிதருக்குரிய , தனிப் பட்ட ஒரு விவகாரம் ஆகும். 146ஆதலால் நீங்கள், “அவர் எனக்கு வெளிப்பட்டிருக்கிறார்'' என்று கூறிவிட்டு, இங்கே வேதாகமத்தில் பிறப்பிக்கப் பட்டிருக்கின்ற கிறிஸ்துவின் ஜீவியம், அவருக்குள் இருந்த அதே ஜீவியம், உனக்குள்ளாக தம்மைத்தாமே பிறப்பித்துக் கொள்ள வில்லை என்றால், அப்படியானால் நீ தவறான வெளிப்பாட்டைப் பெற்றிருக்கிறாய். ஒரு பூசணிக்காயின் சத்தை நான் எடுத்து பேரிக்காய் மரத்தில் புகுத்தினால், அது பூசணிக்காயைத் தரும். அவர்களுடைய கனி களினால் நீங்கள் அவர்களை அறிவீர்கள்'' அது முற்றிலும் உண்மை . நீங்கள் ஒரு திராட்சை செடியை நட்டு, அதன் முதல் கொடி ஒரு கொத்து திராட்சை பழங்களைத் தந்து, அடுத்தது எலுமிச்சம் பழங்களையும், அதற்கடுத்தது பேரிக்காய்களையும், அதற்கடுத்தது ஆப்பிள் பழங்களையும் தருமானால், அந்த செடியில் மற்ற கிளைகள் ஒட்டு போடப்பட்ட, அந்தக் கிளைகள் அவைகளின் ஜீவனுக்கேற்ற கனிகளைத் தருகின்றன என்று அர்த்தம். ஒவ்வொரு ஸ்தாபனமும் தனக்குள்ள ஜீவனுக்கேற்றபடி கனிகொடுக்கின்றது. ஆனால் அந்த மூல திராட்சை செடி வேறொரு கொடியை தோன்றப் பண்ணு மானால், முதலில் அது தந்தவிதமாக, திராட்சை பழங்களையே தரும். அது போன்று, இயேசுவின் ஜீவன்-ஜீவன் வேறொரு விசு வாசிகளின் கூட்டத்தை தோன்றப் பண்ணினால், முதலில் அது கொடுத்த அதே கனிகளை இப்பொழுதும் தரும். அவர்களும் அதன் பேரில் அப்போஸ்தலருடைய நடபடிகள் எழுதமுடியும். ஏனெனில் அது அதே ஜீவனாயுள்ளது. நான் கூறுவது புரிகிறதா? அதிலிருந்து நீங்கள் விலக முடியாது. கிறிஸ்துவின் ஜீவன் உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவரால் புகுத்தப்பட்டு, அந்த ஜீவன் உங்கள் மூலம் ஜீவிக்கின்றது. 147“குருடருக்கு வழிகாட்டும் குருடர்களே...'' கவனியுங்கள், தேவன் மாத்திரமே இந்த திறவுகோலை வைத்திருக்கிறார். எந்த வேதபண்டிதனும் அதை உங்களுக்கு எடுத்துக் கூற முடியாது. ஏனெனில் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது மறைக்கப் பட்டுள்ளது. அதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஏனெனில் அவர்கள் பயின்ற வேதபள்ளிகள்... “எனக்கு Ph, L.L.D., பட்டம் இருக்கிறது'' என்று நீங்கள் கூறலாம். என்னைப் பொறுத்தவரையில் - தேவனைப் பொறுத்த வரையிலும் மற்றெல்லா உண்மையான விசுவாசிகளைப் பொறுத்தவரையிலும் என்று நம்புகிறேன் - நீங்கள் அவ்வளவுக்கவ்வளவு தூரம் சென்று விட்டீர்கள் என்று அர்த்தம். நீங்கள் பின்வாங்கிவிட்டீர்கள். தேவன் கல்வியின் மூலம் அறியப்படுபவரல்ல. நீங்கள் விளக்கம் தருவதன் மூலம் அவர் அறியப்படுபவரல்ல. மிகவுமாக படிப்பறிவே இல்லாத நபருக்கு இயேசு கிறிஸ்து வின் வெளிப்பாட்டினாலும் மற்றும் எளிமையிலும் தேவன் அறியப்படுகிறார். பாருங்கள்? அது உங்கள் வேத தத்துவம் அல்ல. அது இயேசுகிறிஸ்து வெளிப்படுதலாகும். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் - வேறெந்த கற்களும் ஏற்றுக் கொள் ளப்படமாட்டாது. ரோமன் கத்தோலிக்ககல், பிராடெஸ்டெண்டு கல், வேதப்பள்ளிகள் இவையனைத்தும் ஏற்றுக் கொளைப்படமாட் டாது. ஆனால் சரியாக மறுபிறப்பின் மூலம் வரும் இயேசு கிறிஸ்து வின் வெளிப்பாட்டின் மேல் ஆகும். அவர் அங்கு பிறந்து, தம் முடைய சொந்த ஜீவனைப் புகுத்துகிறார். அப்பொழுது உங்கள் ஜீவன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. அப்பொழுது கிறிஸ்துவின் ஜீவன் தம்மைத்தாமே ஜனங்களுக்காக முதன்மை யான உயர்ந்த ஸ்தானங்களுடன் உன் மூலமாக வெளிப்படுத்தப் படுகிறது; அவர் பெற்றிருந்த அதே ஜீவனை, அவர் செய்த அதே கிரியைகளை, அதே அடையாளங்களை, அதே அற்புதங்களை அவர் உங்கள் மூலம் செய்வதை ஜனங்கள் காண்கின்றனர். அதற்குப் புறம்பான எதுவும் முதலாவதாக அழைக்கப்படவேயில்லை. தேவனுடைய மகத்தான வெளிப்பாடு படிப்படியாக வெளிப்படு வதைக் கவனியுங்கள். 148இந்த வெளிப்பாடு இல்லாததன் காரணத்தால்தான் நமக் குள்ளே இத்தனை பிரிவுகள், இவ்வளவு கேலி பரியாசங்கள். பாருங் கள். நம் மத்தியில் அதிகப்படியான பிரிவினை இருப்பதன் காரணம் என்னவென்றால் ஜனங்களுக்கு அந்த வெளிப்பாடு இல்லை, போதகர்களிடையே, பாருங்கள், அந்த வெளிப்பாடு இல்லை. பவுல், தன்னுடைய கிறிஸ்துவின் மகத்தான வெளிப் பாட்டிற்குப் பிறகு, ஒன்று கொரிந்தியர் 2 வது அதிகாரத்தின் கூறு கிறான். நீங்கள் எவ்விதமாக குறித்துக் கொள்கிறீர்களோ அவ்வித மாக அதை வாசிக்க நிச்சயம் கொள்ளுங்கள், கவனியுங்கள்! ஓ! அவன், “நான் ஞானத்தோடு வரவில்லை'' என்கிறான். ஞானத்தைக் கொண்டிருந்த அந்த மனிதனைப் பாருங்கள், பாண்டித்யம் பெற்றி ருந்த அந்த மனிதனைப் பாருங்கள், ”அந்த விதமான வார்த்தைக ளோடு நான் உங்களிடம் வரவில்லை'' என்கிறான். 1 கொரிந்தியர் 2ம் அதிகாரம், அதைப் படித்தால்... சரி, அதைப் படிப்போம். சற்று நிற்பீர்களா? நாம் ஓரிரண்டு வசனங்களை மாத்திரம் படிப்போம். (சபையார், “ ஆமென்' - என்கின்றனர் ஆசி). நான் அதைப் படிக்க விரும்புகிறேன். ஏனெனில் இதை ஒலிநாடாவில் கேட்பவர்களும் கூட அதில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாயிருக்கும். ஒன்று கொரிந்தியர் 2ம் அதிகாரம். இந்த மகத்தான அப்போஸ்தலன் கூறுவதைக் கவனித்துக் கேளுங்கள். பவுல், மனித ஞானம் படைத்திருந்த தேவனுடைய ஊழியக்காரன். இங்கு பார்ப்போம். பவுலாகிய நான், 'சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப் பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப் போடாவது ஞானத் தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை, நான் டாக்டர் இன்னார் என்று கூறவில்லை.'' பாருங்கள்? இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே யன்றி, வேறொன்றெயும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்தேன். அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷஞானத்திற்குரிய நயவசன முள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப் பட்டதாயிருந்தது'(கொரி. 2:1-5). 149அதுதான் சுவிசேஷம்: பாருங்கள்? இயேசு, நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (Preach) என்றாரே தவிர, போய் கற்றுக் கொடுங்கள்'' (teach) என்று கூறவில்லை. வேறு விதமாகக் கூனால், ''வல்லமையை வெளிப் படுத்திக் காண்பியுங்கள், இந்த அடையாளங்கள் அவர்களைப் பின்தொடரும்.'' வேறு மெனே கற்பித்தால் போதாது. இந்த அடையாளங்களை செய்வதற்கு தேவனுடைய ஆவி அவசிய மாயுள்ளது. பாருங்கள்?. இதை கவனியுங்கள். ''உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு'' என்னே ! பாருங்கள் - மனிதனை மாற்ற அவர் மாறாத வராக இருக்கையில் அவர் மாறாதவராக இருப்பவர் அல்ல'' என்று கூறி அதை நான் விவரிக்கும் அதைச் செய்வேனானால், எனக்கு அது எதை காண்பிக்கிறதென்றால், அது - அது... நிச்சய மாக, அவ்விதம் ஒரு மனிதன் என்னிடம் கூறுவான் என்றால் அவனுக்கு வெளிப்பாடு இல்லை. தேவனைக் குறித்த மூவகை வெளிப்பாடு இல்லையென எனக்குப் புலனாகிறது. பாருங்கள்? ''அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிற வர்களாகிய இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர் களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல. உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான (பாருங் கள், தேவனுடைய மூவகை இரகசியம் ) தேவஞானத்தையே பேக்கிறோம். அதை இப்பபிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை (எந்த ஆசாரியர்களும், ரபீக்கள்... (என்னை மன்னியுங்கள்)... அல்லது, யாரும் இதைக் குறித்து ஒன்றுமே அறியவில்லை). அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைய மாட்டார்களே'. நீங்கள், 'ஆசாரியர்களையும், ரபீக்களையும், இப்பிரபஞ்சத்துப் பிரபுக்கள்' என்று அழைத்தது தவறு எனலாம். அப்படியானால் யார் அவரை சிலுவையில் அறைந்தது? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் நமக்கு நேரமில்லை... நமக்கு நேரமாகிவிடவில்லை. ஆனால், இப்பொழுது கர்த்தர் நமக்கு உதவி செய்வாரென்றால் கூறவேண்டியது அதிகம் நமக்கு இருக்கின்றது. வெளிப்பாடு இல்லாமை.... 150ஆகவே இந்த கல்வியறிவு கொண்டிருந்த மேதையாகிய பவுல், அவனுடைய மகத்தான வேத பாண்டித்ய சொற்களை ஜனங்களிடம் கூறவில்லை. அவன் தாழ்மையோடு கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அந்த வார்த்தையை வாழ்ந்து காண்பித்ததன் மூலம், அது அவன் மூலம் வெளிப்பட்டது. அவன் மிகுந்த - மிகுந்த தேவபக்தியுள்ளவனாய் வாழ்ந்ததனால், ஜனங்கள் அவனில் இயேசு கிறிஸ்துவைக் கண்டு, அவனுடைய உறுமால்களைக் கொண்டுபோய் வியாதியஸ்தர்மேல் வைக்க விரும்பினர். அதுதான் கிறிஸ்துவின் ஜீவன். இப்பொழுது சிலர், எலியா அதை அநேக நாட்களுக்கு முன்பே செய்துவிட்டான். அவனுடைய தடியை வைத்தனர் , அது எலியாவின் நாட்களிலேயே நடந்ததல்லவா?'' என்று கூறுவதை கவனியுங்கள். இப்பொழுது உலகம் அதை சிந்தித்தது. அந்த அறிவுமிகுந்த ஆசாரியர்கள், மற்ற காரியங்கள், அந்த நாளின் சபைகள் அவ்வாறு சிந்தித்தது. 151இப்பொழுது சிலர், எலியா அதை அநேக நாட்களுக்கு முன்பே செய்துவிட்டான். அவனுடைய தடியை வைத்தனர் , அது எலியாவின் நாட்களிலேயே நடந்ததல்லவா?'' என்று கூறுவதை கவனியுங்கள். இப்பொழுது உலகம் அதை சிந்தித்தது. அந்த அறிவுண் டிருந்தது, ஏனெனில் அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். பாருங்கள்? அதே விதமாக நடந்தேறிய அநேக காரியங்களை அவன் முன்னுரைத்தான், ஆதலால் அது தீர்க்கதரிசி, தேவனுடைய அடையாளப்படுத்தல் என்பதை அவர்கள் அறிந்தனர். அவன் தேவனுடைய தீர்க்கதரிசி என்றும் அறிந்து கொண்டனர். அவர்களை அதினின்று உன்னால் அசைக்கவே முடியாது. பேதுரு முன்னுரைத் தவை நிறைவேறினதை அவர்கள் கண்டபோது, ''அவனுடைய நிழல் என் மேல் படட்டும்“ என்றனர். ஆமென் அது தான் சபை, அவர்கள் தாம் உண்மையான விசுவாசிகள். ஆம் ஐயா. அது வெளி.... பவுல் என்ன சொன்னான்? “எனக்கு Ph., LLD. நிறைய இருப்பதனால் என்னை நம்புகிறார்கள்'' என்றா சொன்னான்? இல்லை, அவன், ”மனித ஞானத்தை நான் அடியோடு மறந்துவிட்டேன்“ என்றான். அவன், ”நான் மரித்தேன். அவருடைய உயிர்த்தெழு தலின் வல்லமையினால் அவரை அறிந்திருந்தேன். அந்த வல்லமை யைக் கொண்டவனாய், அதை வெளிப்படுத்திக் காண்பிக்கவே உங்களிடம் வந்திருக்கிறேன்“ என்றான். 152அது என்ன? இயேசு கிறிஸ்துவை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகச் செய்தல். இயேசுகிறிஸ்து செய்த அதே கிரியைகளை பவுலும் செய்தான். மகத்தான பிதா எரியும் முட்செடியில் தம்மை மோசேக்கு வெளிப்படுத்தினதை அக்காலத்து ஜனங்கள் அறிந்திருந்தனர். பவுலின் மூலம் அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் நடப்பித்து தமது வல்லமையை வெளிப்படுத்தினார். இங்கேயும் அந்த வல்லமை யானது செய்து காட்டப்படுகின்றது. அவர் ஒவ்வொரு காலத்திலும் மாறாதவராக இருக்கின்றார். தேவனுடைய மூன்று காலங்கள் - நேற்று, இன்று, என்றும். அது என்ன? மீட்பர்; தம்முடைய சபையில் வரப்போகும் இராஜ்யத்தில் முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை கொண்டிருத்தல். ஆமென்! அதை உங்களால் காணமுடிகிறதா? அது மிகவும் பரிபூரணமாக அமைந்துள்ளது. 153கவனியுங்கள், கிறிஸ்துவினுடைய தெய்வீக வெளிப் பாட்டின் ஒரே வெளிப்படுத்துபவர் பரிசுத்த ஆவி மாத்திரமே . எந்த வேத பள்ளியும் அதைச் செய்ய முடியாது. எந்த வேத பண்டிதனாலும் அதைச் செய்ய முடியாது, எந்த ஒரு மனிதனும் - அவன் எவ்வளவுதான் கல்வியறிவு பெற்றிருந்தாலும், அவன் எவ்வளவு தேவபக்தியாயிருந்தாலும் அல்லது எதுவாயிருந் தாலும், அதைச் செய்ய எந்த ஒரு மனிதனும் இல்லை. இங்கு சற்று கடுமையாக உரைக்கலாம் என்றிருக்கிறேன். இங்குள்ளவர்களில் எத்தனை பேர் கிறிஸ்தவர்கள் - மறுபடியும் பிறந்தவர்கள், பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி, நாம் தொடரலாம். சரி கவனியுங்கள். அவர் அதை முன்குறிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே செய்வார். அது சரியே. “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் என்னிடத்தில் வரமாட்டான்''. பாருங்கள்? 154அந்த ஆசாரியர்கள், ''இந்த மனிதன் பெயல்சபூல். இவன் குறி சொல்பவன். இவன் பிசாசு'' என்று கூறினதை கவனியுங்கள். அங்கே சுற்றிலும் நடந்து கொண்டிருந்த அந்த சிறு ஸ்திரீ, ஆனால் ஆறு புருஷர்களுடன் வாழ்க்கை நடத்தின அந்த ஸ்திரீஅவள் ஐந்து பேருடன் ஏற்கனவே வாழ்க்கை நடத்தியிருந்தாள். அப்பொழுது அவளுக்கிருந்தது ஆறாவது ஆள். இயேசு, ''உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா“ என்றார்.அவள், ”எனக்குப் புருஷன் இல்லை'' என்றாள். அவர், ''ஆம், உனக்கு ஆக மொத்தம் ஆறு பேர். ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருக்கிறவனும் உனக்கு புருஷனல்ல'' என்றார். அவள், “ஐயா...!'' என்றாள். என்ன நேர்ந்தது? அந்த வெளிச்சம் அந்த வித்தின் மேல் பட்டது. ஆனால் அது ஆசாரியர்களின் மேல் விழுந்த போதோ அவர்கள், 'இவன் குறி சொல்பவன்'' என்றனர். பாருங்கள்? அங்கு ஜீவன் இல்லை, ஒரு கலப்பினம், ஸ்தாபனம் வரை வளரு கின்றது, பிறகு அதிலிருந்து மரித்துப்போய் விடுகிறது. 155ஆனால் இந்த ஸ்திரீயோ கலப்பினமல்ல. அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்'' என்றாள். அவளுடைய பெரிய அழகான கண்கள் பிரகாசமடைந்து, கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தோடுவதை என்னால் காணமுடிகின்றது. ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். நான் மேசியாவை எதிர்நோக்கி யிருக்கிறேன். மேசியா வரும் போது இவைகளையே அவர் செய்வார். இந்தக் காரியங்களை எங்களுக்கு அறிவிப்பார்” என்றாள்.அவர், ''நானே அவர்'' என்றார். ஓகர்த்தாவே! அவள் தன்னுடைய குடத்தை வைத்து விட்டு சென்றாள். ''இதோ, அவர்! நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள்'' என்றாள். அது என்ன? அந்த வெளிச்சம் அந்த வித்தின் மேல் பட்டது. அதில் ஜீவன் இருந்தது. அது முளைக்கத் தொடங்கினது. இன்றைக்கும் அதே காரியம்! 156ஆனால் வேதாகம கல்லூரியில் பயின்ற ஒருவனோ, “ஒரு நிமிடம் பொறுங்கள். இன்னார்- இன்னார் போதகர் மூடி (Moody) அவ்விதம் சொல்லியிருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல் கிறேன்'' என்பான். போதகர் மூடிக்கும் இந்த நாளுக்கும் என்ன சம்மந்தம்? போதகர் மூடி தன்னுடைய நாளில் வாழ்ந்தார். இக்காலத்தில் அல்ல. நிச்சயமாக அல்ல. லூத்தர் தன்னுடைய நாளில் வாழ்ந்தார், வெஸ்லியின் நாளில் அல்ல. வெஸ்லி அவர் நாளில் வாழ்ந்தார், பெந்தெகொஸ்தேயினரின் நாளில் அல்ல. பெந்தெகொஸ்தே யினரும் அவர்களுடைய நாளில் வாழ்ந்தனர். ஆனால் இந்த மணி நேரத்தில் இதிலிருந்து அவர்கள் வெகு தூரம் உள்ளனர். நாம் கடைசி மணிநேரத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். நிச்சய்மாக, அவர்களுடைய ஸ்தாபனங்கள் நேர்மையற்ற நிலையில் உள்ளதால், அவர்கள் இக்காலத்தில் இல்லை என்பது ருசுவாகி கிறது. அவர்கள் மத்தியில் தேவனுடைய வார்த்தை சரிவர நிரூபிக்கப்படுவதில்லை. அவர்கள் உறுப்பினரின் எண்ணிக்கையை ஆதாரமாகக் கொண்டே அதை நிரூபிக்க முயல்கின்றனர். இந்த ஸ்தாபனங்கள் உண்மையான கோதுமை தானியத்துடன் களை யையும் கலந்து விட்டதால், அச்சமயத்திலேயே அவர்கள் மரித்து விட்டனர். பயிர்கள் களைகளை, பச்சை முட்செடி வகைகள், பூனை காஞ்சொறி செடி வகைகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டன. ஹு ஹும். அங்கேயே அது மரித்து விட்டது. பின்பு அவர்கள் நிலத்தை உழுது, மறுபடியுமாக நல்ல விதைகளை விதைத்தனர். ஆனால் அது வளர்ந்து வந்த போது, இந்த முட்கள் அதை நெருக்கிப் போட்டன. 157ஆனால், இக்கடைசி நாட்களில் தேவன், அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்ட ஜனங்களை எழும்பப் பண்ணுவதாக வாக்களித்துள்ளார். அவர்கள் இதற்கென முன் குறிக்கப்பட்ட வர்கள். அவர்கள் நிச்சயமாக அங்கு இருக்க வேண்டியவர்கள். அவ்வாறு தேவன் கூறியுள்ளார். அது... வெளிப்படுத்தும். அந்த அதே அடையாளத்தை, “நான்... அனுப்...'' மல்கியா 4ல் கூறப் பட்டவர் என்ன செய்வார்? 'மறுபடியுமாக திரும்பக் கொண்டு வருவார்', அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கின்ற இந்த மகத்தான காரியங்களை, இந்த கடைசி நாட்களில், திரும்ப கொண்டு வருவார். என்ன ...... அவர் என்ன செய்யப்போகிறார், மல்கியா 4 பிதாக்களுடைய விசுவாசத்தை பிள்ளைகளிடத்தில் கொண்டு வர வேண்டியவராயிருக்கிறார். பாருங்கள்? அது உண்மை - அதையே திரும்பக் கொண்டு வருதல்; அந்த அக்கினி ஸ்தம்பத்தைக் காட்சியில் கொண்டு வருதல்; அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே இயேசு; அவரை மாறாதவராகச் செய்து, அதே விதமாக அவரைக் குறித்து பிரசங்கித்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துதல். 'மெதோடிஸ்டு புழு, பாப்டிஸ்டு புழு, கத்தோலிக்க புழு, மற்றெல்லா புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விசுவாசத்தை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்“ என்று கர்த்தர் சொல்லுகிறார். அங்கு விதைகள் எதுவும் விடப்படாமல், மரம் வெட்டியெடுத்தது போக எஞ்சி நிற்கும் ஸ்தாபன அடிக்கட்டை போல் ஆனது. ஆனால் அந்த வருஷங்களின்... திரும்ப அளிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். எதை? ''அவர்கள் புறக்கணித்த எல்லா அடையாளங்களையும் அற்புதங்களையும் நான் திரும்ப அளித்து, அதை மூல மரத்திற்கு மீண்டும் கொண்டு செல்வேன்“ என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த தீர்க்கதரிசி ஒரு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி ஆவார். அவன் வார்த்தைகள் நிறைவேற வேண்டும். ஆமென்! 158பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே கிறிஸ்துவினுடைய திவ்விய வெளிப்பாட்டை அளிக்கிறவராயிருக்கிறார். ஒவ்வொரு காலத்திலும் அது அவ்வாறே இருந்து வந்துள்ளது. எல்லா காலங் களிலும் அவ்வாறே என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாரிடத் தில் கர்த்தருடைய வார்த்தை வந்தது? தீர்க்கதரிசியினிடத்தில் மாத்திரமே. அது உண்மை . அது சரியா? முதலாவதாக அந்த தீர்க்கதரிசி உறுதிபடுத்தப்பட வேண்டும். அவன் தன்னை தீர்க்தரிசி யென்று அழைத்துக் கொள்வதனால் அல்ல? அவன் தீர்க்தகரிசி யாகப் பிறந்து, தீர்க்கதரிசியென்று நிரூபிக்கப்பட்டுள்ள காரணத் தால். அவன் கூறும் ஒவ்வொன்றும் தேவனுடைய வார்த்தை பேரில் சார்ந்திருந்து, அது அப்படியே நிறைவேறும். பாருங்கள்? அது ... கர்த்தருடைய வார்த்தை பரிசுத்த ஆவியானவரின் மூல மாகவே வருகிறது. “தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு தேவனுடைய வார்த்தையை எழுதினார்கள்'' என்று வேதம் கூறுகிறது. 159கவனியுங்கள், யோவான் ஸ்நானனுக்கு பரிசுத்த ஆவி யானவர் சுட்டிக் காண்பிக்கவில்லையென்றால், இயேசுவை அவன் அடையாளம் கண்டு கொண்டிருக்கவே மாட்டான். அது சரியா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி). அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்நானன், “உங்கள் நடுவில் இப்பொழுது ஒருவர் நிற்கிறார். ஒரு சாதாரண மனிதன் இங்கு எங்கோ நின்று கொண்டிருக்கிறார். அவர்தான் தேவ ஆட்டுக்குட்டி' என்றான். அவன், ”ஆவியானவர் புறாவைப் போல் வானத்திலிருந்திறங்கி இவர் மேல் தங்கினதைக் கண்டேன். அப்பொழுது ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்' என்றுரைத்தது என்பதை சாட்சியாக அறிவிக்கிறேன்'' என்றான். அது என்ன? பரிசுத்த ஆவியானவர் அவனுக்கு நான் சுட்டிக் காட்டுவேன்'' என்றார். 160இன்றைக்கு அவரை நீ அறிந்து கொள்ளக்கூடிய ஒரே வழி அது மாத்திரமே, தேவனைக் குறித்த மூவகை வெளிப்பாட்டை நீ பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரே வழி அந்த பரிசுத்த ஆவியின் மூல மாக மாத்திரமே. அப்படி நீ அறிந்து கொள்ளக் கூடிய ஒரே வழி, நீ அதை காண முன்குறிக்கப்பட்டிருந்தால் மாத்திரமே. நீங்கள் முன்குறிக்கப்பட வில்லை யென்றால், உங்களால் அதை ஒரு போதும் அறிந்து கொள்ள முடியாது. நீங்கள் அதைக் காணத்தக்க தாக முன்குறிக்கப்படாதிருந்தால், உங்களால் அதைக் காணவே முடியாது. ஏனெனில் அந்த வெளிச்சம் விட்டுவிட்டுப் பிரகாசிக் கும்போது, நீங்கள் அகன்று சென்று, அதை ஏளனம் செய்து, உங்கள் மனித ஞானத்தை உபயோகித்து அதற்கு விளக்கம் தர முற்படுவீர்கள். ஆனால் தேவனே தம்மை வெளிப்படுத்தி, அதை நிரூபித்து வருகின்றார். பாருங்கள்? இதைக் காண நீங்கள் முன் குறிக்கப்படவில்லையென்றால், நீங்கள் அதைக் காணவே முடியாது. 161“நான் இவரைத் தெரிந்து கொள்கிறேன், அவரைத் தெரிந்து கொள்கிறேன்'' என்று அவர் எதேச்சையாக கூறவில்லை. அவரால் முன் குறிக்க முடிந்த காரணம் அவர் முடிவற்றவராக இருப்ப தனால், அவருக்கு - அவருக்கு ஒவ்வொரு... அவர் முடிவற்றவர். எனவே முடிவு வரைக்கும் எல்லாம் தெரியும். ஏனெனில் அவர் தேவன். அவரால் அது முடியவில்லையென்றால், அவர் தேவனல்ல. ஆம், ஐயா அவர் முடிவற்றவர். அது சரி. 162பரிசுத்த ஆவியானவர் சுட்டிக்காட்டவில்லையென்றால், இயேசுவை யோவான் ஸ்நானன் அறிந்து கொண்டிருக்கவே முடி யாது. இல்லை, ஐயா. கல்வியறிவு கொண்ட மேதைகளுக்கு தேவன் தமது இரகசியத்தை எவ்வாறு மறைத்து விடுகிறார் என்று பாருங்கள்....?... அதைக் காண எவர்களை அவர் முன் குறித்திருக் கிறாரோ அவர்களுக்கு எளிமை அதை வெளிப்படுத்துகிறது. மற்றவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த போதிலும், புறா இறங்கி வந்ததை அவர்களால் காண முடியவில்லை. அவர்கள் எந்த சத்தத்தையும் கேட்கவில்லை. ஏனெனில் அது முன்குறிக்கப்பட்டி ருந்த வித்திற்கு மாத்திரமே அனுப்பப்பட்டிருந்தது. முன்குறிக்கப் பட்டிருந்தது! நிச்சயமாக. ஏன், அவர் பிறப்பதற்கு ஏழு நூற்று பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், ஏசாயா, ஆவியில், இந்த மானிட புலன் களுக்கு அப்பாலே எழும்பி, “கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்' என்று வனாந்திரத்திலே ஒரு சத்தம் உண்டாகும்'' என்று கூறினார். ஏசாயாவினால் அதைக் காண முடிந்த தென்றால், அந்த அதே காரியத்தை ஒரு முன்குறிக்கப்பட்ட கடைசி தீர்க்கதரிசியை, பழைய ஏற்பாட்டின் எல்லா தீர்க்கதரிசிகளையும் முத்திரையிடு கின்ற, அந்த பிரதான... அந்த மகத்தான தீர்க்கதரிசி காலத்தின் முடிவில் அங்கே நின்று கொண்டிருப்பதை மல்கியாவினால் கண்டிருப்பானல்லவா? பாருங்கள். அவன், “அது முன் குறிக்கப் பட்டுள்ளது'' என்கிறான். ஆம், அவன் நிச்சயமாக முன்குறிக்கப் பட்டவன், மல்கியா அவனைக் கண்டான். 163இயேசு, ''நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், 'இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய் உமது வழியை ஆயத்தம் பண்ணுவான்' என்னும் வேதவாக்கியத்தால் (மல்கியா:3) குறிக்கப்பட்டவன் இவனே“ என்று கூறினார். பாருங்கள்? அந்தச் செய்தியைக் காண்பதற்கு நிச்சயமாக அவன் முன் குறிக்கப்பட்டிருந்தான். அவன் மேலே நோக்கி, புறா இறங்கி வருவதையும், இஸ்ரவேலரை வனாந்திரத் தில் வழி நடத்திய அந்த ஒளிவருவதையும் கண்டதில் வியப் பொன்றுமில்லை. ''இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்'' என்று தேவன் தாமே கூறினார். தேவனும் மனிதனும் ஒன்றாதல். ''நான் சாட்சி கொடுக்கிறேன்“ யோவான், 'பிதாவினால் ஜெநிப்பிக்கப்பட்ட அந்த ஒரே ஒருவரை நான் கண்டேன் என்று சாட்சி கொடுக்கிறேன்'' என்று கூறினான். ஆமென்! பார்த்தீர்களா? எளிமை! பாருங்கள்? ஒரு வயதான பிரசங்கியோடு, அவனுடைய தகப்பனார், ஒரு மகத்தான வேத பண்டிதர், உங்களுக்கு தெரியுமா, அவர் வேத பள்ளியில் பயின்றவர். இவனும் தன்னுடைய தகப்பனின் ஸ்தாபனத்திற்கு திரும்பி சென்றுவிடுவான் என்பது போல தோன்றினது. அது தேவனுடைய சித்தமாய் இருந்திருக்காது. 164அவனுடைய பிறப்பின் போதே தேவன் அவனைத் தொட்டார்.... அவன் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான். ஆம், ஐயா, மரியாள் அங்கு சென்றபோது, சிறிய யோவான் அவனுடைய தாயின் கர்ப்பத்தின் ஆறுமாதக் கருவாக இருந்தான். அவனுடைய சிறு தசைகள் அசையவே இல்லை. ஆகவே மரியாள் பயந்தாள். அந்த சிறிய தசைகள் வளர்ந்து கொண்டிருந்தன, ஆனால் அதில் உயிர் இருப்பதாக அவளால் உணர முடியவில்லை, எலிசபெத், ஆம் அவனுடைய தாயார். மரியாள் வந்து அவளைப் பிடித்து அவளை இறுகக் கட்டித் தழுவி அவளுடைய கைகளை அவள் மேல் வைத் தாள். ஆகவே அவள், “தேவன் என்னிடம் பேசியுள்ளார், ஆகவே நானும் கூட ஒரு குழந்தையை கொண்டிருக்கப் போகிறேன்'' என்றாள். ”உனக்கு யோசேப்புக்கும் மணமாகி விட்டதா?“இல்லை ”''மரியாளே, அது எப்படி நடக்கும்?'' “பரிசுத்த ஆவியானவர் என் மேல் நிழலிடுவார், அப்பொழுது எனக்குள் சிருஷ்டிக்கப்படும். நான் அவருக்கு 'இயேசு' என்று பெயரிடுவேன். அவர் தேவனுடைய குமாரனா யிருப்பார்'' ''இயேசு' என்ற வார்த்தை உரைக்கப்பட்ட உடனே அந்த சிறிய யோவான் தன் தாயின் கர்ப்பத்தில் துள்ளி சத்தமிட்டு குதிக்கத் தொடங்கினான். எலிசபெத்து, “என் ஆண்டவருடைய தாயார் என்னிடத் தில் வந்ததனால் கர்த்தர் ஆசீர்வதிக்கப்படுவாராக'' ஆண்ட வருடைய தாயார் என்றாள்.! '' என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது? ”இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று“ 165அவன் வேத பள்ளியை விரும்பாததில் வியப்பொன்று மில்லை. அந்த வேத பள்ளி அவனுக்குள் அதன் உபதேசத்தை திணித்திருக்கும். அவன் செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருந்தது. அவன் வனாந்தரத்து மனிதனாயிருந்தான். அவன் வனாந்தரத்துக்கு சென்று அங்கு காத்திருந்தான். அங்கே தேவன் அவனிடம், கூறினார், இப்பொழுது, அவனுக்கு வெளிப் படுத்தினார். அதோ மறுபடியுமாக உங்களுடைய வெளிப்பாடு! “அவர் யார் என்பதை நான் உனக்கு கூறுவேன். நீ ஒரு தீர்க்கதரிசி, அந்த வார்த்தை உனக்குத்தான். நீ யார் என்று உனக்குத் தெரியும். நீ வரத்தான் வேண்டும்.'' சென்ற ஞாயிறன்று கேட்கப்பட்ட கேள்விக்கு இது பதிலாக அமைகிறது. பாருங்கள்? ”யோவான், நீ யாரென்று உனக்குத் தெரியுமா? அமைதியாயிரு. ஒன்றும் பேசாதே. அங்கு போ. இந்த ஒன்றை நீ காண்கையில், வானத்திலிருந்து வருகின்ற ஒளியைப் போன்ற அடையாளம் ஒன்று இருக்கும், ஒரு புறா கீழே இறங்கி வரும். நீ அவரைக் காணும் போது அது அவராக இருக்கும்.'' 166அதனால்தான் இயேசு தண்ணீரில் இறங்கி நடந்து வந்தபோது புறா இறங்கி வருவதை யோவான் கண்டு, “இதோ தேவாட்டுக்குட்டி இதோ அவர் இங்கிருக்கிறார். உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறவர் இவர் ஒருவர்தான்' என்றான். இயேசு தண்ணீரில் நேராக அவனிடம் நடந்து வந்தார். யோவானின் இருகண்களும் இயேசுவின் இருகண்களும் ஒன்றை யொன்றை சந்தித்தன, மாம்சப்பிரகாரமாக அவர்கள் ஒன்றுவிட்ட அண்ணன், தம்பி. மரியாளும் எலிசபெத்தும் ஒன்று விட்ட சகோதரிகள். அவர்களுடைய கண்கள் ஒன்றையொன்று சந்தித்தன. அங்கு தேவனும் அவருடைய தீர்க்கதரிசியும், ஆமென்! நின்று கொண்டிருந்தனர். யோவான், “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா?” என்றான். அதற்கு இயேசு, “இப்பொழுது இடங்கொடு. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது'' என்றார். 167யோவான் ஏன் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். ஏனெனில் அவர் தான் பலி. யோவான் தீர்க்கதரிசியாயிருந்ததனால் அதை அறிந்திருந்தான். பலியானது செலுத்தப்படுவதற்கு முன்பு கழுவப்படவேண்டும். அதனால் அவன் இடங்கொடுத்து, அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அப்பொழுது, இதோ வானங்கள் அவருக்கு திறக் கப்பட்டது., அந்த புறா அவர் மீது வந்தது - சத்தம் உண்டாகி, 'இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்'' என்றுரைத்தது. ஜேம்ஸ் அரசனின் வேதாகமம் அப்படித்தான் கூறுகிறது - “இவரில் வாச மாயிருக்க பிரியமாயிருக்கிறேன்'' நீங்கள் அதை எப்படி புரட்டிப் பார்த்தாலும் அதே காரியம் தான், ''உள்ளே வாசமாயிருக்க'' அல்லது... ''இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் வாசமாயிருக்க நான் பிரியமாயிருக்கிறேன்'' அல்லது ”உள்ளே வாசமாயிருக்க “ இவற்றில் எந்த ஒன்றையும் பார்க்க விரும்பினால், அதே காரியம்தான். அது சரி. 168அப்பொழுது அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது என்று நாம் காண்கிறோம். அங்கே நின்று கொண்டிருந்த மற்றவர்களுக்கு அதைக் குறித்த ஒன்றுமே கேட்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே வெளிப்படுத்தித்தரமுடியும் அது போன்றுதான் பவுலுக்கும் - வேறொரு முன்குறிக்கப் பட்ட வித்துக்கு - அவர் தம்மை வெளிப்படுத்தின போது சம்பவித்தது. பவுல் பயணம் செய்து கொண்டிருந்தான் .... “நான் மாத்திரம் அந்த கூட்டத்தைப் பிடிக்க நேர்ந்தால், அவர்களை கிழித்தெறிந்து விடுவேன். நான் டாக்டர் சவுல். நான் கமாலியேலிடம் பயின்றவன், நான் படித்து முடித்து வந்திருப்பது மூடி (Moody) வேதாகம...'' அல்லது வேறு ஏதோ ஒன்று, பாருங்கள். ''நான், நான் பண்டிதன். நான் என்ன பேசுகிறேன் என்பது எனக்குத் தெரியும். அந்த பரிசுத்த உருளுபவர்' கூட்டத்தை சின்னாபின்ன மாக்குவேன், நான் உங்களிடம் கேட்கிறேன், மகத்தான பரிசுத்த மதகுருவே, அங்கு செல்வதற்கு எனக்கு அனுமதி மாத்திரம் தாரும். கூச்சலிடுகின்ற அவர்கள் ஒவ்வொருவரையும் சிறைப் படுத்தி, தெய்வீக சுகமளித்தல் போன்றவைகளை நிறுத்தி விடுவேன்'' என்றான். அவன் அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு, தனது சட்டை பையில் போட்டுக்கொண்டு, “நான் இப்பொழுது என் பயணத்தை தொடங்கப் போகிறேன்,'' என்றான். 169அப்பொழுது.... என்னே ! பகல் சுமார் 11 மணியளவில் ஒரு - ஒரு ஒளி அவன் முகத்தில் பட்டது. அவன் கீழே விழுந்தான். ஏன்? அவன் முன்றிக்கப்பட்ட வித்தாயிருந்தான். தேவன் அவனைக் குறித்து, “நான் அவனைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆம், அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன். நான் அவனை புறஜாதிகளிடம் அனுப்பி, அவமானப்படுத்தப் படவேண்டிய ஒவ்வொரு விதத்திலும் அவமானப்படுத்துவேன். ஆயினும் அவன் என் நாமத்தை அவர்களுக்கு அறிவிப்பான்'' என்றார். பவுல் சென்றான், அவன் கற்ற மார்க்க போதனைகள் அவனைவிட்டு எடுபடும் வரை அவன் வனாந்திரத்தின் பின்புறத் தில் மூன்றரை வருடம் செலவழித்து, அங்கே அரேபியாவில் தேவனுடைய வார்ததையை அங்கு கற்றறிந்து, அவனும் வார்த தையும் ஒன்றாகி, அவன் ஒரு சிறைப்பட்டவனானான். அவன் அன்பின் சங்கிலியினால் கட்டப்பட்டவனாய் அங்கிருந்து திரும்ப வந்தான். “என் வேதபள்ளியின் அனுபவமெல்லாம் என்னைவிட்டு போய்விட்டது. நான் இப்பொழுது இயேசு கிறிஸ்துவினால் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறேன்'' என்றான் (ஆமென்!). ”என் சகோதரனாகிய பிலேமோனே, நான் இயேசுகிறிஸ்துவுக்கு சிறைவாசியாகி விட்டேன். இனிமேல், அவர் என்னிடம் என்ன கூறுகிறாரோ அதை மாத்திரமே நான் பேசமுடியும்“ என்றான். 170அவருடைய சித்தத்துக்கு - வார்த்தைக்கு - தங்களைச் சிறைப் படுத்திக்கொள்ளும் சிறைவாசிகள் தேவனுக்கு இன்று அவசிய மாயுள்ளது. பவுல் அப்படித்தான் இருந்தான். அவன் எவ்வளவாக கல்வியறிவு பெற்றிருந்த போதிலும், வெளிப்பாட்டின் மூலமா கவே அவன் தேவனை அறிந்து கொண்டான். ஆம், ஐயா. அந்த கல்விமான், தான் ஏற்றுக்கொண்ட பணியை நிறைவேற்ற வெகு தூரம் பயணம் செய்து கொண்டிருந்த அச்சமயத்தில், அந்த சமயத்தில் வெளிப்பாடு அவனுக்கு வந்தது, அந்த கல்லின் மேல் தான் சபை கட்டப்பட்டுள்ளது. ஆம் ஐயா. கவனியுங்கள். அவன் முன்குறிக்கப்பட்ட வித்தாயிருந்தன். அவர் யாரென்பதை பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே உனக்கு காண்பிக்க முடியும். அங்கே ஒரு மனிதனாலும் முடியாது; அவர்கள் உங்களை, 'பிதா, குமாரன், பரிசுத்தாவி' யென்று அதிலிருந்து உண்டாக்கிக் கொள்வார்கள். தம்மை பாருங்கள்? ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒருவனுக்கு, அவரே வெளிப்பட்ட பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் என்றும், அது அவரேயென்றும் வெளிப்படுத்தித்தருவார். 171இப்பொழுது கவனியுங்கள் : தீர்க்கதரிசிகளல்ல, ராஜாக் களல்ல, வேறொருவருமல்ல. ஆனால் இங்கே முதன் முறையாக தேவன், தேவத்துவத்தின் பரிபூரணமாக, சரீரப்பிரகாரமாக, கிறிஸ்துவில் மாம்சத்தில் வெளிப்பட்டார். அது ஒரு வெளிப்பாடு. ஓ, என்னே! இப்பொழுது ஒரு பாட்டைப் பாடப் போகிறேன். நாடுகள் உடைகின்றன இஸ்ரவேல் விழித்தெழும்பினாள் (அவள் விழித்தெழும்புகிறாளா?) இவை தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களாம் புறஜாதிகளின் நாட்கள் (ஸ்தாபன சபைகள்) எண்ணப் பட்டுள்ளன திகில் எங்கும் சூழ்ந்துள்ளது சிறைப்பட்டோரே உங்கள் மந்தைக்குத் திரும்புங்கள் (நீங்கள் அங்கிருந்து விரட்டப்படுவீர்கள் ) மீட்பின் நாள் சமீபமாயுள்ளது மனிதரின் இதயங்கள் பயத்தினால் சோர்ந்துள்ளன ஹாலிவுட் நகைச்சுவை துணுக்குகளெல்லாம் அதை மூடமுடியாது. இரவில் கல்லறையைக் கடந்து செல்லும் சிறுவன் விசில் அடித்துக் கொண்டு செல்வது போல பரிசுத்த ஆவியால் நிறைந்து உங்கள் தீவட்டிகள் சுத்தப்படுத்தி மேல்நோக்குங்கள், உங்கள் இரட்சிப்பு சமீபமாயுள்ளது. கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் கிறிஸ்துவாகிய இயேசுவே தேவன் என்னும் தேவனுடைய சத்தியத்தை மறுதலிக்கின்றனர். (அது உண்மை ) நாமோ அப்போஸ்தலர் நடந்த பாதையில் நடக்கின்றோம். மீட்பின் நாள் சமீபமாயுள்ளது மனிதரின் இதயங்கள் பயத்தினால் சோர்ந்துள்ளன. பரிசுத்த ஆவியால் நிறைந்து உங்கள் தீவட்டிகள் சுத்தப்படுத்தி மேல்நோக்குங்கள் உங்கள் இரட்சிப்பு சமீபமாயுள்ளது. 172சகோதரனே, வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள். இச்சந்ததி தேவனுடைய வெளிப்பாட்டை இகழ்ந்து உதறித்தள்ளுகிறது. பாருங்கள்? கள்ளத்தீர்க்கதரிசிகள் அவ்விதம் செய்கின்றனர். 'அவர்களுடைய கனிகளினால் நீங்கள் அவர்களை அறிந்து கொள் வீர்கள்.'' அவர்கள் - அவர்கள் கலப்பினமுள்ளவர்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையில் வளருவதற்குப் பதிலாக, ஸ்தாபனங் களில் வளர்ந்து வருகின்றனர். வார்த்தையாகிய கிறிஸ்துவின் மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்தும் அந்த வெளிப்பாட்டை அவர்கள் உதறித்தள்ளுகின்றனர். 173நீங்கள் விரும்பினால் இங்கு நான் நிறுத்திக் கொள்கிறேன். நான் அடுத்தமுறை வரும்போது இப்பொழுது அங்கே ..... நான் தொடர்ந்து பிரசங்கம் செய்யவேண்டும் என்கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அது உங்களைப் பொறுத்தது. இன்னும் சிறிது நேரம் - நான் துரிதமாக முடித்து விடுகிறேன். இதற்கப்புறம் நீங்கள் இளைப்பாறுதவற்கு உங்களுக்கு சிறிது சமயம் இருக்கும். சரி. அதே விதமான அந்த முன்குறிக்கப்பட்ட வித்தை கவனி யுங்கள். 174அவர் யாரென்று பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே காண்பிக்கிறார்- தீர்க்கதரிசிகளல்ல, ராஜாக்களல்ல... இங்கு தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டிருக்கிறார். இங்கு அவருடைய பரிபூரணம் உள்ளது. அவர் முழுவதும் வெளிப்பட்டு, உலகிற்கு அறியப்படுகின்றார். மறுரூப மலையில் பாருங்கள். தேவனுடைய சாட்சி... “இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்.'' நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதியாக மோசே அங்கே நின்று கொண்டிருந்தான். தீர்க்கதரிசிகளின் பிரதிநிதியாக எலியா அங்கே நின்று கொண்டிருந்தான். ஆனால் அவர்... அவர்கள் மறைந்து விட்டனர். அவர், ”இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்'' என்றார். அங்கு மூன்று காரியங்களுக்குப் பிரதிநிதிகள் இருக்கின்றனர். நியாப்பிரமாணம், தீர்க்கதரிசிகள், மற்றும் மோ... மற்றும், கிறிஸ்து. அவர், “இது அவர்'' என்றார். தேவன் பரிபூரணமாக... தீர்க்கதரிசிகளில் வெளிப்படவில்லை. நியாப்பிரமாணத்தின் மூலமாக வெளிப்படவில்லை. ஆனால் அவர் கிறிஸ்துவில் வெளிப்பட்டார், அவர் தான். 175கிறிஸ்து இரக்கம் பாராட்டுகிறவர். நியாயப்பிரமாணம் உங்களை சிறையில் அடைக்கும். அது உங்களை வெளியே கொண்டு வர முடியாது - தீர்க்கதரிசிகள் உங்களை ஆக்கினைத் தீர்ப்புக்கு உட் படுத்தி பிறகு அதற்கென உங்களை கொல்லுகின்ற தேவனுடைய நீதி ஆவார்கள். அது உண்மை . ஆனால் இயேசுவோ அவர் உங்களை அழைத்திருக்கிறார் என்று ஒரு முன்குறிக்கப்பட்ட வித்திற்கு தெரியப்படுத்துகின்ற தேவனுடைய அன்பும் வெளிப்பாடுமாக இருந்தார், “அது அவர், அவருக்குச் செவிகொடுங்கள்!'' தெரிந்து கொள்ளுங்கள் ! தேவத்துவத்தின் பரிபூரணம் வெளிப்பட்டுவிட்டது. தேவன் வெளிப்பட்டார் என்னும் பரம ரகசியத்தின் இரகசியம் இப்பொழுது வெளிப்படுத்தப் படுகிறது. தேவனும் மனிதனும் ஒன்றாகிவிட்டனர். அபிஷேகம் பண்ணப் பட்ட மனிதன், கிறிஸ்து. “கிறிஸ்து'' என்றால் என்ன அர்த்தம்? ”அபிஷேகிக்கப்பட்ட ஒருவர்' சரீரப்பிரகாரமாக தேவத்து வத்தின் பரிபூரணத்தால் அபிஷேகிக்கப்பட்ட அந்த அபிஷேகிக்கப் பட்ட ஒருவர். ஜனங்கள் எப்படி அதை சந்தேகிக்க முடியும்? 176ஒரு காலத்தில் மோசே அவரை; ஒரு பாகத்தை மாத்திரமே அவன் கொண்டிருந்தான்; தாவீது அவருடைய ஒரு பாகத்தை மாத்திரம் கொண்டிருந்தான். ஆனால் இங்கே அவர் முழுமையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார், தெய்வ நிலையில் தாமே பூமியின் மீது நின்று கொண்டிருக்கிறார். ஜனங்களின் பாவத் திற்கு மரிக்கத்தக்கதாக, தம்முடைய சபையை ஒரு பரிசுத்தமாக்கப்பட்ட ஜீவனிற்கு அவர் கொண்டுவரத்தக்கதாக; இந்த கடைசி நாட்களுக்கென அவர் வாக்குத்தத்தம் செய்த, இந்த கடைசி நாட்களில் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் வெளிப்படுத்த, தம்முடைய சபையில், முழுமையில், முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிரும்படிக்காக, தம்முடைய முழுமையில் தேவன் இருப்பது. பாருங்கள்? அது... இப்பொழுது கவனியுங்கள். கவனிக்கிறீர்களா? இப்பொழுது சற்று உங்களையே கிள்ளிக்கொள்ளுங்கள். புரிகின்றதா? கவனியுங்கள். 177இயேசு ஏன் வெளிப்பட்டார்? தேவனைக் காண்பிப்பதற்காக. அவர் தேவனாயிருந்தார். அவர் அப்படித் தான் இருக்க வேண்டும். ஏனெனில் மனிதன் எவனும் மற்றவர்களின் பாவத்திற்காக மரிக்க முடியாது. எந்த ஒரு தீர்க்கதரிசியும் அதற்காக மரிக்க முடியாது. அவர் தேவனாயிருந்தார். அவர் தீர்க்கதரிசிகளின் தேவன். அவர் தான் தீர்க்கதரிசிகள். அவர் ராஜாக்களின் தேவனாயிருந்தார். அவரே சரித்திரமாகத் திகழ்ந்தார். அவர் தாமே வரவிருந்த அவராக இருந்தார். அவர் இருந்தவர், அவர் இருக்கிறவர், மற்றும் இந்த நாளிற்கென இருக்கபோகின்ற அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அந்த நோக்கத்திற்காகவே அவர் வெளிப்படுத்தப் பட்டார். ஆகவே, தேவனின் முழுமையான அவர் தாமே இந்தக் கடைசி நாட்களில் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் நிறைவேற்றி, சபையில் அவரு டைய இடமாகிய, ஸ்தானமாகிய முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை, நிறைவேற்றி, சபையில் அவருடைய இடமாகிய, ஸ்தானமாகிய முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை, ஸ்தானத்தை பெற்று, அந்த நோக்கத்தின் மூலமாக அவர் ஒரு சபையை செயல் வெற்றி கொண்டார். இயேசு “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற படியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளையும் செய்வான்' என்று கூறியுள்ளார். பாருங்கள்? அதுதான் அவர் நோக்கமாயிருந்தது. அங்குதான் அவருடைய வெளிப்படுதல். இன்றைக்கு, அதை அந்த கோணத்தில் கண்டு, வார்த்தை தன் மூலம் கிரியை செய்ய அனுமதிக்கும் ஒருவனை அவர் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்..... 178பாருங்கள், இயேசு அதை அந்த கோணத்தில் கண்டு.. அவர் அந்த நாளுக்கென்று பரிபூரணமாகப் பிறந்து, தேவன் தமது ஒவ் வொரு அசைவையும் அவர் மூலம் தோன்றச்செய்தார். அவர் தேவ னுடைய வெளிப்பாடாய் இருந்தார் - தேவன் வெளிப்படுதல். 179இப்பொழுது அவர், இந்த கடைசி நாளில் ஒவ்வொரு வாக்குத்தத்தமும் வெளிப்படுத்தப்படும்படிக்காக, ஒரு சபையை தமது ஆவியினாலும் இரத்தத்தினாலும் பரிசுத்தப்படுத்தியிருக் கிறார். இப்பொழுது பாருங்கள், இந்த மற்றைய ஆட்கள் விட்டு விட்டிருந்ததை அவர் தாமே பின்னோக்கிச் சென்று, இந்த கடைசி நாட்களில், தம்முடைய பரிசுத்த ஆவியினால் ஏழு முத்திரைகளின் எல்லா இரகசியத்தையும் வெளிப்படுத்தினார். பாருங்கள்? அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். அதுவே அவரது நோக்கம். அதற்காகவே அவர் மரித்தார். அது தான் அவருடைய மூவகை வெளிப்பாடுகளில் இரண்டாவதாக அமைந்துள்ளது. முதலாவதாக அவர் கிறிஸ்துவில் தம்மை வெளிப்படுத்துதல், பிறகு சபைக்கு தம்மை தாமே வெளிப்படுத்துதல். ஆகவே அந்த அதே காரியம். கிறிஸ்து தான் வார்த்தையாயிருந்தார். சபையும், வார்த்தை- அதன் மூலமாய் செல்ல அனுமதிக்கும்போது, அதுவும் வார்த்தையாகி விடுகின்றது. அவர்கள் கலப்பினமான ஸ்தாபனத்தை ஏற்றுக்கொள்ளும் போது, வார்த்தை எப்படி அவர்கள் மூலமாய் செல்ல முடியும்? மின்சாரக் கம்பி தரையில் படும் போது மின்சாரம் தடைப்பட்டு, ப்யூஸ் (Fuse)ஸை அது எரித்து விடுகிறது. பாருங்கள்?. ஆனால் அந்த தேவனுடைய வார்த்தையாகிய மின்சாரம் தடையின்றி பாயும்போது அது தன்னையே வெளிப்படுத்துகின்றது. “நான் செய்கிற கிரியைகளாக நீங்களும் இருப்பீர்களாக'' ஆகவே இந்த கடைசி நாட்களில் அது நிறைவேறும். ”இதோ, நான் உங்க ளிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். அவன் பிள்ளை களுடைய இருதயத்தை பிதாக்களுடைய விசுவாசத்திற்குத் திருப்புவான்'' 180ஆகவே அங்கே, அவர் தம்மைத் தாமே தம்முடைய தேவத் துவத்தின் பரிபூரணத்தில், தம்முடைய சபையின் மூலமாக, தெய்வ நிலையில் வெளிப்படுத்தி, இந்த சபையில் முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை கொண்டிருக்கப்போகின்ற ஒரு நேரமானது வரும். அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதன். இப்பொழுது அபிஷேகம் பண்ணப்பட்ட மக்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட மணவாட்டியையும் மணவாளனையும் திரும்ப கொண்டு வருதல். அந்த அபிஷேகம் ஏன்? ஏவாள் புறக்கணித்ததை (ஆதாமும் கூட) ஏற்றுக் கொண்டு தேவனுடைய வார்த்தையின் அபிஷேகத்துடன் திரும்பவருதல். ஏனெனில் அவர், ''என் வசனம் ஆவியாயிருக்கிறது“ என்று கூறியுள்ளார். பாருங்கள்? வார்த்தையினால் அபிஷேகம் பண்ணப்படுதல், ஏவாள் புறக்கணித்ததை, அவர் திரும்ப வருகின்றார், நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம். மறுபடியும் எப்படி அந்த கலப்பின நிலை பார்த்தீர்களா?.. அவன் ஏவாளுக்கு செய்த அதே விதம். அவர் ஏவாளிடம், “இதை செய்யாதே, அதை செய்யாதே. இதை மற்றும் அதை நீ செய்யலாம்'' என்றெல்லாம் கூறியிருந்தார். 181ஆனால் சாத்தானோ, உனக்குத் தெரியுமா...' என்றான். அவள் திரும்பி அவனுக்கு செவி கொடுத்தாள். ஆனால் இந்த கடைசி நாளிலுள்ள ஏவாள் அப்படி செய்ய மாட்டாள். ஏனெனில் அவள் அதை செய்யக் கூடாதபடிக்கு முன்குறிக்கப்பட்டிருக்கிறாள். ஆம், ஐயா, தேவன் அதை செய்யப் போகிறார். அவருக்குத் தெரியும்... அவர் பெற்றுக் கொள்வார்... அவருடைய, கறை... “சபை கறைதிரையற்ற தாயிருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அவருடைய சுடரொளி பிரகாசத்தில் அவள் அங்கு நிற்கப் போகிறாள்- அவருடைய வார்த்தை வெளிப்படுதல். அவள் இவ்வுலகத்திற்கு அடையாளமாகத் திகழ்வாள்; அவள் ஒரு உதா... உலகம் அவளை மெச்சத்தக்கதாக அவள் முக்கிய மானவளாயிருப்பாள். ஆனால் மற்றவர்களோ, 'அவள் பரிசுத்த உருளுபவள். அவள் எங்கள் தூரத்து உறவு. எங்கள் குழுவை அவள் சேர்ந்திருக்கவில்லை“ என்பார்கள். அது நல்லது தான். பாருங்கள். அவள், அவள் மேலே இங்கே இருக்கின்ற இந்த குழுவைச் சேர்ந்தவள் ஆவாள். 182என்னிடம் அன்றொரு நாள் ஒரு மனிதன் பேசிக் கொண்டிருந்தார். அவர், ''சரி நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்?“ என்று என்னைக் கேட்டார். நான் ”எதுவுமில்லை'' என்று விடையளித்தேன். 'என்ன ?' “எதுவுமில்லை. நான் ஒரு ராஜ்யத்தை சேர்ந்தவன்,'' என்று நான் கூறினேன் ”அதில் எப்படி நீங்கள் சேர்ந்து கொள்ள முடியும்?'' ''அதில் நீங்கள் சேருவதில்லை. நீங்கள் அதற்குள் பிறக்கின் றீர்கள்.'' ஹு-ஹும் 'அது எப்படிப்பட்ட ராஜ்யம்?“ நான், ”அது காணக்கூடாத (Mystical) இயேசுகிறிஸ்துவின் சரீரம்'' என்றேன். நாம் ஒரே ஆவியினாலே அந்த சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். நாம் அவருடைய ஆவியினால் பிறக்கும் போது, அந்த ராஜ்யத்துக்குரியவர்களாகிறோம். அப்பொழுது நாம் அமெரிக்க நாட்டையோ அல்லது ஜெர்மன் நாட்டையோ சேர்ந்த வர்களல்ல. நாம் கிறிஸ்தவர்கள். நாம் அன்பின் அடிமையாக ஆவியில் நடந்து, உலகத்தின் அடிமைத்தனத்தினின்று நாம் விடுவிக்கப்பட்டு, அந்த விலையுயர்ந்த முத்தை வாங்குவதற்காக நாம் உலகத்தின் பேரிலுள்ள நமது உரிமைகளை விற்று விட்டு, பரிசுத்த ஆவியில் நடந்து, அது தன்னை நமது மூலம் வெளிப்படுத்த விட்டுக் கொடுக்கிறோம். அது தான் அவருடைய உண்மையான சபையாகும். நாம் தேவனுடைய வார்த்தையின் மூலம் அவரை சேவிக்கும் போது - ஸ்தாபனப் பிரமாணங்களின் மூலம் அல்ல-நீங்களும் நானும் அப்படியாகி விடுகின்றோம். 183கவனியுங்கள், அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதன், அந்த கிறிஸ்து தாமே இங்கே, தேவனே, தெரியப்படுத்தப்படுகின்றார். ஆனால் இப்பொழுது.... கவனி! ஆனால், ஆனால் இப்பொழுது (ஏன்?) அவர் முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக் கிறார். தேவன் பரிபூரணமாக இயேசுகிறிஸ்துவில் வெளிப் பட்டார் - தம்முடைய வெளிப்பாட்டின் தேவனுடைய மகத்தான இரகசியம். வெளிப்பாட்டின் இந்த மகத்தான வெளிச்சம் இந்த உலகத்தின் ஞானத்தை எப்பொழுதும் குருடாக்கியிருக்கிறது. இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த நாட்களிலும் கூட அது அப்படிப்பட்டவர்களைக் குருடாக்கினது. அவர்கள், “நீ உன்னை தேவனாக்கிக் கொள்கிறாய்! உன்னை தேவனுக்குச் சமமாக்குகிறாய்!'' என்றனர். அவர் தேவனுக்குச் சமமானவர் மாத்திரமல்ல, அவர் தேவனே. பாருங்கள், அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. உங்களில் சிலர் இப்படி நினைக்கிறீர்கள்... 184சில நாத்தீகர்கள் (infidels) ஒரு முறை என்னிடம், இயேசு தம்மை தேவனுடைய குமாரன் என்று அழைத்துக் கொள்ளவே யில்லை என்று கூறினர். அவர் நிச்சயமாக அவ்விதம் அழைத்துக் கொண்டார். உங்கள் வேதத்தை நீங்கள் சரியாக அறிந்து கொள்ள வில்லை. கிணற்றடியிலிருந்த ஸ்திரீயிடம் அவர் என்ன சொன்னார்? அவளிடம் அவர் என்ன சொன்னார்? அவள், “மேசியா வருகிறாரென்று அறிவேன். அவர் வரும்போது இவைகளைச் செய்வார்'' என்றாள். அப்பொழுது அவர், ”உன்னுடனே பேசுகிற நானே அவர்'' என்றார். பவுலிடமும் மற்றவர்களிடமும் அவர் கூறினார். கவனியுங்கள். இப்பொழுது சபை முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக்கிறது. 185தேவனுடைய மகத்தான இரகசியம் எப்பொழுதுமே உலக ஞானத்தை குருடாக்குகினது. அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் அதை புரிந்து கொள்வதில்லை. சாத்தான் அதை புரிந்து கொள்வதில்லை. அதை - அதாவது எப்படி தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பதை-முன்குறிக்கப்பட்டவர் மாத்திர மேயன்றி வேறு யாரும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் ஒவ்வொரு முறையும் அவரை மூன்றாக ஆக்கிவிடுகின்றனர். பாருங் கள்? அவர்கள் அப்படி செய்வது நிச்சயம். 186கவனியுங்கள், இரண்டாவதாக, கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருந்து கொண்டு வெளிப்படுதல். அந்த மகத்தான வெளிப்படுத்தப்பட்ட தேவன் கிறிஸ்துவுக்குள், இப்பொழுது கிறிஸ்து உங்களில் வெளிப்படுத்தப்படுகிறார். நாம் துரிதமாக கடந்து செல்வோம், பாருங்கள்! ஒரு காலத்தில் தேவனுடைய மகத்தான இரகசியம், தம்முடைய சிந்தையில் இருந்த மகத்தான இரகசியங்கள், (mysteries) இப்பொழுது விசுவாசியின் இருதயங்ளில் வைக்கப் பட்டிருக் கின்றது, அதாவது, கிறிஸ்துவினுடைய சரீரத்தில் ஒரு காலத்தில் தேவனுடைய மகத்தான இரகசியமாக உலகத் தோற்றத்திற்கு முன்னர் தம்முடைய சிந்தையில் இருந்த ஒன்று, இப்பொழுது வெளிப்படுத்தப்படுகின்றது. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! பாருங்கள்? அதை நாம் புரிந்து கொள்ளவில்லையென்று நிச்சயமாக எனக்குத் தெரியும். நல்லது, எவ்விதமாக அதை நான் காண வேண்டுமோ அவ்விதமாக என்னால்- என்னால் அதை காண முடியவில்லை, ஆகவே? ஆகவே உங்களால் முடியவில்லை என்று நிச்சயமாக தெரியும். பாருங்கள்? 187ஆனால் தேவனுடைய மகத்தான இரகசியம், ஒரு இரகசிய மாக நித்திய தேவன் எதை வைத்திருந்தாரோ, இப்பொழுது அது இயேசு கிறிஸ்துவுக்குள் வெளியரங்கமாக்கப்பட்டு பிறகு சரியாக தம்முடைய சபைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு காலத்தில் தேவனுடைய சிந்தையிலிருந்தவை, இப்பொழுது கிறிஸ்துவின் சரீரத்திலிருக்கிறது. இயேசு தமது மணவாட்டியாகிய சபையை நோக்கி காதல் செய்து, இரகசியங்களை குசுகுசு வென்று அவளிடம் மெல்லப் பேசிக்கொண்டிருக்கிறார். நீங்கள் விவாகம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்துள்ள பெண்ணிடம் உங்கள் இரகசியங்களை எப்படி சொல்வீர்கள்? அவளை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்கள். அவளை உங்கள் பக்கத்தில் உட்காரவைத்து, அவளை சிநேகிப்பதாக கூறிவிட்டு, அவளிடம் உங்கள் அந்தரங்க இரகசியங்கள் அனைத்தையும் குசுகுசுவென்று கூறுவீர்கள் அல்லவா? அது எப்படியிருக்கு மென்று உங்களுக்குத் தெரியும். 188அதைத்தான் கிறிஸ்து சபைக்குச் செய்து கொண்டிருக்கிறார். பாருங்கள்? அவள் இரகசியங்களை, இரகசியங்களை மாத்திரம் அறியும்படி செய்கிறார்- எல்லாரிடமும் சல்லாபம் செய்யும் பெண்களிடமல்ல (Flirters) - அவருடைய மனைவியிடம். பாருங்கள்? அது சரி. இப்பொழுது கவனியுங்கள். இல்லை, தம்முடைய கிருபையினால், தம்முடைய இரகசியத்தைக் குறித்த வெளிப்பாட்டை அவர்களுக்கு தெரியப்படுத்துகின்றார்! எப்படி தேவனுடைய கிருபை! ஜனங்களே, எனக்குத் தெரியும்... இது இதற்கு, அதற்கு அல்லது இந்த, அந்த, கூட்டம் ஜனங்களுக்கு மாத்திரம் தனிப்பட்ட விதத்தில் கூறப்படுவதாக நீங்கள் எண்ண வேண்டாம். தேவன் தமது இரகசியத்தை முழு சபையிடம் பகிர்ந்து கொள்கிறார் - அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களானால். பாருங்கள், அது எனக்கும் உங்களுக்கும் மாத்திரம் என்றல்ல. அவர் உள்ளே நுழைய முயன்று கொண்டிருக்கும் சபை முழுவதற்குமே இது உரியது. ''அவர்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்?'' என்று நீங்கள் கேட்கலாம். அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர், இந்த காரியங்களை மறுபடியும் கூறினார். ''ஆகவே எப்படி அவர்களால்?'' ஏனெனில் அவர்களால் அதை காணமுடியாது என்று ஏசாயா கூறினான். பாருங்கள்? ஆகவே அவர் எப்பொழுதுமே கூறியுள்ளார்.... 189தீர்க்கதரிசியாகிய பவுல், “கடைசி நாட்களில் மனுஷர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவ பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், இணங்காதவர்களாயும் அவதூறு செய்கிறவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் இருப்பார்கள்'' என்று கூறியுள்ளான். ''துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக் கிறவர்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. இப்படிப் பட்டவர்கள் வீடு வீடாக நுழைந்து, பாவங்களினால் நிறைந்து பற்பல இச்சைகளினால் இழுப்புண்டு போயிருக்கும் பெண் பிள்ளைகளை - அரை கால்சட்டை அணிந்தவர்களை, மயிர் கத்தரித் துள்ளவர்களை - வசப்படுத்திக் கொண்டு, 'அதெல்லாம் பரவா யில்லை. அவர்கள் பைத்தியக்காரர்கள். அவர்கள் கூறுவதில் கவனம் செலுத்த வேண்டாம்'' என்கின்றனர். பாருங்கள்? ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்கள். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இம்மனிதர்களும் எதிர்த்து நிற் கின்றனர். அவர்கள் ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு ஒரு சபையை உண்டாக்கிக் கொள்கின்றனர். 190“ஆனால் அவர்களுடைய மதிகேடு வெளிப்படும்,” இயேசு தம்முடைய மணவாட்டியை எடுத்து இங்கே அவளை நிறுத்தி, “இது அவள் தான்'' என்று கூறி, பிறகு அவளுடன் சென்று விடு கிறார். அது சரி. ஆகவே அவர்களுடைய மதிகேடு வெளிப்படும். தம்முடைய கிருபையினால் இந்த இரகசியத்தின் வெளிப் பாட்டை அவர்களுக்கு தெரியப்படுத்தியிருப்பதை பாருங்கள்! கவனியுங்கள்! இந்த மகத்தான வெளிப்பாடு, வெளிப்படுத்தப் பட்ட இரகசியம், உங்களுக்கு தெரியப்படுத்தப்படும் போது நீங்கள் உலகத்தின் காரியங்கள் அனைத்தையும் விட்டுவிடுவீர்கள். நான் மீண்டும் அந்தப் பொருளுக்கே வரப்போகின்றேன். நான் அதை கூற நினைக்கவில்லை; ஆனால் அதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் - ஒலிநாடாவிற்காக, வெளியிடம் செல்பவர் களுக்கு இந்த ஒலிநாடா உலகின் பல்வேறு பாகங்களுக்கும் செல்கிறது. பாருங்கள்? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டதாக கூறிக்கொள்ளும் பெண்களாகிய உங்களுக்கு உங்கள் கூந்தலை நீளமாக வளர்ப்பதற்கு துணிவு இல்லை! மயிர் கத்தரித்துக் கொள் வதை வேதம் கண்டனம் செய்கிறது. அப்படிப்பட்டவளை விவா கரத்து செய்ய ஒரு மனிதனுக்கு உரிமையுண்டு என்றும், அப்படி அவன் செய்வது தேவனுடைய பார்வையில் கனமுள்ளதாயிருக் கும் என்றும், அவள் அப்படி செய்வதனால் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள் என்றும் வேதம் உரைக்கின்றது... முன் காலங்களில், மயிர் கத்தரித்துள்ள பெண் ஜெபம் செய்வது சாதாரண வழக்கமல்ல. பாருங்கள்? அரை கால்சட்டை அணிந்து கொள்வதும், இந்த தளற்கால் சட்டைகளை (slacks) இன்னும் மற்றவைகளை அணிந்து கொள்வதும் போன்றவை. வேதம் கூறுகிறது (என்று நீங்கள் சொல்லலாம்); புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரித்தால், அவர்கள் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் - அவருவருப்பான, அழுக்கான, நாற்றமெடுக்கும் குளியலறை போன்று. பாருங்கள்? நாற்றம் தேவனுடைய நாசியின் துவாரங்களில் செல்கின்றது. அப்படியிருந்து கொண்டு, நீங்கள் தேவனிடம் உங்கள் ஜெபங்களை ஏறெடுக்க முயல்கின்றீர்கள். தேவன் அதற்கு செவி கொடுக்க மறுத்து, அதை புறக்கணித்துவிடுகிறார். அது உண்மை . 191நீங்கள், ''சகோதரன். பிரன்ஹாமே, ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள் பழைய ஏற்பாட்டைக் குறித்து பேசுகிறீர்கள்'' எனலாம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது தேவனுடைய பூரண வெளிப்பாடாய் உள்ளது. தேவன் ஒரு காரியத்தைக் கூறுவாரானால், அதை மாற்றவே முடியாது. அவர் அதைப் பெரிதாக்கிக் காட்டுவாரேயன்றி, அதை மாற்ற மாட்டார். நியாயப்பிரமாணமும் அவ்வாறே, பெரிதாக்கிக் காட்டப் பட்டதேயன்றி, மாற்றப்படவில்லை. பெரிதாக்கி காட்டப் பட்டது! “விபசாரம் செய்கிற எவனும் மரணத்துக்குப் பாத்திரனாயிருப்பான்'' இப்பொழுது பெரிதாக்கப்பட்டு ”ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறவன் எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று'' என்றுரைக்கப்பட்டது. அவர் நியாயப்பிரமாணத்தை மாற்றவில்லை, அவர் அதை பெரிதாக் கினார். “ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக''வாரத்தில் ஒருநாள். இப்பொழுது அவர் அதை தேவனுடைய ஆவியைப் பெறுவதனால், நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கின்றது என்று பெரிதாக்கிக் காட்டினார். ''கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும் என்கிறார்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன்' அது தான் இளைப்பாறுதல். அதுதான் கர்த்தருடைய பிரசன்னத்தில் கிடைக்கப்பெறும் களைப்பு நீக்கம்' (Refreshing). 192அப்படியிருந்தும் அதற்கு அவர்கள் செவிகொடுக்காமல் தலையை அசைத்து விட்டு, தங்கள் ஸ்தாபனங்களில் சேர்ந்து விட்டனர். இதுதான் களைப்பு நீக்கம் - ஓய்வு நாள் ஆசரிப்பவரிடம் இதை கூறுகிறேன். ஓய்வு நாள் பெரிதாக்கப்பட்டது. அவர் எதையும் மாற்றுவதில்லை; அவர் அதை பெரிதாக்குகிறார். அவர்களை ஏற்றுக்கொள்ள பாதாளம் (hell) தன் வாசல்களை விரிவாக்கியுள்ளது.“ இப்பொழுது கடைசி காலச் செய்தி ஏன் புறக்கணிக்கப் படுகிறதென்பதை இப்பொழுது உங்களால் காணமுடியும். முடிகிறதா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்- ஆசி) இப்பொழுது, ஸ்தாபனம் அல்ல, ஆனால் அவருடைய இரகசியத்தின் வெளிப்பாடு. பாருங்கள், ஸ்தாபனம் அல்ல. அந்த வெளிப்பாடு! தேவன் ஸ்தாபனங்களினால் அறியப்படுவதில்லை. அவர் வெளிப்படுதலினால் அறியப்படுகிறார். பாருங்கள், தேவன் தமது சரீரத்தில் கிறிஸ்து. கிறிஸ்து தமது சரீரத்தில் - மணவாட்டி. என்னே ! தேவன் கிறிஸ்துவில் வெளிப்பட்டார்; கிறிஸ்து மணவாட்டியில் வெளிப்படுகின்றார், தேவன் ஆதாமின் சரீரத்திலிருந்து ஸ்திரீயை எடுக்கையில் அவள் விழுந்து போனாள். பிறகு, தம்முடைய வார்த்தையாகிய, தம்முடைய சரீரத்திலிருந்து, தம்முடைய மாம்சத்திலிருந்து, கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து தேவன் எடுத்திருக்கிறார், பிரமாணமோ அல்லது ஸ்தாபனத்தினாலோ விழுந்து போகாத ஒரு மணவாட்டியை வெளியே கொண்டு வருகிறார். இல்லை, ஐயா! அவள் கறையற்ற, கலப்படமற்ற, வெளிப்படுத்தப்படுகின்ற தேவனுடைய வார்த்தைக்கு திரும்ப வந்து கொண்டிருக்கிறாள். இந்த ஒலிநாடாவைக் கேட்கும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் இதைப் புரிந்து கொள்வார்களென்று நம்புகிறேன். பாருங்கள்.? அவள் இரண்டாம் ஏவாள். அவள், தன் கணவனுக்கு அவள் அளித்துள்ள பரிசுத்தத்தையும் கற்பையும் குலைத்துவிடமாட்டாள். யார் என்ன கூறினாலும் அவள் நீங்கள் விரும்புகின்ற எல்லாவித உலக சபைகளின் ஐக்கிய அசைவுகளையும் மற்ற எல்லா தொல்லைகளையும் கொடுக்கலாம்; யார் என்ன கூறினாலும் அதைக் குறித்து அக்கரை கொள்ளாமல் அவருடைய வார்த்தையோடு அவள் நிற்பாள். 193விரைவில் அவர்கள் அடக்குமுறை, துன்புறுத்தலை கொண்டு வரப் போகிறார்கள். எல்லா சபைகளையும் மூடிவிடுவார்கள். நீங்கள் அதைப் பார்க்கப் போகிறீர்கள். ஸ்தாபனங்களைச் சேராத நமது சபையைப் போன்ற சபைகளை அவர்கள் பண்டகசாலையாக மாற்றிவிடுவார்கள். உலக சபைகளின் ஐக்கியத்தைச் சேர்ந்திராத யாருக்காகிலும் ஒரு மனிதன் சென்று ஜெபத்தை ஏறெடுத்தால், அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படுவான். அது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த ஐக்கியத்தின் தலைவரான லூத் தரன் போதகர் ஒருவர் அவ்விதம் கூறியுள்ளார். அது இந்த பத்திரிக்கையில் உள்ளது. வேண்டுமானால் நீங்கள் படித்துப் பாருங்கள். அது உண்மை . அவர்கள் என்ன கூறினாலும், அதனால் எவ்வித வித்தியா சமும் இல்லை. அந்த சபை இந்த வெளிச்சத்தில் உண்மையாய் நிற்கும். அவள் முன் காலங்களில் அதை நிரூபித்திருக்கிறாள். அவள் மறுபடியும், எல்லா துன்புறுத்தலின் மத்தியிலும் அதை நிரூபிப்பாள். இது தேவனுடைய வார்த்தை. எல்லா உலக சபை ஐக்கியங்களும் மற்றெல்லாம் ஒழிந்து போம். ஆனால் அவளோ கறைதிரையற்றவளாய் இருப்பாள். அது உண்மை . அவள் அங்கு நின்று கொண்டிருப்பாள். 194கவனியுங்கள், தேவன் தம்மைத்தாமே, கிறிஸ்துவாகிய தம்முடைய சரீரத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது மூவகை அழகான காரியத்தை நீங்கள் காண்கிறீர்களா? கிறிஸ்து தமது சரீரமாகிய சபைக்குள் வாசம் செய்து கொண்டு, தேவன் கிறிஸ்துவின் மூலம் செய்த விதமாகவே, அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். “என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் சொல்லக் கூடும்? என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், அப்படியானால் நான் எங்கே - நான் எங்கே தவறினேன்? நான் தவறிவிட்டதாக கூறும் ஸ்தாபனங்களே, எனக்குக் காண்பியுங்கள். ஆம், நான் மேசியாவாயிராதபடிக்கு எங்கு தவறினேன் என்று எனக்குக் காண்பியுங்கள். மேசியா செய்வாரென்று தேவன் கூறியுள்ள அடையாளங்களில் ஏதாகிலும் ஒன்றை நான் செய் யாமல் தவறிப்போனதை - அதை நிறைவேற்றாமலிருந்ததை - எனக்குக் காண்பியுங்கள்'' பாருங்கள்? தேவன் தமது சரீரத்தில் வாசம் செய்தல். 195இப்பொழுது கிறிஸ்து ... “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' பாருங்கள். பாருங்கள், அதே தேவன். பாருங்கள்? ”நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளை செய்வீர்கள்.'' சபையானது சற்று அதிக காலமாக வெளிச்சத்தில் இருக்கும். பாருங்கள், அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை உறுதி படுத்திக் கொண்டேயிருக்கும். தம்முடைய வாக்குத்தத்தங்களை கிறிஸ்துவின் சரீரத்தில் தேவன் செய்தது போல, கிறிஸ்துவும் தம்முடைய அதே கிரியைகளை சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் செய்து கொண்டிருக்கிறார், பாருங்கள், இப்பொழுது இந்த கடைசி நாளின் தம்முடைய மணவாட்டி மரத்திற்கு தம்முடைய மரத்திலிருந்த கனிகளை அளித்துக் கொண்டிருக்கிறார். 196கவனியுங்கள், அந்த மணவாட்டி மரம் கிளைவிட்டது - லூத் தரன். அது என்ன செய்தது. மரம் வளர்ந்து வரும் போது, அதனுடன் கனிகளும் மேலெழுகின்றன. என்ன நேர்ந்தது? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கி கொண்டனர். ஆகவே மரத்தை வெட்டி சுத்தம் செய்கிறவர் பிதா, திராட்சைத்தோட்டக்காரர். அந்த கிளை செத்துப் போயிற்றென்று சொல்லி அதை வெட்டிப் போட்டார். பின்பு வெஸ்லியர்கள் தோன்றினார்கள். அது நன்றாக மேலெழுந்தது. ஆனால் அது என்ன செய்தது? கனி மரத்திற்கு சென்றுவிட்டது. எனவே அவர் அந்த கிளையை மரத்திலிருந்து வெட்டிப்போட்டார். அது மரித்தது ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள்..... நான் அறிய விரும்புகிறேன். முப்பத்து மூன்று ஆண்டுகளின் சபை சரித்திரம் என்னிடமுள்ளது. தன்னை ஸ்தாபித்துக் கொண்டு அங்கேயே மரிக்காமலிருந்த ஒரு சபையையாவது எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். விழுந்து போன அவர்களிடையே மீண்டும் எழுப் புதல் உண்டாகி, அவர்கள் உயிர் பெற்றதை ஒரு முறையாவது எனக்குக் காண்பியுங்கள் - நான் அங்கத்தினர்களின் எண்ணிக் கையை குறிப்பிடவில்லை; உண்மையான எழுப்புதலை. பாருங்கள்? அப்படியொரு எழுப்புதல் நிகழவில்லை. அது அங்கே இல்லை. இல்லை, ஐயா. அவள் அழிவுற்றாள். 197திராட்சைத் தோட்டக்காரர் என்ன செய்தார்? அவர் வந்து கிளைகளை வெட்டிப் போட்டார். பாருங்கள்? அவை ஸ்தாபன கனிகளை மாத்திரமே ஈன்றன. ஆரஞ்சு மரத்தில் எலுமிச்சை பழங்கள். எனவே அவர் அதை வெட்டிப் போட்டு மரத்தை சுத்தம் செய்தார்.... பாருங்கள். கொண்டு வந்தார், வைத்தார். ஆனால் மரத்தின் இருதயம் எங்குள்ளது? அதன் மையத்தில், அவர் கிளைகளை வெட்டி சுத்தம் செய்து, முடிவில் உயரத்தில்... அந்த வேரில் அவர் வித்தை வைத்திருக்கிறார். நீர்க்கால் களின் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப் போல அப்படிப்பட்டவன் தேவனுடைய பிரமாணங்களையும் அன்பையும் அவன் இருதயத் தில் கொண்டிருக்கிறான் - 'அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப் பட்ட மரத்தை போலிருப்பான்“ சங்கீதம் 1. அவனுடைய இலைகள் உதிராது; அவனுடைய காலத்தில் அவருடைய கனியைத் தருவான். ஆகவே இங்கே சரியாக.... 198பழம் வேகமாக எங்கு பழுக்கிறது! மரத்தின் உச்சியில். ஏன்? வெளிச்சம் அதன் மேல் படுகின்றது. ஆமென்! அது உண்மை . இந்த கடைசி நாட்களில், சரியாக மரத்தின் உச்சியில், ஒரு மணவாட்டி மரத்தை அவர் வரச்செய்து கொண்டிருக்கிறார். அவர்தான் ஜீவ விருட்சம் (Tree of Life) என்பதை இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். அதற்கு முரணாக சர்ப் பத்தின் வித்து அமைந்துள்ளது. அவரே அந்த ஸ்திரீயின் வித்து', ஏதேன் தோட்டத்திலிருந்த ஜீவ விருட்சம். அந்த மரத்தை அங்கிருந்து எடுத்துவிடாவிட்டால், அவர்கள் அதன் கனியைப் புசித்து என்றென்றைக்கும் ஜீவித்திருப்பார்கள். நீங்கள் புசித்து என்றென்றும் வாழ்வதற்கென அந்த ஒரு மரம் மாத்திரமே உள்ளது. அவருடைய வார்த்தையே ஜீவன். ஆகவே அப்பொழுது அந்த வார்த்தை, ஏதேன் தோட்டத்தில் ஏவாள் புறக்கணித்த தேவனுடைய வார்த்தை அதுவே. பிறகு இங்கே, கிறிஸ்து, அந்த வார்த்தை, வெளிப்பட்டார். அவர் பூமியின் மீது வந்த போது, அவர் தான் ஜீவ விருட் சமாயிருந்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்”. என்கின்றனர். ஆசி). ஆனால் ரோமாபுரி என்ன செய்தது? அவர் வெட்டி போடப்பட வேண்டிய தாயிருந்தது. அவர் அவமானம் என்னும் “மரத்தின் மேல் தூக்கப்பட்டார். மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப் பட்டவன்.'' அவர் மானிட வர்க்கத்துக்காக சாபமானார். இப்பொழுது அதன் மூலம் அவர் மணவாட்டி மரத்தை தோன்றச் செய்தார். அது ஜீவ விருட்சமாக அவருக்கு திரும்ப அளிக்கப் பட்டு, ஏதேன் தோட்டத்தில் கணவனும் மனைவியுமாக இருக்கும், (தேவனுக்கு மகிமை!) அதே வார்த்தையின் மூலம் அதே தேவன் கணவனும் மனைவியுமாக வெளிப்படுகின்றார். அதே மணவாட்டி மரம் மறுபடியுமாக உள்ளது. 199கவனியுங்கள், அதை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்! என்னே, இங்கே இன்னும் எவ்வளவோ உள்ளது. நாம் சொல்லிக் கொண்டே போகலாம். ஏதேன் தோட்டத்திலிருந்த கிறிஸ்துவின் சரீரமாகிய விருட்சம், மரம் தெரிய ... இப்பொழுது தம்முடைய இரகசியத்தை இந்த மணவாட்டி மரத்திற்கு தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். கவனியுங்கள், அது கிறிஸ்து என்னும் இரண்டாம் ஆதாமினால் மீட்கப்பட்டு, அவர் அப்படி என்று விசுவாசிக்கிறீர் களா? (சபையார் ஆமென்'' என்கின்றனர்- ஆசி) விழுந்து போன தமது மனைவியை மீட்டெடுத்து, அவளுடன் தமது வீடாகிய ஏதேனுக்குச் செல்கிறார், அதுதான் கிறிஸ்துவும் சபையும்- தம் முடைய மனைவியைக் கொண்டு செல்லுதல். இப்பொழுது மூவகை இரகசியத்தை பார்த்தீர்களா? ( ஆமென்') தேவன் கிறிஸ்துவில் வெளிப்படுதல்; கிறிஸ்து சபையில் வெளிப்படுதல்; இவை ஒருங்கே மூல ஆதாமையும் ஏவாளையும் மீண்டும் கொண்டு வருதல் - மனிதனும் ஸ்திரீயும், இருவரும் ஒருவராக, ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கப்பட்டு, ஒரே ஆவியையும் மற்றவைகளையும் பெற்றிருத்தல். சபையானது ஆவியினால் தேவனுடைய இரத்தமாயுள்ளது. ஏனெனில் உயிர் இரத்தத்தில் தான் உள்ளது. அதுதான் நம்மை அவருடைய சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படச் செய்யும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம். அது அவருடைய சரீரத்தை, அவரு டைய மாம்சத்தை, அவருடைய வார்த்தையை மாத்திரமே அடையாளம் கண்டு கொள்ளும் (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை அநேக முறை மெதுவாக தட்டுகிறார் - ஆசி ) 200ஸ்தாபனங்கள் அதை தொடவும் கூட முடியாது. ஏனெனில் அது வெளிப்பாடாயிருக்கிறது. அவள் மாத்திரமே அதை அறிவாள். ஏவாளும் கூட அதை அறிந்திருந்தாள்; ஆனால் அவள் விழுந்து போனாள். ஆனால் இதை அறிந்திருக்கின்ற இவளோ விழுந்து போக மாட்டாள். இவள் நியமிக்கப்பட்டிருக்கிறாள்! அல்லேலூயா! இவள் விழுந்து போகாதபடி, அதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறாள். அவள் தவறிப் போகமாட்டாள். அவள் அதற்கெனவே முன் குறிக்கப்பட்டிருக்கிறாள், ''எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கிய வான்''. இங்கு அமர்ந்திருக்கும் சுமார் இரண்டு டஜன் போதகர் களாகிய நீங்கள் நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறீர்கள். பாருங்கள்? “எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்'' என்று தாவீது கூறியுள்ளான். 201கவனியுங்கள், மீட்டுக் கொண்டு அவருடன் வீட்டுக்குக் கூட்டிச் செல்லுதல். மனித சரீரத்தில் மறுபடியும் நித்திய ஜீவனை யடைந்து, புசித்து, குடித்து என்றென்றும் வாழ்ந்திருத்தல். ஏசாயா, “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்'' என்றான். அவர்கள் கட்டுகிறதும், வேறொவர் குடியிருப்பதுமாய் இராது. பிள்ளைகள் அதை சுதந்தரித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனேனில் அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவன் வீட்டைக் கட்டி அதில் குடியிருப்பான். ஆமென்! 'அவன் கட்டமாட்டான், மற்றொருவன் சாப்பிடமாட் டான்; அவனே கட்டி தானே சாப்பிடுவான்” ஆமென் அது என்ன? அவருடைய மணவாட்டி அவருடன் கூட செல்லுதல்- மீட்கப் பட்டு, ஆதியிலிருந்த ஆதாம், ஏவாளின் நிலைக்குக் கொண்டு வரப்படல். மரணம் பின்னால் விடப்பட்டது. அவர்கள் சிலுவை யை நோக்கிப் பார்த்து, மரணத்திற்கு கிரயம் செலுத்தப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்கின்றனர். இப்பொழுது விசுவாசத்தினால் நாம் அவருடன் கூட உயிரோடெழுந்து, இப்பொழுதே உன்னதங்களில் வீற்றிருந்து, நம்மை மீட்ட அதை பின் நோக்கிப் பார்த்தவர்களாக, மணவாளன் வருவதற்காகவும் அவருடனே நாம் வீட்டை நோக்கி நடைபோடு வதற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம். 202தேவனுடைய மூவகை நோக்கம் ஆதாமிலும் ஏவாளிலும் ஒவ்வொரு தீர்க்கதரிசியிலும், காலங்களினூடாகவும், வரப் போகின்ற அவர்; இருந்தவர், இருக்கிறவர் மற்றும் நாம் . . . வரப்போகிற அவருக்குள்ளும் வெளிப்பட்டது. முழு வெளிப் பாட்டையும் - தேவனுடைய வார்த்தை வெளிப்படுதலை எதிர் நோக்கினர். ஆதாமும் ஏவாளும் வீட்டிற்குத் திரும்பி செல்லுதல் - மீட்கப்பட்டவளாக. தேவன் தம்மை தாமே தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். 203அவர் அங்கு தாவீதின் சிங்காசனத்தில் அமருவார். அது சரியா? எல்லா ஜாதிகளையும் அவர் இருப்புக் கோலால் அரசாளு வார். அங்கு இரு புறங்களிலும் மரங்கள் இருக்கும். அந்த மரத்தின் இலைகள் ஜனங்கள் (Nations) ஆரோக்கியமடைவதற்கு ஏதுவான வைகளாயிருக்கும். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டு வருவார்கள். தீட்டுள்ளது ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை. சீயோன் மலைக்கு இரவும் பகலும் வெளிச்சம் உண்டாயிருக்கும். மீட்கப்பட்வர்கள் அந்த வெளிச்சத்திலே நடப்பார்கள்! . அல்லேலுயா! அது கட்டுக்கதையல்ல; அது வேததத்துவத்தினால் உருவாக் கப்பட்ட கருத்தல்ல, அது இயேசுகிறிஸ்து தமது வார்த்தையில் வெளிப்படுவதாக அமைந்து, ஒவ்வொரு காலத்திலும் பிரகாச முள்ளாதாயும் உண்மையுமாயிருக்கிறது. அது இக்காலதத்திலும் உண்மையாயிருக்கிறது. எனக்கு அது உண்மையாக இருக்கிறது. உங்களுக்கும் அது உண்மையாயிருக்கிறது. இந்த வெளிப் பாட்டைப் பெற்றுள்ள ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அது உண்மையாயிருக்கிறது. ஆமென். 204பாருங்கள், தேவன் தம்மை தெரியப்படுத்தி, அவருக்கு சிறைவாசிகளாக உள்ள உங்கள் ஜீவனில் நாடித்துடிப்பாக அமைந்திருக்கிறார். நீங்கள் அவருடைய அன்புச் சிறைவாசிகள். உலகம் உங்களைப் பார்த்து நகைத்து, ஏளனம் செய்து, அதனின்று வெளியே வா'' என்று கூறலாம். நீங்களும் வெளியே போக முயற்சி செய்யக் கூடும். ஆனால் உங்களால் முடியாது. ஏனெனில் நீங்கள் சிறைவாசிகள். வெளியேயுள்ளமற்ற பெண்கள் ஹாலிவுட் நாகரீகத்தை பாவனை செய்யலாம். ஆனால் உங்களால் முடியாது. ஏனெனில் நீங்கள் சிறைவாசிகள். ஆமென்! பாருங்கள், நீங்கள் கிறிஸ்துவுக்கு சிறைவாசிகள். மற்ற மனிதர்கள் புகைபிடித்து, மது அருந்தி, தாங்கள் விரும்பும் எதையும் செய்து, அதே சமயத்தில் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்றும், மூப்பர்கள் என்றும் போதகர்கள் என்றும் கூட அழைத்துக் கொள்ள முடியும். ஆனால் உங்களால் முடியாது. ஏனெனில் நீங்கள் சிறைவாசிகள், நீங்கள் வார்த்தைக்கு சிறைப்பட்டவர்கள். ஆம், ஐயா. 205இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட தமது மணவாட்டி மரத்திற்கு, தமது இரகசியத்தை அறிவித்தல்; பழைய ஏதேன் நிலையையடைய வீடு திரும்புதல். அங்கு மரணம், வியாதி, துயரம் அவமானம் போன்றவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டி ருத்தல், நித்திய ஜீவனுடன் திரும்பிச் செல்லுதல். அப்பொழுது..... கவனியுங்கள், அநேகர் தவறான கருத்துக் களை உடையவராயிருக்கின்றனர். கிறிஸ்தவ மார்க்கத்துக்கும் அதன் அரசாங்கத்துக்கும் ஜனங்களை மதம் மாறச் செய்தல் என்பது தேவனுடைய நோக்கமேயல்ல. நீங்கள், அவருடைய அரசாங்கத் தினால் நாங்கள் ஜனங்களை கிறிஸ்தவ மார்க்கத்திற்கு மதம் மாறச் செய்கிறோம்'' என்கின்றனர். அதுவல்ல. ''சரி, அவர்கள் மது அருந்தக் கூடாது; பொய் சொல்லக் கூடாது' இந்த விஷயத்தில் முகமதியர் உங்களை வென்றுவிட முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆப்பிரிக்காவிலுள்ள அஞ்ஞானிகள் அந்த கறுப்பு மனிதன் அந்த ஆதிவாசிகள் (tribes) தங்களுக்கென ஏற்படுத்திக்கொண்டுள்ள சட்டதிட்டங்கள், உங்கள் கிறிஸ்தவ மார்க்கத்தில் காணப்படும் எதையும் வென்றுவிட முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 206அந்த ஷன்காய் (Shungai) ஆதிவாசிகளிடம் நான் சென்றி ருந்தேன். அந்த குலத்திலுள்ள வாலிபப் பெண் ஒரு பிரத்தியேக வயதில் மணம் செய்து கொள்ளாவிட்டால், அவள் குலத்தை விட் டே நீக்கப்படுவாள்; அவர்கள் வழக்கமாக பூசிக் கொள்ளும் வர்ணத்தை அவள் அழித்து விடவேண்டும். அவளை அவர்கள் பட்டணத்திற்கு அனுப்பிவிடுவார்கள். அவள் அங்கு அலைந்து திரிந்து கொண்டிருக்க வேண்டும்..... அவளுக்கு மணமாவதற்கு முன்பு அவளுடைய கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட வேண் டும். ஏதாவது ஒரு மனிதனுடன் தொடர்பு கொண்டிருந்தாக கண்டு பிடிக்கப்பட்டால், அவன் யாரென்பதை அவள் அறிவிக்க வேண்டும்; இருவரும் கொல்லப்படுவார்கள். ஹு...ஹும், ஓ. கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் எல்லாரையும் அவர்கள் வென்று விடுவார்கள். கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் உங்களிடையே விதிமுறைகள் இருக்க நேரிட்டால் என்ன நடந்திருக்கும்? காலை தோன்றுவதற்கு முன்பே தொண்ணூற்றொன்பது சதவீதிம் ஆண், பெண் இருவரும் மரிக்க வேண்டியதாயிருக்கும். அது உண்மை. நான் கூறுவது உண்மையென்று உங்களுக்குத் தெரியும் 'நான் சுத்தமாயிருக்கிறேன்'' என்று நீங்கள் கூறலாம். 207“ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரம் செய்தாயிற்று'. அதைக் குறித்து என்ன சொல்லுகிறாய்? சகோதரியே, ஒரு மனிதன் உன்னை இச்சையோடு பார்க்கத் தூண்டும் அளவிற்கு நீ ஆடை அணிந்திருக் கிறாயே! அதைக் குறித்தென்ன? நீ விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கருதியே குற்றவாளியென்று தீர்க்கப்படுவாய். பாருங்கள்? ஆனால் போதகரோ அதற்குக் கண்டனம் தெரிவிக்க பயந்து, ''அதனால் பரவாயில்லை“ என்கிறார். ஏன்? அவர் அப்படி கடிந்து கொண்டால், அவருடைய ஸ்தாபனத்தின் தலைமை செயலகம் அவரை வெளியே உதைத்துத் தள்ளிவிடும். அவர்கள் கலப்பின மானவர்கள். அவர்கள் வார்த்தையை எடுப்பதில்லை. அது உண்மை என்று வார்த்தை கூறுகிறது. அது உண்மை என்று இயேசு கூறுகிறார், ஆகவே அவர்தான் தலை. 208இப்பொழுது கவனியுங்கள், தேவன் தம்மை தெரியப் படுத்துகிறார். ஒரு அரசாங்கத்தினால் கிறிஸ்துவ மார்க்கத்துக்கு ஜனங்கள் மதம் மாறச் செய்ய வேண்டுமென்று நமக்குக் கூறப்பட வில்லை. ஆனால் வெளிப்பாட்டினால், தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தது போல், உங்களுக்குள் கிறிஸ்து. தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தது போல, கிறிஸ்து உங்களுக்குள்! தேவன் கிறிஸ்துவுக்குள் ளிருந்து என்ன அடையாளங்கள் செய்தாரோ, கிறிஸ்து உனக்குள் இருந்து கொண்டு செய்கிறார். அது மிகவும் அழகாயுள்ளதல்லவா! அது எனக்கு மிகவும் விருப்பம். இயேசு சொன்னார், ''அந்நாளிலே“, அது தான் இந்த நாள். 'அந்நாளிலே , ” இந்த வெளிப்பாடு தெரியப்படுத்தப்படும் போது, நான் பிதாவிலும், பிதா என்னிலும்; நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை நீங்கள் அறிவீர்கள்.'' இந்த வெளிப்பாடு வெளிப்படுகின்ற போது, ''அந்நாளிலே நானும் பிதாவும் ஒன்றாயிருப்பதை, நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை அறிவீர்கள். பிறகு அந்த வெளிப்பாடு வருகின்றபோது, அப்பொ ழுது அது, “நான் உங்களிலும் நீங்கள் என்னிலும்'' - அதோ பார்த்தீர்களா. பாருங்கள் அந்த பல்தொழில் ஒருங்கு செய்கின்ற, மூன்று வகை தொ... எதற்காக? அதைத் திரும்பக் கொண்டு வருவதற்காக. நாம்... இருக்க வேண்டும். இயேசு தேவனுடைய வார்த்தையாயிருந்தபடியால், அவர் அதை உறுதிப்படுத்தினார் - அவர் - அவர் வார்த்தையாயிருந்திருப் பாரானால் ...... அவர் வார்த்தையாயில்லாமலிருந்தால், வார்த்தையை அவர் வெளிப்படுத்தியிருக்கவே முடியாது; அவர் ஒரு மகத்தான வேத பண்டிதனாக இருந்திருப்பார். உலகம் எதிர் நோக்கியிருந்த உண்மையான மேசியா அப்படிப்பட்டவராய் இருந்திருப்பார். பாருங்கள்? ஆம், ஐயா, அது அவராக இருந்திருக்கும். இன்றைக்கு உலகம்..... 209அப்படிப்பட்டவரைத்தான் எதிர்நோக்கிக் கொண்டிருக் கிறது. பில்லிகிராமைக் காட்டிலும் சிறந்த யாரோ-யாரோ-யாரோ ஒருவரை அல்லது ஒருவரை தங்கள் ஸ்தாபனங்களுடன் ஒத்து ழைத்து பாப்டிஸ்டுகள் எத்தகைய கொள்கைகளுக்காக நிற்கின் றனர் என்று காண்பிக்கும் யாராகிலும் ஒருவரை, அப்படிப்பட்ட ஒருவரை தான் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையான சபையோ தாழ்மையையும், ஜீவனுள்ள தேவனாகிய கிறிஸ்துவின் அடையாளங்களையும் எதிர்நோக் கியிருக்கிறது. பாருங்கள்? 210இயேசு சிறந்த வேத பண்டிதராக இருக்கவில்லை. அவர் ஒரு சாதாரண விவசாயியின், ஒரு தச்சனின் குமாரனாயிருந்தார். அவ்வாறு அவர் அழைக்கப்பட்டார். பாருங்கள்? அவர் சுற்றித் திரிந்தார். ஆனால் தேவன் ..... “நான் செய்வேன் என்று வேதம் கூறியுள்ளவைகளை நான் செய்யாமலிருந்ததை யாராவது எனக்குக் காண்பியுங்கள்'' என்று அவர் கூறினார். எனவே, சபையும் அதே அடையாளங்களையும் அற்புதங் களையும் இன்று செய்ய முடியும். கிறிஸ்து செய்தவைகளை சபை இன்று செய்து கொண்டு வருகிறது. நான் என் பிதாவிலும், பிதா என்னிலும்; நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே அறிவீர்கள்''. ஆமாம்? நீங்கள் சீயோனுக்கு அணி வகுத்து சென்று கொண்டிருக்கிறீர்கள். எங்கே சென்று கொண்டிருக் கிறீர்கள்? ராஜ்யத்திற்கு. “நான் உங்களில் இருக்கிறதை அந்நாளிலே அறிவீர்கள்'' 211இங்கு கவனியுங்கள்! இங்கே, இது அழகாயுள்ளது. அதை நீங்கள் தவற விட்டுவிடக் கூடாது என்று நான் விரும்புகிறேன்.எல்லாரும், இந்த ஒலி நாடாவைக் கேட்பவரும், காடுகளில் உள்ளவரும், நீங்கள் எங்கு கேட்க நேரிட்டாலும் இப்பொழுது இதை கவனியுங்கள். “பிதா என்னை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்பு கிறேன்'' என்று இயேசு கூறினார். பாருங்கள்? இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவரை அனுப்பின பிதா அவருக்குள் வாசம் செய்து அவருடன் சென்று, அவரை உறுதிப்படுத்தினார். ஏனெனில் அவர் வார்த்தையாயிருந்தார். இப்பொழுது உங்களை அனுப்பும் அதே இயேசு உங்களுக்குள் வாசம் செய்து உங்களுடன் சென்று, அதே தேவனை உறுதிப்படுத்திக் காண்பிக்கிறார். ”பிதா என்னை அனுப் பினது போல (நான் பிதாவினால் ஜீவிக்கிறது போல) நானும் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் என்னால் ஜீவிப்பீர்கள்.'' அவர் யார்? அவர் வார்த்தை. நீங்கள் வார்த்தையினால் ஜீவிப்பீர்கள். அந்த பொருளைத் தெரிந்து கொண்டு இரண்டு மணி நேரம் பேச எனக்கு எவ்வளவு ஆவலாயுள்ளது! கவனியுங்கள். ''என்னை அனுப்பின பிதா'' அனுப்புகின்ற பிதா - அவருடன் சென்றார். 212அவ்வாறே நம்மை அனுப்பும் இயேசு நமக்குள் சென்று .... 'இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் (தனிப்பட்ட பிரதிப் பெயர் -personal pronoun - இயேசு) உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே உலக முடிவுபரியந்தம் உங்களோடே இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' நீங்கள் பின்னோக்கி, அவர் என்ன கிரியைகளைச் செய்தாரென்று பாருங்கள். பின்பு நீங்கள் என்ன கிரியைகளைச் செய்கிறீர்கள் என்று பார்த்து, உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். 213“நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷ குமாரனு டைய வருகையின் நாட்களிலும் நடக்கும் ”லோத்தினுடைய நாட்களில் ...'' நவீன பில்லிகிரஹாம், ஓரல் ராபர்ட்ஸ் போன்ற இருவர் சோதோமுக்குச் சென்று, அங்கிருந்த ஜனங்களிடையே பிரசங்கித்து, சுவிசேஷத்தினால் அவர்களைக் குருடாக்கினார்கள் (பாருங்கள்?). ஆனால் ஒரு தூதன், ஒரு செய்தியாளன் மாத்திரம் ஆபிரகாமுடனும் அந்த தெரிந்து கொள்ளப்பட்ட குழுவுடனும் தங்கிவிட்டார். ஆகவே அவர் காண்பித்த அடையாளம் என்ன? பாருங்கள்? ஆபிரகாம் அவரை எவ்வாறு அழைத்தான்? ஏலோகிம், மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனென்று. கடைசி நாட்களில் இயேசுவானவர் தாமே, அவருக்குள் இருந்த தேவன், தம்முடைய மணவாட்டியில் வெளிப்படுவார் என்பதை காண்பிக்கிறார். இதற்கு முடிவேயில்லை. இது தேவனுடைய வெளிப்படுதல். அது நித்தியமாயுள்ளது. அது சென்று கொண்டேயிருக்கிறது. 214கவனியுங்கள் - பாவத்தின் மூலம் மரணம் அவர்களைப் பிரித்ததற்கு முன்பு ஆதாமும் ஏவாளும் போன்று இப்பொழுது இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து, ஜீவனின் மூலம் மண வாட்டியை மரணத்தினின்று மீட்டெடுத்து, இப்பொழுது மூல ஏதேனுக்கு சென்று கொண்டு, மணவாட்டிக்கு தேவனிடமிருந்த ஐக்கியத்தை திரும்ப அளித்து, ஏதேன் தோட்டத்தில் அவர்கள் கணவனும் மனைவியுமாக இருக்கின்றனர் - கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும். 215ஆகவே தேவன், அந்த நாளிலே ராஜ்யம் பிதாவுக்கு ஒப்புக் கொடுக்கப்படும். அவரே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு “அவன் பேசும்போதே, நான் கேட்பேன்'' - தாவீதும் கிறிஸ்துவும். தாவீது சிங்காசனத்தில் அமர்ந்திருந்து, மானிடவர்க்கம் அனைத் திற்கும் ராஜாவாயிருப் பான். அவர்கள் நினைக்கும் போதே, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் கூப்பிடுவதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப் பேன். ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும்; அவைகள் ஒருமித்துத்தின்று படுத்துக் கொள்ளும். என் பரிசுத்த பர்வத மெங்கும் அவைகள் தீங்கு செய்வதுமில்லை. கேடுண்டாக்கு வதுமில்லை.'' - மறுபடியுமாக ஏதேனுக்கு விரைந்து செல்லுதல். 216அது தான் மூவகை நோக்கம். ஓ, தேவனே, நாங்கள் அறிந்து கொள்ள உதவி செய்யும்! நாங்கள் அறிந்து கொள்ள உதவி செய்யும். மூல ஏதேனுக்குப் போகும் விஷயத்தை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, கூர்ந்து கவனியுங்கள். அப்படியானால் நாம் அவரால் பிறந்திருப்போமானால், நாம் அவரால் நிறைக்கப் பட்டிக்கிறோம். பாருங்கள், உங்கள் ஜீவியம், அவருடைய ஜீவன் உங்களுக்குள் இருக்கின்றது. அப்படியானால், நம்முடைய செயல்கள் எல்லாம் அவரை பிரகடனப்படுத்த வேண்டும். அது ஒரு மரத்திலுள்ள சத்தை (ஜீவனை) யெடுத்து வேறொரு மரத்திற்குள் புகுத்துவது போன்றதாகும். நீங்கள் பேரிக்காய் மரத்தின் சத்தையெடுத்து ஆப்பிள் மரத்திற்குள் புகுத்தினால், அது பேரிக்காய்களைத் தான் தரும். ஏனெனில் அதற்குள் இருக்கும் சத்து பேரிக்காய் மரத்தினுடையதாகும். சரி, அப்படியானால் நம்முடைய கிரியைகள் அனைத்தும் அவரைப் பிரகடனப்படுத்த வேண்டும். அவருடைய நாமத்தை நாம் கொண்டிருக்கிறோம். அது சரியா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்-ஆசி ) அவருடைய நாமத்தை நாம் தரித்துக் கொள்ள வேண்டும். 217ஞாபகம் கொள்ளுங்கள். அவருடைய மணவாட்டி என்னும் ரீதியில், அவருடைய ஆவியினால் நாம் கர்ப்பம் தரிக்கப்பட்டிருக் கிறோம். சபையானது அவருடைய நாமத்தைத் தரித்து கொண்டு, அவருடைய ஆவியினால் கர்ப்பந்தரிக்கப்பட்டு குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறது - அவருடைய நாமத்தைத் தரித்துக் கொண்டு, அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொண்டு அவருடைய ஜீவனுக்கேற்ற அடையாளங்களை நடப்பித்து, அவர் முதல்வராயிருக்கிறார் என்றும், அவர் மரித்தவரல்ல, அவர் உயிர்த் தெழுந்து என்றென்றும் உயிரோடிருக்கிறார் என்னும் சான்றுகளைக் காண்பிக்கிறது. அது நித்திய ஜீவன் நாம் அவருக்குள் ஜீவித்திருக் கிறோம் என்பதை அது உலகத்திற்கு உறுதிப்படுத்துகிறது. வ்யூ! 218அது உனக்கு எப்படித் தெரியும்? ஏனெனில் ஒரு ஸ்தாபனத்தின் அங்கத்தினனாய் இருப்பதனாலா? கிறிஸ்து உன் மூலம் ஜீவிப்பதனால். நீ அவருடைய ஆவியினால் கர்ப்பந்தரித் திருக்கிறபடியால், நீ மற்றெல்லா காரியத்தையும் விட்டுவிட்டு அவருடைய சிறைவாசியாகிறாய். நீ சுவிசேஷத்திற்கு மாத்திரம் தேவனுடைய வார்த்தைக்கு மாத்திரம் சிறைப் பட்டிருக்கிறாய். அதன் விளைவாக நீ பெற்றெடுக்கும் குழந்தைகள் அனைத்தும் அவ்விதமாகவே இருக்கும். ஏனெனில் நீ ஒரு சிறை வாசி. உன்னால் விபசாரம் செய்ய முடியாது, ஏனெனில் நீ ஏற்கனவே கர்ப்பந்தரித்து விட்டாய். மகிமை! அவனால் உன்னை அணுக முடியாது. ஏனெனில் ஜீவனின் கர்ப்பம் மற்றெல்லா வற்றிற்கும் அடைக்கப்பட்டுவிட்டது. முன்குறிக்கப்படுதலின் மூலம் நீ ஏற்கனவே அவருடையவராகிவிட்டாய். அந்த வித்து உயிர் பெற்று விட்டது. உலகம் எதுவும் உள்ளே நுழைய முடியாது. இந்தப் பொருளிலேயே ஒரு மணி நேரம் பிரசங்கிக்கக் கூடுமானால் எவ்வளவு நலமாயிருக்கும்! நீங்கள் புரிந்து கொள் வீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன் - கிறிஸ்துவும் அவருடைய வர்களும் மாத்திரமே. அது ஏற்கனவே முடிந்து விட்டது. அந்த வித்து ஏற்கனவே அங்கு இருந்தது. அது எப்பொழுது அங்கு விதைக்கப் பட்டது? உலகத்தோற்றத்துக்கு முன்பே அவர் நம்மை நித்திய ஜீவனுக்கு முன்குறித்துவிட்டார். ஜீவனை கொடுக்கும் அந்த அணுக்கள் பாய்ந்தவுடனே - அந்த வித்து அந்த கர்ப்பத்துக்குள் இருந்தது. அதிலிருந்த மற்ற வித்துக்கள் அதனுடன் சேர முடிய வில்லை. ஆனால் அந்த வித்து ஜீவனைக் கொடுக்கும் அணுவுடன் சேர்ந்தவுடனே, அது கர்ப்பப்பையை மூடிவிட்டது. மற்ற வித்துக்கள் அனைத்தும் விரட்டியடிக்கப்பட்டன. பாருங்கள்? அது போன்று. 219நீங்கள் கிறிஸ்துவினால் சூழப்பட்டு சிறைவாசிகளா கின்றீர்கள். கிறிஸ்து உங்களுக்குள் வாசம் செய்து, அவருடைய ஜீவன், அடையாளங்கள் இவைகளின் சான்றுகளைத் தோன்றச் செய்கிறார்.! என்னே பாருங்கள், அவருடைய ஜீவனின் அடையாளங்களை அவருடைய உயிர்த்தெழுதலின் சான்றாக அது கொண்டுவந்து, அந்த நித்திய ஜீவனை உலகிற்கு நிரூ பித்துக் காண்பித்து, அவருக்குள் நாம் வாழ்கிறோம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. அதை சற்று யோசித்துப் பாருங் கள்! நமது மீட்பராகிய தேவனுடன் நாம் ஜீவிக்கிறவர்களா யிருக்கிறோம். அந்த நோக்கத்திற்காகவே அவர் நம்மை (சபையை) சிருஷ்டித்தார். அவருடைய சிருஷ்டிக்கும் ஜீவனை அவர் நமக்குள் வைத்திருக்கிறார். மோசே தேவனுடைய வார்த்தையைக் கொண்டவனாய், “வண்டுகள் வரக்கடவது'' என்றவுடன் வண்டுகள் வந்தன. வண்டுகளை சிருஷ்டித்த தேவன் அணில்களையும் சிருஷ்டிக்க முடியும். பாருங்கள்? அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரால் சிருஷ்டிக்க முடியும். எதை வேண்டுமானாலும் அவரால் செய்ய முடியும். அவர் தேவனாயிருக்கிறார். உங்களுக்குள் இருக்கும் அந்த அதே தேவன், அந்த சிருஷ்டிக்கும் ஜீவன், நீங்கள் பாருங்கள், உங்களுக்குள் இருக்கும் அதனால், முடியு... நீங்கள் சிறைப்பட்ட வர்கள். அவர் “பேசு'' என்று கூறாமல் நீங்கள் பேசமுடியாது. ஆனால் நீங்கள் பேசினால், அது தேவனுடைய வார்த்தையாகும். அப்படியாகயிருக்கும் என்று அவன் உறுதிபடுத்தப்படுகிறான். எல்லாம் சரியாக இருக்கும், ஆகவே அவனுக்குத் தெரியும், அது பேசப்படும் போது, அவ்விதமாகவே அது இருந்தாக வேண்டும். பாருங்கள்? மோசே தன் கோலை எடுத்து, “ தவளைகள் வரக்கடவது'' என்றுரைத்தான். ஏனெனில் தேவன் ''தவளைகள் வரக்கடவது” என்று கூறினார். அவன் அதை உரைக்கும் ஒரு கருவியாக மாத்திரம் இருந்தான். அது உண்மை . அப்பொழுது தவளைகள் எல்லாவிடங் களிலும் தோன்றின. அவை எங்கிருந்து வந்தன? அது யாருக்குமே தெரியாது. அவைகள் முன்பு இருக்கவில்லை. சிருஷ்டிகராகிய தேவன் ஒரு மனிதனின் மூலம் கிரியை செய்து, காரியங்களை, ஒரு ஜீவராசியை சிருஷ்டித்தார். முதல் தவளையை சிருஷ்டித்த அதே தேவன், இரண்டாம் தவளைகளையும் சிருஷ்டிக்க முடியும். அவர்தான் எல்லா தவளைகளையும் சிருஷ்டித்தார். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? முதலாம் அணிலை சிருஷ்டித்தார். இரண்டாம் அணிலை சிருஷ்டிக்கிறார். எந்த அணிலையும் அவரால் சிருஷ்டிக்கக் கூடும். அணில்களே இல்லாத இடத்தில் அவரால் அணில்களை சிருஷ்டிக்க முடியும். அவர் விரும்பின எதையும் செய்யமுடியும். அவர் தேவன் அவர் தேவன். அவருடைய ஜீவன். அதை நினைக்கும் போது எனக்கு நடுங்குகிறது. ஹூ-ஹூம். 220அவரோடு கூட வாழுதல் என்பது - அவருடன் வீட்டிற்குச் சென்று, அவருடன் நித்திய காலமாய் வாழுதல் என்பது - நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளுதல். அதுதான் தேவனுடைய மகத்தான அன்பின் இரகசியம் வெளிப்படுதல்-அதாவது தேவனும் மனிதனும் ஒன்றாதல். பாருங்கள்? எல்லாமே தேவனும் மனிதனும் ஒன்றாதலே. அங்கு தேவனும் மனிதனும் ஒன்றாயிருந்தனர், இங்கு தேவனும் மனிதனும் ஒன்றாகின்றனர். பாருங்கள்? அது என்ன? அவருடைய ஆவியினாலே நிறையப்பட்டு, அவரே முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை கொண்டிருத்தல். அது தேவனுடைய சாதனை - அவர் கிறிஸ்துவுக்குள்ளும், கிறிஸ்து நமக்குள்ளும், நாம் எல்லாரும் ஒன்றாதலே தேவன் அவ்வாறு செய்ததன் நோக்கமாயிருந்தது - பரிசுத்த ஆவி. கிறிஸ்துவில் வெளிப்பட்ட அதே காரியம் தான் இப்பொழுது இங்கு வெளிப்படுகிறது-இயற்கைக்கு மேம்பட்ட சிருஷ்டிக்கும் வல்லமை, 221மோசேயின் மூலம், ''தவளைகள் வரக்கடவது'' என்று கூறின- என்று கூறின அதே தேவன் தான் தண்ணீர் திராட்சரசமாக மாறக்கடவது'' என்று சொன்னார். பாருங்கள்? ஆமென். அது சரியா? (சபையார் “ஆமென்' என்கின்றனர் - ஆசி) அவர் அதே தேவனாயிருக்கிறார், அந்த அதே ஒருவர். அவர் மாறுவதில்லை. அது, மனிதனுக்குள் தேவன், அது அவர் வெளிப்படுதல். அதைத் தான் அவர் வெளிப்படுத்துகிறார். அதைத் தான் அவர் செய்ய முயல்கிறார், ஆகவே தேவனுடைய சொந்த வார்த்தையானது அதை வெளிப்படுத்திக் கொண் டிருக்கிறது. மனிதன் எதையும் சிருஷ்டிக்க முடியாது என்றும், தேவனே சிருஷ்டிகர், அது மனிதனல்ல, அது மனிதனுக்குள் இருக்கும் சிருஷ்டிகர் என்றும் காண்பிக்கிறது. ஆகவே அது இன்னுமாக மனிதன் அல்ல; அது மனிதன் அல்ல; அது இப்பொழுது தம்முடைய சபையாக இருக்கின்ற, மனிதனுக்குள், சிருஷ்டிகராகிய தேவன். ஆமென். அவள் பரலோகத்திற்குச் சென்று அவருடன் என்றென்றும் ஜீவிப்பாள். தேவன் தமது நித்திய அன்பை சபைக்கு வெளிப் படுத்துகிறார். 222கவனியுங்கள். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதை புரிந்து கொள்ளத் தவறவேண்டாம் என்று நான் விரும்புகிறேன். இதற்கு புறம்பாயுள்ள வேறெந்த சபையும், வேறெந்தஅடையாளமும், வேறெந்த ஐக்கியமும், வேறெந்த அரசாங்கமும், வேறெந்த சாட்சியும், வேறெந்த கோட்பாடும், வேறெந்த ஸ்தாபனமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. “மகிமையின் நம்பிக்கையாக கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதே” என்பதைத் தான் தேவன் ஏற்றுக்கொள்கிறார், அந்த ஒன்றை மாத்திரமே தேவன் அடையாளம் கண்டு கொள்கிறார். வேறெந்த ஐக்கியத்தையும், வேறெந்த சபையையும், வேறெந்த கோட்பாடு களையும், வேறெந்த ஸ்தாபனத்தையும் அவர் ஏற்றுக் கொள் வதில்லை. அவையாவும் மரித்துவிட்டன. கிறிஸ்து உங்களுக்குள் ஜீவித்து முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களைக் கொண்டிருக்கும் பொருட்டு அவையாவும் வெட்டியெடுக்கப் படவேண்டும். 'அது என் ஸ்தாபனம்...'' என்று திரும்பத்திரும்ப குறிப்பிட்டுக் கொண்டிருப்பதல்ல! அவ்வாறே கூறும் ஒன்று இங்கே என்னிடம் இருக்கின்றது. அவ்வாறே சொல்லப்படும் அனைத்தும் வெட்டியெடுக்கப்பட வேண்டும். “என் ஸ்தாபனம் இன்னின்னதை கூறுகிறது” அதுவும் கூட வெட்டியெடுக்கப்பட வேண்டும். ''என் தாயார் என்னை 'பரிசுத்த உருளுபவர்' என்று அழைப்பார்கள்'' “என் கணவர் நான் அரை கால்சட்டை அணிய வேண்டுமென்று விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும்' - இது போன்றவை வெட்டி அகற்றப்பட வேண்டும். பாருங்கள்? இவையனைத்தும் வெட்டியெடுக்கப் பட்டு, நீங்களும் கிறிஸ்துவும் மாத்திரம் உள்ளவரைக்கும் அது சுத்தம் செய்யப்பட வேண்டும். பாருங்கள்?. 223யோசித்து பாருங்கள். ஜீவிக்கிற கிறிஸ்து ஜீவிக்கிற வார்த்தையின் மூலம் தமது ஜீவனுள்ள பிரசன்னத்தைக் காண்பிக் கிறார். ஜீவிக்கிற கிறிஸ்து, ஜீவிக்கிற வார்த்தை , ஜீவனுள்ள பிரசன்னம். கவனியுங்கள். தம்முடைய சொந்த தனிப்பட்ட, தனிப் பட்ட ஒரு உறுதிபடுத்துதல் தம்முடைய சபையை உறுதிபடுத்து கிறது. அங்கத்தினரின் மூலமாயல்ல. மோசேயின் நாட்களில் அவர் அவ்விதம் செய்யவில்லை. வேறெந்த நபரின் காலத்திலும் அவர் அவ்விதம் வெளிப்படவில்லை. ஆனால் அழிவு வரவிருக்கும் இந்த உலகத்தின் முடிவு காலத்தில் அவர் அவ்விதம் வெளிப்படுகின்றார். லோத்தின் காலத்தில் அங்கத்தினரின் மூலம் அவர் நிரூபிக்க வில்லை. அது ஒரு தனிப்பட்ட உறதி படுத்துதல், மாம்சத்தில் தேவன், பாருங்கள், தனிப்பட்ட உறுதிபடுத்துதல். 224ஞாபகம் கொள்ளுங்கள்; அதைக் குறித்து யோசித்துப் பாருங்கள்; நாம் வாழும் ஸ்தாபனங்களின் காலமாகிய இக்காலத் தில், ஜனங்கள் ஆவியினால் பிறந்து, ஜீவனுள்ள தேவன் தமது ஜீவிக்கும் வார்த்தையை எடுத்து அதை, தனிப்பட்ட விதத்தில், வார்த்தையில் இருக்கின்ற இந்த ஜீவனை, வித்தில் இருக்கின்ற ஜீவனை, உறுதிப்படுத்துகின்றார். தேவனுடைய வார்த்தையானது விதைக்கிறவன் விதைக்கும் விதைக்கு ஒப்பாயிருக்கிறது - அந்த வார்த்தையிலுள்ள கிறிஸ்துவின் ஜீவன் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்குள் இருந்து உன்னால் செய்ய முடியாத ஒன்றை, அது நீயல்ல, ஆனால் அது அவர்தான் என்றும் உறுதிப்படுத்தி அவரைத் தாமே நிரூபிக்கின்றது. நீயும் அவரும் ஒன்றாகின்றீர்கள் - அவருடைய மணவாட்டியாயிருப்பதற்கு நீ ஒரு அன்பின் அடிமையாகின்றாய். 225வானத்தையும் பூமியையும் அவைகளிலுள்ள எல்லாவற்றை யும் சிருஷ்டித்த ஜீவனுள்ள தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக! “அவர் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருப்பதில் வியப்பொன்றுமில்லை. அவர் இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமானவர்; தாவீதின் வேரும் சந்ததியுமானவர்; பிரகாச முள்ள விடிவெள்ளி நட்சத்திரம்.'' அவரே சகலத்திற்கும் சகல மானவர். 226அவருடைய பிரசன்னம், தனிப்பட்ட நபரில், ஒரு தனிப்பட்ட விதத்தில் தம்மைத்தாமே உறுதிபடுத்தி தம்மைத் தாமே வெளிப்படுத்தி, இந்நாளுக்கென வாக்குத்தத்தம் செய்யப் பட்ட அந்த ஜீவிக்கின்ற வார்த்தையானது, தம்மைத்தாமே உன் மூலமாக வெளிப்படுத்துகின்றது, தேவனுடைய மகத்தான வெளிப்பாட்டின் உறுதிபடுத்துதல். பாருங்கள், தனிப்பட்ட ஒரு நபருக்குள், ஒரு குழுவில் அல்ல! ஒரு தனிப்பட்ட நபர்; ஒரு குழுவில் அல்ல! ஒரு தனிப்பட்ட நபரில் அடையாளங் கண்டு கொள்ளுதல் இருக்கின்றது. உங்களுக்கு புரிகின்றதா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்? -ஆசி). மெதோடிஸ்டுகளிடமல்ல, பாப்டிஸ்டுகளிடமல்ல, பிரஸ்பிடேரியன்களிடமல்ல, லூத்தரன் களிடமல்ல, பெந்தெகொஸ்தேயினரிடமல்ல, ஆனால் ஒரு தனிப்பட்ட நபராக. 'ஒருவனை ஏற்றுக் கொள்வேன், மற்றவனைப் பிரித்து விடுவேன்.'' அது உண்மை , “வயலில் இரண்டு பேர் இருப்பார் கள், ஒருவனை ஏற்றுக் கொள்வேன். மற்றவனைக் கைவிடுவேன். படுக்கையில் இரண்டு பேர் இருப்பார்கள். ஒருவனை ஏற்றுக் கொள் வேன், மற்றவனைக் கைவிடுவேன்.'' அது ஒரு குழுவல்ல. அது தேவனுடைய பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு கர்ப்பந்தரித்த தேவனுடைய பிள்ளை யின் மூலமாய் தம்மை தனிப்பட்ட விதத்தில் வெளிப்படுத்துதல். அந்த தேவனுடைய பிள்ளை தன்னை தேவனுக்கு முற்றிலும் சமர்ப் பித்தவனாய் வேறொன்றையும் குறித்து கவலை கொள்ளாதிருப்பான். பரிசுத்த ஆவியானது அதனுடைய ஜீவியத்தை செய்து, அவன் மூலமாக நாடித்துடிப்பை செய்து வார்த்தையின் தனிப்பட்டதனிப்பட்ட உறுதிபடுத்துதலை காண்பித்து, தம்மைத்தாமே, ஜனங்களுக்கும், உலகிற்கும் வெளிப்படுத்துகிறவராயிருக்கிறார். 227இப்படிப்பட்ட ஒன்றைக் காணாமல் ஜனங்கள் எப்படி குருடராயிருக்க முடியும்? கத்தோலிக்கர்கள் பரி. பாட்ரிக்குடன் கூடவே இருந்து, அவர் மரிக்கும் வரைக்கும் அவரை அறிந்து கொள்ளாதது போன்று இது உள்ளது. பரி. மார்டினையும் அவர்கள் அவ்வாறே அறிந்துகொள்ளவில்லை. காலங்கள் தோறும் அவர்கள் அவ்வாறே செய்துவந்தனர். ஜோன் ஆஃப் ஆர்க்குக்கும் அவர்கள் அதையே செய்தனர். அவள் மந்திரவாதி என்று அவர்கள் குற்றஞ்சாட்டி, அவள் ஆவிக்குரியவளாயிருந்தபடியால், அவளை கத்தோலிக்க சபை சுட்டெரித்தது. ஆனால் 150 ஆண்டுகளுக்குபின்பு, அவர்கள் அந்த பாதிரிமார்களின் சடலங்களை தோண்டியெடுத்து, நோன்பை செய்வதற்காக அவைகளை வீசியெறிந்தனர். 228இப்படியே அவர்கள் ஒவ்வொருமுறையும், அது கடந்து போகும் வரைக்கும் அதை அறியாமலிருந்தனர். உலக தோற்றத் துக்கு முன்பே தேவன் முன்குறித்த வித்து மாத்திரமே அதை அறிந்து கொள்ளும். நோவாவின் நாட்களிலும் அவ்வாறே சம்பவித்தது. மோசேயின் நாட்களிலும், எலியாவின் காலத்திலும், தீர்க்கதரிசிகளின் நாட்களிலும் இயேசுவின் நாட்களிலும், வழி வழியாக சரியாக இந்த மணி நேரம் வரைக்கும் அவ்வாறே சம்ப வித்து வருகின்றது. தேவனுடைய வித்தினால் கர்ப்பந்தரிக்கப் பட்ட நபர்மூலம் தேவனுடைய வார்த்தை வெளிப்படுகிறது. அவன் தேவனுடைய சித்தத்துக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித் துள்ளபடியால், வார்த்தை மாத்திரமே அவனில் வெளிப்படு கின்றது- அந்த சிறைபிடிக்கப் பட்ட நபரில். 229“என்னுடைய சபை...'' என்று கூறாதீர்கள். இப்பொழுது ”என் சபைக்கும்“ இதற்கும் எவ்வித தொடர்புமில்லை. அது தனிப்பட்ட நபரைக் குறித்த ஒன்றாகும். ஒரு நபர்! பாதாளம் (Hell) முழுவதுமே இந்த போதனைக்கு விரோதமா யுள்ளது. பாதாளம் முழுவதுமே இந்த சத்தியத்துக்கு எதிராக உள்ளது. ஆனால் இது சத்தியம். “பேதுரு, யாக்கோபு மற்றுமுள்ளவர்களே உங்களுக்கு வெளிப்பாடு கிடைத்துவிட்டது. எனவே முழு சபையும் இரட்சிப்படைந்து விட்டது'' என்று இயேசு கூறவேயில்லை. அது தனிப்பட்ட விதத்தில் பேதுருவுக்கு கூறப்பட்டது. ''நான் உனக்குச் சொல்லுகிறேன்'' - 'உனக்கு, அவர்களுக்கு' என்றல்ல- ''உனக்கு , நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்.' 'பேதுரு என்னும் சொல் 'கல்' என்று அர்த்தம் கொள்ளும். 'கல்' என்றால், பாவ அறிக்கை செய்த ஒருவன்' (Confessed one) அல்லது 'பிரிக்கப்பட்ட ஒருவன்' (Separated one) என்று பொருள். ஒரு பிரத்தியேக கல்லின்மேல் - பிரத்தியேக ஒன்றின் மேல் (பாருங்கள்?) - சபை கட்டப்படுகிறது; அதாவது வெளியே அழைக்கப்படுகிறது. இந்த கல்லின்மேல் - இந்த “வெளிப் பாட்டின் மேல். '' 'மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்த வில்லை. இந்த வெளிப்பாட்டின் மேல் வெளியே அழைக்கப்பட்ட குழுவின்மேல் அவர்களுக்குள் நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.'' “உன் தலையிலுள்ள ஒரு மயிரும் கூட அழிந்து போவதில்லை. நீ என்னுடையவன். கடைசி நாளில் உன்னை எழுப்புவேன் - அவனுக்கு நித்திய ஜீவனைக்கொடுத்து அவனைக் கடைசி நாட்களில் எழுப்புவேன்.'' அதுதான் அந்த வெளிப்பாடு. அது அவர்கள் என்றல்ல, 'அவன்' தனிப்பட்ட ஒருவன். ஒரு குழுவல்ல, தனிப்பட்ட நபர். பாதாளம் முழுவதுமே அதற்கு எதிராயுள்ளது. அவருடைய இரகசியம் அவருடைய பிரியமுள்ள மண வாட்டிக்கு மாத்திரமே வெளிப்படுத்தப்படுகிறது. அவள் ஒருவள் மாத்திரமே அதை புரிந்து கொள்ள முடியும். 230அவர், “புல்லின் கீழிருக்கும் பாம்பே, மாய்மாலக்காரனே, ஏசாயா உங்களைக் குறித்து நன்றாய் சொன்னான். பரிசுத்த தீர்க்கதரிசிகள். அவர்களுக்கு கல்லறைகளைக் கட்டினோம், அவைகளுக்கு மெருகேற்றினோம்' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால் நீங்கள்தான் அவர்களைக் கொன்று கல்லறையில் வைத்தீர்கள்' என்று இயேசு கூறினார். அவர் அப்படிக் கூறினாரா? கத்தோலிக்க சபைகளைப் பார்த்து அவர்கள் நாளிலே அவர் அப்படிக் கூறுவார். ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் ஆலோசனை சங்கம் நடந்த அதற்கு முன்பிருந்த நாட்களில், அவர் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளை அவர்களிடம் அனுப்பினார். அவர்கள் நிலத்தின் வேர்களையும் மற்றவைகளையும் தின்று, உடுக்க உடையும் கூட இல்லாமல், ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு சென்று, வேதத்திலுள்ள சத்தியத்துக்காக நிற்க முயன்றனர். ஆனால் கத்தோ லிக்க சபையோ நுண்ணறிவினால் உண்டான கருத்துக்களை விரும் பினது... பின்பு பரி. ஐரினேயஸ், பாலிகார்ப், மார்டின் போன்ற வர்கள் தோன்றினர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்களைக் கல்லறையில் வைத்தனர் - ஜோன் ஆஃப் ஆர்க் பரி. பாட்ரிக் மற்ற வர்களை. அவர்களைக் கல்லறையில் வைத்து விட்டு, இப்பொழுது ஜோன் ஆஃப் ஆர்க்கின் கல்லறைக்கு செய்தது போன்று, கல்ல றைகளை வெள்ளையடிக்கின்றனர். அவர்களை என்ன செய்தனர்? அவர்களைக் கல்லறையில் வைத்தனர். 231இப்பொழுது ஆவியானவர் உங்களை என்ன சொல்லி அழைக்கிறார் என்று கூறுகிறேன்: “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, மாய்மாலக்காரரே, நீங்கள் உங்களை இல்லாத ஒன்றாக அழைத்துக் கொண்டு, தேவனுடைய வித்துக்கு கர்ப்பந் தரித்து வார்த்தை உங்களுக்கு இருப்பதற்கு பதிலாக, நீங்கள் அதை விட்டு, மனித அறிவினால் உண்டான கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். கலப்படமான எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொண்டிக்கிறீர்கள்.'' அவள் வேசியாக அமர்ந்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. அவள் ”ஆவிக்குரிய விபசாரம் செய்து, ஜனங்களுக்கு தேவனுடைய காரியங்களைப் போதிப்பதற்கு பதிலாக, மனிதருடைய காரியங்களைப் போதித்து வருகிறாள்.'' ஆனால் அவர், 'பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்'' என்று கூறியுள்ளார். அது உண்மை . நிச்சயமாக நமக்கு அது கிடைத் துள்ளது. 232இந்த மகத்தான நகரம் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்ய பாரம் பண்ணுகிறது என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் வேதாகமம் கூறுகிறது. அவளை வேசியென்று அது அழைக்கிறது. அப்படி யென்றால் என்ன? ஒரு ஸ்திரீ தன்னை கற்புள்ளவள் என்று அழைத்துக் கொண்டு விபசாரம் செய்தல். 'அவளுடைய கையில் ஒரு கோப்பை இருந்தது. அது அவளுடைய வேசித்தனத்தின் அசுத்தத்தால் நிறைந்திருந்தது. அதை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்'' அவளுக்கு குமாரத்திகள் இருந்தனர் - பிராடெஸ் டெண்டு சபைகள். அவர்கள் ஒவ்வொருவரும் அவளிலிருந்து வெளியே வந்து, அவளுடைய கள்ளப் போதகங்களை உடையவர் களாயிருந்தனர் (பாருங்கள்?) - ஞானஸ்நான முறைமை, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு பதிலாக கைகளை குலுக்கிக் கொள்ளுதல், மணவாட்டி மணவாளனின் நாமத்தை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக பிதா, குமாரன், பரிசுத்தாவி என்னும் கள்ளப் போதகத்தைப் பின்பற்றுதல் போன்றவை. அதனால் எந்த வித்தியாசமுமில்லை'' என்று நீங்கள் கூறலாம். அது வித்தியாசத்தை உண்டாக்குகிறது. நான் காசோலையில், 'ரெவரண்டு ' அல்லது 'போதகர்' என்று கையொப்பமிட்டால் பணத்தை வங்கியில் பெறமுடியாது. அது உண்மை . வங்கி அதை திருப்பி அனுப்பிவிடும். கவனியுங்கள். அது சரி. 233ஆனால் இந்த எல்லா இரகசியமும் அவர் வாக்களித்த விதமாகவே, அவருடைய மணவாட்டிக்கு மாத்திரமே வெளிப்படுத் தப்படும். இந்த இரகசியத்தின் வெளிப்பாட்டின் சத்தியத்திற்கு பாதாளம் விரோதமாயிருக்கும். ஆனால் மணவாட்டியோ அதின்மேல் நிற்பாள். அதுதான் அவள் எடுத்துக் கொண்டுள்ள உறுதி. சபையே, நீ ஏன் பசியாயிருக்கிறாய்? நீ ஏன் தாகமாயிருக் கிறாய்? மறைவாயுள்ள இந்த இரகசியத்தை வெளிப்படுத்த பிதா முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் நீயோ வேறு காரியங்களால் இதை புறம்பாக்க அனுமதித்து விட்டாய். உன் உத்தியோகத்தை விட்டாய், உன் மனைவியை விட்டாய், உன் கணவனை விட்டாய், உன் பிள்ளைகளை விட்டாய், உலகக் கவலைகளை விட்டாய், ஏதோ ஒரு போதகரை விட்டாய் அல்லது வேறொருவர் அதை உன்னி லிருந்து அகற்றி விட சம்மதித்து விட்டாய். ஆனால் உன் இருதயத்தின் ஆழத்தில், நீ தாகமாயிருப்பதையும், பசியாயுள்ளதையும் அறிந்திருக்கிறாய், தேவன் அதை உனக்கு வெளிப்படுத்த முயல்கிறார் (பாருங்கள்?) - வெளிப்பாடு. கடைசி நாள் இங்கே இருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள். 234நாம் மீண்டும் இதைப் பார்ப்போம். எல்லாவற்றையும் என்னால் கடந்து போக முடியவில்லை. பாருங்கள்? சில நிமிடங் கள் நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சிறிது நேரத்தில் நாம் முடித்துவிடுவோம், நீங்கள்.... சில நிமிடங்கள் உங்கள் ஒருமித்த கவனத்தைச் செலுத்தக் கேட்டுக் கொள்கிறேன். 235கவனியுங்கள், கொலோசெயர் முதலாம் அதிகாரம் 18ம் வசனம். 'அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லா வற்றிலும் முதல்வராயிருக்கும்படி (Pre-eminences- முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை) அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் 236அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர். அவர் முதன்மையான உயர்ந்த ஸ்தானங்களை கொண்டிருக்க விரும்புகிறார். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். நாம் முடிக்கும் தருணத்தில் இருக்கிறோம். கவனியுங்கள். அவரே சரீரத்துக்குத் தலையாக இருக்க வேண்டும் - அவருடைய மணவாட்டி சரீரத்துக்கு. அது அவரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது -ஆதாமிலிருந்தது போன்று மாம்சமும் எலும்பும் உடையதாயிருக்கிறது. பாருங்கள்? மணவாட்டி. மரித்தோரிலிருந்து பிறந்தவள் பாருங்கள், அது, மரித்தோரிலிருந்து பிறந்தது , அவிசுவாசத்தின் பாவம். ஏவாளைக் கொன்றது எது? அவிசுவாசம். அது சரியா? எதில் அவிசுவாசம்? என்ன? அப்படி, அந்த ஆவி... தேவன் பேரிலிருந்த அவிசுவாசமா? இல்லை, அவளுக்கு தேவன் பேரில் விசுவாசம் இருந்தது. நிச்சயமாக, “தேவன் இல்லையென்று அவள் சொன்னாளா? இல்லை. ஐயா. அவள் நாத்தீகனல்ல. ”அவருடைய வார்த் தையை நான் விசுவாசிப்பது கிடையாது'' என்று அவள் சொன் னாளா என்ன? இல்லை, ஒரு சிறிய காரியத்தைத் தவிர மற்றெல்லா வற்றையும் அவள் விசுவாசித்தாள். பாருங்கள்? 237இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசு. “இவைகளை உங்களுக்கு சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் - நான் என் தூதனை அனுப்பினேன். ஒருவன் இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், அல்லது இவைகளோடே எதையாகிலும் கூட்டினால்...'' என்று கூறினார். ஒரு ஸ்திரீ தேவனுடைய வார்த்தையில் ஒன்றே ஒன்றை சந்தேகித்ததனால், இவ்வளவு மனக்கவலைகளும், துன்பமும் தோன்றியிருக்க, ஒரு வார்த்தையையாகிலும் சந்தேகிக்க அவர் விட்டு விடுவாரா என்ன? அப்படியானால் அவர் அநீதியுள்ளவர் என்று அர்த்தம். ஹு... ஹும்.... பாருங்கள்? அது சரியல்ல. அப்படிச் செய்கிறவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட் படவேண்டும். இங்கு ஒரு மனிதன் நின்று ஒரே ஒரு வார்த்தையைச் சந்தேகித்ததனால் மனக்கவலை உண்டாகக் காரணமாயிருக்கிறான். பின்பு, அநேக ஆண்டு காலமாக ஜனங்கள் பெற்றிருந்த அனுப வங்களையும், தேவனுடைய வார்த்தைக்காக அவர்கள் உயிர்த் தியாகம் செய்ததைக் குறித்தும், அவர் வேதத்தில் எழுதிவைத் துள்ளார். அப்படியிருக்க ''பரவாயில்லை, நீ அதை புசிக்கலாம். உன்னை எப்படியும் சேர்த்துக் கொள்வேன்'' என்று அவர் கூறுவாரா என்ன? தேவன் பட்சபாதமில்லாதவர். ஆனால்...? பாருங்கள்? ஜனங்களிடம் அவர் பட்சபாதம் காண்பிப் பதில்லை. இப்பொழுது கவனியுங்கள். 238இப்பொழுது கவனியுங்கள், தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்ததினால் உண்டான பாவத்திலிருந்து வெளியே பிறந்த 'சரீரத்துக்கு அவர் தலையாயிருக்கிறார்.'' அது தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கும் எல்லா ஸ்தாபனங்களையும், எல்லா கோட்பாடுகளையும் புறம்பே தள்ளிவிடுகிறது. தேவனுடைய வார்த்தை என்பது அவர்தாமே - ஜீவனுள்ள வார்த்தை, பாருங்கள்? வார்த்தைக்கு மாத்திரமே ஜீவன் உள்ளது. வேறெந்த வார்த்தையும் கலப்பினமாகும். அது எவ்விதமாக தோற்றமளித்தாலும் சரி, அது வார்த்தையல்ல. வார்த்தை அதன் சொந்த ஜீவனையே உற்பத்தி செய்கிறது. அதை ஏவாள் தனிப்பட்ட அறிவிற்காக பண்டமாற்று முறையில் ஒன்றையொன்று மாற்றிக் கொண்டாள். சபை எப்படியிருக்கிறது என்று பாருங்கள், இன்றைக்கு, ஏதோ ஒரு மனிதனின் புரிந்து கொள்ளுதல் மூலமாக. . . மோசே தேவனை எரியும் முட்செடியில் சந்திக்கும் வரை, தேவனைக் குறித்த மகத்தான அறிவைப் பெற்றிருந்தான். ஆனால் அந்தவிடத்தில் அவனுடைய தோல்வி என்னவென்பதைக் கண்டு கொண்டான். ஸ்தாபனம் கொண்டிறா ததை வார்த்தை கொண்டிருக்கிறது. “தலையாகிய அவர் உயிர்த்தெழுதலின் முதற்பலனானவர்'' 239நீங்கள் விரும்பினால் இந்த “வெளிப்பாட்டைக்' குறித்து நாம் தொடர்ந்து சிந்திக்கலாம் - (சபையார் 'ஆமேன்'' என்கின்றனர்- ஆசி) சரி, இன்னும் சிறிது நேரம். அவரே உயிர்த்தெழுதலின் முதற்பலனானவர். அது சரியா? (சபையார் ஆமென்“ என்கின்றனர்- ஆசி). கவனியுங்கள். அப்படியானால் அவர் என்ன? '' அவர்தான் தம்முடைய சபையாகிய , மணவாட்டி சரீரத்தின் தலை”. அப்படியானால் மணவாட்டியாகிய சரீரம் தலையைப் பின்தொடர வேண்டும். ஏனெனில் அது உயிர்த்தெழுதலின் பாகமாகவும், அவருடைய இரகசியத்தின் பாகமாகவும் அமைந் துள்ளது. அதைப் பின் தொடராமல் இருப்பது அதனால் கூடாத காரியம். அது தேவனுடைய இரகசியத்தின் ஒரு பாக மாக அமைந்துள்ளது. எப்படி தேவன் தம்மை வெளிப்படுத்தி, தமது வார்த்தையினால் அதை எழுப்பினாரோ, அது போன்று அவர் சபையை வெளிப்படுத்தி, அதே வார்த்தையினால் அதை எழுப்பு கிறார். அது அவருடைய மூவகை இரகசியத்தின் ஒரு பாகமாக அமைந்துள்ளது. 240தலை எவ்விதமாக கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப் பட்டதோ, அது போன்று சரீரமும் அதைப் பின் தொடர்ந்து ஏதேனுக்குச் செல்லவேண்டும். மணவாளன் குடும்பத்துக்கு தலைவராயிருக்கிறார், அந்த மனிதன், மணவாளனின் சரீரமாயுள்ள மணவாட்டி அவரைப் பின்தொடர வேண்டும். ஏனெனில் அவர் தலையாயிருக்கிறார். அந்த தலை வெளிப்பட்டு, நித்திய ஜீவனுடன் திரும்ப வந்திருக்கின்றது. சரீரம் அதைப் பின்தொடர்ந்துதான் செல்ல வேண்டும், ஏனெனில் மறுபடியும் அது கணவன் மனைவி, ஆமென்! அவருடைய சரீரமாகிய அதே வார்த்தையினால் நீ கர்ப்பந்தரிக்கப்பட்டுள்ளவரைக்கும் - அவருடைய வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளும்போது, அவருடைய சரீரத்தை நீ வகித்துக் கொண்டு அவருக்குள் வந்து விடுகிறாய் - ஸ்தாபனக் கோட் பாடுகளை ஏற்றுக் கொள்வதனால் அல்ல, வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்போது .... இன்று பிற்பகல் பேசுவதற்கு அது நல்ல ஒருபொருளாய் அமையுமல்லவா? ஹு...ஹும். அது மிகவும் அருமையாயிருக்கு மல்லவா? பாருங்கள்? அது என்னவாயிருக்குமென்று சற்று யோசித்துப் பாருங்கள். ஆதலால் சரீரமானது அடையாளம் கண்... இதைக் காணத் தவற வேண்டாம். எனவே சரீரமானது வார்த்தையைத் தவிர வேறெந்த தலைமையையும் அங்கீகரிக்காது. ஏனெனில் அந்த - அந்த தலையானது சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. வார்த்தைதான் தலையாயுள்ளது. ஆகவே அது அதே வார்த்தை, ஒரே தலைத்துவம்! எனவே ஸ்தாபனங்களும், பரிசுத்த பிதாக்களும், மற்றவைகளும் மரித்த சாணமாக காணப்படுகிறது. ஒரு தலைத்துவம் மாத்திரமே உள்ளது, அது கிறிஸ்து. சரீரம் ஒன்றை மாத்திரமே வார்த்தையை மாத்திரமே, அடையாளம் கண்டு கொள்கிறது. 241இப்பொழுது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே யாராகிலும் சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளதை எனக்குக் காண்பியுங்கள். நீங்கள் எதை அடையாளங்காண்கிறீர்கள். இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகும் ஆயிரக்கணக்கானவரிடமும் கூட நான் பேசிக் கொண்டி ருக்கிறேன். இந்த ஒலிநாடா ஊழியம் எங்களுக்கு உலகெங்கிலும் உள்ளது. நீங்கள் எந்த நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருக் கிறீர்கள்? 'மனிதன் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லையென்று தேவனுடைய வார்த்தை உரைக்கின்றது. கிறிஸ்துவின் பேரில் உங்களுக்குள்ள விசுவாசத் தைக் காண்பிக்கும் பொருட்டு நீங்கள் ஞானஸ்நானம் பெற்று, கோட்பாட்டின் நாமத்தை தரித்துக் கொண்டால், நீங்கள் கலப்பின முள்ளவர்கள். நீங்கள் சரியாக அந்த சபையைப் போல், அவர்களு டைய போதகங்களைப் போல நீங்கள் இல்லையென்றால்..... 242அப்படியானால் கத்தோலிக்க ஜனங்களே, ஆதி சபையைப் போலவே நீங்கள் இருந்து, அவர்களுடைய போதகங்களை நீங்கள் அப்படியே கைக்கொள்ளாமல், அதற்கு பதிலாக போப்பின் ஆதிக்கத்தின் கீழ் வந்து, அவர் கிறி... பேதுரு வழி வந்தவர் என்று நீங்கள் எப்படி கூறமுடியும்? கத்தோலிக்க சபை ஆதியில் அளிக்கப் பட்ட வார்த்தைக்கு முரணாய் போதிக்கிறதே! தேவன் அந்த ஆதி சபையை அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதி படுத்தினார். அதே வார்த்தை இன்று, அதே சுத்தமான விதத்தில், கொண்டுவரப்பட்டு, அங்கே அவர் கொண்டிருந்த அதே உயிர்த்தெழுதலைக் காண்பித்து, தேவன் தம்முடைய ஜனங்களின் மத்தியில் ஜீவித்து, அதே காரியங்களைச் செய்கையில், அப்படி யானால் நீங்கள் எப்படி ரோமாபுரியிலுள்ள தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடியும்? நமது தலைமைத்துவமோ பரலோகத்திலிருக்கிறது. நான் மரித்தால் ரோமாபுரிக்கு செல்லப் போவதில்லை. பரலோகத்துக்குச் செல்லப் போகிறேன். பாருங்கள்? நமது தலைமைத்துவம் பரலோ கத்திலிருக்கிறது. 243மனைவி கணவனைப்பின் தொடருவது போல சரீரம் தலையைப் பின் தொடர வேண்டும். ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. அவன் ஏவாளுடன் நடந்து சென்றான். ஏவாளே வஞ்சிக்கப்பட்டாள். அவள் மீறுதலில் பங்கு கொண்டாள். இல்லாவிட்டால் கர்த்த ராகிய இயேசு கல்லறையிலிருந்து வெளிவந்த போது, முழு சரீரமும் உயிர் பெற்று அவருடன் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் தம்முடைய சரீரமாகிய அவளை மீட்கவேண்டியதாக இருக்கிறது. அவரிடம் வரவேண்டுமென்றால் அவள் மீட்கப் பட்டாக வேண்டும். (சகோதரன் பிரன்ஹாம் இரண்டு முறை தன் கரங்களை சேர்த்து தட்டுகிறார் - ஆசி) அதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) பாருங்கள்? அப்பொழுது அது நிகழவில்லை. மீட்பு இன்னும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. 244இப்பொழுது முத்திரைகளை உங்களால் காணமுடிகிறதா? அவர் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து கொண்டு, மீட்டுக் கொண்டிருந்தார். என்றாவது ஒரு நாளில் அவர் மீட்ட இந்த புஸ்தகத்தை பெற்றுக்கொள்ள அவர் வருகிறார். ஆகவே இந்த புஸ்தகத்தில் உள்ள எல்லாம் அவராக இருக்கும், ஏனெனில் அது விசுவாசியாகும், புஸ்தகத்தில் உள்ள வார்த்தைகள், அந்த வார்த்தை அவர் ஆகும். அதிலுள்ள எல்லாம், அவர் இந்த மீட்பின் புஸ்தகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக புறப்பட்டு வருகிறார். அவர்களுடைய பெயர்கள், உலகத்தோற்றத்துக்கு முன்பே அவர் ஆட்டுக் குட்டியாக அடிக்கப்பட்ட போது, அந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டன. இன்றைக்கு அவர் இங்கே, தம்முடைய வார்த்தையில் அவர் தாமே அங்கே செய்த அதே காரியத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவள் எந்தப் பேராயர் தலைமையையும் வேறு யாருடைய தலைமையையும், வேறொரு தலைமைத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இல்லை, ஐயா - அவள் ஒரு தலைமைத்துவத்தை மாத்திரமே ஏற்றுக் கொள்கிறாள். அதுதான் கிறிஸ்து. கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். எனக்கு அது அதிக பிரியம். ஹூம்! ஆம், ஐயா! 245தலையானது கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது போல. அவருடைய சரீரமும் அவரை ஏதேனுக்குப் பின் தொடர வேண்டும். எனவே சரீரம் வார்த்தையின் தலைமைத்துவத்தை தவிர வேறெந்த தலைமைத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளாது. எந்த ஸ்தாபனமும் அதற்குள் எதையும் நுழைத்து விட முடியாது. “எவனாகிலும் அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அல்லது அதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால்”. அதிலிருந்து அவர்கள் எடுத்துப்போட்டனர். நீங்கள் கலப்பினமாகி அங்கேயே மரித்துவிட்டீர்கள். அவள் விசுவாசிப்பதாக உரிமை பாராட்டும் அதே வார்த்தைக்கு விரோதமாக ஆவிக்குரிய விபசாரம் செய்து, அந்த விபசாரத்தின் அசுத்தத்தினால் நிறைந்த கோப்பையை கையில் பிடித்திருப்பதாக சாட்சி பெற்றிருக்கிறாள். பாருங்கள்? 246எனவே, ஒன்று வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் ஒன்றுமில்லை. அது உண்மை. வார்த்தையாகிய அவர் ... அது சரியென்று உங்களுக்கு எப்படி தெரியும்? வார்த்தையாகிய அவர் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாருங்கள்? சரி வர உறுதிப் படுத்தப்படும் வார்த்தையாகிய அவர்தான் சபைக்குத் தலைத் துவம்... அவரே தலையாகிய வார்த்தை . அவர் சரிவர அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, அவருடைய சபையில் தனிப்பட்ட நபரில் இருப்பதை அவருடைய ஆவியானவரே வெளிப்படுத்தி, முழு சரீரத்திற்கும் அதை நிரூபிக்கிறார். அப்பொழுது உங்களுக்கு ஸ்தா பனப் பிரமாணங்கள் எதுவும் அவசியமில்லை. ஸ்தாபனங்கள் அழிந்துபோயின. ஆனால் தலைமைத்துவம் தாமே, தனிப்பட்ட அடையாளங்கள் மூலமாக சரீரத்தில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, பாருங்கள், தம்மைத்தாமே அடையாளங்கண்டு கொண்ட, சரீரத்திற்கு தலைமைத்துவத்தை நீருபிக்கின்றது. அப்பொழுது நாம் தேவனுடைய வார்த்தையாகிய கிறிஸ்து என்னும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே தலைமைத்துவத்தின் கீழ் இணைக்கப்படுகிறோம் - எந்த சபையின் கீழிலும் அல்ல. 247அப்படியானால், நம்முடைய தலைமைத்துவம் ஒரு இராஜ்ஜியமாக இருக்கிறது. “தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது” என்று இயேசு வேதத்தில் கூறியுள்ளார். அந்த இராஜ் ஜியம்! நாம் ஒரு ஸ்தாபனம் அல்ல - நாம் ஒரு ராஜ்யத்தை சேர்ந்தவர்கள். அந்த ராஜ்யம் தேவனுடைய வார்த்தையாக அமைந் திருந்து, நமது வாழ்க்கையில் ஆவியும் ஜீவனுமாயிருந்து, அந்த நாளில் வார்த்தையும் தேவனும் ஒன்றாயிருந்து செய்தது போல, இந்த நாளின் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்று கிறது. இன்றைக்கு அவருடைய சபையில் வார்த்தையும் தேவனும் ஒன்றாயிருந்து, மீட்கப்பட்ட சரீரத்திற்கு தலைத்துவமாக அமைந்து, இக்கடைசி நாளின் செய்தியை கொண்டு வந்து, மரித்தோரை உயிரோடெழுப்பி, தொடக்கத்திலே ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் இருந்த நிலைக்கு அவர்களை திரும்பிச் செல்ல, மறுபடியும் திரும்பக் கொண்டு செல்கிறது. தேவனைக் குறித்த மூவகை இரகசியம், அவருடைய சரீரம்,கூர்ந்து கவனியுங்கள், நிழல்களாக இருந்த, பழைய இஸ்ரவேல்.... 248நான் அதன் பேரில் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேனா? (சபையார் “இல்லை'' என்கின்றனர்- ஆசி) இன்னும் அதிகமாக என்னை... இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது இன்னும் சுமார் இருபது பக்கங்கள் உள்ளன. பாருங்கள்? பாருங்கள்? ஆனால் இப்பொழுது நான் இன்னும் சிறிது நேரம். அதற்கு பின்பு - பின்பு நீங்கள் செல்லலாம். கர்த்தருக்குச் சித்தமானால் இதற்குப் பிறகு அடுத்த கோடைகாலம் தான் சந்திப்போம். பாருங்கள்? 249இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள் - பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேல் ஜனங்களைப் போல் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுதல். உங்களுக்குப் புரிகிறதா? பழைய ஏற்பாட்டின் இஸ்ரவேலரைப் போன்று : ஒரே தேவன், அக்கினி ஸ்தம்பத்தினால் உறுதிபடுத்தப்பட்டு, தம்மை வார்த் தையாக ஒரு தீர்க்கதரிசி மூலம் வெளிப்படுத்துதல். அதே தேவன், அதே அக்கினி ஸ்தம்பம். அதேமுறை -அவர் தமது வழிகளை ஒருபோதும் மாற்றிக் கொள்வதில்லை. அது... அது அவ்வளவு பிழையின்றி அமைந்துள்ளது. இல்லையா? பாருங்கள்? (சபையார் “ஆமென்' என்கின்றனர்- ஆசி) 250ஒரே தேவன்! இஸ்ரவேலருக்கு எத்தனை தெய்வங்கள் இருந்தன? (சபையார் 'ஒன்று' என்று பதிலளிக்கின்றனர். -ஆசி). மணவாட்டிக்கு எத்தனை இருக்கின்றன (சபையார் 'ஒன்று' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). எத்தனை இனிமேல் இருக்கும்? (சபையார் 'ஒன்று' என்று பதிலளிக்கின்றனர் - ஆசி). நிச்சயமாக, நிச்சயமாக. பார்த்தீர்களா? பார்த்தீர்களா? பரிசுத்த ஆவியின் தலைமை யின் கீழ் அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய மோசேயின் நாட்களில் அது அக்கினி ஸ்தம்பமாக இருந்தது. அவன் அக்கினி ஸ்தம்பத் தினால் வழி நடத்தப்பட்டான். அது சரியா? (சபையார் ஆமென்'' என்கின்றனர் - ஆசி) சரி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு பயணம் செய்தல். 251ஆகவே கிறிஸ்தவ காலத்திலும் ஒரே தேவன் அக்கினி ஸ்தம்ப வடிவில் பவுல் என்று அழைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசிக்கு தரிசனமானார். ஒரு கூட்டம் ஜனங்களை தமது நாமத்திற்காக தெரிந்துகொள்ள, அவன் புறஜாதியாரிடம் அனுப்பப்பட்டான். அது சரியா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்-ஆசி ) இக்கடைசி நாட்களிலும் அவர் அதே விதமாக இறங்கி வந்து, அதே அடையாளத்தினாலும், அதே அற்புதத்தினாலும், அதே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அதே சுவிசேஷத்தினாலும் அதே வார்த்தையினாலும், அதே தோற்றத்தினாலும் தம்மை உறுதிபடுத்து கிறார் (பாருங்கள்). 252அவருடைய சரீரம், அவர் மாற்கு 16ல் வாக்களித்துள்ள கிரியைகளைச் செய்யும். அவருடைய சரீரம் கல்லறையில் தங்கிவிட வில்லை. அது உயிர்த்தெழுதலில் அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது. உங்களுக்குப் புரிகிறதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் -ஆசி) அதே போன்று அவருடைய சரீரமாகிய அவருடைய விசுவாசபிள்ளைகள், அவர் வரும்போது கல்லறையில் தங்கி விடமாட்டார்கள். அவர்கள் அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள். ஏனெனில் தமது சரீரமாகிய மணவாட்டியை உயிரோடெழுப்ப வேண்டுமெனும் நோக்கத்திற்காகவே அவர் மரித்தார். அது அவருடைய சரீரமாகஅவருடைய வார்த்தையாக - இருப்பதால் அவருடன் அடை யாளம் கண்டு கொள்ளப்படும். அது ஸ்தாபனங்களினின்று விலகி, அவருக்கு முழுவதுமாக தன்னை ஒப்புவித்துள்ளது. அவர் வார்த்தையாக இருக்கிறார். பாருங்கள்? நாம் மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள் வதற்காக உயிர்த்தெழுதலின் முதற்பலனானவர் நம்முடன் கூட இருந்து, நாம் அவருடன் அடையாளம் கண்டுகொள்ளப்படுகி றோம். நாம் அவருக்கு சிறைப்பட்டவர்கள்! ஆகவே தேவன் தம்முடைய தனிப்பட்ட தலைத்துவத்தினாலே அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதையும், அன்று அவர் செய்த அதே கிரியைகளை இன்று சபையின் மூலம் செய்து நிரூபித்து வருகிறார். அவர் என்னிலும், நான் அவரிலும், உங்களுக்குள்ளும்”. அதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அது உண்மை . 253அவருடைய சரீரம் கல்லறையில் விடப்படவில்லை. அது உயிர்த்தெழுதலில் அவருடன் அடையாளம் கண்டுகொள்ளப் பட்டது - இன்று அவர் இருப்பது போலவே. கவனியுங்கள், இது தான் அதன் அர்த்தம் : அவருடைய வார்த்தை (அதுதான் அவர்) உயிர்த்தெழுத் தொடங்கிவிட்டது. லூத்தரின் காலத்திலும், வெஸ்லியின் காலத்திலும் (பாருங்கள்?) வழிவழியாக வந்த வார்த்தை முழு வல்லமையுடன் இன்று உயிர்பெறத் தொடங்கி விட்டது. அது அப்பொழுது நகரத் தொடங்கியது. அது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்து, இப்பொழுது முழுவதுமாக அடையாளம் கண்டு கொள்ளும் நிலைக்கு வந்து விட்டது. பாருங்கள்? கவனியுங்கள், இப்பொழுது சரீரத்திலுள்ள அந்த ஜீவன், எடுத்துக் கொள்ளப்படுதல் அருகாமையிலுள்ளது என்பதை உறுதிபடுத்துகிறதாயுள்ளது. தலையும் சரீரமும் ஒன்றாக இணைந்து, அவருடைய தோற்றத்தின் முழுமை வெளிப்படுவதை நீங்கள் காணும்போது, தலை சரீரத்தை ஏற்றுக் கொள்ள சமயமாகி விட்டது என்பதை அது காண்பிக்கிறது. “நாடுகள் உடைகின்றன., இஸ்ரவேல் விழித்தெழும்பு கிறாள்...' 254நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? அவர் தமது சரீரத்திற்கு ஜீவனைக் கொடுக்கத் தொடங்கி விட்டார் - (ஏன்?) அது அவர் மீட்ட அந்த ஒன்றாகும்.- மத்தியஸ்த ஊழியம் நடைபெறு கின்றது, எடுத்துக் கொள்ளப்படுதலை அவர் உறுதிபடுத்துவதற்காக தமது ஜீவனை அவர் சரீரத்துக்குக் கொண்டு வருகிறார். ஞாபகம் கொள்ளுங்கள், இப்பொழுது, கடைசி நாளில்... நான் - நான், சற்று நேரம் என்னுடன் பொறுத்துக்கொண் டால் நலமாயிருக்கும். இதை நீங்கள் இழந்து விட நான் விரும்பவில்லை. நான் - நான், ஆகவே நான் கொண்டிருக்கிறேன் ..... இவ்வளவு தூரம் வந்த பிறகு, இதையும் நான் ஒலிநாடாவில் பதிவு செய்தாக வேண்டும். இன்னும் அதை குறித்து சிலவற்றை நான் பார்க்க விரும்பினால், இன்னும் ஒரு மகத்தான குறிப்பை கூற விரும்புறேன். 255இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது இந்த மகத்தான காரியம். இதை கவனியுங்கள். இப்பொழுது இங்கே தான் நாம் கவனிக்க விரும்புகிறோம். நினைவில் கொள்ளுங்கள், கடைசி நாட்களில், சரியாக திரும்பிச் சென்று முதலாம் நாளை உறுதி படுத்தும். பாருங்கள்? ஆதாமும் ஏவாளும் - கணவனும் மனைவியும் - பாவம் எதுவுமில்லை, ஜீவன்! - பின்பு வீழ்ச்சி. கவனியுங்கள், கூர்ந்து கவனியுங்கள். அவளைத் திருப்பி. கவனியுங்கள், அதற்கு காரணம் யார்? லூசிபர் முதன்முறை யாக அவன் செய்த அதே காரியத்தையே இப்பொழுதும் லூசிபர் செய்து வருகிறான். புறஜாதிகளின் ராஜ்யம் தொடங்கப்பட்டு, நெபுகாத் நெச்சார் அதற்கு ராஜாவாயிருந்தான். அந்த புறஜாதியார் ஒரு தீர்க்கதரிசி யினால் உறுதிப்படுத்தப்பட்டனர். அந்த தீர்க்கதரிசியால் அன்னிய பாஷைகளுக்கும், தரிசனங்களுக்கும் சொப்பனங்களுக்கும் அர்த்தம் கூறமுடிந்தது. அது மேதியர் - பெர்சியர், இரும்பு இவை களின் வழியாக எவ்வித மாற்றமுமில்லாமல் கடந்து வந்து, இப்பொழுது பாதங்களில் அவ்விதமாகவே இருந்து வருகிறது - புறஜாதிகளின் ராஜ்யம். 256கவனியுங்கள், லூசிபர் முதலில் செய்ததையே இந்த கடைசி நாட்களிலும் செய்து வருகிறான். லூசிபர் என்ன செய்தான்? முதலாவது, லூசிபர் தேவனுக்கும் மனிதனுக்குமுள்ள ஐக்கியத்தை பிரித்துவிட்டு, தனக்கென்று ஒருங்கிணைந்த ஒரு ராஜ்யத்தை (United Kingdom) உண்டாக்கிக் கொள்ள முனைந்தான். மிகாவேல் கிறிஸ்து கொண்டிருந்த ஒரு மகத்தான இராஜ்ஜியத்திற்கும் மேலான ஒன்றை. அந்த ராஜ்யத்தைக் காட்டிலும் அதிக பளிங்குள்ளதாகவும் நாகரீகமுள்ள தாகவும் இருக்க வேண்டு மென்று அவன் விரும்பினான். உங்களுக்குப் புரிகிறதா? (சபையார் 'ஆமென்'' என் கின்றனர்.- ஆசி) இப்பொழுது உங்களுக்குப் புரியாவிட்டால் உங்கள் கைகளையுயர்த்துங்கள். நான் மறுபடியும் அதைக் கூறுகிறேன். பார்த்தீர்களா? தொடக்கத்தில் லூசிபர், கிறிஸ்து பரலோகத்தில் பெற்றி ருந்த ராஜ்யத்தைக் காட்டிலும் அது சிறந்த, பிரகாசமான, நாகரீகம் கொண்ட ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்று தன் இருதயத் தில் எண்ணம் கொண்டிருந்தான் (அது சரியா?). ஆயிரம் வருட அரசாட்சியில் நமக்கு மோட்டார் வாகனங்களும், ஆகாய விமானங்களும் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? பாருங்கள்? லூசிபர் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பாருங்கள். 257இப்பொழுது நுண்ணறிவு படைத்த போலிதோற்றமுடைய பெரிய ஸ்தாபனங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து அதையே செய்து கொண்டிருக்கின்றன. பாருங்கள்? அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒருவரைக் காட்டிலும் மற்றவர் மிஞ்சவேண்டு மென்று முயன்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் அவ்வளவு பளிங்கை (splendour) பெற்றுள்ள காரணத்தால், என்ன செய்வதென்று அறியாமல், கத்தோலிக்க சபையுடன் இணை கின்றனர். பாருங்கள்? லூசிபர் மறுபடியுமாக ஒரு சிறந்த ராஜ்யத்தை கட்டி, ஸ்தாபனத்தில் நம்பிக்கை கொள்ளாதவர்களை வெளியே தள்ளி, அவர்களுடைய சபை கட்டிடங்களைப் பறித்துக் கொண்டு, அதை பண்டக சாலையாக மாற்றி அமைத்து, அந்த போதகர்களின் உரிமையைப் பறித்து விடுகிறான். தேவனால் அனுப்பப்பட்ட மனிதன் எவனும் அவனுக்கு, வெளியே சென்று நோக்கிப் பார்க்கப் போதுமானது இருக்கு மானால், அவன் இதைப் பார்த்துக் கொண்டு , அல்லது இதைக் குறித்து கேள்விப்பட்ட பிறகு, ஸ்தாபனத்தில் தங்கியிருக்க மாட்டான் - பாருங்கள்? இதை நான் குற்றமாகக் கூறாமல், அவர்கள் அறிய வேண்டுமென்று உண்மையைக் கூறுகிறேன். 258கவனியுங்கள், இந்தக் கடைசி நாட்களில் லூசிபர் ஆதியில் செய்ததையே செய்து கொண்டு வருகிறான். அதை உங்களால் காண முடிகிறதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்- ஆசி) அதே காரியத்தைத் தான் பிசாசும் செய்து கொண்டிருக்கிறான். பிசாசு கலப்பின சபையை கட்டிக் கொண்டு வருகிறான். அந்த கலப்பின சபை, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக கலப்பின அங்கத்தினர்களால் கலப்பினமாக்கப்பட்ட, மனித அறிவினால் கலப்பினமாக்கப்பட்ட அங்கத்தினரைக் கொண்டதாயுள்ளது. அவர்கள் மறுபடியும் பிறந்த மனிதர்களாக இருப்பதற்கு பதிலாக நுண்ணறிவு படைத்தவர்களாக இருக்கின்றனர். கிறிஸ்துவின் சிறிய மந்தையைக் காட்டிலும் அதிபிரகாசமான ஒன்றை நிறுவ வேண்டுமெனும் எண்ணத்துடன், நுண்ணறிவு படைத்த ஒரு ராஜ் யத்தை அவன் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறான். பாருங்கள்? அதை முதன் முதலாக செய்தது யார்? விழுந்து போன தூதர்கள். 259இந்த விழுந்து போன தூதர்கள் தாங்கள் ஒருக்காலத்தில் சார்ந்திருந்த கிறிஸ்துவுக்கு செவி கொடுப்பதற்கு பதிலாக லூசி பருக்கு செவி கொடுத்தனர் என்று வேதம் கூறுகிறது. அது சரியா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர். ஆசி) இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். 'விழுந்து போன தூதர்கள்'' அவர்கள் எப்படிப்பட்ட தூதர்கள்? லூத்தரன்கள், வெஸ் லியன்கள், கத்தோலிக்கர்கள் பெந்தெகொஸ்தேயினர்- விழுந்து போன தூதர்களைப் போலவே இவர்களும் தங்கள் ஆதி மேன்மையைக் காத்துக் கொள்ளாமல் நிசாயாவில் லூசிபர் பெற்ற அவனுடைய முக்கிய ஸ்தாபனத்திற்கு ஒத்த ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டு விழுந்து போயினர். அவர்கள் என்ன செய்துவிட்டனர்? அவர்கள் போதகர்களைக் கொண்ட மகத்தான மதக்குழு (Ecumenical Association) ஒன்றை (வேதம் கூறிய வண்ண மாக) அமைத்துக் கொண்டு, “மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கி,'' கிறிஸ்தவ பொருளாதார முறைமை ஒன்றை (Christian economy) வகுத்துக் கொண்டுள்ளனர். அது இந்த சபைக்கும், இதைப் போன்ற மற்ற சபைகளுக்கும் கதவை அடைத்துவிடும். லூசிபர் தனது பணியில் ஈடுபட்டுள்ளதை பார்த்தீர்களா? 260நான் தேவனுடைய இரகசியத்தைக் குறித்த மூவகை வெளிப்பாட்டை உங்களுக்கு கொண்டு வர முயன்று கொண் டிருக்கிறேன். அவர்கள் என்ன செய்தனர்? ஏவாளைப் போன்று அவர்கள் மனித விவேகத்திற்கும், கல்வியறிவுக்கும் தங்களை விற்று போட் டனர் - விழுந்து போன தூதர்கள் செய்தது போன்று. வெஸ்லி தேவனுடைய மனிதனாக இருந்தார். ஆனால் அவருக்குப் பிறகு என்ன நேர்ந்தது? விழுந்து போன தூதர்கள் அதில் நுழைந்து கொண்டனர். தூதர்கள் முதலில் என்னவாயிருந்தனர்? அவர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், ஆனால் லூசிபரின் ஞானத் திற்கு அவர்கள் விழுந்து போயினர். அவர்கள் என்னவாயினர் என்று பார்த்தீர்களா? - விழுந்து போன தூதர்கள். கிறிஸ்துவினு டைய உண்மையான வெளிப்படுதல்வருவதற்கு முன்னதாக, தேவனுடைய மனிதர்கள் சத்தியத்தை உலகில் பரப்பி வந்தனர். ஆனால் விழுந்து போன தூதர்கள் அவர்களுக்குப் பின் தோன்றி, அதைக் கைப்பற்றி, ஸ்தாபனங்கள் உண்டாக்கிக் கொண்டனர். அதன் காரணமாகத்தான் ஏழு முத்திரை இரகசியத்தின் வெளிப்பாடு திறக்கப்படவேண்டியதாயிருந்தது. இப்பொழுது உங்களால் காண முடிகிறதா? லூத்தரன்களும், வெஸ்லியன்களும், பெந்தெகொஸ்தேயினரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட சத்தியத்தில் நின்றிருந்தால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும். ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? 261இப்பொழுது நடக்க வேண்டிய ஒரே ஒரு காரியம் மாத்திரமே இருக்கின்றது. இக்கடைசி காலத்தில் ஒரு செய்தி. அதை தொடர்ந்து வேறொன்றும் வரமுடியாது. இப்பொழுது மத ஐக்கிய (ecumenical) உலகம் ஒரு பலத்த அரசாட்சி உண்டாக்கிக் கொண்டுள்ளதால், அதை தொடர்ந்து வேறெந்த ஸ்தாபனமும் தோன்ற வழியில்லை. ஒன்று அதில் சேர்ந்துவிட வேண்டும். இல்லையேல் அதற்கு புறம்பாயிருக்க வேண்டும், கனி இப்பொழுது மரத்தின் உச்சியில் காணப்படுகின்றது. வெளிச்ச மானது அந்த முன்குறிக்கப்பட்ட கனியின் மேல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவள் கிறிஸ்துவைப் போன்ற கனியாக பழுத்து, கிறிஸ்துவுக்குள் இருந்த அதே கனிவையும், இனிமையையும், ஆவியையும் அவள் தன்னில் கொண்டிருக் கிறாள். நீங்கள் அதைப்புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். பாருங்கள். ஒரே நாளில் அதிகமாக உங்களுக்குள் திணிக்க நான் - நான் முயற்சிக்கிறேன். அதனால் உங்களைக் களைப்புறச் செய்கிறேன். (சபையார் “இல்லை” என்கின்றனர் - ஆசி). 262பாருங்கள், அவர்கள் அறிவாராய்ச்சி திறன்களுக்கு விற்றுப் போட்டனர், ஸ்தாபன அறிவாராய்ச்சி திறன்களுக்கு தங்களை விற்றுப்போட்டனர். ''நான் மாத்திரம் அதில் சேர்ந்திருந்தால்! நகராண்மை தலைவர் மேயர் அங்குதான் செல்கிறார்.'' பாருங்கள்? “நான் மாத்திரம் மெதோடிஸ்டாக அல்லது பிரஸ்பிடேரியனாக இருந்தால்!” அவர்கள் எந்நிலையை அடைந்து விட்டனர் என்று பாருங்கள். அவர்கள் மரத்திலிருந்து வெட்டி போடப்பட்ட கிளை கள் என்று சற்று முன்புதான் விவரித்தேன். அவர்கள் மரித்தவர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை. அப்படி யிருந்திருந்தால் அவர்கள் அதே ஜீவனை அவர்களில் தோன்றச் செய்திருப்பார்கள், அவர்கள் அவருடன் இணைக்கப்பட்டிருக்க வில்லை . அவர்கள் - அவர்கள் எலுமிச்சம் பழத்தைப் போலிருக்கின்ற னர். எந்த எலுமிச்சை மரத்திலும் எலுமிச்சம் பழம் காணப்படும். ஆனால் ஒரு ஆரஞ்சு மரத்தில் திராட்சை செடியை ஒட்டுபோட்டுப் பாருங்கள். அது ஆரஞ்சு மரத்தின் சத்தைக் கொண்டு வந்து, அதற்கேற்ற திராட்சை பழங்களைத்தான் தரும். நீங்கள் எலுமிச்சை செடியை அந்த ஆரஞ்சு மரத்தில் ஒட்டு போட்டுப் பாருங்கள். அது ஆரஞ்சு மரத்தின் சத்தைக் கொண்டு வளர்ந்து, அதே சமயத்தில் புளிக்கும் எலுமிச்சம் பழங்களைத்தரும். இன்றைக்கு ஸ்தாபனங்களும் அவ்வாறே சபை என்னும் பெயரில் வளர்ந்துவருகின்றன. ஆனால் மணவாட்டி மாத்திரமே அந்த மூலமரம். அவள் மூல ஆவியைக் கொண்டிருக்கிறாள். கிறிஸ்துவினிடமிருந்து மாத்திரமே வெளிப்பாடு வருகின்றது - ஸ்தாபனங்களிலிருந்து அல்லகிறிஸ்துவினிடமிருந்து. கவனியுங்கள் 263ஸ்தாபனங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? லூசி பரைப்போல் தங்களை உயர்த்திக்கொள்ள முனைகின்றன. அவர்கள் தங்களை மணவாட்டியென்று அழைத்துக் கொள்கின்றனர். அவர் கள் கள்ளமணவாட்டி (வெளிப்படுத்தல் 17ல் நாம் அதைப் பார்த் தோம்). அவர்கள் கிறிஸ்துவின் சிறுமந்தைக்கு மேல் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்புகின்றனர். லூசிபர், வெளிப்படுத்த லினால் தோன்றிய எளிய தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத் துக்கு மேலாக தன்னை உயர்த்திக்கொள்ள வகை தேடுகிறான். அவன் வேத கல்லூரி கல்வியையும், வேததத்துவத்தையும் அவர்களுக் களித்து, அவனை அதன்மூலம் உயர்த்திக் கொண்டுள்ளான். எனவே நீங்கள் அவர்களுடைய குழுவைச் சேர்ந்திராவிட்டால், நீங்கள் ஒன்று மற்றவர்கள் என்று அவர்கள் கருதுகின்றனர். (ஒலிநாடா வில் காலி இடம் -ஆசி)... 264ஆதியில் லூசிபர் செய்தது போன்று லூசிபர் ஏவாளிடம் கூறின அதையே, அவர்கள் ஜனங்களிடம் கூறுகின்றனர்: “நிச்சய மாக தேவன் நம்மை ஏற்றுக் கொள்வார். நாங்கள் ஏழைகளுக்கு உணவு வழங்குகிறோம்.'' அது நல்லதுதான். ”நிச்சயமாக அவர் நம்மை ஏற்றுக்கொள்வார். நாம் ஒரு மகத்தான ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றாவோம். நாம் ஒரு அழகு மிக்க சபை. ஏன், நம்முடைய மகத்தான கட்டிடங்களைப் பாருங்கள்! நமது அங்கத்தினரின் எண்ணிக்கையைப் பாருங்கள்! அது லட்சக்கணக்கில் உள்ளது. நிச்சயமாக தேவன் இக்கூட்டம் ஜனங்களை புறக்கணிக்கமாட் டார்!'' என்கின்றனர். காயீன் அதைத்தான் செய்தான். அவன் உழுது, பாடுபட்டு பயிரிட்டு விளைந்த அழகான கனிகளை தேவனுக்கு படைத்தான். ஆனால் ஆட்டுக்குட்டியின் எளிய இரத்தத்தை அவன் நிராகரித் தான். 265ஏதோ ஒன்றை அல்லது ஒரு தனிப்பட்ட வெளிப்பாட்டை அல்லது ஏதோ ஒன்றை உயர்த்தவே இதை நான் கூறிக் கொண்டிருக்கிறேன் என்று மனிதரும் ஸ்திரீகளும் நினைக்கா மலிருக்க, தேவனே இரக்கம் பாராட்டும். நான் உங்களுக்கு சத்தியத்தை மாத்திரமே எடுத்துரைக்கிறேன். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை உங்களால் காணமுடிய வில்லையா? நான் உரத்த சத்தமாகவும் கடினமாகவும் பேசுகிறேன். நீங்கள் ஆணி அடிக்கும்போது, அது இறுகப் பற்றி பயனையளிக்கும் அளவுக்கு அதை ஓங்கி அடிக்க வேண்டும். இப்படி பேசினால்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். பாருங்கள்? 266அவர்கள் ஜனங்களிடம், “நிச்சயமாக... இவ்வளவுகாலம் நிலை நின்ற நமது மகத்தான் கத்தோலிக்க சபை, மெதோடிஸ்டு சபை ஏற்றுக் கொள்ளப்படாது என்றா சொல்லுகிறீர்கள்? நமது முற்பிதாக்களைப் பாருங்கள்'' என்கின்றனர். பாருங்கள்? ஆனால் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை அவமாக்கிவிட்டனர். ஏவாள் தேவனுடைய , அவருடைய ஒன்று, அவனுடைய ... அவள் ஆதாமின் உபசிருஷ்ட்டி ஆவாள் (by-product). அவள் தேவ னுடைய ஒரே ஒரு வார்த்தையை அவிசுவாசித்ததன் நிமித்தம், இவையனைத்தும் உண்டானது. 267லூசிபர் மறுபடியுமாக இன்றைக்கு தன் பணியில் ஈடுபட்டி ருக்கிறான். அந்திக்கிறிஸ்து கம்யூனிஸம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்திக்கிறிஸ்து உண்மையான ஒன்றிற்கு மிக அரு காமையில் இருந்துகொண்டு, கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அமைந்திருக்கும். கூடு மானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும் என்று இயேசு மத்தேயு 24ல் “கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களும் ” என்று கூறினார். லூசிபர் மறுபடியுமாக தேவனு டைய வார்த்தையை அவனுடைய அறிவாராய்ச்சி திறத்திற்கு எல்லை படுத்திக்கொண்டு, அவன் நினைப்பதே சரியென்று கூறி, தேவனுடைய வார்த்தையை அவமாக்கி, தேவன் மனிதனுடன் கொண்டுள்ள ஐக்கியத்தை இவ்விதமாக குலைக்கப் பார்க்கிறான். இயேசுவின் காலத்திலும் அவன் அதையே செய்தான். இயேசு, ''உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்'' என்றார். ஸ்தாபனங்கள் தங்கள் ஸ்தாபிக்கப்பட்ட மனித அறிவா ராய்ச்சி திறனால் தேவனுடைய வார்த்தையை அவமாக்கி, அது ஜனங்களிடம் பலன் தராதபடி செய்துவிட்டனர். அது உண்மை . அவர்களால் அதை காணமுடியவில்லை. இவையெல்லாவற் றையும் செய்த பிறகு, “வேதத்தில் கூறப்பட்ட தேவன் எங்கே?'' என்று அவர்கள் கேட்கின்றனர். அவர் இங்கே இருக்கிறார். அவரே வேதாகமம் - அதுதான் அவர். 268இப்பொழுது கவனியுங்கள், லூசிபர் தந்திரமாக நுழைந்து, அவன் சுய ஆதிக்கத்தையும் (Self-power), உயர்வையும் (exaltition) ஏதேனில் வாக்களித்த விதமாகவே இப்பொழுதும் செய்து, தேவன் மனிதனுடன் கொண்டிருந்த ஐக்கியத்தை முறித்துப் போட்டான். ''எங்களுடன் நீ தங்கினால், ஒரு பேராயராக வழியுண்டு; அல்லது மாவட்டப் போதகராவது ஆகலாம். அப்படியிருக்க, அப்படிப் பட்ட ஒன்றுக்கு நீ ஏன் செல்லவேண்டும்?'' பாருங்கள்? பெந்தெகொஸ்தேயினர், கத்தோலிக்கர் எல்லாருமே அப்படிக் கூறுகின்றனர். பாருங்கள்? தேவனுடைய வார்த்தைக்கும் அவரு டைய வாக்குத்தத்தத்துக்கும் புறம்பாக ஒரு மனிதன் வல்லமையை (ஆதிக்கத்தை) பெறமுடியும் என்னும் தவறான வாக்குறுதி. பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும்போது மாத்திரமே, நீங்கள் வல்லமையைப் பெறுகின்றீர்களேயன்றி ஒரு பேராயரோ அல்லது மூப்பரோ ஆவதனால் அல்ல. பாருங்கள்? லூசிபர் மறுபடியுமாக தன் பணியில் ஈடுபட்டிருக்கிறான். இந்த சபை அதை புரிந்து கொண்டுள்ளதா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள், நான் பார்க்கட்டும். (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) சரி, இனி அதிலேயே நிலைத்து பிரசங்கம் செய்யப்போவதில்லை. தேவனுடைய வார்த்தையினின்று அகன்று செல்லுதல். பாருங்கள்? 269அதை தான் லூசிபர் ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் செய் தான். கான்ஸ்டன்டைன் அரசன் அவர்களுக்கு எதை தந்தான் என்று உங்களுக்கு தெரியுமா? சபையின் காலங்களைக் குறித்து நாம் பார்த் தோம். அவர்கள் கிறிஸ்துவைத் தவிர வேறொன்றையும் பெற்றிருக் கவில்லை. அவர்கள் பழைய கட்டிடங்களிலும், கடினமான கருங் கற்களால் ஆன தரைகளிலும் ஒன்றுகூடி தேவனை ஆராதித்து வந்தனர். 'நிசாயா ஆலோசனை சங்கம்', நிசாயா ஆலோசனை சங்கத் திற்கு முன்பிருந்த காலம்', 'நிசாயா பிதாக்கள்' போன்ற புத்தகங் களை நீங்கள் படித்தால் சபையின் சரித்திரம் உங்களுக்கு நன்கு விளங்கும், அவர்களுக்கு வேறெதுவும் இல்லாமலிருந்தது. அப் பொழுது அவர்கள் நிசாயாவில் ஆலோசனை சங்கத்தைக் கூட்டி, ரோம அஞ்ஞான வழக்கங்களை கிறிஸ்தவ மார்க்கத்தில் புகுத்தி, பரிசுத்த மனிதர்', 'பேராயர்', 'போப்', போன்ற அர்த்தமற்றவை களை நியமித்துக் கொண்டபோது... கான்ஸ்டன்டைன் அவர் களுக்கு என்ன தந்தான்? வேதபண்டிதர் யாராகிலும் என்னிடம் கூறட்டும். அவர்களுக்கு அவன் சொத்துக்களைக் கொடுத்தான்; அவர்கள் விரும்பின சுயாதீனத்தை அவர்களுக்குத் தந்தான். அவர்கள் தேவனுடைய வார்த்தையை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மனிதனுடைய ஞானத்தையும், நாகரீகத்தையும் பணமாற்றம் செய்வது போல மாற்றிக் கொண்டனர். அதைத்தான் லூசிபர் ஏதேன் தோட்டத்தில் செய்தான். அவர்கள் அங்கேயே மரித்தனர். ஆனால் கடைசி நாட்களில் மணவாட்டி மரத்தில் உயிரோடெழும்பத்தக்கதாக பெந்தெகொஸ்தே சபை நிசாயாவில், ரோமில் மரித்தது. 270கவனியுங்கள், அன்று போலவே இன்றும் லூசிபர் தந்திர மாக நுழைந்து, தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பாக வல்லமை யை (ஆதிக்கத்தை ) தருவதாக கள்ளவாக்குறுதி அளித்து அவர் களுக்கு ஆசைமூட்டுகிறான். ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் அவன் அதைத்தான் செய்தான், இன்றைக்கும் அவன் அதையே உலகசபைகளின் ஆலோசனை சங்கத்தில் செய்து வருகிறான். போப், “நாமெல்லாரும் ஒன்றாக இணைவோம்'' என்கிறார். ”மதசம்பந்தமான சகோதரர் அனைவரும் என்னுடன் சேர விரும்பு கிறேன். நாமனைவரும் ஒன்று'' என்கிறார் அவர். அவர் கூறுவது சரியே. ஏனெனில் ஸ்தாபனங்களைப் பொறுத்த வரையில் நீங்க ளெல்லாரும் ஒன்று தான், ஆனால் கிறிஸ்துவின் மணவாட்டிக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. சகோதரனே, ஒரு சம்பந்த மும் கிடையாது. அப்படிப்பட்ட ஒன்றுடன் நீங்கள் தொடர்பு கொள்ளவே முடியாது. 271இப்பொழுது இந்த கடைசி நாட்களில் - மணவாட்டி மரத்தின் காலத்தில் - மூல விசுவாசம் தேவனுடைய பிள்ளைகளுக்கு திரும்ப அளிக்கப்படுமென்று வாக்களிக்கப்பட்டுள்ளது. மல்கியா 4. “இவ்வுலகம் தீக்கிரையாக்கப்படுவதற்கு முன்பு நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவன் பிள்ளைகளின் விசுவாசத்தை திருப்புவான்'' என்று தேவன் கூறியுள்ளார். அது முதலாம் எலியாவல்ல. இல்லை, இல்லை. நாம் எலியாவின் சால்வையைக் குறித்தும், கம்பளங்களைக் குறித்தும் இங்கு பேசவில்லை. நாம் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே போதிக்கிறோம். தேவன் அப்படித்தான் கூறினார். இன்றைக்கு நம்மிடையே எத்தனையோ இந்த எலியா மற்றும் அந்த எலியா இருப்பதாக கூறப்படுகிறது. அவை யாவும் அர்த்த மற்றவை அது-அது... நமக்குத் தெரியும். அதைக் குறித்து நான் பேச வரவில்லை. ஆவிக்குரிய சிந்தை கொண்ட உங்களுக்கு அது நன்றாய் விளங்கும். நேரம் கடந்து கொண்டே செல்கிறது. இவையனைத்தையும் நாம் ஒலிநாடாவில் பதிவு செய்ய முடியாது. இக்கடைசி நாளுக்கென்று அளிக்கப்பட்டுள்ள வாக்குத் தத்தம்... 272இயேசு மத்தேயு 11ம் அதிகாரத்தில், அல்லது 6ம் அதிகாரத் தில் - இல்லை, 11ம் அதிகாரம் 6ம் வசனம் என்று நினைக்கிறேன். யோவான்ஸ்நானன், வருகிறவர் அவர்தானா என்பதை அறிந்து கொள்ள, தன் சீஷர்களை இயேசுவிடம் அனுப்பினபோது, இயேசு யோவான் ஸ்நானனைக் குறித்து ஜனங்களிடம், “எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? ஒரு - ஒரு - ஒரு காற்றினால் ... காற்றினால் அசையும் நாணலையோ? இன்னதை- இன்னதை பார்க்கவா நீங்கள் சென்றீர்கள்'' என்றார். அவர், ”அல்லவென்றால் எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? தீர்க்கதரிசி யைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே'' என்று கூறினார். யோவான் ஸ்நானன் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ள வனாயிருந்தான். அவன் உடன்படிக்கையின் தூதனாயிருந்தான். அவர் மேலும், “நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், இதோ. என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்' என்று கூறப்பட்ட வன் இவன் தான்'' என்றார். 273அது மல்கியா 3, மல்கியா 4 அல்ல. ஏனெனில் மல்கியா 4ல் உரைக்கப்பட்ட எலிசா மல்கியா 4 வந்த பின்பு பூமி சூளையைப் போல் எரிந்து போகும். நீதிமான்கள் ஆயிரம் வருட அரசாட்சியில் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள். எனவே அது அல்ல. பாருங்கள்? இப்பொழுது அந்த வாக்குத்தத்தம் கண் கூடாக நிறை வேறுவதை நாம் காண்கிறோம். உண்மையான தலைத்துவமாகிய கிறிஸ்து அவருடைய மணவாட்டிக்குள் வந்து, தொடக்கத்தில் அவர் செய்த அதே கிரியைகளைச் செய்து மணவாட்டியை ஆயத்தப் படுத்தி, யோவான் 14:12ல் அவர் கூறின, 'என்னை விசுவாசிக்கிற வன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்' என்னும் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறார். அப்பொழுது தலையும் சரீர மும், கிரியைகளிலும், அடையாளத்திலும், ஜீவனிலும் ஒன்றாக இணைந்து, இந்த கடைசி நாட்களுக்கென தம்முடைய வாக்குத்தத்த மான வார்த்தையின் மூலமாக தேவனால் தாமே உறுதிப்படுத்தப் படுகிறது. கடைசி நாட்களுக்கென அவர் இதை வாக்குத்தத்தம் செய்தார். நீங்கள் ஆவிக்குரியவர் களாயிருந்தால், இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். 274கலியாண விருந்து மிக அருகாமையிலுள்ளது என்று நாம் காணலாம். நான் மறுபடியும் உங்களைக் காணாவிட்டால், கலியாண விருந்து மிக அருகாமையிலுள்ளது என்பதை ஞாபகம் கொள்ளுங் கள். அப்பொழுது வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பிரகாரம், ராஜ்யம் அளிக்கப்பட்டு அந்த மகத்தான ஆயிரம் வருட அரசாட்சி, சபை எடுத்துக் கொள்ளப்படுதல், துன்மார்க்கரின் அழிவு இவை நிகழும், ஆறாம் முத்திரையின் கீழ் எரிமலை குழம்பினால் உலகம் சுத்திகரிக்கப்பட்டு, எல்லா ஊழலும் உலகத்தின் பாவமும் அவளி லிருந்து அகற்றப்பட்டு, வரப்போகும் அந்த பிரகாசமான ஆயிரம் வருட அரசாட்சிக்கென்று அவள் மீண்டும் உருவாக்கப்படுவாள் (moulded). இந்த மகத்தான மூவகை வெளிப்பாடுகளை நாம் காணும் போது; கிறிஸ்துவுக்குள் தேவன், சபைக்குள் கிறிஸ்து; ராஜ்ஜியம் வருகின்றது. கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியின் பிரதிநிதித் துவமாக ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திற்கு மறுபடியு மாக மீட்கப்படுகின்றனர், அப்பொழுது அவருடைய வாக்குத்தத் தத்தின்படியே ராஜ்ஜியமானது திரும்ப அளிக்கப்படப் போகிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம்! இப்பொழுது இந்த மூவகை இரகசியத்தின் வெளிப்பாடு (அந்த இரகசியம்), அவருடைய மூல தலைமைத்துவத்தின் மூலம் தனிப்பட்ட உறுதிபடுத்தப்பட்ட வார்த்தையில் வெளிப்படுதல். 275“தேவனுக்கு மகிமை, நாங்கள் கூச்சலிடுகிறோம். அல்லே லூயா, நாங்கள் பாடுகிறோம்'' என்று கூறுவதல்ல அது. நான் ஒரு மிஷனரி. நான் உலகத்தை ஏழு தரம் சுற்றியிருக்கிறேன். நான் அஞ்ஞானிகள், பிசாசுகள் நடனமாடி கூச்சலிடுவதைக் கண்டிருக்கி றேன். மாம்சப்பிரகாரமான இத்தகைய கிரியைகள் அனைத்தையும் நான் கண்டிருக்கிறேன். அது மாம்சப் பிரகாரமானது. 276ஆனால் நான் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். கவனியுங்கள், தனிப்பட்ட விதத்தில் அந்த மூலத் தலைமைத்துவத்துடன் அடையாளங்கண்டு கொள்ளப்படுவதால் பிசாசின் கேள்விகளுக்கெல்லாம் நம்மிடம் பதில் உள்ளது. ஆமென்! மகிமை! பிசாசின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் உள்ளது. கிறிஸ்து கிரயத்தை செலுத்தி, உயிரோடெழுந்து, இப்பொழுது தலையை... அல்லது சரீரத்தை எழுப்புகிறார். பிசாசினால் அதை பொறுத்துக் கொள்ளமுடியாது. அதனால் தான் மதசம்பந்தமான ராஜ்யங்கள் (ecumenical kingdoms) தோன்றுகின்றன. அதனால் தான் இத்தகைய காரியங்களை அவர்கள் செய்து கொண்டு வருகின்றனர். அதன் காரணமாகத் தான் பிசாசு இவ்விதம் ஊளையிட்டுக் கொண்டேயிருக்கிறான். சரீரத்துடன் இணைந்துள்ள தலைத்துவமாகிய உயிர்த்தெழுந்த கிறிஸ்து மூலம், அவனுடைய கேடுகள்... அவனுடைய திட்டம் அம்பலமா கின்றன. மகிமை! எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை. பிசாசின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் உள்ளது. நானல்ல, 'வார்த்தையாகிய கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்.“ அது என்னுடைய கருத்தல்ல, அது அவரு டைய வல்லமை. என்னுடைய கருத்தல்ல, அது அவருடைய வார்த்தை. அவர் அதை வாக்குத்தத்தம் செய்தார்; இதோ அது இங்கிருக்கிறது. அது இக்காலத்தில் சம்பவிக்கும் என்று அவர் கூறினார். அவர் கூறினபடி அது இங்குள்ளது. அவருடைய பதிலை நாம் பெற்றுக் கொண்டோம். 277கிறிஸ்து உயிரோடெழுந்து, நமது மீட்புக்காக கிரயத்தை செலுத்திவிட்டார். கிறிஸ்துவில் வெளிப்பட்ட தேவன், தமது மாம்சத்தையும் இரத்தத்தையும் பலியாக செலுத்தி, அந்த இரத்தத் திலிருந்து புறப்பட்ட ஜீவன் வந்து, மாம்சமானது மீட்கப்பட்டு, அதினால் - அதினால் இந்த மீட்கப்பட்ட மாம்சத்தில் நாளிற்கான அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தும்படியாய் அந்நாளில் அவர் செய்தது போல, இந்நாளிலும் செய்கிறார். வியூ, மகிமை. உங்களால் காணமுடிகிறதா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர் - ஆசி) எப்பொழுது என்னால் நிறுத்த முடியும்? அதை கவனியுங்கள். (“தொடருங்கள்!”) 278பிறகு, வெண்மையாக்கும் திரவம் கொண்ட ஒரு-ஒரு-ஒரு தொட்டியில் ஒரு துளிமையை ஊற்றினால், அது எவ்வாறு மறைந்துவிடுமோ, அது போன்று நாம் தேவனுடைய பிரசன்னத் தில் நீதிமான்களாக்கப்பட்டவர்களாய் நின்று கொண்டிருக் கிறோம். அந்த மையின் நிறத்தை நம்மால் காணவே முடியாது. அது எங்கோ மறைந்துவிடும். அது மீண்டும் தோன்ற முடியாது. மனிதன் உண்மையாக மீட்கப்படும் போது அதை அறிந்து ஏற்றுக் கொண்ட அந்த முன்குறிக்கப்பட்ட வித்து, அவனுடைய பாவங் கள் நிர்மூலமாக்கப்படுகின்றன. அது எங்கோ மறைந்து விடுகிறது. அது மையைப் போல் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்னும் வெண்மையாக்கும் திரவத்தில் விழுந்து, அது மறுபடியும் நினைக் கப்படுவதேயில்லை. தேவன் அதை எண்ணாமல் மறந்து விடுகிறார். அவர்கள் தேவனுடைய சமுகத்தில் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கின்றனர். ஆமென். ஆமென்! இப்பொ ழுது நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் - இருக்கப் போகிறோம்' அல்ல, இருக்கிறோம்'. 279சாத்தானின் கேள்விக்கு நாம் பதிலைப் பெற்றிருக்கிறோம். தேவன் தம்மை உறுதிப்படுத்தி, இந்நாளுக்குரிய வாக்குத் தத்தத்தை நிரூபித்து விட்டார். அல்லேலூயா! தலைத்துவம் இங்குள்ளது. ஆமென்! - உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய கிறிஸ்து, உயிர்த்தெழுதலின் அதே வல்லமையுடன் இங்கிருந்து கொண்டு, அவர் தம்மை வெளிப்படுத்தி வருகிறார். அதுவே பிசாசின் கேள்விக்குப் பதில். 280அதன் காரணமாகத்தான், இங்கு அமர்ந்திருக்கும் இந்த மனிதன் அன்றொரு நாள் மரித்து விழுந்த போது, “ஜீவனே, திரும்ப வா' என்று நம்மால் கூறமுடிந்தது - ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அவ்விதம் கூறினார். அதனால் தான் மரித்து பதினைந்து மணி நேரம் கழிந்த அந்த குழந்தையை மெக்ஸிகோவில் அவரால் உயிரோடெழுப்ப முடிந்தது. அந்த தரிசனம் தோன்றின போது அவர், அவள் உயிரோடெழும்பும்படி கட்டளையிடு “ என்றார். நானும், ”குழந்தை உயிர்பெறட்டும்“ என்றேன். அன்று காலை 9 மணிக்கு மரித்துப் போனதாக மருத்துவர்கள் உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்ட அந்த குழந்தை இரவில் 11 மணிக்கு உயிர் பெற்று, இப்பொழுதும் உயிரோடுள்ளது. 281அது என்ன? அது மனிதர்களால் அல்ல. தலைத்துவமும் சரீரமும் இணைந்து ஒன்றானதால் அது நிகழ்ந்தது. அது தேவன் தமது ஜனங்களில் வெளிப்படுவதாகும், அதனால் தான் கணவனும் மனைவியும் இனிமேல் இருவரல்ல. அவர்களிருவரும் ஒருவர். கிறிஸ்துவும் அவருடைய சபையும் ஒன்றாகிவிட்டனர் - “கிறிஸ்து உங்களுக்குள் இருத்தல்!'' தேவனுடைய மகத்தான வெளிப் படுதல். தேவனுக்கு மகிமை! அவருடைய நாமத்தை நாம் தரித்துக் கொண்டிருகிறோம். அவருடைய நாமம் இயேசு , அபிஷேகம் பண்ணப்பட்டவர், அவர் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்ற காரணத்தால்தான் அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார். இப் பொழுது அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவின் சரீரம், அவருடைய அந்த சரீரம் செய்தது போலவே, அவரை வெளிப் படுத்தி நிரூபிக்கிறது. அவருடைய அந்த சரீரம் இந்த சரீரங்களை மீட்டது. அதன் மூலம் தேவன் தமது மூவகை வெளிப்பாட்டைக் கொண்டு வருகிறார் - ராஜ்யத்திற்கு செல்லுதல், உயிரோடெழுதல், கிரயத்தை அளித்தல். நாம் மீட்கப்பட்டுவிட்டோம். தேவன் அதை நிரூபித்து உறுதிப்படுத்திவிட்டார். பாருங்கள்? 282நாம் கிறிஸ்துவின் முன்னால் நீதிமான்களாக்கப்பட்டவர் களாக நின்று கொண்டிருக்கிறோம். ஏனெனில் அவர் இனி நியாயந்தீர்க்க முடியாது. அந்த சரீரத்தை அவர் ஏற்கனவே நியாயந் தீர்த்துவிட்டார். அந்த சரீரத்தில் நான் ஒரு பாகமாக இருக்கிறேன். நான் எவ்வாறு அதன் ஒரு பாகமாக இருக்கமுடியும்? இதோ, அது எனக்குள் இருக்கிறது. “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெது வோ... என் நாமத்தினால் நீங்கள் பிதாவைக் கேட்டுக்கொள்வ தெதுவோ அது அருளப்படும். ஏனெனில் அது அங்குள்ளது.'' நீதிமான்களாக்கப்பட்டோம்! தேவனுக்கு மகிமை! இதை உலகம் காணும்படி என்னால் செய்ய முடிந்தால்! ஏன்? அங்கே கிறிஸ்துவின் சரீரம் ஜீவனுள்ளதாய், மீட்கப் பட்டதாய், நின்று கொண்டிருக்கிறது - மீட்கப்பட்டிருக்கிறோம்! 283அவருடைய பார்வையில் நீதிமானாக்கப்பட்டுள்ளோம் நாம் ஏன் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்? நாமே அவருடைய வெற்றி. சபை அவருடைய வெற்றி. இக்கடைசி நாட்களில் நாம் இந்த மகிமையுள்ள சுவிசேஷத்தைக் கொண்டவர்களாய், அவருடைய வெற்றியை அறிவித்து வருகிறோம். இந்த நோக்கத் திற்காகவே அவர் மரித்தார். நாம் அவருடைய வெற்றியின் நிரூபணங் காளயிருக்கிறோம். ஆமென்! அவர் இறங்கி வந்து தமது சபையின் நடுவிலே ஜீவிப்பதைக் காணும் போது - அதுதான் அவருடைய வெற்றி. அவரைக் கல்லறையில் பிடித்து வைக்க முடியவில்லை என்பதை அது காண்பிக்கிறது. அவ்வாறே நம்மையும் அவர்கள் கல்லறையில் பிடித்து வைக்க முடியாது. அது சரி. அவர்...?.... நாம் ஏற்கெனவே உள்ளடங்கிய ஆற்றலாக உயிரோடெழுந்து விட்டோம், ஏனெனில் நாம் மரித்தோரி லிருந்தும், அவருடைய வார்த்தையின் பேரிலுள்ள அவிசுவாசத்தி லிருந்தும், ஸ்தாபனக் கோட்பாடுகளிலிருந்தும் நாம் உயிரோ டெழுந்து நித்திய வார்த்தையைப் பெற்றுக் கொண்டோம். நித்திய வார்த்தையென்பது அந்த நித்திய தேவனே. அவர் நமது மூலம் கிரியை செய்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக தம்மை வெளிப்படுத்துகிறார். 284பிறகு அந்த வார்த்தை நகர்ந்து, தலையிலிருந்து சரீரத்துக்குள் வருகிறது. அது என்ன? இந்த அதே வார்த்தை . அதனோடு ஒன்றையும் கூட்டவோ அல்லது அதிலிருந்து ஒன்றையும் எடுத்துப் போடவோ முடியாது. எனவே அந்த நாள் அருகாமையில் வருந்தோறும், அதே வார்த்தை தலையிலிருந்து சரீரத்துக்குள் சென்று, அவர்களிருவரும் ஒருவர் என்பதை உறுதிப்படுத்து கின்றது. அவர்கள் கணவனும் மனைவியுமாயிருக்கின்றனர். அவர்கள் அவருடைய மாம்சத்தில் மாம்சமாகவும், வார்த்தையில் வார்த்தையாகவும், ஜீவனில் ஜீவனாகவும், ஆவியில் ஆவியாகவும் இருக்கின்றனர். பாருங்கள்? ஆமென். அது உங்களுக்கு எப்படித் தெரியும்? அது அதே சாட்சி பகறுகின்றது, அதே கனி, அதே வார்த்தை, பாருங்கள், கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது; அதே ஜீவன், அதே தேவன், அதே ஆவி, அதே வார்த்தை, அதே புஸ்தகம். ஆமென்!, அதே அடையாளங்கள். “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.'' அல்லேலூயா! என்னே! 285கவனியுங்கள், அவருடைய சரீரத்திலுள்ள உறுதிப்படுத்தப் பட்ட வார்த்தை அவருடைய வெற்றியை அறிவிக்கிறது. அதன் காரணமாகவே அவர் மரித்தார், அவர் ஆவியில் மரிக்கவில்லை, அவர் மரித்தபோது மாம்சத்தில்தான் மரித்தார், அவருடைய ஆவி பாதாளத்திற்குச் சென்று, சிறைப்பட்டிருந்த ஆத்துமாக்களுக்குப் பிரசங்கித்தது. அது சரியா? அவருடைய சரீரம் மாத்திரமே மரித்தது, அவர் அதை உயிரோடெழுப்பி அதை உயிர்ப்பித்தார் (quickened) “உயிர்ப்பித்தல்'' (quicken) என்றால், ”உயிரோடெழச் செய்தல்'' என்று அர்த்தம். அவருடைய மாம்சமாகிய சரீரம், அது தான் வார்த்தை, அநேக ஆண்டுகளாக மரித்திருந்தது. பின்பு படிப் படியாக அது சீர்த்திருத்த காலத்தில் வளரத்தொடங்கி இப்பொ ழுது அவள் காலூன்றி நிற்கின்றாள். 286எசேக்கியேல் புத்தகத்திலுள்ள அந்த உலர்ந்த எலும்பு களைக் குறித்து பேச நேரமிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! “இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று அவர் கேட்டார். அவர், “தீர்க்கதரிசனம் உரை'' என்றார். தீர்க்கதரிசனம் எப்படி வரும்? தீர்க்கதரிசியின் மூலமாகவே, அது கர்த்தருடைய வார்த்தை. 'உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.' அவைகள் மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது. அவர்கள் காலூன்றி மகா பெரிய சேனையாய் நின்று சீயோனை நோக்கி, அணிவகுத்து சென்றனர். தேவனுக்கு மகிமை, தேவனுக்கு மகிமை. அது அவர், அது அவர் - அந்த வெற்றி. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி ஆனந்த களிப்புடன் சீயோனுக்கு வருவார்கள் அவருடைய பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வார் ஒருவருமில்லை . 287அவர் தம்மை உறுதிபடுத்தின பின்பு, அவருடைய உயிர்த் தெழுந்த ஜீவனை அவர் நிரூபிக்கிறார். அவள், மணவாட்டி, மற்ற எல்லாரைக் காட்டிலும் சுயேச்சையானவள். அவள் சுவாதீன முள்ள ஸ்திரீ . அவள் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமான புள்ளியுள்ள குருவி (speckled bird). வேதம் அதைக் குறித்து கூறுவது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அந்த புள்ளியுள்ள குருவி-ஆனால், அவள் அவருடைய நாமத்தை கொண்டிருந்தாள். அவருடைய ஜீவனை அவள் கொண்டிருந்தாள். ஏனெனில் அந்த .... அந்த குருவிக்கு எப்படி புள்ளிகள் உண்டாயின? அந்த இரு குருவிகளுக்கும் வெண்மை நிறமிருந்தது. அவர்கள் ஒரு குருவியைக் கொன்று அதன் இரத்தத்தை மற்ற குருவியின் மேல் ஊற்றினார்கள். அந்த இரத்தம் அதன்மேல் படிந்து, அதற்கு புள்ளியுண்டானது. அந்த குருவி சிறகடித்து பறந்து சென்றபோது, அதன் மேலிருந்த இரத்தம் தரையில் ஊற்றப்பட்டு, அந்த இரத்தம் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்' என்று சத்தமிட்டது. மரித்த நமது துணைவன் கிறிஸ்துவும் தமது இரத்தத்தை அவருடைய ஜீவனைக் கொண்ட இரத்தத்தை நமக்குள்ளாக வைத்தார்; தெளி....... நாமும் அவருடைய இரத்தத்தை சுமந்து செல்லும் போது, அந்த இரத்தம், “தேவனுக்கு பரிசுத்தர் பரிசுத்தர், பரிசுத்தர்'' என்று சத்தமிடுகிறது. அந்த குருவி காண்பதற்கு வினோதமாயுள்ளது. நிச்சயமாக. மணவாட்டியாகிய அவள் அவரால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, அவள் மற்றவர்களிடமிருந்து பிரிந்து சென்று சுவாதீன முள்ளவளாயிருக் கிறாள். ”நீங்கள் இருவரும் வாழும் வரைக்கும் அவளை உன்னிடம் மாத்திரம் வைத்துக்கொள்.“ அவரை- வார்த்தையை - உன்னிடமே வைத்துக்கொள் - விபசாரம் கிடையாது. ஸ்தாபனத்தின் அறிகுறிகள், ஸ்தாபனக் கோட்பாடுகள் எதுவும் கிடையாது. அவளும் வார்த்தையும் மாத்திரமே. ''கிறிஸ்து என்னும் உறுதியான பாறையின் மேல் நான் நிற்கிறேன். மற்றெல்லா அஸ்திபாரமும் கீழே சரிந்து போகும் மணல்'' என்றார் எட்டி ப்ரூயிட் (Eddie Perronet). 288அது தான், கிறிஸ்து, அந்த வார்த்தை அவர் தான் அந்த வார்த்தையாக இருந்தார்; அவர் தான் வார்த்தை. சபையும், அவராலே அவளை தம்முடைய பாகமாக ஆக்குவதால், வார்த்தையாக ஆகின்றது, ஆகவே மறுபடியுமாக, வார்த்தையாக ஆகின்றது, ஆகவே மறுபடியுமாக அது வார்த்தையாகிறது. அவள் அவராலே தனிப்பட்ட விதத்தில் அடையாளம் கண்டு கொள்ளப் படுகிறாள். அவள் அவருடைய சொத்து மாத்திரமே. அவள் அவராலும், அவர் மூலமாயும், அவருக்காகவும் மீட்கப்பட்டவள் அவருக்காக மாத்திரமே. அது உண்மை . அப்படியிருக்க, எதைக் குறித்து பிசாசு கூச்சலிட்டுக் கொண்டிருக் கிறான்? இது வெளிப்படுகிறது என்பதற்காக. 289நாம் ஒரு ஆபத்தான நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். இவை சம்பவிக்கும் போது, “இனி காலம் செல்லாது'' என்பதாக வேதம் கூறுகிறது. சமயம் கடந்து கொண்டே போகிறது. இப்பொழுது அநேக இடங்களில் பூகம்பங்கள் உண்டா வதைக் காணும்போது - அன்றொரு நாள் ஆயிரம் பேர் கொல்லப் பட்டார்கள் அல்லவா? வானத்தில் பயங்கரமான தோற்றங்கள் - அக்கினி ஸ்தம்பங் களைப் போல் வானத்தில் மிதக்கும் பறக்கும் தட்டுகள். அது என்ன வென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. பாருங்கள்? அதைக் குறித்த எந்தவித கருத்தும் கூட அவர்களிடம் இல்லை. 290சோதோம் அழிக்கப்படுவதற்கு முன்பு தூதர்கள் அங்கு சென்று விசாரணை செய்தார்கள் அல்லவா? உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா? (சபையார் ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அவர்கள் குழுவாக கீழே வந்தனர், மூன்று பேர் வந்தார்கள். ஒருவர் ஆபிரகாமிடம் தங்கிவிட்டார். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? (ஆமென்') அவர்கள் விசாரணை நியாயத்தீர்ப்புக்காக வானத்திலிருந்து இறங்கி வந்த ஒளிகள்... அவை இப்பொழுது எங்கு காணப்படுகின்றன என்று பாருங்கள். 'பென்டகனை சுற்றிலுமே அந்த பறக்கும் தட்டுகளை அவர்கள் காண்கின்றனர். அதுதான் உலக நியாயத்தீர்ப்பு - சோ தோம். அதில் ஒருவர் சபையின் பிரதிநிதியாக இருப்பார். அது தம்மை உறுதிபடுத்தும் கிறிஸ்துவே. ''சாட்சிகள்... மேலே வானங்களில், கீழே பூமியில் அடையாளங்கள்.'' நிச்சயமாக. 291அடையாளங்கண்டு கொள்ளப்படுதல்! வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் அவளுக்குள் மாத்திரமே உள்ளது. பிசாசுகள் இதைக் குறித்து கூச்சலிடு கின்றன. அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இயேசு இவ்வுல கில் இருந்த போது, ஏன் அந்த பரிசேயர்கள்?.... “நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்தினால், நீங்கள் அவைகளை யாராலே துரத்துகிறீர்கள்?” என்று இயேசு அவர்களிடம் கேட்டார். அவர் தனியாக நின்றார். அவருடைய சபையும் தனியாக நிற்கிறது. அவள் யாருடனும் சேரமாட்டாள். அவர் தேவனால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, தேவன் வாசம் செய்யும் சரீரமாக இருந்தது போல, சபையும் இப்பொழுது அவருடைய சரீரமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு அவர் செய்த கிரியைகளையே செய்து வருகிறது. அவள் அவருடைய சரீரம் - இந்த கடைசி நாளுக் கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தை வெளிப் படும் சத்தியமாக அவள் அமைந்திருக்கிறாள். அவள் - அவள் மாத் திரமே-அதற்காக தனிமையாக நிற்கிறாள். அதனால் தான் அவளை தீர்த்துகட்ட வேண்டுமென்று, பிசாசு ஸ்தாபனங்களுடன் ஒரு அமைப்பை உண்டாக்கிக் கொள்ள வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களால் முடியாது. அவள் எடுத்துக் கொள்ளப்படுவாள், அவளைத் தீர்த்து கட்டமுடியாது. அவளுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட வார்த் தையின் வல்லமையின் மூலம் அவள் இப்பொழுது உயிரோடெழுந்து விட்டாள். ஆமென்! 292மணவாட்டி எவ்வளவாக அந்த வாக்குத்தத்தத்தை உறுதி யாய் பற்றிக் கொள்ளுகிறாள்! அவர் எனக்காக மறுபடியும் வருவ தாக வாக்குத்தத்தம் செய்துள்ளார். அதை நான் விசுவாசிக்கிறேன்.“ பாருங்கள்? ஆம், ஐயா. அவளுடைய தலையை, அவளுடைய மீட் பரை, அவளுடைய கணவனை, அவளுடைய ராஜாவை, அவளு டைய ஆண்டரை, அவளுடைய நேசரை, அவளுடைய இரட்சகரை, நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அவள் சந்திக்கிறாள். அவர்களைச் சந்திக்க அவர் ஒரு இடத்தை வைத்திருக்கிறார். மணவாளன் செய்யாமல் எதையும் விட்டுவிடுவதில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? நமது அடையாளத்திற்காக அவர் ஒரு மோதிரத்தை நமக்களித்திருக்கிறார். அவர் அவளுக்கு வஸ்திரத்தை கொடுத்திருக்கிறார். அவள் அதை அணிந்திருக்கிறாள். அது தான் அவள் வஸ்திரம். பாருங்கள்? அவளை சந்திக்க அவர் ஒரு இடத்தை நிர்ணயித்திருக்கிறார். அது தான் ஆகாயம். எல்லாமே அளிக்கப் பட்டுவிட்டது. கலியாண விருந்தையும் அவர் ஆயத்தம் செய்து விட்டார். விருந்தாளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு விட்டதுஏற்கனவே தெரிந்து கொள்ளப் பட்டவர்கள். விருந்தைப் பரிமாற எல்லா தேவதூதர்களும் ஒழுங்காக நின்று கொண்டிருக்கின்றனர். ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகும். இனிய, இனிய, அந்த நேரத்தில் நான் உன்னை சந்திப்பேன், அவ்விடத்தில் சந்திப்பேன் ஆகாயத்தின் அப்பாலுள்ள வீட்டில் இதுவரை கேட்டிராத அவ்வித பாட்டை மானிட செவிகள் கேட்கும் அது மிகவும் மகிமையாயிருக்கு மென்று உறுதியளிக்கிறேன் தேவனுடைய சொந்த குமாரனே அங்கு முக்கியமானவரா யிருப்பார் தேவன் தம்மில் முழுவதுமாக வெளிப்படுவார் அந்த ஆகாய சந்திப்பில் அவருடைய உறுதிப்படுத்தல்களை கவனிக்கவும். எரியும் முட்செடியினருகிலிருந்த மோசேயின் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் பயமற்ற தாவீதையும் அவனுடைய கவணையும் குறித்து கேட்டிருக்கிறீர்கள் சொப்பனக்காரனாகிய யோசேப்பின் கதையையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். தானியேலையும் சிங்கங்களையும் குறித்து நாம் அடிக்கடிபாடுகிறோம் வேதத்தில் இன்னும் அநேகர் இருக்கின்றனர் வேதத்தில் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அநேகர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாயிருக்கிறேன் இன்னும் சிறிது காலத்தில் அவர்களைச் சந்திக்க கர்த்தர் அனுமதிப்பார் அந்த சந்திப்பில்... அந்த ஆகாய சந்திப்பில் ஏனெனில் ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகும் இனிய, இனிய அந்த நேரத்தில் நான் உன்னை சந்தித்து, அங்கு உன்னை வாழ்த்துவேன் ஆகாயத்தின் அப்பாலுள்ள வீட்டில் இதுவரை கேட்டிராத அவ்வித பாட்டை மானிட செவிகள்கேட்கும் அது மிகவும் மகிமையாயிருக்குமென்று உறுதியளிக்கிறேன் தேவனுடைய சொந்த குமாரனே அங்கு முக்கியமான வராயிருப்பார் அந்த ஆகாய சந்திப்பில் 293நீங்கள் அதை விரும்புகிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அவருடைய மகத்தான வெளிப்பாட்டின் இரகசியமாகிய மூவகை நோக்கமானது இப்பொழுது வெளிபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்தான் அந்த முக்கயமான ஒருவர் ஆகும். அவரேதான். ஹூ என்னே ! நாம் அதைப் பாடுவோம். என்னால் தொடர்ந்து பிரசங்கிக்க முடியவில்லை. நான் மிக நல்லுணர்வுடன் உள்ளேன், பாருங்கள். ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகும். இனிய, இனிய, அந்த நேரத்தில் நான் உன்னை சந்திப்பேன், அவ்விடத்தில் சந்திப்பேன் ஆகாயத்தின் அப்பாலுள்ள வீட்டில் இதுவரை கேட்டிராத அவ்வித பாட்டை மானிட செவிகள் கேட்கும் அது மிகவும் மகிமையாயிருக்கு மென்று உறுதியளிக்கிறேன்தேவனுடைய சொந்த குமாரனே அங்கு முக்கியமானவராயிருப்பார் தேவன் தம்மில் முழுவதுமாக வெளிப்படுவார்அந்த ஆகாய சந்திப்பில் நீங்கள் சந்திக்கப் போகிறீர்களா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்.) ஆமென்! தேவனுடைய கிருபையினால். தேவனுடைய கிரபையினால்! பாருங்கள்? எரியும் முட்செடியினருகிலிருந்த மோசேயின் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் பயமற்ற தாவீதையும் அவனுடைய கவணையும் குறித்து கேட்டிருக்கிறீர்கள் சொப்பனக்காரனாகிய யோசேப்பின் கதையையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். தானியேலையும் சிங்கங்களையும் குறித்து நாம் அடிக்கடி பாடுகிறோம் வேதத்தில் இன்னும் அநேகர் இருக்கின்றனர் வேதத்தில் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அநேகர், அநேகர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாயிருக்கிறேன் இன்னும் சிறிது காலத்தில் அவர்களைச் சந்திக்க கர்த்தர் அனுமதிப்பார் அந்த சந்திப்பில்... அந்த ஆகாய சந்திப்பில் ஏனெனில் ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகும் இனிய, இனிய அந்த நேரத்தில் நான் உன்னை சந்தித்து, அங்கு உன்னை வாழ்த்துவேன் ஆகாயத்தின் அப்பாலுள்ள வீட்டில் இதுவரை கேட்டிராத அவ்வித பாட்டை மானிட செவிகள் கேட்கும் அது மிகவும் மகிமையாயிருக்குமென்று உறுதியளிக்கிறேன் தேவனுடைய சொந்த குமாரனே அங்கு முக்கியமானவரா யிருப்பார் ஆனால் அங்கே ஒரு முக்கியமான ஒன்று!ஓ, ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகும். இனிய, இனிய, அந்த நேரத்தில் நான் உன்னை சந்திப்பேன், அவ்விடத்தில் சந்திப்பேன் ஆகாயத்தின் அப்பாலுள்ள வீட்டில் இதுவரை கேட்டிராத அவ்வித பாட்டை மானிட செவிகள் கேட்கும் அது மிகவும் மகிமையாயிருக்கு மென்று உறுதியளிக்கிறேன் தேவனுடைய சொந்த குமாரனே அங்கு முக்கியமானவராயிருப்பார் தேவன் தம்மில் முழுவதுமாக வெளிப்படுவார்அந்த ஆகாய சந்திப்பில் 294இப்பொழுது நாம் அங்கு ஒருவரையொருவர் சந்திப்போம். நாம் அனை வரும்- மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள் எவராயிருந் தாலும் - தேவ ஆவியால் மறுபடியும் பிறந்தவர்கள் இப்பாட்டை நாம் பாடும் போது, ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். ஆகாயத்தில் ஒரு சந்திப்பு உண்டாகும் இனிய, இனிய அந்த நேரத்தில் நான் உன்னை சந்தித்து, அங்கு உன்னை வாழ்த்துவேன் ஆகாயத்தின் அப்பாலுள்ள வீட்டில் இதுவரை கேட்டிராத அவ்வித பாட்டை மானிட செவிகள் கேட்கும் அது மிகவும் மகிமையாயிருக்குமென்று உறுதியளிக்கிறேன் தேவனுடைய சொந்த குமாரனே அங்கு முக்கியமான வராயிருப்பார் அந்த ஆகாய சந்திப்பில் அது மிகவும் அருமையானது. பாருங்கள்? அவர் என்னவாயிருப்பார் என்று பாருங்கள். நண்பர்களே, இப்பொழுது நாம் முடிக்க வேண்டும். ஏறக்குறைய 2 மணி ஆகிவிட்டது. பாருங்கள் நாம்- நாம் இரவு ஆகார நேரத்தில் இங்கே இருப்போம். நான் பக்கம் பக்கமாக இங்கு எழுதி வைத்திருக்கிறேன். பாருங்கள்? ஆனால் நாம் முடிக்கப் போகிறோம். இதற்கு முடிவேயில்லை. 295இது ஒரு வெளிப்பாடு. தேவனுடைய வார்த்தையானது நித்தியமாயிருப்பது போல இதுவும் நித்தியமானது கவனியுங்கள். தேவனுடைய இரகசியத்தின் மகத்தான மூவகை நோக்கம் வெளிப் பட்டுவிட்டது- தேவன் கிறிஸ்துவில் வெளிப்படுதல், விழுந்து போன ஏவாளை மீட்டு அவளுடைய முந்தைய நிலைமைக்கு அவளை மறுபடியும் கொண்டு செல்வதற்காக கிறிஸ்து சபையில் வெளிப் படுதல். ஓ என்னே ! ஓ, அந்நாளில் நமக்கு மகத்தான நேரம் உண்டாயிருக்கும்! அது இப்பொழுதே உள்ளது. அதை நாம் விசுவாசிக்கிறோம். நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்- ஆசி). இந்த பாட்டை நான் நினைக்கும் போதெல்லாம்... அவர் தம்மை தானியேலிலும், மோசேயிலும், எரேமியா விலும் உறுதிபடுத்தினார். அவர்கள் யார்? அவர்கள் வார்த்தை தங்களிடம் வந்த தீர்க்கதரிசிகள் (பாருங்கள்?). அவர்கள் மகத்தான வர்கள். 'சொப்பனக்காரன் யோசேப்பின் கதையைக் குறித்தும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்'' (பார்த்தீர்களா?). சிங்கக் கெபியி லிருந்த தானியேலையும் மற்றவர்களையும் உங்களுக்குத் தெரியுமா? அது தான்.... அவர்கள் யார்? தீர்க்கதரிசிகள். பாருங்கள்? ஆனால் முக்கியமானவர். அவர் தற்காலிகமாக அவர்களில் முன்னடை யாளமாகத் திகழ்ந்தார். 296அவர் எது சரியென்று அறிந்தவராய், ஆதாமில் தம்மை முன்னடையாளமாக்கிக் கொண்டு, தவறு செய்திருந்த தம் மனைவியை மீட்டெடுக்க வந்தார். கிறிஸ்து பாவமாக இருக்க வேண்டிய அவசியம் உண்டாயிருக்கவில்லை. ஆனால் விழுந்து போன தமது பிள்ளையை மீட்டெடுக்க வெளியே நடந்து சென்று பாவத்தை எடுத்துக்கொண்டார். பாருங்கள்? பாருங்கள்? அவர் தம்மை முன்னடையாள மாக்கிக் கொண்டார். எரியும் முட்செடியினருகிலிருந்த மோசேயின் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் பயமற்ற தாவீதையும் அவனுடைய கவணையும் குறித்து நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் சொப்பனக்காரனாகிய யோசேப்பின் கதையையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் (அவன் தீர்க்கதரிசி) தானியேலையும் சிங்கங்களையும் குறித்து நாம் அடிக்கடி பாடுகிறோம் வேதத்தில் இன்னும் அநேகர் இருக்கின்றனர் அவர்கள் வேதத்தில் இருக்கின்றனர். அவர்களெல்லாரிலும் அவர் வெளிப்பட்டார். அவரில்லாமல் அவர்கள் ஒன்றுமில்லை. பாருங்கள்? நான் அவராயிருக்க வேண்டுமானால் அதன் ஒரு பாகமாக நான் ஆக வேண்டும். ஆமென் பாருங்கள்? அவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாயிருக்கிறேன் (அது உண்மை ) தேவனுடைய சொந்த குமாரனே அங்கு முக்கியமானவராயிருப்பார் அந்த ஆகாய சந்திப்பில் 297“அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு'' என்று எபிரெயர் 11 உரைக்கிறது. மூளை இல்லாமல் - அறிவு இல்லாமல் - கைகளும் கால்களும் பூரணப்பட முடியாது. பாருங்கள்? நாமெல்லாரும் அவரில் பூரணமடைகிறோம். நாமெல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப் பட்டு, நியாயத்தீர்ப்பிலிருந்து நீங்கலாகி, (மரணத்துக்கேதுவான) பாவத்தினின்று நீங்கலாகி விட்டோம்... ஆமென்! தேவனுடைய சொந்த குமாரனே அந்த ஆகாய சந்திப்பில் முக்கியமான வராயிருப்பார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்- ஆசி) நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தி அவர்... கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இந்த உறுமால்களின் மேல் இறங்கி வியாதியஸ்தரை சுகப்படுத்து வதாக, இப்பொழுதே இந்த.... (ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி)... சரியாக இப்பொழுது நமக்குள் இருக்கின்றார். அவர் ஏன் வெளிப்பட்டார்? முந்தி அவர் என்னை நேசித்ததால். அவர் என்ன செய்தார்ர்? சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 298மகிமை! அந்த மகத்தான உடன்படிக்கையின் தூதன், வனாந்தரத்தில் மோசேயுடன் கூட இருந்தவர், பவுலை தமஸ்குவுக் குப் போகும் வழியில் சந்தித்தவர், தமது புகைப்படத்தை எடுக்க அவரே அனுமதித்தவர் - அது நம்மிடம் உள்ளது. லைஃப பத்திரிக் கையில் அன்று வெளியான புகைப்படத்தில் இருந்தவர், அதே வார்த்தை, அதே தேவன், அதே வாய்க்கால்கள், அதே வழியாக, அதே வாக்குத்தத்தம் : “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருகிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்''. அப்படியானால் அவர் இங்கு இருக் கிறார். அவருடைய வார்த்தையில் மாத்திரம் நிலைத்திருப்பவர்களை, ”கர்த்தருடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்குகிறார்கள்“. தேவனுக்கு பயப்படாத எந்த மனிதனும் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க முடியாது. அப்படியானால், அவரை நாம் ஆவியில் தொழுது கொள்ளும் இந்நேரத்தில் அவர் நமது நடுவில் இருக்க வேண்டும். 299இப்படிப்பட்ட கடினமான ஒரு செய்திக்கு பிறகு, நாம் அவரை சற்று ஆவியில் ஆராதிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். பாருங்கள்? நாம் கண்களை மூடி அவருக்கு, “நேசிக்கிறேன். நேசிக் கிறேன்'' என்ற இப்பாட்டை மறுபடியும் பாடுவோம். அவரிடத் தில் உங்கள் கரங்களையுயர்த்துங்கள் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். நாம் எவ்வளவாக அவரை நேசிக்கிறோம் பிதாவில் விசுவாசம், குமாரனில் விசுவாசம் பரிசுத்த ஆவியில் விசுவாசம், இம்மூவரும் ஒருவரே பிசாசுகள் நடங்கும், பாவிகள் விழித்தெழும்புவர் யேகோவாவின் மேலுள்ள விசுவாசம் எதையும் குலுக்கி விடும். 300ஆமென்! தேவனுக்கு மகிமை! நாம் எவ்வளவாக அவரை நேசிக்கிறோம்! இப்பொழுது உங்கள் இருதயத்தில் அவரை ஆராதி யுங்கள். அவருக்கு கனத்தை செலுத்துங்கள். அவர் எல்லாவற்றை யும் எவ்வளவு அழகாக படைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை கவனித் துப் பாருங்கள். இத்தனை ஆண்டு காலமாக பெற்ற தரிசனங்களில் ஒன்றாகிலும் தவறினதேயில்லை. அவர் சொன்னயாவும், அவர் சொன்ன அதே விதமாக நிறைவேறின. 301உங்களை நான் நேசிக்கிறேன். சிறு பிள்ளைகளே, உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய கட்டளைகளை மறந்துவிடாதீர் கள்: ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். அவர்கள் சரியோ, தவறோ, பாவியோ, பரிசுத்தவானோ, எல்லாரையும் நேசியுங்கள். எப்படியும் அவர்களை நேசியுங்கள். அப்படிச் செய்ய உங்களால் முடியாவிட்டால், உங்களுக்கு ஒத்தாசை செய்ய தேவனிடம் ஜெபி யுங்கள். ஏனெனில் தேவன் பாவிகளை நேசித்தார். தேவனுடைய சுபாவம் உங்களுக்குள்... மனிதன் ஒருவன் தவறாயிருந்த போ திலும், அவனை நேசியுங்கள். அவனுடைய பாவத்தில் பங்கு கொள்ள வேண்டாம். ஆனால் இனிமையாக - கடிந்து கொள்ளு தலின் மூலமாயல்ல - இனிமையாக அவனிடம், உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்ட இயேசுகிறிஸ்து மூலமாய் உங்களுக்குள் இருக்கும் நித்திய ஜீவனின் நம்பிக்கையை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள். இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரமும் துன்பமும் கொண்ட பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் எங்கு சென்றிடினும் அதைக் கொண்டு செல் , விலையுயர்ந்த நாமம்... அந்த நாமம். நாம் அவருடைய நாமத்தை தரித்திருக் கிறோம். அவருடைய நாமத்தினால் நாம் அழைக்கப்படுகிறோம். பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் 302நான் மறுபடியும் உங்களை சந்திக்கும் வரைக்கும், ஒரு சிறு இரகசியத்தை உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன். இதை ஞாபகம் கொள்ளுங்கள். நாம் நின்று கொண்டிருக்கும் போது இதை ஞாபகம் கொள்ளுங்கள். இயேசுவின் நாமத்தில் முழங்காலை முடக்கி அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுவோம் பரலோகத்தில் ராஜாதிராஜாவாய் அவருக்கு முடி சூடுவோம் நமது யாத்திரை முடிந்த பிறகு. விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் ...... மூவகை வெளிப்பாடு என்ன? பரலோகத்தின் நம்பிக் கையும் சந்தோஷமும் அவரில் வெளிப்படுகின்றது. விலையுயர்ந்த நாமம், ஓ என்னே இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். 303என்ன? பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சி யும். எல்லாமே கிறிஸ்துவில் வெளிப்பட்டுள்ளது. தேவன், சபை, எல்லாமே கிறிஸ்துவில் வெளிப்பட்டுள்ளது. வேதாகமம் கிறிஸ்து. வேதாகமம் என்பது எழுதப்பட்ட வார்த்தை. அவர் வார்த்தையாயிருக்கிறார். ஜீவன் வார்த்தையாக மாம்சத்துக்குள் வந்து அது வெளிப்படுவதே, அது வெளிப்பட்டது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. ஓ, இது மிகவும் அற்புதமானதல்லவா? இயேசுவின் நாமத்தை... இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக அதை மறந்து போக வேண்டாம் உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும்போது நீ என்ன செய்ய வேண்டும்? அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரிப்பாயாக விலையுயர்ந்த நாமம் ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். 304நாம் ஆவிக்குரியவர்களாயிருப்பதால், ஆவிக்குரிய காரியங் களை கவனிக்கிறோம். நாமறியோம், ஆனால் தேவன் அறிவார். நீங்கள் திரும்பி கடிகாரத்தைப் பார்ப்பீர்களானால் இப்பொழுது சரியாக 2.00 மணி- இரண்டாம் இழுப்பின் முடிவு; மூன்றாம் இழுப்பு வரும் நேரமாகி விட்டது. இயேசுவின் நாமத்தில் முழங்காலை முடக்கி அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுவோம் பரலோகத்தில் ராஜாதிராஜாவாய் அவருக்கு முடி சூடுவோம் நமது யாத்திரை முடிந்த பிறகு விலையுயர்ந்த நாமம்... இரண்டாம் இழுப்பு வெளிப்பட்டுவிட்டது பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் 305பரிசுத்த ஆவியானவர் அதே பாட்டை எட்டு கட்டை மேல் சுருதியில் உரக்க பாடினதை கவனித்தீர்களா? அடுத்த இழுப்புவர நேரமாகி விட்டது. ஹு... ஹும்.... ஆமென்! இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துன்பமும் துயரமும் .... (நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாகி விட்டது) அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் எங்கு சென்றிடினும் அதைக் கொண்டு செல் விலையுயர்ந்த நாமம் , ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம். சோதனைகள் வந்தால் நீ என்ன செய்வாய்? இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும்போது (அது உன்னை அவ நம்பிக்கை கொள்ளச் செய்ய வேண்டாம்) (ஞாபகம் கொள்) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரிப்பாயாக விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் 306நாமெல்லாரும் பயபக்தியாக இப்பொழுது தலை வணங்கு வோம். உரைக்கப்பட்ட வார்த்தை (சகோதரன் பிரன்ஹாம் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் என்ற மற்றொரு வரியை வாய் மூடி இசைக் கின்றார். ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசத்துவங்குகிறார். மற்றொரு சகோதரன் வியாக்கியானம் அளிக்கின்றார்- ஆசி). நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், தேவ ஆவியானவர் இந்த கூட்டத்தில் இறங்கி அன்னிய பாஷையில் பேசினார். அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத மனிதனின் மூலம் அன்னிய பாஷை யில் பேசி, அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத வேறொரு மனிதனின் மூலம் தேவனுடைய வார்த்தையின் அர்த்தத்தை வியாக்கியானப்படுத்துகிறார். சத்துரு எதிராக வந்து, அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாதிருந்த போது, தேவ ஆவியானவர் ஒரு மனிதன் மேல் இறங்கி, அவர்கள் என்ன செய்ய வேண்டு மென்று அறிவித்தது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? நாம் தாழ்மையுடன் தலைவணங்குவோம். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை இயேசுவின் பாதங்களில் நாம் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை சரி, போதகரே. நாம் மறுபடியும் சந்திக்கும் வரை தேவன் உங்களுடனே இருப்பாராக..